யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!

Tuesday, November 6, 2007

and A.. Abstract thinking..


எண்ணங்களே நாம். நம்மை ஆட்டுவிப்பதும், ஆர்ப்பரிக்க வைப்பதும் அவைகளே. எண்ணங்களின் தன்மையே, ஒருவரின் ஆளுமையை நிர்ணயிக்கிறது. மனம் வேறு, அறிவு வேறு என்ற வேறுபாடுகள் பேசினாலும், இல்லை, இரண்டும் ஒன்று தான் என்று கருத்தினைக் கொண்டிருந்தாலும்,அதையும் நம் எண்ணுதல் மூலமே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். இதில் மாற்றுக் கருத்து இருக்க இயலாது.

எண்ணங்கள் வலுவானவை. நம்மை வழி நடத்துவையும் அவையே. ஒருவர் கொண்டிருக்கும் எண்ணங்களே, அவர் நேர்மறையானவரா அல்லது எதிர்மறையானவரா என்பதை உறுதி செய்யும்.

அன்றாடம் நம்மை சுற்றி , நம் வாழ்வில் பல நிகழ்வுகள் நடக்கிறது. ஆனால், அவற்றில் எவற்றை நாம் அதிகம் கிரகித்து தக்க வைத்து, அவ்வெண்ணங்களின் வழியே, உலகை உற்று நோக்குவதும், அவ்வெண்ண்ங்களின் தாக்கம் காரணமாக, நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ நம்மை உருவாக்கிக் கொள்வதும் அவரவர் கையிலே.

தீதும் , நன்றும் பிறர் தர வாரா. ஆக, எல்லாமே நாம் எண்ணுவதிலும், அவ்வெண்ணங்களைப் பற்றி தீவிர சிந்திப்பும், அச்சிந்திப்பின் விளைவாக, செயல்படுதலும், பின் செயல்பாட்டுக்குத் தகுந்த விளைவுகளையுமே அனைவரும் அனுபவித்து வருகிறோம்.

நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளை கூர்ந்து கவனிப்பது ஒரு வகை என்றால், அந்நிகழ்வுகளை சார்ந்து, நம் எண்ணங்களை விரிவுபடுத்துதல் மற்றொரு வகை. ஏன், எப்படி, எதனால் என்ற கேள்விகளும், அதைத் தொடர்ந்து அக்கேள்விகளுக்கான சரியான பதில்களை தேடுவதுமே , எண்ணங்களை விரிவுபடுத்த உதவும் கருவியாக இருக்கிறது. ஆக, அறித்ல் என்பதை அடுத்து, பகுத்தறிதல் என்ற நிலையில் தான் எண்ணங்கள் விரிவாக்கம் பெறுகின்றன.

சிந்தனை ஒரு விதமான சுவை.தேடல், ஒரு வகையான ஆனந்தம். ஆறறிவு கொண்ட எல்லோருக்குமே சிந்தனைத் திறன் உண்டு. ஆனால், அச்சிந்தனையைக் கொண்டு வாழ்வில் அவர்கள் தேடுதல் என்ற நிலையை அடைவதன் மூலம் தான் அவர்களின் எண்ணம் விரிவாக்கம் பெறுகிறதா இல்லையா என்பதை கூற முடியும்.

இருப்பதை இருப்பதாக ஏற்றுக் கொள்வதில் , செளக்ரியம் உண்டு தான். ஏனெனில் , அதில் சிரமப் பட வேண்டாம். எது எதுவாக சொல்லப்பட்டதோ, அது அதுவாகவே உணரப்படும் என்று சுலபமாக சொல்லிக் கொண்டு காலத்தை தள்ளி விடலாம். காலகாலமாக, பழக்கத்தில் இருந்துவரும், நம்பிக்கைக் கோட்பாடுகளும், இத்துணைக் காலம், வேறூன்றி நின்று நிலைத்து நிற்கும், என் கலாச்சாரமும், அதனைச் சார்ந்த சம்பிரதாயங்களும், எனக்கு நல்லன தராமலா போய்விடும் என்ற எண்ணமும், என் முன்னோர்களை விட நான் என்ன பெரிதாக எண்ணி விடப் போகிறேன் என்ற எண்ணமும், இத்துணைக் காலம், சீர் காத்து வந்திருக்கும் என் பண்பாடு, என் எண்ணங்களால் சீர் குலைந்து போக நான் காரணமாக இருக்கலாமா என்ற எண்ணமுமே, நம்மில் பலரை எண்ண விரிவாக்கத்திற்கு தடை போட வைத்திருக்கிறது.

