சந்தோஷம் காணாத வாழ்வுண்டா? சந்தோஷத்தை நிர்ணயிப்பது யார். நம் சந்தோஷத்தை எங்கு வைத்திருக்கிறோம்.இது போன்ற பல கேள்விகள் நமக்கிடையே அவ்வப்போது எழுந்தாலும், அப்போதைக்கு மனம் என்ன சமாதானம் சொல்கிறதோ, அதை தான் நாம் நடைமுறைப் படுத்துகிறோம். மனமானது சரியான வகையில் தான் சமாதானம் செய்கிறதா? என்பது அவரவர் தன்மைகேற்பவும், நம்பிக்கைகேற்பவும் மாறுபடுகிறது.
உண்மையிலேயே சந்தோஷத்தை வரையருக்க இயலுமா? , என்றால் இயலாது. இது தான் சந்தோஷம் என்று சில விஷயங்களை மட்டும் நாம் ஒதுக்கி விடுவதில்லை.மனம் எதில்லெல்லாம், பூரண திருப்தி அடைகிறதோ, அது மனதிற்குள் சந்தோஷமாக மலர்கிறது. மனம் பூரண திருப்தி அடைய, ஆசைகள் பூர்த்தி செய்யப் படவேண்டி இருக்கிறது. ஆசைகளை உண்டாக்க, ஒரு இலக்கை நாம் நிர்ணயிக்க வேண்டி இருக்கிறது. அதாவது, இன்ன பொருள் கிடைத்தால் எனக்கு சந்தோஷம் என்பதை ஒரு இலக்காக வைத்து மனமானது ஆசைப் படும் போது, அது நடக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்படுகிறது. அந்த எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படும் போது, சந்தோஷமனது மலர்கிறது.
ஒரு இலக்கை வைத்து, ஆசைகள் எழும் போது, அவ்விதமாக சந்தோஷத்தை அடைய ஏதுவாக இருக்கிறது. ஆனால் இலக்கில்லாமல், எது கிடைத்தால் எனக்கு சந்தோஷம் என்ற கேள்வியும், மற்றவருக்கு கிடைக்கும் எல்லாமே எனக்கும் கிடைத்தால் , சந்தோஷம் என்று வரும் போது, நம் இலக்கு இன்னதுதான் என்ற குறிக்கோள் மறைந்து, மற்றவரின் இலக்கை நம் இலக்காக கொண்டு, சந்தோஷத்தை தேடுவதால் தான், பூரண சந்தோஷத்தை அடைந்த திருப்தியை நாம் அடையாமல் போகிறோம்.
எனக்கு என்ன வேண்டும் என்ற நினைவு நம்மிடையே சற்று குறைவு தான். இந்த நிலையை அடைய, தெளிந்த மனம் வேண்டும். உலகம் எவ்வழியோ அதுவே என் வழி என்று ஆகும் போது, பூரண திருப்தி தரும் சந்தோஷத்தை நம்மால் அடைய முடியாமல், மற்றவர்கள் நம் சந்தோஷத்தை நிர்ணயித்தவர்கள் ஆகிறார்கள்.
ஒரு கதை உண்டு.முல்லா நஸ்ருதீன் ஒரு முறை அழுது கொண்டே இருந்தாராம். அவரின் நண்பர் அதைக் கண்டு, ஏன் அழு்து கொண்டே இருக்கிறாய் என்று கேட்க, அதற்கு முல்லா, என் மாமா நேற்று இறந்து விட்டார், போகும் போது, ஒரு லட்ச ரூபாயை என் பெயரில் எழுதி வைத்துவிட்டு போய் விட்டார் என்று அழுதாராம் அதற்கு நண்பர், போனால் போகிறது, வருத்தப்படாதே.அவர் போனாலும், உனக்கு சொத்து வந்து விட்டதல்லவா, அதை நினைத்து சந்தோஷப்படு என்று கூறினார். அதை கேட்ட முல்லா மேலும் அதிகமாக அழ ஆரம்பிக்க, பதைபதைத்த நண்பர், ஏன் மேலும் அழுகிறாய் என்று கேட்க, போன மாதம் என் தாத்தா இறந்து போனார், அவரும் என் மேல் இரண்டு லட்சங்களை எழுதி வைத்து விட்டு போய்விட்டார் என்று அழ, அந்த நண்பருக்கு ஆச்சர்யமாக போய் விட்டது.அடடா! மேலும் உனக்கு சொத்தாக குவிந்து இருக்கிறது. அப்படியும் நீ ஏன் அழ்து கொண்டே இருக்கிறாய் என்று வினவ, அதற்கு முல்லா, நான் என்ன செய்வேன், என் மேல் இனிமேல் சொத்து எழுதி வைத்து இறந்து போக, இன்னும் உறவினர்கள் இல்லாமல் போய் விட்டனரே என்று தான் அழுகிறேன் என்று சொன்னாராம்.
