யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!
Sunday, August 10, 2008
கற்பு கருப்பானதா !!
நீண்ட நாட்களுக்குப் பின் இப்பதிவின் மூலம் உஙளை சந்திப்பதில் பெரு மகிழ்வு கொள்கிறேன். புதிய விவாதமாக நான் எடுத்துக் கொண்டிருக்கும் தலைப்பில் உங்களது கருத்துக்களை வரவேற்கிறேன். கருத்துப் பரிமாற்றத்திற்குப் பிறகு, பதிவு தொடரும்.
கற்பு நெறி என்றால் என்ன? எதை வைத்து அது அனுமானிக்கப் படுகிறது? அதன் நன்மை தீமைகள் என்ன? ஏன் தேவைப் படுகிறது.ஒரு சாரரால் ஏன் தேவையிலை என்ற நிலைக்கு தள்ளப்படுகிறது? கருத்துப் பகிர்தலை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். :)
====================================================================
எதிர்பார்த்து,பின் இந்த எதிர்பார்பினால், எவ்வித பிரயோஜனமும் இல்லை என்று நினைத்து,அதனை கைவிட்ட வாசர்கர்களே, உங்களது, எதிர்பார்ப்பினை சரியான நேரத்தில் பூர்த்தி செய்யமுடியாமல் போனதிற்க்கு வருத்தம் தெரிவித்தல் என்பது, சாதாரணமாக நான் நினைத்ததை சொல்லி விடக்கூடும்.ஆகையால், பெரிய மனதுடன், மன்னிக்கும் மனது, உங்களிடம் இருப்பதாக எண்ணி, இச்சிறியேனை மன்னியுங்கள் !
====================================================================
கற்பு என்றால் என்ன?
- கற்பு என்பது தகுதி பிறழ்வாதது..தன்னிலையிலிருந்து பிரண்டு போகாமல் இருப்பது.
கற்பு நெறி என்றால் என்ன்?
- தன் தகுதியிலிருந்து பிறழ்ந்து போகமால் இருப்பதை , சமுதாய நோக்கிலிருந்து நெறிப் படுத்துவது.
கற்பு என்பதே தனிமனித ஒழுக்கத்தை பறைசாற்றும் அங்கமாகத் தான், சங்க காலத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அவ்வொழுக்கம், திருமண பந்தத்தில் ஈடுபட்டிருக்கும், பெண்டீரிடம் இருந்தே ஆக வேண்டும்....அப்போது தான், அம்மங்கை திருமண பந்ததிற்கு சரியானவள் என்ற அங்கீகாரத்தையே அடைய முடியும். ஆக, ஒரு பெண் கற்புள்ளவளாக இருந்தால் மட்டுமே , அவள் தன் கணவனோடு வாழத் தகுதியுள்ளவளாக உருவாககப்படும் நிலை சமுதாயத்தில் இருந்து வந்திருக்கிறது. இது எதனை வலியுறுத்துகிறது?......
மனம் போல வாழ்க என்று வாழ்த்துதல் என்பது, வெறும் வாய் வாழ்த்தாகவே அமைது விடுதலேயன்றி, மனம் போகும் போக்கில், தன் வாழ்வை அமைத்துக் கொண்டால் சமூக அங்கீகாரம், மறுக்கப் பட்டுவிடும் என்ற மிரட்டலை விடுப்பது போலத் தானே, இவ்வித கற்பு நெறி பறைசாற்றப் பட்டிருக்கிறது என்பது என் கருத்து.
இக்கருத்தினை ஏற்க மறுப்பவர்கள், சமுதாயக் கட்டுக்கோப்பினை முன்னிறுத்தி, கற்பு நெறி தேவை தான் என்ற வாதத்தினை முன் வைத்தாலும், பிறர் உண்ணும் உணவு இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற அதிகாரத்தை மற்றவர் மேல் திணிப்பதற்குச் சமம் என்று, அதைக் கருதுகிறேன்.
