யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!

Wednesday, November 14, 2007

தி ..யாகம்



தியாகம் !!

எது தியாகம்? தியாகம் என்பதற்குண்டான அர்த்தம் என்ன? எவையெல்லாம் தியாகம் என்ற வகையைச் சார்ந்திருக்கும்? ஏன்?

உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்களேன். :)

----------- ** -----------
தியாகம் என்பதைப் பற்றி சொல்வதற்க்கு முன், எல்லோராலும், தியாகம் சார்ந்த நிகழ்வுகளாக கருதப்படும் செயல்கள் பற்றி பேசுவோம்.

இரு மனம் சங்கமித்து, திருமண வாழ்வில் தியாகம், நாட்டுப் பற்றினால் மக்கள் துயர் துடைக்கப் புறப்பட்டால் தியாகம். தன்னையே, இழந்து பிறருக்காக செய்யப்படும் எல்லா செயல்களுமே தியாகம், பெற்ற பிள்ளைகளுக்காக, பெற்றோர் சிரமப்படுவது தியாகம்.கட்டிய மனைவிக்காக, கணவன் கட்டுண்டால் தியாகம்.ஆக, எல்லோருக்குமே, வாழ்க்கையில், ஏதோ விதத்தில் , தாம் தியாகம் செய்கிறோம் என்ற உணர்வும், அதனால், மேலோங்கி இருக்கும் ஒரு உயரிய எண்ணமுமே, தியாகம் என்பதை உயர்த்தி கூற ஏதுவாக இருக்கும் காரணங்கள்.

தியாகம் செய்தல் மிக உயர்ந்த நிலையாக பார்க்கும் பட்சத்தில், சில சமயம், கடமை, பொறுப்பு, அன்பு, அரவணைப்பு போன்றவை எல்லாமே, தியாகச் செயல்களாக எடுத்துக் கொள்ளப் படுவது தான் பரிதாபம். அதிலும், தன்னையே தியாகம் செய்வது (self sacrifice) என்ற நிலை என்னால் புரிந்து கொள்ளப்படாத நிலையாகவே உள்ளது.

யாரும் முயலாத, எண்ணிப் பார்க்க முடியாத ஒரு செயலை, மற்றொருவர் செய்யும் போது, மிகப் பெரிய தியாகம் புரியப்பட்டதாக, அனைவரும் எடுத்துக் கொள்ள மட்டுமே, இந்த தியாகம் என்ற சொல் பயன்படுத்த பட வேண்டும் என்பதே என் தாழ்மையான கருத்து.

பத்து மாதம் சுமந்து, கடுமையான வலியையும் , வேதனையும் அடைந்து, ஒரு பிள்ளையை ஈன்றெடுத்து, அதனை சீராட்டி, பராட்டி வளர்த்து, அப்பிள்ளையை நல்வழிப் படுத்தி, ஒரு சீர் நிலைக்கு உயர்த்தும் ஒரு தாயிடத்தில், தியாகம் குடி கொண்டிருக்கிறது என்பதே பொதுவாக பேசப்படும் வாதம். ஆனால், ஒரு நிமிடம், அப்பிள்ளையா, தன்னைப் பெற்று, நல் வழிப்படுத்து என்று சொல்லியது. என்ற கேள்வி எழுப்பினாலே போதும், அத்தாய் செய்த செயல்கள் தியாகம் என்ற நிலைக்குள் வருமா என்பது தெரிந்து விடும்.

தனக்கு வேண்டும் என்ற நிலையில் தான், ஒருவளோ, ஒருவனோ, திருமண பந்தத்தில் ஈடுபடுவது. அதன் மூலம், தனக்கு ஒரு வாரிசு வேண்டும் என்ற எண்ணத்தில் பெறப்படுவனவே பிள்ளைகள். பெற்ற பிள்ளைகளை சீராக வளர்க்க வேண்டும் என்ற எண்ணமும் பெற்றோருடையதே. இதில் தியாகம் எங்கே வந்தது.