எப்படி இருக்கிறது கதை. இது தான் நடந்து கொண்டிருக்கிறது நம்மில். நம் கை, கால், உடல் எல்லாம் நன்றாக இருந்தும், நம்மால் இவை எல்லாம் எனக்கு நன்றாக இருக்கிறதே என்ற எண்ணமும், திருப்தியும் நமக்கு கிடைப்பதில்லை. ஏதோ ஒரு விரலை இழந்தாலே, இப்படி நாம் இழந்து விட்டோமே என்ற அதிருப்தியானது, நல்ல கை கால், உடல் நலத்துடன் வாழ்ந்தாலே போதும், நிம்மதி என்ற கட்டத்திற்கு நம்மை இட்டு சென்று விடுகிறது.
நம்மிடம் இருக்கும் எந்த விதமான பொருளின் அருமையை நாம், அதை இழக்கும் போது தான் உணர்கிறோம். உணரப்படும் போது, அப்பொருள், நமக்கு இல்லாத ஒன்றாக ஆகிவிடுகிறது. சிறிது, சிந்தித்தாலே போதும், நம்மில் எத்துணை சந்தோஷம் நிறைந்திருக்கிறது. அது எங்கெல்லாம், நமக்குள் ஒளிந்திருக்கிறது. அவற்றை இனம் காணுதல் எப்படி, இனம் கணடு, மன நிறைவை காண்பது எப்படி. இப்படியெல்லாம் நம்மால், சந்தோஷத்தை பல வழிகளில் மனதார அடையவும் முடியும். பூரணமாக உணரவும் முடியும்.. அப்புறம் என்ன ! வாழ்வே ஆனந்தம் தான் !
யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
oru reading aagidichi..second reading koduthuttu comment :)
nalla topic sowmya :)
Sowmya...
Edhaiyumey romba seriousaa edukaadha varai ellam happy dhaan.
I read a book called "dont sweat the small things and its all small things"
that talks about how we fret about unnecessary things and spoil our happiness.
Of what I have understood , happiness is in the attitude of a person..but if u ask me if we able to follow it all the time...the answer is no :(
Atleast its a good thing to understand it and start sometime :)
Nice post , Sowms :)
an eye-opener :)
Nice post,
i have read this story somewhere in osho book
keep it up
நல்ல சிந்தனை.
ஓசோ பாதிப்பு நல்லா தெரியுது..
சாமுராய்ல ஓரு வரி வரும்.
யாரலயும் ஓரே ஓரு feelings 2 மணி நேரத்துக்கு மேல இருக்க முடியாது..
அது சந்தோசம்,துக்கம்,அழூகை,கண்ணீர்,...
அப்படி இருந்தாங்கன்னா அதுக்கு பேரு வியாதி..சிரிச்சுக்கிட்டு இருந்தா கூட.
