யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!

Saturday, July 14, 2007

வெளியே வா.

நம் வாழ்ககையை நம் இஷ்டப்படி வாழ்கிறோமா? நாம் நினைப்பது போலேயே நாம் இருக்கிறோமா. இது எல்லோருக்குள்ளும் இருக்கும் கேள்வியா? இல்லையா? என்பது எனக்குத் தெரியவில்லை.ஆனால், அது கேள்வியாக இருந்தால், அதற்கு பதிலை நாமே சொல்லி விடலாம், எனக்குள் பல முறை இந்த கேள்வி எழும்பி இருக்கிறது. அதற்கு பதிலும் கிடைத்திருக்கிறது. அந்த பதிலை இங்கு பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.

நம் விருப்பப்படி வாழவிடாமல் தடுப்பது நம் எதிரிகளா? நாமே தான். நம்முடைய இன்யெபிஷியன்சஸ் (inhibitions) தான்.இந்த இன்யெபிஷியன்ஸ் என்ற ஓட்டுக்குள் நாம் அடிக்கடி ஓடிப்போய் ஒளிந்து கொள்கிறோம்.

தனிமையில், நமக்காக நம் குடும்ப நபர்கள் படும் கஷ்டத்தை நினைத்து பார்த்திருப்போம். நமக்காக இத்துணை செய்கிறார்களே என்று பூரித்து மகிழ்ந்திருப்போம். ஆனால் எத்துணை முறை நாம் அதை அவர்களிடம் வெளிக்காட்டி இருக்கிறோம். அவர்களை மிகவும் நேசிப்பதாக சொல்லி இருக்கிறோம். அப்படி நாம் அவர்களிடம் சொல்ல முடியாமல் நம்மை தடுப்பது எது. நம் இன்கெபிஷியன்ஸ்.(inhibitions)

மனதிற்குள்ளேயே பாசத்தையும், அன்பையும், காதலையும் வைத்துக் கொண்டே நம்மால் திருப்தி கொள்ள முடிகிறதே தவிர, அம்மாவிடமோ, அப்பாவிடமோ, தங்கை, தம்பி, அண்ணண், அக்கா, மனைவி, காதலி மற்ற உறவுகளிடமோ, அவர்களைப் பற்றி நாம் சேர்த்து வைத்திருக்கும், நல்ல எண்ணங்களையோ, நல்ல அபிப்ராயங்களையோ வெளியே அவர்களுக்கு புரியும் விதத்தில் சொல்லி இருக்கிறோமா என்றால், இல்லை என்று தான் பெரும்பாலனோர் கூறுவோம்,ஏன் என்று விளக்கம் கேட்டால், எல்லாவற்றையும் வெளியே சொன்னால் தான் அன்பா என்ற மறு கேள்வி தான் எழும்புமே அன்றி, அந்த அன்பை மற்றவர் புரிந்து கொள்ள நாம் நம் பக்கத்திலிருந்து என்ன செய்தோம் என்று நாம் நினைப்பதே இல்லை.

ஞாபத்தில் இருந்து கூட அழிந்து விட்ட ஏதோ ஒரு தகராறுக்காக, பல ஆண்டுகளாக பேச்சு வார்த்தையே இல்லாமல் இருக்கும், எத்தணையோ உறவு முறைகளும், ஒரே இடத்தில் வேலை பார்த்தும், ஒரு சிறிய தகராறினால் பேசாமல் முகம் திருப்பிக் கொண்டு போவதற்கும் எது காரணம் என்று பார்த்தால் இன்கெனிஷியன்ஸ்(inhibitions) மட்டுமே காரணம்.

பாட்டு பாட ஆசை இருக்கும், ஆட்டம் ஆட ஆசை இருக்கும், ஏன் கண்ணீர் விட்டு கதற வேண்டும் என்ற எண்ணம் கூட இருக்கும். ஆனால் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று பயந்து, நாம் விரும்பும் சின்னச் சின்ன விஷயங்களைக் கூட செய்வதில்லை.பிறர் கண்ணுக்கு நன்றாக தெரிய வேண்டும் என்று நம் சந்தோஷத்தையே காலால் மிதிக்கிறோம். இந்த தடைகளை எல்லாம் உடைத்து சுத்ந்திரம் அடைவது எப்போது.