கற்பில் சிறந்தவள் கண்ணகி...ஏன்?.... அவள் தன் கணவனைப் பொறுத்தாள். தன்னை அவன் நீங்கினாலும், அவனை அவள் நீங்காமல், கடைசியில் அவன் செய்த அத்துணையும் ஏற்று, அவன் நினைவாகவே வாழ்ந்து, பின் அவனுக்காக , நீதி கேட்டுப் போராடி, பின் ஒரு மாநகரத்தையே எறித்து, தன் கற்பினை வலியுறுத்தினாள். ஆக, தன் கணவன் என் செய்யினும், அவனைக் காத்து, அவன் எதை விரும்புகிறானோ அதை விரும்பி, அவனை அதற்கு அனுமதித்து, தனக்கென்று ஒரு வாழ்வை அமைத்துக் கொள்ளாமல் வாழ்தலே, கற்புடைய மாதர்க்கு அழகு. இதுவே, சமுதாயத்தின் எதிர்பார்பு... ஆசை... ஏக்கம்...
அந்த ஆசையை , சமூகத்தில் வாழும் ஒவ்வொரு பெண்ணும் கடைபிடித்து வாழ்ந்தாக வேண்டும் என்ற கட்டயாத்தினை உருவாக்கினால், பின், தான், என்ன செய்தாலும் அவள் தனக்காகவே எப்போதும் இருப்பாள், தான் என்ன செய்தாலும் பொறுத்துக் கொள்வாள் என்ற எண்ணத்திலும், பயத்தின் காரணமாகவும், பின்பற்ற பட்டதே இக்கற்பு நெறி.
இக்கற்பு நெறி எக்காலத்திற்க்குப் பொறுத்தமானது, சங்க காலத்திற்கு மட்டுமே.. இப்போது, அதை ஒரு தலைப்பாக மட்டும் தான் பேச இயலும். காரணம், சமூக மாறுதல்கள்.....
சிலருக்கு, கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களையும் சார்ந்தது தான் என்ற எண்ணம் நிலவுகிறது. இதனால், பெண்களுக்கு மட்டும் விலங்கா..ஆண்களும் அவ்விலங்கினைப் பூட்டிக் கொள்கிறோமே என்ற மடைமையைத் தான் அது பறைசாற்றுவதாக எனக்குத் தோன்றுகிறது.
திருமணத்தின் மூலம் ஒருவனை தனக்குள் வரித்துக் கொண்ட பெண், அவனை விட்டு நீங்குதல் என்பது சாத்தியாமில்லாத அக்காலத்தில் கற்பு, கத்திரிக்காய் என்றெல்லாம் கூறுகிறார்களே அதனால், கணவன் என்ன செய்தாலும், பொறுத்தாக வேண்டிய கட்டாயம் அக்கால பெண்டீருக்கு இருந்தது.
ஆனால், இக்கால பெண்மை அக்கட்டுக்குள் அடங்காதே...மன விரிவாக்கமும், அதைச் சார்ந்த செயல்பாடுகளும்,தன் வாழ்க்கை தன் கையில் என்று, தனக்கென்று எண்ணங்களையும், உறுதியாக வைத்திருக்கும் பெண்மைக்கு, கற்பு என்பது கருப்பானது மட்டுமே.கற்பு நெறியை பெண்கள் ஏற்றால் தான் அப்பெண்மை சிறப்புற வாழ்தல் சாத்தியம் என்பது காலத்தால் , வலுக்கட்டாயமாக திணிக்கப் பட்ட மூட நம்பிக்கையே அன்றி, உண்மையான நிதர்சனமன்று.
கற்பு என்பது, உடல் சம்பந்தப் பட்டது தான், மனச் சம்பந்தப்பட்டது இல்லை என்ற ஐயப்பாடு கொண்டவர்க்கும், இல்லை...அது மன சம்பந்தப்பட்டது தான் உடல் சம்பந்தப் பட்டது இல்லை என்று விவாதிப்போரும், ஒன்றை நினைவில் கொள்ள மறந்து விட்டார்கள். தன் வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் உரிமையும், அதனால் மகிழ்வுறும் உணர்வும், தனி மனிதனுக்கே சொந்தம். முழுமையாக ஒருவன் தனக்கு என்ன வேண்டும் என்று தெரிந்து, புரிந்து, உணரப்படும் உரிமைக்கும், உணர்வுக்கும் இடையே, சமுதாயம் தன் பங்கினை எங்கனம் வகிக்கிறது என்பது எனக்கு புரியாத புதிராகவே உள்ளது.
Subscribe to:
Posts (Atom)