யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!
Sunday, August 10, 2008
கற்பு கருப்பானதா !!
நீண்ட நாட்களுக்குப் பின் இப்பதிவின் மூலம் உஙளை சந்திப்பதில் பெரு மகிழ்வு கொள்கிறேன். புதிய விவாதமாக நான் எடுத்துக் கொண்டிருக்கும் தலைப்பில் உங்களது கருத்துக்களை வரவேற்கிறேன். கருத்துப் பரிமாற்றத்திற்குப் பிறகு, பதிவு தொடரும்.
கற்பு நெறி என்றால் என்ன? எதை வைத்து அது அனுமானிக்கப் படுகிறது? அதன் நன்மை தீமைகள் என்ன? ஏன் தேவைப் படுகிறது.ஒரு சாரரால் ஏன் தேவையிலை என்ற நிலைக்கு தள்ளப்படுகிறது? கருத்துப் பகிர்தலை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். :)
====================================================================
எதிர்பார்த்து,பின் இந்த எதிர்பார்பினால், எவ்வித பிரயோஜனமும் இல்லை என்று நினைத்து,அதனை கைவிட்ட வாசர்கர்களே, உங்களது, எதிர்பார்ப்பினை சரியான நேரத்தில் பூர்த்தி செய்யமுடியாமல் போனதிற்க்கு வருத்தம் தெரிவித்தல் என்பது, சாதாரணமாக நான் நினைத்ததை சொல்லி விடக்கூடும்.ஆகையால், பெரிய மனதுடன், மன்னிக்கும் மனது, உங்களிடம் இருப்பதாக எண்ணி, இச்சிறியேனை மன்னியுங்கள் !
====================================================================
கற்பு என்றால் என்ன?
- கற்பு என்பது தகுதி பிறழ்வாதது..தன்னிலையிலிருந்து பிரண்டு போகாமல் இருப்பது.
கற்பு நெறி என்றால் என்ன்?
- தன் தகுதியிலிருந்து பிறழ்ந்து போகமால் இருப்பதை , சமுதாய நோக்கிலிருந்து நெறிப் படுத்துவது.
கற்பு என்பதே தனிமனித ஒழுக்கத்தை பறைசாற்றும் அங்கமாகத் தான், சங்க காலத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அவ்வொழுக்கம், திருமண பந்தத்தில் ஈடுபட்டிருக்கும், பெண்டீரிடம் இருந்தே ஆக வேண்டும்....அப்போது தான், அம்மங்கை திருமண பந்ததிற்கு சரியானவள் என்ற அங்கீகாரத்தையே அடைய முடியும். ஆக, ஒரு பெண் கற்புள்ளவளாக இருந்தால் மட்டுமே , அவள் தன் கணவனோடு வாழத் தகுதியுள்ளவளாக உருவாககப்படும் நிலை சமுதாயத்தில் இருந்து வந்திருக்கிறது. இது எதனை வலியுறுத்துகிறது?......
மனம் போல வாழ்க என்று வாழ்த்துதல் என்பது, வெறும் வாய் வாழ்த்தாகவே அமைது விடுதலேயன்றி, மனம் போகும் போக்கில், தன் வாழ்வை அமைத்துக் கொண்டால் சமூக அங்கீகாரம், மறுக்கப் பட்டுவிடும் என்ற மிரட்டலை விடுப்பது போலத் தானே, இவ்வித கற்பு நெறி பறைசாற்றப் பட்டிருக்கிறது என்பது என் கருத்து.
இக்கருத்தினை ஏற்க மறுப்பவர்கள், சமுதாயக் கட்டுக்கோப்பினை முன்னிறுத்தி, கற்பு நெறி தேவை தான் என்ற வாதத்தினை முன் வைத்தாலும், பிறர் உண்ணும் உணவு இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற அதிகாரத்தை மற்றவர் மேல் திணிப்பதற்குச் சமம் என்று, அதைக் கருதுகிறேன்.