எப்போதோ, மதிப்பெண் குறைந்ததற்காக கடுமையாக கோபித்துக் கொண்ட அப்பா, தான் கோபித்துக் கொண்டதோடு நிறுத்திக் கொள்வதால், ஒரு இரும்புத் திரையை தனக்கும், தன் மகனுக்கும் இடையே எழுப்பி விடுகிறார். மகனும், அப்பாவிற்கு தன் மேல் பாசம் இல்லையோ என்று நினைத்துக் கொண்டு விடுகிறான். கோபப் பட்டு விட்டு, பாசம் இருந்தாலும், அப்பாவுக்கு தன் மகனிடம் பக்கத்தில் உட்கார்த்து பேச முடியவில்லை. ஒரு பெரிய இடைவெளியை இருவரும் விரும்பாமலேயே அமைத்துக் கொண்டு விடுகின்றனர்.

அதே அப்பா, ஒரு நாள் தனக்கு கிடைத்த ஒரு பரிசை, அப்பரிசை கொடுத்தவர், அப்பரிசை தான் மிகவும் நேசிக்கும் ஒருவருக்கு கொடுக்கச் சொன்னார் என்று சொல்லி தன் மகனிடம், "நான் மிகவும் நேசிக்கும் நப்ர் நீ தான் , இந்தா பரிசு" என்று வழ்ங்கும் போது தான், பல வருடம் இது புரியாமல் போய் விட்டதே என்று மகன் விம்மி அழுகிறான். இதே நிலை தான் நம்மில் பலருக்கும்.

யாரையாவது நெஞ்சார நேசிக்கிறீர்களா? உங்கள் தாயை, தந்தையை, தமக்கையை, கணவனை, மனைவியை, பிள்ளைகளை மிகவும் நேசிக்கிறீர்களா. ஆனால் அதை வெளியே காட்ட முடியாமல் உங்களுக்குள் எழும் இன்கெபிஷியன்ஸை உடைத்தெறியுங்கள். உங்களை அவர்களுக்குத் தெரியப் படுத்துங்கள். அப்போது தான், நீங்கள் விரும்பும் வாழ்க்கை உங்களுடையதாகிறது.

29 comments:

balar said...

தாமதமான வருகைக்கு மன்னிக்கவும் sowmya..திடீர் கேரியர் மாற்றங்கள் அதனால் நேரமின்மை.உங்களுடைய மற்ற பதிவுகள் இன்னும் படிக்கவில்லை அவைகளையும் படித்து விட்டி கமண்டிரன்..

பி.கு..தங்களுடைய பதிவுகளின் தலைப்புகள் எல்லாம் சினிமா பெயர்களைப் போல வைக்கிறீர்களே அதன் ரகசியம் என்னவோ? :))

Anonymous said...

Ramyaa_Tirunelveli-

Hai Sath, Nice to see your Blog. Today only I got to know about this.

Well done. Nice to see.

Endrendrum Anbudan

Ramyaa_tirunelveli

Unknown said...

Nalla arumaiyana posting.

இன்கெபிஷியன்ஸ்.(inhibitions)

thamizhil arthapaduthi sonnal innum nandraga irukum.

Moorthy

Thiru said...

an excellent post!

Sowmya said...

heyy balar...

எங்கே போய்டீங்க !! இப்படி சொல்லாம கொள்ளாம போவீங்களா, உங்க blog a
சுத்தமா க்ளோஸ் பண்ணிட்டு.. இதெல்லாம் நியாயமே இல்ல.

தலைப்புகள் இப்படித் தான் வைக்கணும் , அப்படி நினனைச்சு பண்றதில்ல. ஏதோ தோணும்..எப்படியாது படிக்க வைக்கணும்.விஷயம் போய் சேரணும். அதுக்கு short and sweet aa வைத்தால் என்ன என்று, அவ்வளவே :)

Sowmya said...

hey ramya

how are u doing. Happy to see you here. keep visiting. :)

Sowmya said...

மூர்த்தி,

அத்தி பூத்தாற் போல , அப்படின்னு சொல்ற மாதிரி, எப்போவாது தான் உங்கள் வருகை. இருந்தாலும், இதுவும் மகிழ்ச்சியே. வருகைக்கு நன்றி :)

இன்கெபிஷியன்ஸ்.(inhibitions)..hmm
தமிழில் சொல்ல வேண்டுமானால், தயக்கம், கூச்சம் என்று பொருள் படும் படி சொல்லலாம்.

Sowmya said...

hey thiru,

எங்கே இந்த பக்கம்,.. நீங்க கூட அத்தி பூத்தாற் போல தான் வந்து படிக்கறீங்க போல.. பாராட்டுதல்களுக்கு நன்றிகள் பல.:)

Anonymous said...

