யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!

Thursday, August 16, 2007

கடமை ஒரு மடமை ...!

த்தலைப்பு வைக்கும் போது எனக்கு "வீராச்சாமி- இராஜேந்தர்" தான் நினைவுக்கு வந்தார..் ha..ha. "தங்கச்சி ..! இந்த அண்ணணோட கடமையில இருந்து என்னிக்குமே நான் தவறினதில்லமா...மா..மா தட்டிப் பார்தேன் கொட்டாங்கிச்சி..தாளம் வந்தது பாட்ட வச்சி..." :) Ha..Ha..

கடமை ! இந்த சொல்லை எத்துணை தவறாக புரிந்து கொள்ள முடியுமோ, அத்துணை தவறாகவே அதை பற்றி வாழ்ந்தும் விடுகிறோம்.கடமை என்பதின் முழு அர்ததம் நமக்கு தெரிந்து தான், நாம் அதை ஆதரிக்கிறோமா..என்ற சந்தேகம் எனக்கு எப்பவுமே உண்டு.அடிக்கடி நாம் கேள்வியுறும் வாக்கியம் கடமை,கண்ணியம், கட்டுப்பாடு. போதாததற்கு என்று பெற்றோரும், அவர்களிடம் வளர்வோரும் " என் கடமையை தான் செய்கிறேன்" என்று வசனங்களை வேறு அள்ளி விடுகிறார்கள்.

கடமை என்பது என்ன? அதன் சாராம்சம் என்ன என்பதை உணராமலேயே அந்த வார்த்தை உபயோக்கிப் படுகிறதா? இல்லை, கடமை மட்டுமே உணர்ந்து, அவ்வார்த்தை சொல்லப்படுகிறதா? ஆண்டவனுக்கு தான் வெளிச்சம். இதை வெறும் வார்த்ைதயாக மட்டுமே உபயோக்கிக்த் தெரிந்து இருக்கிறதே என்பதே என் வருத்தம்.

சரி..இவ்வளவு பீடிகை எதற்கு? நேராகவே சொல்லி விடுகிறேனே. ஆனால் சொல்லி முடித்த பின் எத்துணை பேரின் உறவு முறையில் குழப்பங்கள் வரும் என்பதை சொல்லி விடமுடியாத. குழப்பங்கள் வரலாம்....இல்லை இதெல்லாமே முன்பே தெரிந்ததது தானே என்ற எண்ணமும் வரலாம். முதல் முறையாக இது பற்றி யோசித்த போது, எனக்கு குழப்பமே நேரிட்டது.அதனால் தான் இந்த எச்சரிக்கை மணி.

முதலில் கடமை என்பது எது சம்பந்தமாக சொல்லப்பட்ட வார்த்தையாக இருக்கக்கூடும் என்று பார்த்தால், தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட, அல்லது தானே தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஒரு செயலில் இருந்து மாறாமல், வழுவாமல், அச்செயலை செய்து முடித்தல் சாலச் சிறந்தது, என்ற பொருள் தரும் வண்ணமே கடமை என்ற சொல் பயன்பாட்டுக்கு வந்திருக்கக்கூடும். நாம் செய்யும் வேலையில் ஒரு வித பிடித்தமும், வேலையிலிருந்து நழுவாமல், நம்மை அவ்வேலையோடு பிணைத்து, அதை செவ்வனே முடிக்கும் எண்ணத்தில் தான் கடமை என்பதை நாம் ஒப்புக் கொள்கிறோம்.ஆனால், அத்தகைய தொனியில் ஆரம்பித்து, கடமை என்பதை வேலை என்பதற்கு மட்டும் பாராமல், நம்மை சுற்றி இருக்கும் உறவு முறைகளிலும் நுழைத்து விட்டோம்.