தனக்கு வேண்டும் என்ற ஆசையிலும், ஆசையால் விளைந்த அன்பால் நிகழும் செயல்களுக்கெல்லாம் தியாகம் என்ற பெயர் சூட்டி, உண்மை அன்பையும், பாசத்தையும் முழுதும் உணராமல், தன் உறவு கொண்டாட்டத்திற்கு களங்கம் , கற்பிப்பது போல, பிள்ளையை பெற்று வளர்த்ததையே, மிகப் பெரிய தியாகம் செய்ததாக எண்ணிக் கொள்ளும் மனிதர்களை என்னென்று சொல்வது.!

ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதும், தன் விருப்பம் விடுத்து, மற்றவரின் விருப்பம் நிறைவேற்றுவதும், ஆகிய செயல்களின் காரணம் ஆழ்ந்த அன்பு மட்டுமே. எப்போது, ஒருவருக்கு, தான் தியாகம் செய்வது போல எண்ணம் தோன்றி, மேற் கூறிய பரிமாற்றம் நிகழ்கிறதோ, அவர்க்கு பூரண அன்பு மலரவில்லை என்பதை சொல்லத் தான் வேண்டுமோ.

சுயம (Self)் என்பது, எப்போதும் திருப்தியை நோக்கியே பயணிக்கிறது. அது தான் அதன் இயல்பு. சுயத்தை,துன்புறுத்தி, யாராலும் எந்த செயலையும் செய்தல் இயலாது. தனக்கு திருப்தி அளிக்கும் செயல்களை மட்டுமே, சுயம் அனுமதிக்கும். ஆக, எந்த ஒரு செயலை, யாருக்காகவாது செய்தலும், விட்டுக் கொடுத்து போதலிலும், அடிப்படையான சந்தோஷத்தை சுயம் பெறுகிறது.

ஆத்ம திருப்தி, இல்லாமல், மற்றவருக்காக செய்தல் என்பது நடை பெற இயலாது.ஆக, பலன் என்பது, நாம் செய்யும் செயல்களிலிருந்து நமக்கு கிடைக்கத்தான் செய்கிறது.அது பொருளாகத் தான் கிடைக்க வேண்டும் என்றில்லை. நம் சுயம் திருப்தி அடையும் செயல்களை, அன்பின் காரணமாகவோ, ஆழ்ந்த காதலின் காரணமாகவோ நாம் செய்கிறோமே தவிர, தியாகம் செய்கிறோம் என்று எண்ணும் நிலையில், அங்கு, அன்பும் , காதலும், வேட்கையும் சாகடிக்கப்படுகிறது.

29 comments:

Anonymous said...

Sacrifice:

You give away yourself for something/ for the sake of...

People sacrifice:

- Marriage;
-Love;
-Jobs( relocation);
- Education (choices);
- Self ( themselves for others happiness)

Kumar said...

பள்ளிக் காலத்தில் படித்த ஒரு கதை -

ஒரு திருநாளுக்கு கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் பரிசளித்து ஆச்சரியப்பட வைக்க எண்ணுகிறார்கள். வசதி கிடையாது. இன்ஸ்டால்மெண்ட், க்ரெடிட் கார்டெல்லாம் இல்லாத காலத்தில் நடந்த கதையாதலால் இருவரும் என்ன செய்வதென்றே தெரியாமல் திணறுகிறார்கள்.

அந்தத் திருநாளன்று காலை ...

மனைவி பல வருடங்களாக ப்ரியமுடன் பராமரித்த, பலரும் பொறாமைப் படும் வண்ணம் வளர்ந்துள்ள தன் அழகிய நீண்ட கூந்தலை வெட்டி விற்று கணவனின் கடிகாரத்திற்காக ஒரு அழகிய பெட்டி ஒன்றை வாங்கி வருகிறாள். கணவனோ, தான் மிகவும் நேசிக்கும் அந்தக் கடிகாரத்தையே விற்று மனைவியின் கூந்தலுக்கு ஓர் அழகிய க்ளிப் வாங்கி வருகிறான்.