லட்சியம்,குறிக்கோள் எல்லாம் நம்ம வைச்சிக்கிறதுதான்.சந்தோசம் மனிதனைப் பொறுத்தது..5 வருசம் விம்பிள்டன் ஜெயிச்ச பெடரர்.அழுத காட்சி மனதில் இருக்கு.
hey sree,
"\\Edhaiyumey romba seriousaa edukaadha varai ellam happy dhaan.//"
எதையுமே சீரியஸாக எடுக்கமாக இருந்தா சந்தோஷம் இருக்கும் அப்படின்னு என்னால ஏற்றுக் கொள்ள முடியல. மேலோட்டமாக பார்க்கப் போனால், நாம் சீரியஸ் என்று எடுத்துக் கொள்ளும் அனுபவம் எப்பவுமே சந்தோஷத்திற்கு எதிரானதாகவே இருந்திருக்கிறது. உதாரணத்திற்கு, துக்ககரமான விஷயங்களுக்கு கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம், சந்தோஷமான விஷயங்களுக்கு கொடுக்கப்படுவதில்லை.
சந்தோஷத்தையுமே சீரியஸாகவே எடுத்துக்கணும், அனுபவிக்கணும் நோய்வாய் பட்டிருக்கும் ஒருவனிடம் எப்படி அக்கறையும், அனுசரணையும் கூடுகிறதோ, அதே அக்கறை, அனுசரணை அவன் நோயில் இல்லாத போதும் இருக்க வேண்டும். அது தான் உண்மையான பாசத்தை வெளிப்படுத்தும். பரிவு வேறு, பாசம் வேறு அல்லவா.
"\\I read a book called "dont sweat the small things and its all small things"
that talks about how we fret about unnecessary things and spoil our happiness.//"
சிறிய விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காதே! ஆனால் இது சிறிய விஷயம், அது பெரிய விஷயம் என்று பிரித்துக் கொள்வது யார். யார் எதற்கு முன்னுரிமை தருவார்கள் என்று எப்படி உறுதியாக கூற இயலும்" சின்ன விஷயத்தை பெரிது பண்ணாதயேன்"-இதுதான்
பொதுவாகவே எல்லோராலும் கூறப்படுகிற ஒன்று.சரி விட்டுடேன், என்று ஒரு ஆறுதலுக்காக சொல்லப் படுகிறதாகவே எனக்குத்
தோன்றுகிறது "போனால் போகட்டும்" என்பது தீர்வாகாது. இல்லையா
"\\Of what I have understood , happiness is in the attitude of a person..but if u ask me if we able to follow it all the time...the answer is no :(//"
யாராலும் எப்போதுமே சந்தோஷமாக இருக்க முடியாது.சந்தோஷம் என்பதே, துக்கம் என்பது இருப்பதால் தான் உணரப்படுகிறது. சந்தோஷம் வேண்டும் என்று நாம் கூறும் போதே, துக்கம் என்பதை நாம் ஒதுக்க முடியாது என்று தெரிகிறது அல்லவா. ஆனால், இரண்டையும் வேறு படுத்தியே பார்த்து நமக்கு பழகி விட்டது. துக்கம் என்பதை தனியே பாராமல், அதன் மூலம் எனக்கு ஏற்படப் போகும் சந்தோஷத்தை காணும் திறனை நாம் வளர்த்துக் கொண்டாலே, எப்பவும் நாம் சந்தோஷமாக இருக்கும் நிலையில் நம்மை நாம் கொண்டு செல்ல இயலும்.
ரொம்ப தத்துவத்தை கக்கி விட்டேனோ..:) என்ன செய்வது, இது தான் தகுந்த விளக்கமாக எனக்குத் தெரிகிறது. :)
Hi anand,
yeah, me too read it somewhere. I stick to that story, because its telling about the fact ,what we do most of the time.
( "we" is the general term, may not be apply for you :))
Thanks for the feedback :)
hi saravana
வருகைக்கு நன்றி :)
"\\நல்ல சிந்தனை.
ஓசோ பாதிப்பு நல்லா தெரியுது..//"
ஒஷோ பாதிப்பு என்று எதை குறிப்பிட்டு இருக்கிறீர்கள் என்பது தெரியவில்லை.
ஏனென்றால், நான் கூறிய கருத்தின் கருக்கு எதிரிடையானவர் ஒஷோ. குறிக்கோள் என்ற கொள்கைக்கு எதிரானவர் அவர். குறிக்கோளை நீ வகுத்துக் கொண்டாலே, சந்தோஷத்தை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குளே காண முடிவு செய்து விட்டாய், என்று கூறுபவர்.
