யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!
Saturday, October 10, 2009
அடக்கத்தில் எல்லாம் அடக்கமா..
எட்டு மாதங்கள் - இடைவெளி------ எண்ணம் சார்ந்த என் எழுத்துக்களுக்கு ! எதனால் என்று ஆராய்வது அத்துணை சுவாரசியமாக இருக்காது என்பதால்,ஏன் பதிவு புதுப்பிக்கபடவில்லை என்று கேள்விக் கணைகள் எழுப்பிய இதயங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளையும், காலதாமதத்திற்கு மன்னிப்பையும் கோரி இப்பதிவை சமர்ப்பிக்கிறேன்.
அடக்கம் அமரருள் உய்க்கும் - அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்
என்ற வள்ளுவனின் கூற்று, அடக்கமாக இருப்பது ஒரு மேம்பட்டத் தன்மை என்பதை வலியுறுத்திக் காட்டுகிறது.
பொதுவாகவே, அடங்கிப் போகிறவர்களையும், அடக்கமாக இருப்பதற்க்கு முக்கியத்துவம் தருபவர்களையும் நமக்குப் பிடிக்கிறது. ஏன்? இதன் காரணத்தை ஆராய்ந்திருக்கிறோமா ! எதனால் இந்த எண்ணப் போக்கு? எதை எதிர்பார்த்து இப்படி ஒரு எண்ணம் நம் மனதிலும், நம்மாலும், மற்றவராலும் நமக்குள் திணித்து வளர்த்த்ப்படுகிறது? பணிவை நாம் மிகவும் ஆதரிக்கிறோமே ஏன்? பணிதலுக்குப் பின்னால் நாம் என்ன எதிர்பார்க்கிறோம்....அத்தகைய பணிதல் நமக்குள் விளைவிக்கும் விளைவுகள் எவை..ஒரு அலசலாக இப்பதிவை வைத்துக் கொள்வோமா..உங்கள் கருத்துக்களை முன் வைத்து மேலும் இதை விரிவாக விவாதிக்கலாம் என்ற எண்ணத்துடன், உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் :)
-------------------------------------------------------------------------------------------------
பணிவு பற்றி எல்லோருக்குமே ஒரே கருத்து தீர்க்கமாக இருப்பதை காண முடிகிறது ! பணிவை நாம் மனமுவந்து ஆதரிக்கிறோம் ! மிகச்சிறந்த உணர்வாகவும், தன்மையாகவும், பணிவு நம்மால் கொண்டாடப்படுவதற்க்கு பல காரணங்கள், ஒன்று : பணியர் பெரியர் !, இரண்டு : பணிதல், தலை கனம் இல்லாத் தன்மையை குறிக்கும் அறிகுறி ! மூன்று : கற்றலுக்கு வித்து, காது கொடுத்து மட்டுமல்லாமல்,பிற விஷயங்களை உற்று கவனித்து உள் வாங்கிக் கொள்ளப் பயன்படும் தன்மை ! நான்கு: சபை நாகரீகம் - பிறரை மதித்தலை காட்டிக் கொள்ள பயன்படும் கருவி !
ஆக பணிதல் மிக அவசியமான, ஒவ்வொருவரும் தனக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டிய தன்மையில் ஒன்று தான்.. மறுக்கவில்லை ! ஆனால் பணிவை நாம் கற்றுக் கொள்ளல் எப்போது மிகுந்த நன்மை பயக்கும்??.. என்பது ஆராயப்பட வேண்டிய விஷயமாகத் தோன்றுகிறது. அச்சம் தவிர், ஆண்மை தவறேல் என்ற கூற்றுக்களை எப்பருவத்திலும் புரிந்து ஏற்று அதன் வழி நடக்க முயல்வது, நன்மைகள் பயக்கும் சாத்தியக் கூறுகளை வெளிக் காட்டுவதைப் போல், பணிவு வளர் ! என்ற கூற்றினை,ஒரு தீர்க்கமான தெளிவை நாம் அடைந்த பின்னரே, செயல் படுத்தல் வேண்டும் என்பதே என் கருத்து. சிறுவயதில் பணிவு என்பது, கீழ்படிதல் என்ற தன்மையை வளர்க்கப் பயன்படும் ஒரு கருவி, அக்கால கட்டத்தில் தான், கற்றலின் சுவை விதைக்கப்படுகிறது. சொல்வதை ஏற்றுக் கொள் என்று அறிவுறுத்தும் விதத்தில், அப்பிராயத்தில் கற்கும் எல்லா விஷயங்களுமெ பசுமரத்தாணி போல் பதியும் என்ற உறுதியால் கீழ்படிதல் கருவியாக்கப்பட்டது.