கற்பில் சிறந்தவள் கண்ணகி...ஏன்?.... அவள் தன் கணவனைப் பொறுத்தாள். தன்னை அவன் நீங்கினாலும், அவனை அவள் நீங்காமல், கடைசியில் அவன் செய்த அத்துணையும் ஏற்று, அவன் நினைவாகவே வாழ்ந்து, பின் அவனுக்காக , நீதி கேட்டுப் போராடி, பின் ஒரு மாநகரத்தையே எறித்து, தன் கற்பினை வலியுறுத்தினாள். ஆக, தன் கணவன் என் செய்யினும், அவனைக் காத்து, அவன் எதை விரும்புகிறானோ அதை விரும்பி, அவனை அதற்கு அனுமதித்து, தனக்கென்று ஒரு வாழ்வை அமைத்துக் கொள்ளாமல் வாழ்தலே, கற்புடைய மாதர்க்கு அழகு. இதுவே, சமுதாயத்தின் எதிர்பார்பு... ஆசை... ஏக்கம்...
அந்த ஆசையை , சமூகத்தில் வாழும் ஒவ்வொரு பெண்ணும் கடைபிடித்து வாழ்ந்தாக வேண்டும் என்ற கட்டயாத்தினை உருவாக்கினால், பின், தான், என்ன செய்தாலும் அவள் தனக்காகவே எப்போதும் இருப்பாள், தான் என்ன செய்தாலும் பொறுத்துக் கொள்வாள் என்ற எண்ணத்திலும், பயத்தின் காரணமாகவும், பின்பற்ற பட்டதே இக்கற்பு நெறி.
இக்கற்பு நெறி எக்காலத்திற்க்குப் பொறுத்தமானது, சங்க காலத்திற்கு மட்டுமே.. இப்போது, அதை ஒரு தலைப்பாக மட்டும் தான் பேச இயலும். காரணம், சமூக மாறுதல்கள்.....
சிலருக்கு, கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களையும் சார்ந்தது தான் என்ற எண்ணம் நிலவுகிறது. இதனால், பெண்களுக்கு மட்டும் விலங்கா..ஆண்களும் அவ்விலங்கினைப் பூட்டிக் கொள்கிறோமே என்ற மடைமையைத் தான் அது பறைசாற்றுவதாக எனக்குத் தோன்றுகிறது.
திருமணத்தின் மூலம் ஒருவனை தனக்குள் வரித்துக் கொண்ட பெண், அவனை விட்டு நீங்குதல் என்பது சாத்தியாமில்லாத அக்காலத்தில் கற்பு, கத்திரிக்காய் என்றெல்லாம் கூறுகிறார்களே அதனால், கணவன் என்ன செய்தாலும், பொறுத்தாக வேண்டிய கட்டாயம் அக்கால பெண்டீருக்கு இருந்தது.
ஆனால், இக்கால பெண்மை அக்கட்டுக்குள் அடங்காதே...மன விரிவாக்கமும், அதைச் சார்ந்த செயல்பாடுகளும்,தன் வாழ்க்கை தன் கையில் என்று, தனக்கென்று எண்ணங்களையும், உறுதியாக வைத்திருக்கும் பெண்மைக்கு, கற்பு என்பது கருப்பானது மட்டுமே.கற்பு நெறியை பெண்கள் ஏற்றால் தான் அப்பெண்மை சிறப்புற வாழ்தல் சாத்தியம் என்பது காலத்தால் , வலுக்கட்டாயமாக திணிக்கப் பட்ட மூட நம்பிக்கையே அன்றி, உண்மையான நிதர்சனமன்று.