எந்தப் பலனையும் எதிர் பாராமல் தனக்கு எத்தகைய விளைவு/ பாதிப்பு ஏற்படினும் அடுத்தவரின் நலனுக்காக மட்டுமே கலங்காமல்/தயங்காமல் தனக்கு முக்கியமான ஒன்றை இழந்தி அடுத்தவர்க்கு பலன் சேர்ப்பது...

குழந்தைக்காகத் தாய், கணவனுக்காக மனைவி, vice versa, பெற்றோருக்காக, உறவுக்காக, நட்புக்காக, சமுதாயத்திற்காக... இப்படி பல்வேறு லெவலில்...

Anonymous said...

kuppan_2007 says:

Priya has given the correct definition for Thyagam (sacrifice).


Tanakku endha palanaiyum edhir paarkkamal aduthavarkku nanamai kidaikka koodiya ella seyalkalum Thayagm.
example: freedom fight (naatu makkalukku nalladhu seyya).

Saadhi kodumai edirthu poraaduthal,

Blood donation.

Doing something for the betterment of others , in return of no consideration.

Uravukkaga, natpukkaaga naam namadhu udalai, aasaiayia, porulai vittu koduthal kooda Thyaagam thaan.

Anonymous said...

kuppan_2007 says

I think I have confused Thyaagam & Dhaanam.

Nanbargal Thyaagam, Dhaanam irandayum veru paduthi, 2 patrium virivaaga kooralaam.

Anonymous said...

kuppan-2007 says:

sorry for instalment comments.

Thaaimai (motherhood) is a typical example for Thyaagam

Sowmya said...

hi priya,

If you give away yourself for something or for the sake of

- Marriage;
-Love;
-Jobs( relocation);
- Education (choices);
- Self ( themselves for others happiness)

what you get back out of it.

Sowmya said...

kumar,

## மனைவி பல வருடங்களாக ப்ரியமுடன் பராமரித்த, பலரும் பொறாமைப் படும் வண்ணம் வளர்ந்துள்ள தன் அழகிய நீண்ட கூந்தலை வெட்டி விற்று கணவனின் கடிகாரத்திற்காக ஒரு அழகிய பெட்டி ஒன்றை வாங்கி வருகிறாள். கணவனோ, தான் மிகவும் நேசிக்கும் அந்தக் கடிகாரத்தையே விற்று மனைவியின் கூந்தலுக்கு ஓர் அழகிய க்ளிப் வாங்கி வருகிறான்.

எந்தப் பலனையும் எதிர் பாராமல் தனக்கு எத்தகைய விளைவு/ பாதிப்பு ஏற்படினும் அடுத்தவரின் நலனுக்காக மட்டுமே கலங்காமல்/தயங்காமல் தனக்கு முக்கியமான ஒன்றை இழந்தி அடுத்தவர்க்கு பலன் சேர்ப்பது...

குழந்தைக்காகத் தாய், கணவனுக்காக மனைவி, vice versa, பெற்றோருக்காக, உறவுக்காக, நட்புக்காக, சமுதாயத்திற்காக... இப்படி பல்வேறு லெவலில்...##

இவையெல்லாமே அன்பு தானே ! இதில் தியாகம் எங்கே வந்தது.!

Sowmya said...

hi kuppan,

பலன் இல்லாமல் எந்த நிகழ்வுமே கிடையாது. எந்த ஒரு செயலுக்குமே, விளைவு என்பது இருந்து தானே ஆக வேண்டும் !

Kumar said...

அன்பு தான், மறுக்க வில்லை.
ஆனால் அன்பை உணர்வதோடு மட்டும் அவர்கள் நிறுத்தவில்லையே!

அன்பின் வெளிப்பாடு தான் என்று எடுத்துக் கொண்டாலும், தனக்கு மிகவும் பிடித்த, தான் மிகவும் நேசிக்கும் ஒன்றை இழந்து அந்த இழப்பில் மற்றவரை மகிழ்விக்க நினைப்பதும் தியாகம் தானே?