Hi Somya

Its a nice mind blowing question/opinion.

Mannikkavum, Tamiz fontil evvaru type pannuvandhu enbadhu teriya villai.

Neengal sollum nam vaazkkaiyai nadathi selvadhu naam edukkum siru siru mudivugale.

Andha sandarpangalo or sool nilaigalo kaaranam alla.

Naam namadhu aathma sandoshathirkaaga adutha manidhar or sool nilai meedhu kurai kooruvom.


Nam Inhibitions (ull manadhu nam moolaikku idum kattalai (instinct's instruction), thaan namadhu magizchi, tunbathirkku kaaranam.


Neengal solvadhu pola kudumba uravinargalidam naam podumaana anbai paaratuthalai terivippadhu illai.
Terivithu enna payan kidaikka pogiradhu endra ennamum oru kaaranam.


Uravinargalai, nanbargalai paarattum, nandri koorum indha nalla pazakkathai naam ilaya talaimuraiyinarkku katru kodukka vendum.


Enakku 1 vidayam puriya villai. Namdhu viruppam, aasai, ennam oru velai adutha manidargalai paadikkum aanalum, naam namadhu ennangalai, viruppathai kooralamaa?

Ella manidargalum avar avar manadirkul oru karpanai vaazkkai vaazndhu kondu irukkiraargal.

Sila nerangalil niza vaazkkai taraatha inbathai karpanai vaazkkai tandhu kondu irukkiradhu.


Ramji nellai

balar said...

@sowmya
ஒடிப்போய்ட்டேன்னு நினைச்சிட்டீங்களா!!..:))))
அப்படி எல்லாம் செய்யமாட்டேன்.அப்பறம் வீட்ல அடி விழும்..:))
திடீர் வேலை மாற்றம் அதனால் நேரமின்மை அதிகம் ட்ராவில்லிங் வேற அதனால் தான் கொஞ்ச நாள் இந்த பக்கம் வரவில்லை. அதனால் தான் என்னோட blog temporaryயா close பண்ணிஇருக்கேன்.நிறைய பேரு மொக்கை பதிவுக்கு எதுக்கு blogனு வேற சொல்லிட்டாங்களா :)) அதான் எதாவது நல்ல கருத்து உள்ள subject கிடைக்கிற வரைக்கும் blog close பண்ணலாம்ன்ற நல்ல எண்ணம் தான்..:))

balar said...

நல்ல அனுபவ பதிவு மற்றும் அறிவுரை பதிவு..
இந்த மாதிரி பதிவுகள் படிக்கும் பொழுது உண்மையிலே நாம இப்படி இருந்தால் எப்படி இருக்கும்னு யோசிக்க சொல்லுது.

//ாட்டு பாட ஆசை இருக்கும், ஆட்டம் ஆட ஆசை இருக்கும், ஏன் கண்ணீர் விட்டு கதற வேண்டும் என்ற எண்ணம் கூட இருக்கும். ஆனால் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று பயந்து, நாம் விரும்பும் சின்னச் சின்ன விஷயங்களைக் கூட செய்வதில்லை.//இதில மட்டும் நான் விதிவிலக்குனு நினைக்கிறேன்..கல்லூரி படிக்குபொழுது நண்பரின்
தாத்தா மறைவுக்கு சென்றிருந்தோம் அங்கே வாடிப்பட்டி மேளத்துடன் சும்மா குத்து ஆட்டம் ஆடிகொண்டு இருந்தார்கள். அவ்ளோ தான் நான் உட்பட க்ல்லூரி பசங்க அனைவரும் யாரை பத்தியும் கவலைப்ப்டாம ஆடி அமர்க்கள படித்திட்டோம்...:)).

தொடர்ந்து வரட்டும் இந்த மாதிரி பதிவுகள்..

Sowmya said...

hi ramji Welcome :)

You can use this link to type thamizh font in online.

http://www.jaffnalibrary.de/
tools/Unicode.htm

"\\ Neengal solvadhu pola kudumba uravinargalidam naam podumaana anbai paaratuthalai terivippadhu illai.
Terivithu enna payan kidaikka pogiradhu endra ennamum oru kaaranam.//"

சரி தான்.அவ்வளவு சலிப்பு உறவுகளிடம் இருக்கும் பட்சத்தில், சொல்ல முடியாது தான். ஏன்...சுத்தமாகவே பிடிக்கவில்லை என்றாலும், அன்பை அங்கு தெரிவிக்க முடியாது தான். முதலில், நாம் பூரணமாகவே ஒரு உறவை விரும்புகிறோமா, அவ்வுறவோடு சந்தோஷமாக இருக்க விழைகிறோமா, அதை பொறுத்து தான், நான் சொல்ல வந்த இன்கெபிஷியன்ஸை சரி பார்த்துக் கொள்ள முடியும்.