கற்பு என்பது, உடல் சம்பந்தப் பட்டது தான், மனச் சம்பந்தப்பட்டது இல்லை என்ற ஐயப்பாடு கொண்டவர்க்கும், இல்லை...அது மன சம்பந்தப்பட்டது தான் உடல் சம்பந்தப் பட்டது இல்லை என்று விவாதிப்போரும், ஒன்றை நினைவில் கொள்ள மறந்து விட்டார்கள். தன் வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் உரிமையும், அதனால் மகிழ்வுறும் உணர்வும், தனி மனிதனுக்கே சொந்தம். முழுமையாக ஒருவன் தனக்கு என்ன வேண்டும் என்று தெரிந்து, புரிந்து, உணரப்படும் உரிமைக்கும், உணர்வுக்கும் இடையே, சமுதாயம் தன் பங்கினை எங்கனம் வகிக்கிறது என்பது எனக்கு புரியாத புதிராகவே உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
22 comments:
Great to have you back!! :)
I will register my first thoughts now. Probably will come back later. The whole concept is essentially out of Ego/possessiveness/ownership rights. It is a device to "keep" one's "own things" with oneself through guilt rather than love. Just like a child doesn't want to share its 'own' things.
கற்பு எண்பது இந்து மத படி இனப் பெருக்கத்திற்காக ஏற்படுத்த பட்ட ஒன்று. திருமண மந்திரங்களின் அர்த்தத்தை பார்த்தல் இந்த பெண் இனப் பெருக்கம் செய்வதற்கு தேவையான எல்லா சடங்குகளும் (நன்றி பாராட்டும் சடங்குகள்) எல்லாம் செய்து விட்டால், இனிமேல் இவள் இனப் பெருக்கம், உடல் உறவுக்கு (கற்பை இஅழஅக்க ) தயாராகி விட்டால் என்று.
அதே போல் ஆணும் திருமனத்திற்கு முன்பு இனப்பெருக்க நடவடிக்கையில் ஈடு பட கூடாது என்று வைத்து இருக்கிறார்கள்.
நம் முன்னோர்கள் பல விடங்களில் யோசித்தே திருமனத்திற்கு முன்பு கற்பு இஅழ்தல் (உடல் உறவு கொள்ளுதல் ) வேண்டாம் என்று வைத்து உள்ளனர். பொருளாதார கரனுமும் இதில் உண்டு.
இன்றைய காலத்தில் நமக்கு நம் மனதை கட்டு படுத்தும் திறன் இருந்தால், மணக்க போகும் மனிவி, கணவனுடன் திருமனத்திற்கு முன்பே உடல் உறவு (கற்பை இழக்கும்) கொள்ளலாம்.
மருத்துவ ரீதியாக பார்த்தலும்(ஐட்ஸ்) கற்பை இஅழாத்தல் (ஒருவள் பல ஆண்களுடன் உடல் உறவோ ஓர் ஒருவன் பல பெண்களோடு உடல் உறவு கொள்ளுதலோ) சிறந்தது அல்ல.
ஆனால் கல்யாணம் ஆனா ஒரு கணவனும் வேறு ஒரு கல்யாணம் ஆனா பெண்ணும் கொள்ளும் உடல் உறவு எந்த ராகத்தில் சேரும் என்று எனக்கு தெரிய வில்லை. (முனபே கற்பை இழஅந்தவர்கள் இருவரும்).
இயேசு கிறிஸ்து சொல்கிறார் ஒருவன்(ஹி/ஷி) மனதாலே வேறு ஒரு பெண் அஆனுடன் உடல் உறவு கொள்ளும்படி கற்பனை செய்தாலே அது கற்பை இழஅபதக்ற்கு சமம் என்கிறறர்.
Hi Sowmya! Absolutely delighted to know you are back. Hope you had a wonderful time.
செம கலக்கலான எண்ட்ரி.
A serious poser that merits some thought (in black & white, huh?)
Right now, just wishing you a great time.
Hi Sowmya, How r u? Just read some topics in ur blog. Few are really intresting. According to VIRGINITY...i'll share my thoughts also later...