யாருக்குத் தான் எழாது கேள்வி. யாருக்குத் தான் வராது சந்தேகம். வாழ்வு என்பது இப்படித்தானா. கடைசி வரை ஓடிக் கொண்டே தான் இருக்க வேண்டுமா. பிடித்ததோ, பிடிக்கவில்லையோ, என்னைச் சுற்றி இருக்கும் சமுதாயத்தின் சம்பிரதாயங்களுக்கு கட்டுப் பட வேண்டுமா. ஆம் ! என்றால், ஏன்.இல்லை என்றால், ஏன் ! எனக்கு என் வாழ்வில் என்ன வேண்டும், எதை நோக்கி நான்.. இவை எல்லாமே எல்லோருக்குள்ளும் எழும்பத்தான் செய்கிறது. ஆனால், அதை எல்லாம், சிரத்தையாக கவனித்து, அக் கேள்விகளுகுண்டான பதில் கிடைக்குமா, இல்லை, நான் தேடவேண்டுமா என்பதை அவரவரின் ஈடுபாடும், தெரிந்து கொள்ளும் ஆர்வமும், சொன்னதிற்கேல்லாம் தலை ஆட்டாமல், ஏன் என்ற கேள்வியை எழுப்பி விடை காணும் பழக்கமுமே நிர்ணயிக்கிறது.

ஆனால், அத்தகைய நிலையை அடைய அசாத்திய தன்னம்பிக்கைத் தேவைபடுகிறது. தன்னம்பிக்கை வளர்த்தல் ஒரு புறம் என்றாலும், தன்னபிக்கை ஊட்டலில் தான் ஒருவன், அத்தகைய உறுதியைப் பெறுகிறான். தன்னபிக்கை ஊட்டல், சூழலிலிருந்து தான் கிடைக் பெறும். ஆக, எச்சூழலில் ஒருவன் வளர்க்கப் படுகிறானோ, அதற்குத் தக்கவாறே, அவன் தன்னம்பிக்கை வலுப்பெறுகிறது. அவ்வலுவூட்டமே, கேள்விகளை அவனுள் எழுப்ப ஏதுவாகிறது. கேள்விகளை எழுப்பத் தொடங்கியவுடனே, அவன் எண்ணங்கள் விரிவாக்கம் பெறுகின்றன.

ஏன்? என்ற கேள்வி ஒன்றே, இப்போது நாம் அடைந்திருக்கும் பரிணாம வளர்ச்சிக்குக் காரணம். பரிணாம வளர்ச்சி என்பதற்கு முடிவு தான் ஏது. வளர்தல் ஒரு முடிவுறா பயிற்சி. ஒரு கேள்விக்கு ஒரு விடை தான் இருக்க வேண்டும் என்ற நிலை இருந்திருந்தால், வளர்ச்சி என்பது, எப்போதோ தடை பட்டு போயிருக்கும். எண்ணங்களின் விரிவாக்கமே, தடையில்லா வளர்ச்சி காண உதவும் கருவி.

எண்ணங்களின் விரிவாக்கத்திற்க்கு மிகுந்த முக்கியத்துவம் தருவது என்க்கு மிகவும் பிடித்தமான ஒன்று. மனதில் எழும் ஒரு கேள்விக்கு, ஓராயிரம் பதில்கள் உண்டு என்பதை வெகு நிச்சயமாக நான் நம்புகிறேன். ஏன்? இந்த பதிவே கூட அத்தகைய விரிவாக்கமே.

கடந்த ஆறு பதிவுகளையும், இங்கு பதிக்க தூண்டு கோலாக அமைந்த திரு.குமார் அவர்களுக்கு, என் மனமார்ந்த நன்றியையும், இது போன்ற சந்தர்பத்தை ஏற்படுத்திக் கொடுத்து, என்னையே எனக்குள் திருப்பிப் பார்க்க வைத்து, எனக்கு ஒரு நல்ல அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு என் நெஞ்சார்ந்த வணக்கத்தையும் சமர்பிக்கிறேன்.இத்துணைக் காலம், தனி ஒரு மனித குண நலன்கள் பற்றி, தனித் தனி பதிவா என்று எண்ணியும், ஆர்வம் மிகுதியால் அதை படித்து, பொறுமை காத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள். !


அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

13 comments:

Priya said...

Sowmya,

Totally speechless of your post coming in.

Great writing and well informed.

Just for u in Tamil. I have no unicode installed after so many failures.

Finally here u go girl:
மிக ஆழமான சிந்தனைகள், தெளிவாக எழுதி இருக்கீங்க.

Mistakes erundha konjam freea vitrungapa.

Unknown said...