மனதில் ஆயிரம் ஆசைகளை வைத்துக் கொண்டு, அதை வெளியே காட்டுவது அநாகரீகமான செயலோ என்று இருந்து விடக் கூடாது என்பதே நான் சொல்ல வந்த கருத்து.

மேலும், குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை, என்பதும் கூட இன்கெபிஷியஸை உடைத்தெறியும், வாசகங்களே. தவறு இல்லாதது எது.நீங்கள் கூறிய படி, நாம் தான் நம் முடிவுக்கு காரணமாகிறோம்.ஆனாலும், நம் எண்ணங்களே நம்மை வழி நடத்துகின்றனர். இதுவரை நாம் இப்படித் தான் இருக்க வேண்டும் என்பது, நம் எண்ணங்களினால் தான். நாம் எதுவாக நினைக்கிறோமோ, அதுவாக தான் ஆகிறோம், முடிவும் எடுக்கிறோம். பிடிககாத ஒருவரிடம், இன்கெபிஷியன்ஸ் என்பதே இருக்க வாய்ப்பு இல்லை. அங்கே இருப்பது வெறுப்பு மட்டுமே.

உண்மையாகவே நாம் நேசிக்கும் உறவில், வெளியே சொல்லி என்ன ஆகப் போகிறது என்று நாம் நினைக்க சந்தர்ப்பமே இல்லை :)

"\\Enakku 1 vidayam puriya villai. Namdhu viruppam, aasai, ennam oru velai adutha manidargalai paadikkum aanalum, naam namadhu ennangalai, viruppathai kooralamaa?//"

நான் இப்பதிவில், உங்களுக்கு மனதில் தோன்றியதை வெளியே சொல்லி விடுங்களேன் என்று கூறவில்லை. உங்கள் தூய்மையான அன்பை உறவுகளிடத்தில் கொண்டிருந்தீர்களேயானால், அதை அவர்களிடம் வெளிப்படுத்துங்கள் என்று தான் சொல்லியிருக்கிறேன்.

பாதிக்கும், என்று தெரிந்த விஷயங்களை வேறு விதமாகத் தான் கையாள வேண்டும்.அது சூழ்நிலை, பாதிக்கப்படும் நபர், பாதிப்பின் விகிதம் இவையெல்லாவற்றையும் பொறுத்து மாறுபடும்

"\\Sila nerangalil niza vaazkkai taraatha inbathai karpanai vaazkkai tandhu kondu irukkiradhu.//"

இது முற்றிலும் அவரவர்க்கு அமைந்த வாழ்வையும், சூழலையும் பொறுத்த விஷயம். காலிப் பாத்திரத்தில் எதாவது தேடுங்களேன் , என்பது என் கூற்றல்ல. பொற்கொல்லன் மாதிரி, காற் பொன்னிலும் மாப் பொன் தேடுங்களேன் என்று தான் கூறியிருக்கிறேன். நம்மிடம், இருப்பது தான் சுரக்கும், புதிதாக இருக்க வைக்க வேண்டும் என்று விரும்பினால், அதற்கு நிறைய உழைக்க வேண்டி வரும்.

அவரவர் தான் அவரவர்க்கு வேண்டியதை முடிவு செய்து கொள்ள முடியும். வருகைக்கு நன்றி :)

Sowmya said...

hey balar,

"\\நிறைய பேரு மொக்கை பதிவுக்கு எதுக்கு blogனு வேற சொல்லிட்டாங்களா :)) அதான்//"

அப்போது, நீங்கள் react தான் செய்து இருக்கிறீர்கள். அப்படித் தானே ?