I was just browsing for some devotional songs to hear. I came across your blog. Excellent Question you ve raised. The entire ethics, laws, rules and discipline for human starts from here. The only difference between human and animal is "Karpu". I hope I no need to explain more about it.
tk balaji.
teekay_balaji@yahoo.com
welcome back (where were you?). I think you should also ask, why this concept is almost exclusibely associated only with women :) ? Why is it not as big a deal with man as it is with a woman? Is it because they assume in cases of loss of it, the man is always the offender, instigator? But isn't kaRpu also used in the context of adultery or promiscuous relations? In that case, it better apply to man as well. And man first needs to follow it, before offering nuggets of wisdom to women.
Arun
Hi,
This is Bhuvaneshwar.... I invite you to visit my blog at http://bhuvaneshwar85.blogspot.com/, for a related piece of pudhu kavidhai, that deals with a wife's woe! You will three of my poetic works there....
C u there.....
Your rendering of Kanda naal muthalaai was simply captivating. I listened to it thrice and I haven't had enough!! Kudos.
God Bless.
Regards,
Bhuvaneshwar
I shall come to the topic of "karpu - Its definition" a little later! But for now, I must say that we are definitely biased, if not in theory as the purists of our Indian tradition may claim, atleast in practice. And this has been the case for some 2.3 millenia... Thats how long recorded Tamil literature goes.
I'll give a small example. The garland that momen wear is called "Maalai" and it is a closed circuit! I mean, ends are tied. The one men wear is called "Thaar", with dangling ends (eg. Andaal, thiruchendur murugan sport it).
This reflects the attitude that women are to be bound and men can be a little wobbly (ippadi, appadi!!).......... Doesn't it?
(This is actually but not confined to @ the second comment:)
Are we using the terms chastity/fidelity (karpu) and virginity interchangeably? I am not in agreement with that. The former has to do with the mind and spirit while the latter is purely a physical state of one's body (genetials to be precise).
Karpu, in my view has to do with faithfulness to one's partner, irresepective of one's gender.
If, out of mutual love and trust, a man and woman enjoy sexual union, I would not consider that as a loss of Karpu/chastity. It is a loss of virginity that has occured.
Thats in the ideal world of course, when the man and woman end up in marriage (Kalavu ozhukkam in sangam literature).
We are not dwelling in an ideal world, are we? All hell breaks loose when that trust is breached and betrayal happens. The girl is vulnerable and not the guy (for obvious reasons I need not delve into). Thats perhaps why we have all the seemingly draconian laws of moral conduct that binds women!!!(the topic resonates here, "Karpu Karuppaanathaa?"!!!)
I am not justifying the guys that breach trust. Its the ground reality I speak.
Fine.... Having said that I am ok with pre-marital intercourse between say a man and a woman engaged/set to be married, are the men folk prepared to deal with a situation where they come to know their would be wife was earlier betrayed by some one else she trusted before?
In my view, the girl has only lost her virginity and not Karpu.... Its as good as a rape... She trusted some one and she was let down... That was not a crime on her part.
I do not know how many families would view that way....
Living in a non ideal world, I think we need to accept certain norms and abide. I do not deny the fact that women are seemingly ostracized, but isn't there good reason to it?
Kulla narigalum onaaigalum irukkum varaiyil maan kuttiyai konjam katti vaithaal thavaru illaiye!!! Kombu vanthathum suthanthiramaai thiriyalaame!!!
Note: Hindu marriage system does not view a woman as a baby making machine. The wife is called a saki - Friend.
A brahmachaari, vaanaprastha and sanyaasi do nithya karma for his benefit. Only a Grihastha can do Agnihothram and yagnam for lokakshemam - benefit of the globe. "paathni vathasya agnihothram bhavathi" says Veda!!!