//அறித்ல் என்பதை அடுத்து, பகுத்தறிதல் என்ற நிலையில் தான் எண்ணங்கள் விரிவாக்கம் பெறுகின்றன.//
:) Most often, we satisfy ourselves with just seeing about things and not really knowing them. And more often than not, we crowd ourselves with predetermined notions and "dont let things in". We lock up our doors and windows and then find comfort in the stuffiness of the dark, crowded room. Before expanding our horizon, it s essential to open the windows/doors.

balar said...

Sowmya, Wishing you and your family a very Happy Diwali.

Kumar said...

சௌம்யா!

/எண்ணங்களின் தன்மையே, ஒருவரின் ஆளுமையை நிர்ணயிக்கிறது/
முற்றிலும் உண்மை! எவ்வளவு தான் கற்றாலும், சூழ்நிலை மாறினாலும் எண்ணங்கள் மாறாது போனால் முழுமையான மாற்றம் கிடைக்காது.

சிந்தனையிலிருந்து பிறந்த எண்ணங்கள், அவை விரட்டுவதால் ஏற்படும் தேடல் - எவ்வளவு அருமையான விஷயம்! அதைச் சுகமென்றும் ஆனந்தமென்றும் எண்ணி வாழ்பவர்களுக்கு வானமே எல்லை.

/எண்ணங்களின் விரிவாக்கமே, தடையில்லா வளர்ச்சி காண உதவும் கருவி./
Superb! இதைப் படித்தவுடன் நினைவுக்கு வந்தது - சென்ற ஆண்டு Lonavla வில் North Point என்ற ஒரு residential training centre-ல் பார்த்த ஒரு 'பஞ்ச்' வாசகம் - Don't leave any answer unquestioned.

அனைத்துப் பதிவுகளும் செம கலக்கல். ஒரு சாதாரண tag தானே என்றெண்ணாமல் அதை ஒரு சுய அலசலாக எடுத்துக் கொண்டு அழகாகவும் அதே சமயம் ஆழமாகவும் நல்ல மொழி ஆளுமையுடனும் conviction-உடனும் எழுதியிருந்ததால் படிப்பதற்கு மிகச் சிறந்த பதிவுகளாய் அமைந்துள்ளன.

மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இன்னும் நிறைய எழுதுங்கள்.

படித்து மகிழக் காத்திருக்கிறோம்

Anonymous said...

Kuppan says:

Ennangal, Ennam aaraaythal.

Matrum oru arumayaana post.

Baalakumaran, JK solvadhu Ennam aaraythal, ennathai thondrum pothe utru nokkal. Nam manadhirku edhu theeya ennam ena padukiratho adhai nirutha vendum endru solkiraargal.


Aadi sankarar & Upanishads say Enname irukka koodathu, ennam atra nilai thaan manidhanai deivathirkku arugil kondu sellum enkiraargal.Evvaru unarchikal atra nilai undo adhu pola ennam atra nilai.

Gnaani & s.Ramakrsihnan solvadhu manidhanin ul unarvukalai ezuppa thaan ella visayangalum indha ulagil nadakkindrana. (cinema or education or war or charity).

Idhil naam edhai pin patruvadhu.

Nam kuzandhaikaluku ennam patri enna solli koduppathu?.

Ennam varuvadhu valarpu murai yaala or DNA sambantha pattadhaa?.


Nalla visayangalai patriya posting place panniyatharkku naangal thaan ungalukku nandri solla vendum.

Kodaanu kodi nandrikal solli kolkirom ippozuthu.


Kuppan_2007

Sowmya said...

Hi priya,

Happy to know that you liked this post. Thanks :)

Sowmya said...

Hey sk,

##We lock up our doors and windows and then find comfort in the stuffiness of the dark, crowded room. Before expanding our horizon, it s essential to open the windows/doors.##

:))

If the windows and doors are rusty,How can you open up easily. Tell me the way to open the rusty windows and doors :P

Sowmya said...

hi balar,

Vanga ! Thanks for ur diwali wishes ! :)

Aadikku oru thadava varanga nu solra mathiri, neenga new year day, diwali day ku than inge visit panreengalo ! :)

Sowmya said...

hey kumar,

Thanks for the support and concern :)

## அனைத்துப் பதிவுகளும் செம கலக்கல். ஒரு சாதாரண tag தானே என்றெண்ணாமல் அதை ஒரு சுய அலசலாக எடுத்துக் கொண்டு அழகாகவும் அதே சமயம் ஆழமாகவும் நல்ல மொழி ஆளுமையுடனும் conviction-உடனும் எழுதியிருந்ததால் படிப்பதற்கு மிகச் சிறந்த பதிவுகளாய் அமைந்துள்ளன. ##