"\\சிரிச்சுக்கிட்டு இருந்தா கூட.
லட்சியம்,குறிக்கோள் எல்லாம் நம்ம வைச்சிக்கிறதுதான்.சந்தோசம் மனிதனைப் பொறுத்தது..//"
Good saying :)
Sowmya: I have 2 posts yet to read. Will come back and cooment.
hey priya,
take your own time.I am happy that i got some special people who read my post continously.
:)
Dear Sowmya...
Yeah..I agree that we give a lot of importance to sorrowful incidents while the happy ones do not last long.
And its true that we shd STRIVE to be happy...I mean conciously make an effort to be happy and create a pleasant atmosphere.
போனால் போகட்டும்" என்பது தீர்வாகாது. இல்லையா//
I dont agree , Sowmya.
There is defenitely somethings that has more importance and some that are negligible.
I have come across a lot of ppl who spoil the whole day cribbing bcos a cup of coffee was spilt .Is it worth it?
why ? even I was sulking for so many hours after I got my hair stuck to 'fly glue strips' in Thirupathi..I had a great time that day...the whole experience was perfect. Except that I got glue all over my hair and that made me soo sulky inspite of my mom promising to clear it out.Throo out dinner time my mom was pacifying me.
But after I got over it , I felt really ashamed for making an issue of nothing.
Idhu siriya vishayam...but if one gets a head injury its a very serious matter.
துக்கம் என்பதை தனியே பாராமல், அதன் மூலம் எனக்கு ஏற்படப் போகும் சந்தோஷத்தை //
what happiness wld we get out of sorrow , Sowmya ?
This is a bit too much , paa !
when I meant attitude , I meant that we should learn to let things go and never fret for trivial matters.
But again Sowmya..this should not lead to a laid back , lazy attitude.
என்ன செய்வது, இது தான் தகுந்த விளக்கமாக எனக்குத் தெரிகிறது. :) //
Oh c'mon...enjoyed it , pal :)
hey sree,
"\\There is defenitely somethings that has more importance and some that are negligible.
I have come across a lot of ppl who spoil the whole day cribbing bcos a cup of coffee was spilt .Is it worth it?//"
Absolutely, but its all depends upon the priority what you give for things. we have the tendency to group everything in to that smaller category. The things which are very important for you, may not be the same for the other. So we cant generalize , certain things are smaller compared to the bigger ones.
For some, loosing money is a big deal. For some, compromising the emotions is a big thing. You have the authority to decide what is smaller thing or a bigger thing.
For me, No such things exist. Everything is same. According to the mood and the situation, I just categorize them into two and i come back to normal, after i crossed that moment.
“\\what happiness wld we get out of sorrow , Sowmya ?//”
Hmm..sree good question. It’s the philosophy of life. We get happiness while we achieve victory. And we break down, with failures.
We always have the desire to achieve success through out our life. Every one is running to fetch the success fruit by doing things on their own way. We are scared to face the failures. But we forget failures are very much important to learn our mistakes. The success is almost shaped by so many failures. With out failures, we cant get the fruit of success. But we used to forget failures are the steps to achieve the success. We just use the term for consoling ourselves.
we have the tendency to achieve a target at a shot with out any hurdles. But that won’t help us to know the different ways to achieve the success. I would like to say, we have to welcome more failures at the earliest. That’s the implication of my saying “துக்கம் என்பதை தனியே பாராமல், அதன் மூலம் எனக்கு ஏற்படப் போகும் சந்தோஷத்தை //
Nice sree, I am happy to write my views like this.Thanks for the question :) A huge H.. :))
Sowmya:
We do not create it but comes from our heart. When we are able to accept things in our lives without negativity, a joyful moment comes in. Even our writings reflect our feelings and thoughts based on how it enables us to be a beter person when others pinpoint good or bad.
Happines is not just things we buy and enjoy but also how lend a hand to someone or be an angel when they need a support.
You can also check my post here:
http://priablog.blogspot.com/2007/03/happiness.html
Priya,
You are welcome. Yeah I read your post long back . Nice post :)
Post a Comment