பல குடும்பங்களில் நாம் கேட்டிருக்கக்கூடும். பெத்த கடமைன்னு ஒண்ணு இருக்குங்களே, அத நிறவேத்தணுமே என்று தான் தம் பொறுப்பை உணர்ந்து பேசுவதாக நினைத்துக் கொண்டு சிலர் பேசுவதுண்டு. அவ்வாறு பேசுபவர்களை பற்றிய நம் அபிப்ராயம் எப்படி இருக்கும். எவ்வளவு பொறுப்பு வாய்ந்தவராக இவர் இருக்கிறார். தன் கடமையை நன்கு உணர்ந்து செயல்படுகிறாறே என்ற பாராட்டுகள் வேறு அவருக்கு குவியும். போதாததற்கு அவர் தம் மக்களும், வளர்த்த கடன் என்பதற்காகவே நான் அவர் சொல்லும்படி செயல்படுகிறேன் என்று மார்தட்டி பேச விழைகிறார்கள். இவர்கள் இருவரும் செய்யும் தவறு ஒன்றே.

கடமை என்பதை நாம் செய்யும் அலுவல் பணியிலும், நம் திறன் அறிந்து ஒப்படைக்கப்பட்ட பணியிலும் கடைபிடிக்காமல், தத்தம் உறவு முறைகளிலும்,கடமை என்பதை நுழைத்து உறவு முறைகளுக்குள் பாசம் என்பதை கொச்சைப்படுத்தும் போக்கே நடைப் பெற்றிருக்கிறது.

ஒருவனின் குடும்பம் எவ்வாறு உண்டாகிறது.அன்பினாலும், பண்பினாலும் பிணைக்கப்பட்டு, பாசமும் நேசமும் முன்னிலை வகிக்கும் வண்ணமே ,ஒருவன் ஒருத்தியை திருமணம் செய்து கொண்டு ஒரு குடும்பத்தை உண்டாக்குகிறான் அப்படி உருவாக்கப்பட்ட குடும்பத்தில் பிறக்கும் மழலைகளுக்கும் அதே பாசம், நேசம் என்பதௌ போய் சேரும் வண்ணம் தான் குடும்ப சூழலானது இருக்க வேண்டும். அப்படியிருக்க, எங்கே அங்கு கடமை என்பது நுழைக்கப்படுகிறது. அங்கே கடமை என்பதன் அவசியம் என்ன என்றெல்லாம் யோசித்தால், உண்மையாக ஒரு ஒரு குடும்பமும் அன்பினால் உருவாக்ப்பட்ட்டதல்ல, கடமையினாலே உருவாக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மை விளங்கும்.

நம்மால் இதை ஜீரணித்துக் கொள்ள முடிகிறதா? எப்போது அன்பே பிரதானமாக கொள்ளப்பட்டு ஒரு குடும்பம் இல்லையோ, அங்கு தான் கடமை என்ற சொல்லுக்கு வழி பிறக்கும். அன்பு இருக்கும் இடத்தில் கடமை வாசம் செய்வதில்லை. அதே போல் கடமை இருக்கும் இடத்தில் அன்பு மலர்வதிற்கில்லை. அதனால் தான் காதல் திருமணங்கள் இங்கு மறுக்கப்படுகின்றன.

ஒரு நல்ல மகனாக இருந்து, தந்தை தாய்க்கு ஆற்ற வேண்டிய கடமைகளை ஆற்றும்படி அவர்கள் சொன்ன பெண்ணை திருமணம் முடித்து, அங்கும், ஒரு கடமை தவறாத கணவனாக நடந்து, பெற்றோரின் கடன் பிள்ளை பேறே என்று குழந்தைகளைப் பெற்று , அதே கடமைகளை தம் வாரிசுகளுக்கும் சொல்லித் தந்து தன் வாழ்க்கை கடனை முடித்தவனிடத்தில் எங்கு அன்பு என்பது மலர்ந்திருக்கிறது.அன்பு என்ற பேச்சுக்கே இடம் ஏது?.

அன்பை உணராதவர் தாம் அன்பை எதிர்க்கக் கூடும். காதல் திருமணங்களையோ அல்லது காதலிப்பதையோ எதிர்ப்பவர்கள், அன்பு என்பதை வாழ்வில் பார்த்திராதவர்களாகவே இருக்கக்கூடும். அன்பே பிராதனமாக கொண்டு வாழ்வை அமைத்து கொள்பவரால் மற்றவரின் அன்பு, விருப்பம், பாசம், அமைதி, ஆவேசம், கோவம் ஆகிய அனைத்தையுமே சொல்லாமலேயே புரிந்து கொள்ள முடியும்.