சரி தான், ஒரு பெரிய வெள்ளை பலகையில், அதிகமிருக்கும் வெள்ளை தெரிவதில்லை. கண்ணுக்கு தெரியாத கருப்பு புள்ளிக்கு முக்கியத்துவம் தருகிறீர்கள்,

பார்தீர்களா, உங்கள் சந்தோஷத்தை பிறருக்காக இழக்கிறீர்கள்: வலைப்பதிவு இடுவது , முதலில் நம் சந்தோஷத்திற்க்கு தான். நமக்கு பிடித்திருக்கிறது, நாம் இடுகிறோம். அதே வலைப்பதிவு பலருக்கும் பிடித்திருக்கும் பட்சத்தில்; யாரோ மொக்கை என்று சொல்லி விட்டார்கள் என்று அதை ஒதுக்கி தள்ளுவது, உங்கள் அபிப்ராயத்திற்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட, பிறரின் சாடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததாகத் தானே ஆகிறது.

எங்களை எல்லாம் பார்த்தால், உஙகள் வலைப்பதிவை ஆதரிக்கும் முகங்களாகத் தெரியவில்லையா என்ன.அப்படித் தான் போலும்

வருந்துகிறேன்.

Sowmya said...

balar,

\\"நல்ல அனுபவ பதிவு மற்றும் அறிவுரை பதிவு..
இந்த மாதிரி பதிவுகள் படிக்கும் பொழுது உண்மையிலே நாம இப்படி இருந்தால் எப்படி இருக்கும்னு யோசிக்க சொல்லுது"//

யோசிப்பை செயல் படுத்தினால் என்ன என்றும் யோசியுங்களேன்.

\\"நான் உட்பட க்ல்லூரி பசங்க அனைவரும் யாரை பத்தியும் கவலைப்ப்டாம ஆடி அமர்க்கள படித்திட்டோம்...:))."//

வலைப் பதிவிலும் ஒரு ஆட்டம் ஆடி அமர்களப் படுத்துங்கள் பார்போம்.:)

Anonymous said...

Hi Sowmya

Thanks for the reply.

Sorry innamum Tamiz font pazakkam sariyaga vara villai enakku. Pazakka paduthi kolkiren viraivil.


Uravinargalidam paaratuthal terivikkaamal iruppadhu salippinaal alla. Uravukkulle formality vendam endra ennmum kooda.

Brittania matrum Iropia naadukalil kanavan maniavi kuzandhaigal oruvarukku oruvar nandri kooruthal nadai muraiyil ulladhu. Naamum avvaru pazagi kolla vendum.

Neengal solvadhu pola tayakkatahi udaithu erindhu/ kalaindhu, nam ennangalai, anbai, paaraatuthalai muzumaiyaaga teriyapaduthinaal anaivarkkum mana magizchi undaagum.

Manadhum visaalam adaiyum.


Balar Blog patri ningal kooriya karuthum varaverkka takkathu.

Balar avargale ningal aduthavar paaratuthal or pugal vendi en Blog uruvaakka vendum. Blog enbadhu nam mana tirupthikku uruvaaki kolvadhu.

Idhilum potti vendaame, en Blog sirandhathu , un Blog sirandathu endru.

Endha pudhiya muyrachiyayim mudalil kurai koorum nanbargal undu. Ningal kurai koorum vimarsangalukku sevi saaykkamal ungalin muyarchiyil todarndhu eedu pada vendum.


Ramji

Sree's Views said...

Hey..I am surprised ! when I put my comment in the previous post , I dont remember seeing this post...vandhu paatha ithana comments :)

oiii Sowms...sooper post paa :)
evalo agazha ezudhi irukeenga.
It's inspiring. Yeah..u r right , there are lot of instances where we are apprehensive about expressing ourselves.
It could be due to inhibitions as u said or it could the fear of rejection .
Most of the time its empty pride that takes its toll in relationships.

Lovely Post , Sowms...
Keep rocking :)

Priya said...

Sowmya: A good write up.

Inhibitions: Based on the conditions we either become conscious or unconscious of what we do in our day today life.

We either failu to express or choke within or insid eus not to reveal our enitre personality or authority figures can suppress anybodys dreams of becoming an extrovert.

Sowmya said...

Ramji.

:))


----

hey sree,

\\I am surprised ! when I put my comment in the previous post , I dont remember seeing this post...vandhu paatha ithana comments :)//

:)) maya manthram pottu neenga pona rendu nimishathula undu panniten :P

Happy to know that you enjoyed this post :)

Sowmya said...

priya,

"\\We either failu to express or choke within or insid eus not to reveal our enitre personality or authority figures can suppress anybodys dreams of becoming an extrovert.//"

Very much True :)

Sree's Views said...