'ஆஹா, உனக்காக நான் இதைச் செய்துள்ளேன்' என நினத்தாலோ, அடுத்த ஆண்டில் ' உனக்கு நினைவிருக்கிறதா, சென்ற முறை நான் உனக்காகத் அந்தத் தியாகம் செய்தேனே... என்றெல்லாம் நினைவு படுத்தி பெருமை கொள்வது கண்டிப்பாகத் தியாகம் எனக் கொள்ள முடியாது தான்.

அதே போல் நான் தியாகம் செய்தேன் என்றோ, அதனால் எனக்கு என்ன கிடைத்தது என்றோ நினைத்தால் அங்கு தியாகம் என்ற சொல்லுக்கே இடமில்லை. எதிர்பார்ப்புடன் செய்யப் படும் செயல்கள் தியாகம் என்ற எல்லைக்கு வெளியில் நின்று வேடிக்கை தான் பார்க்க முடியும்.

பொதுவாக தியாகம் செய்பவர் அதைப்பற்றிப் பிறரிடம் சொல்வதோ, அதை நினைத்துப் பார்ப்பதோ கிடையாது. மூன்றாம் மனிதரின் பார்வையில் மட்டுமே அது தியாகம் எனப் பெயர் சூட்டப் படும்.

சரியா?

Unknown said...

As usual straight, simple and beautiful post! Logically sound arguments! But I have a few doubts.

//யாரும் முயலாத, எண்ணிப் பார்க்க முடியாத ஒரு செயலை, மற்றொருவர் செய்யும் போது, மிகப் பெரிய தியாகம் புரியப்பட்டதாக, அனைவரும் எடுத்துக் கொள்ள மட்டுமே, இந்த தியாகம் என்ற சொல் பயன்படுத்த பட வேண்டும் என்பதே என் தாழ்மையான கருத்து.//
I am confused when you say we can't call something as sacrifice, if the doer gets some satisfaction (particularly non-material) from that action. And you had said that a mother's actions cannot be called sacrifice because it is her responsibility to take care of the child. If that is so, the child also has responsibility towards his parents. right? Again, who defines responsibility?

I would call an action as sacrifice, if that action puts the doer in a disadvantaged position for the benefit of the other. Even though there are alternatives that would be far better to himself , the doer puts himself at a disadvantage so that the other person can benefit. Sacrifice is choosing the alternative that is not necessarily beneficial for oneself. Yeah, it is a hard choice made out of love and that obviously will bring some satisfaction to the doer, again because the one who is loved benefits. Just because one derives satisfaction from an act of love, how can you say it can't be called sacrifice? I would say the definition should focus on the disadvantage (material or otherwise) that the doer is put under rather than just his emotional satisfaction.

You might say, when someone says "i sacrificed this/that for you. what did you do in return?", he/she is totally demeaning "sacrifice" and it is just a bargain? Is he not just stating that though he had several choices he put the other above himself and chose something that essentially benefited the other? And isn't the person looking for the other to love him back just like he did?

Already it is too lengthy, so i ll with this for now. ;)

Anonymous said...

excellent analysis...! but how many got it right?!

Priya said...

Wat do u mean? I think u asked a query and I gave the answer.

what you get back out of it.


- It depends on how ppl' analyze and take things.

If u ask me, I will say nothing coz nothing counts at all in this world.

Sowmya said...

குமார்,

இருவர் , ஒருவருகொருவர் சிலவற்றை இழப்பதும், அதன் மூலம் மகிழ்விப்பதும், தியாகம் என்று பிறரால் அறியப்படும் வகையில், அவரவர்க்கும், அது தியாகம் தானோ என்ற அறிவுறுததல் அமையாது போகுமா ! உறவு முறையில், கடமை என்பது, எப்படி பொருத்தம் இல்லையோ.அதே போல் தான், தத்தம் துணைக்காகவும், தத்தம் பிள்ளைகளுக்காகவும், செய்யப்படும் செயல்களில் அன்பு மட்டுமே ஆராதிக்கப்படல் வேண்டும். ஆனால், அவ்வகையில் அல்லாமல், செய்யும் செய்லகளில் , புனிதம் கருதி, தியாகம் என்ற எண்ணம் நுழைந்தாலே, இயல்பான அன்பும், அது சார்ந்த செயல்களின் வீரியமும் முற்றிலும் குலைந்து போவதாகத் தான் நான் கருதுகிறேன்.