சிறுபிராயம் அடுத்து வளர் இளம் பருவத்தில், பணிவு பற்றிய சரியான புரிதல் இல்லாமல், அதை ஏற்று நடக்க முட்படுவது, ஒரு வித தாழ்வு மனப்பான்மையையும், தன் கருத்தையோ அல்லது செயலையோ தைரியமாக எவ்வித சூழலிலும் வெளிக்காட்ட தயங்கும் எண்ணத்தை விதைக்கும் சாத்தியக் கூறுகள் அதிகம். வளர் இளம் பருவம் மட்டுமல்லாது, இளம் பருவத்தை எய்திய பின்பும், வாழ்வு பற்றிய தனக்கு உண்டான ஒரு கோணமும், அதனைச் சார்ந்த தெளிவையும் ஒருவன் அடையாமல், பணிவை அதன் கூற்றுக்காக கடைபிடிப்பவர் அனைவருக்குமே மேல் கூறிய பக்க விளைவுகள் நேரிடக் கூறும்.
கற்றல் முடிவுறுவதில்லை ! - உண்மை. வாழ்நாள் முழுதும் கற்றலில் தான் பயணிக்கிறோம். ஆனால் வாழ்க்கையின் அடிப்படை சாராம்சத்தை புரிந்து, தெளிவான் கண்ணோட்டதுடன், வாழ்வை அணுகும் போது தான், தனக்கு ஒரு நிலையான எண்ணப்பாட்டை ஒருவன் வகுத்துக் கொள்ள இயலும். அத்தகைய நிலையில் தான் பணிவின் பயன்பாடு, அவனை மேன்மைப் படுத்தும்.
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
நீங்களுமா?
இடைவெளியைப் பொறுத்த வரை நானும் சேம் ப்ளட்..
பணிவு பற்றி: பணிவின் தேவை கற்றலுக்காக ஏற்பட்டிருக்கலாம் என்பது என எண்ணம்.
பணிவு இருக்கும் போதுதான் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விதயங்கள் மிக உண்டு உலகில் என்ற எண்ணத்திற்கு மனதில் இடம் ஏற்படுகிறது.
பணிவு இல்லாத போது கற்றல் கடினம்;கற்றல் நிற்கும் போது அறிவில் இருள் சூழ்கிறது..
எனக்குத் தோன்றியது இது..
பணிவும் அடக்கமும் வெற்றியை தேடி தண்டிர்க்கிறது என்பது வரலாறு நமக்கு கூறும் செய்தி, எனவே தான் பணிவை அடக்கத்தை பெரும்பாலான மக்கள் தேர்ந்து எடுக்கின்றனர்.
வன்முறையும் , ஆதிக்கமும் அதிக அளவில் வெற்றியை தேடி தந்தது இல்லை.
ஆனால் காந்தியின் (அப்டுல் கலாம், ஒபாமா கூட) கதை வேறு, அவரால் ஆதிக்கம் கூட செலுத்தி இருந்திர்க்க முடியும், அந்த தகுதி திறமை இருந்தும் அடக்கம், பணிவு, அரவழி என்று தேர்ந்து எடுத்தனர்.
பொதுவாகவே, அடங்கிப் போகிறவர்களையும், அடக்கமாக இருப்பதற்க்கு முக்கியத்துவம் தருபவர்களையும் நமக்குப் பிடிக்கிறது. ஏன்? இதன் காரணத்தை ஆராய்ந்திருக்கிறோமா ! எதனால் இந்த எண்ணப் போக்கு?///
பணிவு என்பது அதிகமாகப் போகும்போது ஆளுமையும் தலைமைப் பண்பும் குறைந்து போகிறது என்று கருதுகிறேன்!!
என்னைப் பொறுத்த வரை, ஒருவரின் அனைத்துப் பரிமாணங்களிலும் பணிவு மிகப் பெரியது, சிறந்ததும் கூட. எனக்கு மிகவும் பிடித்தவர்களின் பட்டியலில் அனேகமாக எல்லோரிடமும் இது பிரதானமாக இருக்கும். அப்படிப்பட்டவர்களிடம் தான் நாம் எவ்விதமான தடங்கலுமின்றிப் பழக
முடிகிறது.உள்ளம் திறந்து பேச முடிகிறது. மனங்களிடையே பாலம் கட்டி நமது comfort zone விட்டு எட்டிப் பார்க்க முடிகிறது.
பணிவை, பணிவின் காரணத்தை நம்புகிறோமா என்பதைப் பொறுத்தே அதை ஆதரிப்போமா இல்லையா என்று யோசிக்கத் தோன்றும்.
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
தன் நிலையிலிருந்து மாறாமல் அடங்கி நடப்பவனே மலையைக் காட்டிலும் பெரியவனாய் கருதப்படுவான்.
ஓர் அழகான ஆற்றங்கரை. அங்கு ஓர் அமைதியான ஆசிரமம். ஒரு பழுத்த ஆன்மிக ஞானி அதன் தலைவர். அவருக்கு நூற்றுக் கணக்கான
சீடர்கள். ஒரு நாள் தன் அந்திம காலத்தை உணர்ந்த குரு, சீடர்களை அழைத்து, “நாளை விடியலில் ஒரு மிக முக்கியமான உபதேசம்
இருக்கிறது, அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்” என்றார்.