கடமை என்பதை தாம் செய்யும் வேலையோடு சேர்த்து பார்க்க வேண்டுமே தவிர, குடும்ப உறவுகளுக்குள் அதை கொண்டாடுவது, அன்பை உணராமல், கடனை மட்டும் உணர்ந்தவரின் வாழ்வுக்குத் தான் ஒப்பாகிறது.

தாங்கள் எவ்விதம் :)

8 comments:

Sree's Views said...

thaangal evidham ?
neengal evidhamo naangalum avidhamey :P neenga sonna appeal illai :)

Sowmya..idhuvum unga 'living together' postum orey messagea dhaaney portray pannudhu.

Enna poruthavarai kudumbam and friends mattum dhaan 'anbu'.
Matha idathillaam verum 'kadamai' dhaan. Enna onnu..kadamaiya koncham extra interestoda pannalaam. Adhukku mela 'anbu' venumna adhukku oru nalla vibes irukkanum. There are a lot of people who came as clients but ultimately became close family friends...and that's becos there is a certain chemistry and that leads to love and affection.
Sari Sowms...enakku onnu sollunga..ethanaiyo couples "engalukkulla love ellam ippo illa..kadamaiyennu irukaradhum engalukku pidikala..divorce venum" nnu varavanga seiyaradhu correctdhaana? what about the previous generation where the couple lived together come rain or shine to keep the family as one unit and settle the kids ?
Do u think they had a point or not ?
innoru doubt...appadee divorce dhaan venumnu kettu vaangikaravanga ,are they happier than the couples who live for the sake of 'kadamai' ?
nijamaavey enakkulla irukara kosten idhu , Sowms...
ethanaiyo divorce case paakaren..aana adhukku appuram , did they find happinessinradhu enakku eppomey avanga sonnadhilla.

thought provoking post Sowms.

Sowmya said...

hi sree,

""If u have reasons for liking someone, then you are using your mind.But if you like someone for no reason, then you are using your heart." - sk's blog

"\\ethanaiyo couples "engalukkulla love ellam ippo illa..kadamaiyennu irukaradhum engalukku pidikala..divorce venum" nnu varavanga seiyaradhu correctdhaana? //"

Ha..Ha..."இப்போல்லாம் லவ் இல்ல..எங்களுக்குள்ள" - இப்படி சொல்றவங்களுக்குள்ள எப்பவுமே லவ் இருந்ததில்ல - அப்ப்டிங்கறது தான் உண்மை. ஒவ்வொருவருக்கும் ஒரு சில எதிர்ப்பார்புகள் உறவு முறைகளில் இருக்கும். ஆனால் சம்பந்தப்பட்ட இருவருக்குமே ஒரே மாதிரி எதிர்ப்பார்ப்புகள் இருக்க வாய்ப்புகள் குறைவு. சில காலம், வயதின் காரணமாகவோ, எமோஷனல் உணர்வின் காரணமாகவோ பிடித்துப் போனது, நாளடைவில் சலிப்பை தருவதால் தான், ஒரு சில வருடங்கள் வாழ்ந்த பின் தான், அந்த சலிப்பு தோன்றுவதால், இத்துணை வருடங்கள் லவ்வினால் தான் சேர்ந்து வாழ்ந்திருக்கிறோம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

"\\what about the previous generation where the couple lived together come rain or shine to keep the family as one unit and settle the kids ?//"