ஒரு குழந்தையைப் பெற்று வளர்த்து, ஆளாக்கும் செயல் அரிதான செயலா? தாய்மை மிகப் புனிதமானதா ! இயல்புக்கும், இயற்கைக்கும் , பாராட்டுதலும் , சீராட்டுதலும் எதற்கு?. நமக்கு எப்போதுமே, இயல்பான ஒன்றை, அரிதான ஒன்றாக ,பல நூற்றாண்டுகளாக எண்ணிக் கொண்டே இருக்க வேண்டும். தாய்மை, மனிதரில் மட்டுமல்லாது, ஐந்தறிவு ஜீவராசியான, பன்றிக் குட்டியில் கூடத் தானே இருக்கிறது. பெற்று, பாலூட்டி வளர்க்கும் செயலை, அது செய்யாமலா போகிறது. அதுவும் தியாகம் என்ற சேர்க்கையில் வ்ருமா?

Sowmya said...

Hi Sk,

Hope you enjoyed this post :P

Well,I was, a bit upset of your statement. ## I am confused when you say we can't call something as sacrifice, if the doer gets some satisfaction (particularly non-material) from that action……..##

Is that my presentation confused you or your understanding. Anyway, I take this opportunity to put my strong opinion about the term sacrifice.

As I mentioned earlier to Kumar, I again wanna say, we can be responsible and also committed in our duty. But what about the relationship between a mother and her child. Do you think, it is her responsibility to bring up the child or her love. Do everyone do their duty at home?

In my view, sacrifice is duty bounded and it has nothing to do within the relationship. And its unfortunate, mostly we connect that term with the relationships. And I can say, most of the people think that they sacrificed their whole life for their sons and daughters. Do you think, it has any meaning.

We always try to measure our love and affection through our actions and the responses for those actions. Simultaneously ,we apply the term “ Sacrifice” for our disadvantaged position for the benefit of the other. I just call it as “ Love” , nothing else.

Sowmya said...

hi thiru, Thanks !


----

hi Priya,

I think, you have misunderstood the way, I asked the question.

Let me complete the anz..

You give away yourself for something, for the sake of ..
Happiness which you owe.

Anonymous said...

Does sacrifice leads to happiness?

Not for that person but the one who gets it.

Romba confuse pannitena.

Sowmya said...

pria,

i think, ennoda post than ungala romba confuse panniduchu pola !

ellathayum mathavangalukkaga kudutha, thiyagam nu solreenga thane, appo ungalukku kidaikara santhoshathai ethula serthupeenga !

ippo clear aa purichirukum nu ninaikaren !

Kumar said...

ஓ...நீங்க அந்த ரூட்ல வர்றீங்களா!
அப்படி வாங்க மெயின் ரோடுக்கு!

நான் அப்பப்போ missile, missile னு சொல்றது இதை, இதை, இதைத் தான் :)

சரி, இதுக்குப் போய் ஏன்....க் குட்டியையெல்லாம் இழுத்து விட்டு சங்கடப் படுத்துகிறீர்கள்?

'உனக்காக இதைச் செய்தேன், அதைச் செய்தேன், நீ எனக்கு என்ன செய்தாய்' என்று சொல்லிக் காட்டுவதெல்லாம் ஆறறிவுள்ள மனிதர்களுக்குத் தான் வரும், நாங்களெல்லாம் எங்கள் இயற்கை குணம் மாறாமல் நடந்து கொள்வோம்' என்று அது உங்களிடம் கோபித்துக் கொள்ளப் போகிறது, ஜாக்கிரதை :)

Sowmya said...