:)) maya manthram pottu neenga pona rendu nimishathula undu panniten :P //
hey...neenga pannalum pannuveenga ;)

balar said...

sowmya,

//
யாரோ மொக்கை என்று சொல்லி விட்டார்கள் என்று அதை ஒதுக்கி தள்ளுவது, உங்கள் அபிப்ராயத்திற்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட, பிறரின் சாடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததாகத் தானே ஆகிறது.
//
ஒரு வேளை இந்த பதிவு முன்னாலே படித்திருந்தால் படித்தை செயல்படுத்தும் விதமாக குளோஸ் பண்ணாமல் இருந்திருக்கலாம்...ம்ம்..நீங்கள் தாமதமாக இந்த
பதிவை போட்டுட்டீங்களே..:))

//எங்களை எல்லாம் பார்த்தால், உஙகள் வலைப்பதிவை ஆதரிக்கும் முகங்களாகத் தெரியவில்லையா//
உங்களுக்கு மிக பெரிய மனது அதனால் தான் மொக்கை பதிவுகளையும் ஆதரிப்பேன் என்று கூறுகிறீர்கள்..:)

Sowmya said...

பாலர்,

ஒரு கதை உண்டு. ஒரு முறை, ஒரு முனிவர் தன் சீடர்களுடன் ஒரு பாதை வழியா சென்று கொண்டிருந்தார், அப்போது, அங்கே ஒரு குளம் தென் பட்டது.குளத்தில்,ஒரு தேள் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தது. அதனைக் கண்ட முனிவர், அத்தேளை கரையின் மேலே தூக்கிப் போட்டு காப்பாற்றினார். ஆனால் தேளோ அவரைக் கொட்டி விட்டது. வலி பொறுக்க முடியாமல், கையை உதறுகையில், மீண்டும் தேள் குளத்திலேயே விழுந்து விட்டது. அப்போதும் முனிவர் அதனைக் காப்பாற்ற, முயன்றார். அதனைக் கண்ட சீடர்கள், குருவே, தாங்கள் செயவது சரியா? , தேள் தான் கொட்டுகிறதே, அதனை திரும்பவும் ஏன் காப்பாற்றுகிறீகள் என்று கேட்க, அதற்கு முனிவர் , கொட்டுவது தேளின் சுபாவம், அதனைக் காப்பாற்றுவது என் சுபாவம் என்று.

மேலும் உங்களுக்கு விளக்கிச் சொல்ல அவசியம் இல்லை. நம் சுபாவம் நல்ல வகையில் யாருக்கும் தீங்கு செய்யாமல் இருக்கும் பொருட்டு, அதனை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. மாற்றிக் கொள்ளுதல், தனித் தன்மைக்கு முரணனானது. அடம் பிடிகாதீர்கள் பாலர், பிறகு அதற்கு ஒரு பதிவை நான் பதிவு செய்ய வேண்டி வரும். :)

Sree's Views said...

Sowms...naan oru post pottu irukken..I am sure u can give a better solution.

Jazeela said...

'வெளியே வா'

வெளியே வர வேண்டும். வந்தாலும் சிலர் ஏற்க மறுக்கிறார்களே என்ன செய்யவது? :-)

முதல் முறையாக உங்க பதிவுக்கு வருகிறேன். அருமையான எழுத்துக்கள் எப்படி இத்தனை நாள் கவனிக்காமல் போய்விட்டேன் என்று எனக்கே ஆச்சரியம்.

Sowmya said...

hey sree,

I will read it and do comments on it.

--

hi jesila,

:) you are welcome. keep visiting.

balar said...

sowmya,

ஆஹா கைவசம் ஏகப்பட்ட சமூக நீதி கதைகள் எப்பவும் ரெடியா வச்சிருப்பீங்க போலயே..:))

//பிறகு அதற்கு ஒரு பதிவை நான் பதிவு செய்ய வேண்டி வரும்//
நீங்களுமா sowmya இப்படி சொல்லி பயமுறுத்தனும்!!!!!!.

இருங்க கூடிய விரைவில் போட்டோ பிளாக் ஆரம்பித்து நான் பயமுறுத்த ஆரம்பிக்கிறேன் :))

Kumar said...

Inhibition - the barrier to realising one's full potential in achievement or in relationships...well written!

Sowmya said...

hey balar,

eppo..eppo..eppo :)

---

hi kumar,

:) thank you

balar said...

sowmya,

//eppo..eppo..eppo :)//

yerkanave photo blog arambichiten..ippo than pics uploaddddddddddd pannitu iruken....
special invitation anupuren inaugrationukku kandippa vandhudungaa...:))