Regards,
Bhuvaneshwar
Hi Sowmya,
Having read my previous post, albeit as a third party, I am prompted to digress a little and delve into the question why does the question of pre-marital intercourse arise in love? What is then, the purpose of marriage? If sex was the sole reason for getting married, that is self defeating! Why does this hue and cry about chastity arise at all? It has been so in almost all major cultures/civilizations where some form of conformity has been expected of individuals and every now and then, here and there (everywhere!!)someone has managed to breach the code!!
The basic need in my own humble opinion, (Maslow's need theory) is not sex! I mean it!! I opine, sex drive/libido (or whatever fancy word you may conjure up to call that!) is only a reincarnation/projection of something more innate to us.... THE NEED TO PROCREATE - I WANT MY GENES TO BE PASSED ON. This need is so supremely important, that nature DOESNT TAKE A CHANCE... She wants us to indulge with interest and passion. Thats why this sugar coating of pleasure attached to it (ilavasa inaippu??).
What makes me sad is this: Pleasure - recreation was a free package added to procreation. The reverse is what is being perceived... sex has become a recreation for many a youth and procreation an ilavasa inaippu... Else why this rise in maiden abortions? I lived and worked for 2 years closelywith a historic hospital (the town itself was known for that hospital and its prison), and I know what I am stating!!!!
Karpu has nothing to do with, as I stated earlier today, with intercourse.... I can be a virgin and still lose Karpu..... Thats what Jesus says "A man that looks at a woman with lust has committed adultery with her".....
Ungal karuthukkalai aavalodu ethir paarkkiraen!!
Anbudan,
Bhuvaneshwar
Karpu vudal sambandhamaanadhu alla, manasu sambandhamaanadhu. Namadhu manam namakku karpippadhai yetru vazhndhu varum varai naam karpullavargal, naam num manadhirku virodhamaagavum, num manadhirku pidikkaadha'vaigalai seidhalum, pirar num manakku pidikkaadhavaigalai num male thinithalumey karpizhatthalaagum enbadhu yenadhu thaazhmaiyaana karuthu.
Virginity is no where related to karpu. As long as you share your body with the persons whom you love.
Mohan.
Hi Sowmya,
Hope you had a great Deepavali.
Checked out your new web site... you must be really busy. Wish you all the best in the venture.
This explains some of your previous posts...You are an authority in those areas! I guessed earlier that you must be in HR/recruitment!
Also wondered...you are so close by!
Wish you good luck and take care.
Karpu is meant for the Mind And not the Body.
Hi sk, internet in tamil,kumar,Jackal kuppusamy,Balaji, Arunk,Bhuvaneshwar and Mohan
First of all ,I would like to thank you people for the time you allotted to register your thoughts about this post.
Sorry for the delay.I was unable to publish the post within the time boundary
Thank you one and all, once again for the patience and tolerance
:)
கற்பு என்பது காலத்துக்கு ஏற்றவாறு மாறும் ஒரு கோட்பாடுதான். கருத்தடை சாதனங்கள் கண்டு பிடிப்பதற்க்கு முன் கற்பு என்பது பெண்களிடம் திணிக்கப்பட்டதற்க்கு ஒரு நியாயமான காரணம் இருப்பதை யோசித்து பார்த்தால் உணர முடியும். பெண் சுதந்திரம் பிறந்ததே கருத்தடை சாதனங்கள் கண்டுபிடித்தற்கு பிறகுதான் என்று கூறமுடியும். கற்பு என்பது இந்த காலத்திற்கு தேவையா என்று என்னை கேட்டால், என்னிடம் பதில் இல்லை. அது அவரவர் விருப்பத்தை பொறுத்தது. என்னை பொறுத்தவரை என் முழு உள்ளுணர்வுடன் செய்யும் எந்த செயலும் கற்புடைய செயலே. வெறும் ஆசையினலோ, பொறாமையினலோ, கோபத்தினலோ செய்யும் எல்ல செயலும் 'கற்பிலாத' செயலே.