Kumar,

சில சமயங்களில், நான் கூற வருவது, ச்ரியாக போய் சேராத போது, சங்கடம் கொடுக்கும் சில, வார்த்தைகளை பிரயோகித்தே, நான் கூற விரும்புவதை அழுத்தமாக, கூறுகிறேன். நிச்சயமாக, உங்களை சங்கடப் படுத்தும் நோக்கில் அல்ல.

பார்த்தீர்களா ! அவ்வார்த்தையை பிரயோகித்ததால் தான், உங்களுக்கு சட்டென்று ரூட் புரிந்து விட்டது :P

Karthik said...

பத்து மாதம் சுமந்து, கடுமையான வலியையும் , வேதனையும் அடைந்து, ஒரு பிள்ளையை ஈன்றெடுத்து, அதனை சீராட்டி, பராட்டி வளர்த்து, அப்பிள்ளையை நல்வழிப் படுத்தி, ஒரு சீர் நிலைக்கு உயர்த்தும் ஒரு தாயிடத்தில், தியாகம் குடி கொண்டிருக்கிறது என்பதே பொதுவாக பேசப்படும் வாதம். ஆனால், ஒரு நிமிடம், அப்பிள்ளையா, தன்னைப் பெற்று, நல் வழிப்படுத்து என்று சொல்லியது. என்ற கேள்வி எழுப்பினாலே போதும், அத்தாய் செய்த செயல்கள் தியாகம் என்ற நிலைக்குள் வருமா என்பது தெரிந்து விட

instead of taking this for your analysis I feel u should have taken some other points for sacrifice.Its a good write up though,enjoyed it.

Senthil said...

தி ..யாகம்
I don't know how none of you thought about Tamil Cinema where there are umpteen examples
1. All heroes in Vikraman's movies (eg. poove unakkaga, film with surya in the lead)
2. Murali in all his films
3. Our heroes who sacrifice their lives for their brother/sister ...

On a serious note, Why a mother is usually associated with sacrifice?

When a snake is hungry and if it does not get any food, it'll eat it 's own young ones. When a mother gets some food and if the child is hungry, she'll place the child's interest more than hers.

The action is out of love. There is no need or compulsion to do that. To the people who perform it, it is just another action. To the people who view it, it is sacrifice. Gandhi did not think, Teresa did not think, Mandela did not think they are sacrificing their life, we did and we honour it.

Kumar said...

Silence all around?

Or preparing for a big bang??

Sowmya said...

hi karthik,

Most of the time,we practiced ourself to connect the term sacrifice with the mother's love.and We always believe the same is happening in motherliness and due to that, every mother have the same feeling that she is someway sacrificing herself for others in the family.

Thanks for the feedback :)

Sowmya said...

Haha..Senthil !

Namma oorula, thiyagam endra varthaikku arthatha, thamizh thirai padangal thaan arimugame senchathu ! :D

Sowmya said...

Hey kumar,

Sorry, I was little busy and tired with my work !

Silence speaks deeply aa :P

I will do it today :)

Thanks for the concern :)

Unknown said...

“தாய் அன்பு என்கின்ற ஒரு பெரும் பொய் இந்த உலகத்தில் இருந்து வருகிறது.

எல்லா தாய்களுமே உன்னதமான சுயநலமிகளே.

உன்னை வளர்த்து ஆளாக்க எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று தெரியுமா? என்று கேட்காத தாய்களே கிடையாது.

நீ தான் வேண்டும் என்று அவள் உன்னை பெறவில்லை. அவள் பெருகையில் நீ வந்தாய்.

உன் வரவு அவளுக்கு சக மதிப்பு. உன் வளர்ச்சி அவளுக்கு பாதுகாப்பு.

நீ வளர்ந்து நிழல் தருவாய் என்று தான் அவள் உனக்கு பாலூட்டினாளே ஒழிய உனக்காக அல்ல.

நீ வளர்வதற்காய் அவள் தேவைப்படுகிறாள். அவள் சந்தோஷத்திற்கு நீ தேவைப்படுகிறாய்.

இதில் தியாகத்தன்மை எங்கிருந்து வந்தது?”

- அய்ன் ரான்ட் என்பவர் எழுதியதின் தமிழாக்கம் இது.