நல்லாயிருக்கு போங்க ! ஒரே பதிவில் முடித்திருக்க வேண்டிய விஷயம் தான்.ஆனால், நல்ல வேளையாக, பல பதிவுகளாகவும் போடலாம் என்று நீங்கள், தளர்த்திய விதிமுறைகளால் தான் என்னால், இப்பதிவுகளை எழுத நேர்ந்தது. ரத்தினச் சுருக்கமாக எழுதுவது ஒரு கலை.ஆனால் என் கதை வேறு. அதுவும் இது போன்ற, குண நலன்களைப் பற்றி எழுதும் போது, விரிவாக எழுதும் பட்சத்தில் தான், நான் சொல்ல வந்ததை சரியாக சொல்ல முடிகிறது என்று நான் எண்ணுகிறேன். ஆக, பதிவை விரிவாக எழுதினாலும், அதைப் படிப்பவர்கள் தான் பொறுமை காத்து, படித்து, அதற்குண்டான பின்னூட்டங்களையும், உற்சாகம் தரும் வகையில் அளித்து, மேலும் இது போன்ற பதிவுகளை எழுதத் தூண்டும் வகையில் பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறீர்கள்.

உங்கள் வாழ்த்துக்களுக்கும், பாராட்டுதல்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

Sowmya said...

hi kuppan,

வாழ்க்கை வாழ்வதற்கே ! இது எல்லோருக்குமே தெரிந்த விஷயமே ! ஆனால், வாழ்வது என்பது, எத்தகைய நிலையை நமக்கு அளிக்கும் என்பது பொருட்டே , எப்படி வாழ்வது என்ற தீர்மானமும், அதை சார்ந்த வழிமுறைகளையும் நாம் பின்பற்றுகிறோம்.

எண்ணம் ஆராய்தல். எண்ணத்தை உற்று நோக்கல், தீய எண்ணங்களை களைந்து, நல்ல எண்ணங்களை புகுத்தி, நேர்மறையான குணங்களை வளர்த்து, நமக்கும், மற்றவர்க்கும், துயரின்றி வாழ்தல்.இது ஒரு வகை.சிறிது முயற்சித்தால், எல்லோராலும், எட்டப்படும் வாழ்க்கை முறை.

எண்ணமற்ற நிலை. அதன் மூலம் இறைமையைத் தொடல். இது போன்ற நிலையே முக்திக்கு வழி என்று, ஆன்றோரால் காட்டப்பட்ட துறவற வாழ்க்கை முறை. பந்த பாசங்களிலிருந்து விடுபட்டுத் தான் இறை நிலையை அடைய முடியும் என்ற பாதை வழி செல்வோருக்காக சொல்லப் பட்ட நிலை.

ஆக.. யார் எந்த நிலையில் உள்ளோம், மேலும் சிறக்க எந்த நிலையை நாம், தேர்ந்தெடுத்துக் கொள்வோம் என்பதைப் பொறுத்தே, எதைப் பின்பற்றுவது நமக்குச் சரி என்று நாம் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும்.

உப நிஷத்துகளும், வேதங்களும், மதங்களும், அதனை போதிக்கும் குருமார்களும், சமயங்களும், அதன் போதனைகளும் ஆயிரம் சொன்னாலும், நம் உணர்தலுக்கேற்பவும், உடன்பாட்டிற்கேற்பவுமே, நம் வாழ்க்கை முறையை நாம் தேர்ந்தெடுத்தல் நன்மை பயக்கும். பாதை தெரிந்தால் தானே பயணம்.

எண்ணங்களை புதிதாக உற்பத்தி செய்ய இயலாது. ஆனால் சீர் செய்தல் இயலும்.பெற்றோர்களின் நல்ல பழக்க வழக்கங்களும், தெளிவான சிந்தனையுமே, பிள்ளைகளை நேர்பாதைக்கு தானாக கொண்டு செல்லும். தனியொரு பயிற்சி என்று எதையும் திணிக்கத் தேவையில்லை, அவரவர் வாழ்க்கை அவரவர் கையிலே. அதை முழுதும் அனுபவித்து வாழ அவரவர்க்கு உரிமை அதிகமாகவே இருக்கிறது.உங்களை கவனியுங்கள்:. பிள்ளைகள் தானாகவே வளருவார்கள்.

தங்கள் கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் என் நன்றி. :)

Sattanathan said...

Abstract Thinking என்றால் என்ன ?
இந்தத் தலைப்பு எப்படிப் பொருந்துகிறது ? விளக்க முடியுமா ?

Sowmya said...

hi sattanathan

Abstract :-

Thought of apart from concrete realities, specific objects, or actual instances: an abstract idea.

Plz read the post and know how i connect the term with that

Thanks

Rajashree said...

sowmya pls let me knw if u can post lyrics of Aananda ragam ketkum neram sung by uma ramanan...