//சிலருக்கு, கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களையும் சார்ந்தது தான் என்ற எண்ணம் நிலவுகிறது. இதனால், பெண்களுக்கு மட்டும் விலங்கா..ஆண்களும் அவ்விலங்கினைப் பூட்டிக் கொள்கிறோமே என்ற மடைமையைத் தான் அது பறைசாற்றுவதாக எனக்குத் தோன்றுகிறது.// :)
//தன் வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் உரிமையும், அதனால் மகிழ்வுறும் உணர்வும், தனி மனிதனுக்கே சொந்தம். முழுமையாக ஒருவன் தனக்கு என்ன வேண்டும் என்று தெரிந்து, புரிந்து, உணரப்படும் உரிமைக்கும், உணர்வுக்கும் இடையே, சமுதாயம் தன் பங்கினை எங்கனம் வகிக்கிறது என்பது எனக்கு புரியாத புதிராகவே உள்ளது.//
I think you mean all that is relevant is the decision of the partners and not the society. Am i right?
So nice to read you again...You are in your elements in the post. Good.
//இக்கற்பு நெறி எக்காலத்திற்க்குப் பொறுத்தமானது, சங்க காலத்திற்கு மட்டுமே.. இப்போது, அதை ஒரு தலைப்பாக மட்டும் தான் பேச இயலும். காரணம், சமூக மாறுதல்கள்.....//
நன்றாகச் சொன்னீர்கள். அவ்வளவு தான் விஷயமே.
சங்க காலத்தில் வரையறுக்கப் பட்ட ஒரு 'ஒழுக்க' நெறியை இன்று அதே பொருளில் விவாதிப்பது சரியில்லை.
இந்த விவாதத்திற்கு மிகச் சரியான முற்றுப் புள்ளி வைத்து பல வருடங்கள் ஆகி விட்டன "கற்புநிலையென்று சொல்லவந்தால் அதை இரு பாலாருக்கும் பொதுவில் வைப்போம்"
இன்றைய சூழலில், பெற்றோரை விட்டு ஊரை விட்டு வேறு இடங்களில் இரு பாலாரும் ஒரே இடத்தில் தங்கியிருப்பதை நிறைய பார்க்க முடிகிறது. அவர்களெல்லாருமே கற்பு நிலை பிறழ்ந்தவர்களா என்ன?
தகுந்த காரணமில்லாத, அடிப்படையில் ஒத்துக் கொள்ள முடியாத நம்பிக்கைகள் ஒவ்வொன்றாக உடைபட்டு வருகின்றன.
I am glad that we have been conditioned by the social concepts like marriage, family, parental guidance etc...but beliefs and definitions apply to everyone irrespective of gender.
Chastity or virginity is a very narrow meaning of the word in discussion here. Over the years it has been misused, abused and erratically handled by opportunistic people(I will avoid discussing about politicians here...)
Both genders have learnt to be independent...the older social structure is no more relevant...child marriage is almost abolished...
Education and job opportunities will break many such one sided implementation of chauvinistic/opportunistic definitions.
AJ sivan,
Awesome !!
A very good understanding !!
Happy to receive comments like this :)
Hi Sk,
\\"I think you mean all that is relevant is the decision of the partners and not the society. Am i right?"//
Every man is the part of this society and he also conditioned with the beliefs what the society has..
Well...again ,he has the right to decide what he need and what he does not want.
My point is, i can even say , my wish is.. even though, they have such kind of beliefs,let them adopt that with the clarity.so that,they feel the meaning of the relationship in a better way.
Thanks for the feedback :)
Hey Kumar,
How are you doing ! :)
A very nice and crisp feed back !
You know, its a great pleasure to know the other person's thought,sails in the same boat.
Thank you :))
Hi Sowmya,
Thanks, I am doing great.
Please pick up your special award and appreciation....
...from my blog ;)
பார்க்க http://kannimaralibrary.co.in/dailynewhusband/
வினொத்
Post a Comment