அதன்படியே அடுத்த நாள் வைகறையில் அனைவரும் ஆவலோடு வந்து அம்ர்ந்திருந்தனர். குருவும் இதுவரை கூறாத புதிய உபதேசங்களையும்,
பல பயன் மிகு செய்திகளையும் கூறி விட்டு இதைக் கேட்ட உங்களுக்கு மிகுந்த நன்மை கிடைப்பதுடன் உங்கள் பாவங்கள் அனைத்தும்
நன்மையாக மாறி விடும் என்று ஆசீர்வதித்து யாராகிலும் வேறு ஏதாவது கூற நினைத்தால் கூறலாம் என்றார்.
பலரும் எழுந்து குருவைப் புகழ்ந்து பேசினர். ஒரே ஒருவர் மட்டும், “இந்த உபதேசத்தால் அதிக நன்மையடைந்தது நான்தான்” என்றார்.
இதைக் கேட்ட மற்றவர்கள் மிகுந்த சினம் கொண்டனர். என்ன அகம் பாவம், தலைக்கனம். குருவிடமே தற்பெருமை பேசுகிறாரே என்று
எண்ணினர். ஆனால் குருவோ, ”நீர் தான் இனி இந்த ஆசிரமத்தின் தலைவர், இவர்களுக்கு புதிய குரு” என்று கூறிவிட்டு உயிர் நீத்தார்.
அனைவருக்கும் ஒன்றும் புரியவில்லை. ஞானியின் இறுதிக் கடன்களை முடித்து விட்டு, புதிய குருவின் முதல் உபதேசக் கூட்டத்தில்
அவர்களின் முதல் கேள்வியே இது பற்றித்தான் இருந்தது.
புதிய குரு அமைதியாக தான் பேசியது தற்பெருமையல்ல என்று கூறி விளக்கம் அளித்தார். நமது குரு என்ன சொன்னார் ? இந்த உபதேசத்தைக்
கேட்டவர்களுடைய பாவங்கள் எல்லாம் நன்மைகளாக மாறிவிடும் என்று கூறினார் அல்லவா?
என்னைப் பொறுத்தவரையில் இங்கே அதிகம் பாவம் செய்ததவன் நான் தான் என்று நினைத்தேன். எனவே என் அனைத்துப் பாவங்களும்
நன்மையாக மாறும்போது இங்கே
அதிகம் நன்மையடைந்தது நானாகத்தானே இருக்க முடியும்? எனவேதான் அவ்வாறு கூறினேன் என்றார். உடனே அனைவரும் எழுந்து நின்று
உங்களை குருவாக அடைந்தது எங்கள் பாக்கியம் என்று கூறி வணங்கினர்.
அறிவன்,குப்பன்,தேவன்,குமார் கருத்து பகிர்தமைக்கு மிக்க நன்றி ! இவ்வகையான எண்ணப் பகிர்தல், நல்ல உற்சாகத்தை அளித்து மகிழ வைக்கின்றது :)
இப்பதிவு சார்ந்த என் கருத்தை இதே பதிவில் பதித்திருக்கிறேன் ! உங்கள் கருத்துக்களையும் வரவேற்க்கிறேன் ! நன்றி !
சரியாகச் சொன்னீர்கள். புரியாத / தெளிவற்ற அடக்கத்திற்கும் அடிமைத்தனத்திற்கும் அவ்வளவு இடைவெளியில்லை. அப்படிப்பட்ட பணிவின் மேல் சந்தேகமும் கோபமும் தான் ஏற்படும்.
அப்பாடா...பழைய சௌம்யாவை மீண்டும் படிக்க முடிந்தது.
மீண்டும் காணாமல் போய் விடாதீர்கள்!
நறுக்கு தெறித்தாற் போல் மிக அழகாக இரண்டு வரிகளில் இப்பதிவின் சாராம்சத்தை கூறி விட்டீர்கள் குமார், வெகு நன்று :)
:D காணாமல் போய்விடாமல் செய்துவிடலாம் :)
//:D காணாமல் போய்விடாமல் செய்துவிடலாம் :)//
அதற்கான வழியையும் நீங்களே சொல்லி விடுங்கள் :)
Ha Ha..thedi kondey irukiren :D Kumar !
//சிறுபிராயம் அடுத்து வளர் இளம் பருவத்தில், பணிவு பற்றிய சரியான புரிதல் இல்லாமல், அதை ஏற்று நடக்க முட்படுவது, ஒரு வித தாழ்வு மனப்பான்மையையும், தன் கருத்தையோ அல்லது செயலையோ தைரியமாக எவ்வித சூழலிலும் வெளிக்காட்ட தயங்கும் எண்ணத்தை விதைக்கும் சாத்தியக் கூறுகள் அதிகம்.//
Superb observation on life.
Keep writing such these.
mam
i think you dont remember me
i have attended one of your session at harita seating systems
Hey Janani,
Yup, Now I remember...Nice to see you here :)
Thanks much !
GG, Thanks a lot :)
Panivum Thunivum sariyana vigithathil sariyana nerangalin sariyana idangalil amaivathe Vetriyin Vidhai.
Panivum Thunivum = Pennum Aanum pola. Irandum mukkiyam.
Rajaram
Post a Comment