"யாரும் முயலாத, எண்ணிப் பார்க்க முடியாத ஒரு செயலை, மற்றொருவர் செய்யும் போது, மிகப் பெரிய தியாகம் புரியப்பட்டதாக, அனைவரும் எடுத்துக் கொள்ள மட்டுமே, இந்த தியாகம் என்ற சொல் பயன்படுத்த பட வேண்டும் என்பதே என் தாழ்மையான கருத்து."


மிகச் சரியாக வரையறுத்து சொல்லி இருக்கிறீர்கள்.


காரல் மார்க்ஸை இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக சொல்லலாம்.

பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்காவும், அவர்தம் துயரங்களை களைவதற்காகவும் இன்னல் எதுவரினும் விஞ்ஞான நோக்கையே உயிர் மூச்சாக கொண்டு வாழ்ந்தார் மார்க்ஸ். இதனால் அவரும் அவர் மனைவி மக்களும் அடைந்த துயரங்கள் எண்ணிலடங்கா.

தனது இலட்சிய வாழ்க்கையினால் தம் மனைவி மக்களுக்கு ஏற்பட்ட இன்னல் மார்க்சின் மனத்தை ஆழமாக பாதித்திருக்க வேண்டும். அதனால் தான், “இந்த வாழ்க்கையை மீண்டும் வாழ வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வீர்கள்?” என்ற கேள்விக்கு மார்க்ஸ் “இப்போது செய்து கொண்டிருப்பதையே மறுபடியும் செய்வேன், திருமணம் செய்து கொள்வதைத் தவிர” என்று பதிலளித்தார்.

எதைச் சாதிப்பதற்காக, எவருடைய நலனுக்காக மார்க்ஸ் கொடும் துன்ப துயரங்களை அனுபவிக்க நேரிட்டது என்பது தான் முக்கியம். தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்கும் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் அனைவரின் விடுதலைக்குமான தத்துவ வழியை அமைத்துக் கொடுத்ததே மார்க்சின் மாபெரும் சாதனை.

மாரக்ஸின் நண்பர் எங்கெல்ஸ், மார்க்ஸ் இறந்ததை இப்படி குறிப்பிட்டாராம், “காரல் மார்க்ஸ் என்ற அந்த மாபெரும் சிந்தனையாளர் சிந்திப்பதை நிறுத்திவிட்டார்”

மூர்த்தி

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

உண்மைதான்.
தாய்மையில் இருப்பது முதலில் அன்புதான்.
ஆனால் ஒரு தாய்தான் வாழும் சூழ்நிலையை மீறி தன் குழந்தையின் எதிர்காலத்தைக் கருதி பல்வேறு இன்னல்களை வீரும்பி ஏற்றுக் கொள்ளும்போதுஅந்த அன்பில் தியாகத்தின் சாயல் படர்கிறது.
பெரும்பாலான குடும்பங்களில் இந்த இன்னல்களைப் பெண் விரும்பி ஏற்கிறாள்,எனவே தாய்மை இயல்பாகப் போற்றப்படுகிறது..ஆனால் சில குடும்பங்களில் சில அப்பாக்களும் இந்த இன்னல்களை விரும்பி ஏற்கிறார்கள்...
ஆனால் உண்மையான,முழுமையான தியாகம் என்னவெனில் கேட்டால்,ஒரு பகத்சிங்கின் வாழ்க்கை ஒரு தியாகம்,ஒரு வ.உ.சி.யின் வாழ்க்கை ஒரு தியாகம்..

Unknown said...

Respected Sowmya

I am sorry that I am unable to express my appreciations in Tamil. But your article is a thought provoking one and the moderations on the comments is commendable.

It was by accident i came across your blog. Enjoyed it. Your way of expression in the Tamil language is lovely.

Best wishes for more lovely thoughts to blossom.

- jose

Sowmya said...

Respected jose, :)

Thanks for your time & patience to read this post as well as the comments. Only very few people has the clear understanding about what i discuss here. I am happy to receive ur appreciations regarding the way of my writing. Thank u so much :)