நான் முன்பு ஒரு பதிவில் கூறியது போல, அக்காலத்தில் கலப்புத் திருமணமும், காதல் திரும?ணமும் மிக மிக அரிது. எல்லோரும், பெற்றோர் பார்த்து செய்து வைத்த திருமண வாழ்வைத் தான் அனுபவித்தனர். எப்போதுமே நாமாக தேர்ந்தெடுக்கும் நபரிடம் தான் நமக்கு நிறைய எதிர்ப்பார்புகள் இருக்கும். பெற்றோர் பார்த்து திருமணம் செய்யும் உறவில், கணவனாக இருந்தாலும், மனைவியாக இருந்தாலும், பெரும் எதிர்ப்பார்பை விட, எப்படி இருக்கப் போகிறதோ என்ற எண்ணத்துடன், வாழ்க்கை ஆரம்பமாவதால், அந்த எண்ண ஓட்டமே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, ஒரு வகையான அட்ஜஸ்மென்டோடு வாழ்க்கையை செலுத்த ஏதுவாக இருந்திருக்கிறது. இன்னொரு முக்கியமாக விஷயம், அக்காலத்தில், பெண்கள் இத்தகைய வளர்ச்சியை காண்பதில்லையே. சொல்லப் போனால், திருமணத்திறக்கு பார்த்திருக்கும் , மாப்பிள்ளையை உனக்குப் பிடித்திருக்கிறதா என்ற கேள்வியை கூட மணப் பெண்ணிடம் கேட்க மாட்டார்களே. அக்காலத்தில் திருமணம் செய்து வைக்கிறார்களே -என்பதே ஒரு பெரிய மகிழ்ச்சியை அப்பெண்ணுக்கு தோற்றுவித்து இருக்கிறது. அவ்வளவு தான் பெண்ணின் நிலை அப்போது.

ஆகவே பெண்ணுக்கு சுதந்திரம் கொடுக்கப்படாததாலும், கணவனை விட்டு விட்டால் தன் கதி என்ன , என்ற நிலையினாலும் , குடும்ப வாழ்க்கையில், கஷடங்கள் ஏற்ப்பட்டாலும், பெண் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் வாழும் நிலை இருந்து வந்தது. இப்போதைய பெண் சுதந்திரம் தான் உங்களுக்கே தெரியுமே ..:)

"\\divorce dhaan venumnu kettu vaangikaravanga ,are they happier than the couples who live for the sake of 'kadamai' ?//"

சந்தோஷம் என்பது கல்யாணத்தில் மட்டும் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா ஷ்ரீ ! கல்யாணம், குடும்ப வாழ்க்கை இவையெல்லாம், வாழ்க்கையில் ஒரு அம்சம் .அவ்வளவே.. கல்யாணம் ஆகிவிட்டால், செட்டில் ஆகி விட்டார் என்று சொல்கிறார்களே, அப்போது கல்யாணம் ஆனால், வாழ்க்கையின் எல்லை வந்து விட்டதாக அர்த்தமா என்ன. மனமொருமித்து இருவரும், ஒருவராக வாழ்வோம் என்ற உறுதியோடு இணைத்துக் கொள்ளும் துணையினால், வாழ்வில் இருக்கும் சந்தோஷம் இரட்டிப்பாகலாமே ஒழிய, கல்யாணம் தான் சந்தோஷத்தையே தருவிக்கிறது என்பதை ஒப்புக்கொள்வதிற்கில்லை.

எப்போது கடமைக்காக வாழுகிறோம் என்று தெரிந்து, இருவருமே அதே போல உணர்வை உணர்ந்து, விவாகரத்து வேண்டும் என்ற தெளிவான சிந்தனையோடு விவாகரத்திற்கு, விண்ணப்பிக்கிறார்களோ, அவர்கள், உணர்ச்சி வசப்பட்டு எடுத்த முடிவா? என்பதை நீதியே, ஒரு வருட காலம் அவகாசம் கொடுத்து தானே, பின் விவாகரத்து வழங்குகிறது. அத்தகைய விவாகரத்து இருவருக்கும் தேவை தான்.

ஒருவருக்கு விவாகரத்து தேவை, ஆனால் மற்றவருக்கு அது பாதிப்பு என்று வரும் பட்சத்தில் தான், சிரமமே இருக்கிறது. சிலருக்கு எமோஷனலாக வாழ்வு இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அவரின் துணையோ, ப்ராக்டிகலாக லைப் இருக்கணும் என்று எண்ணலாம். இப்படி இருக்கும் போது தான், யாருக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் நீங்கள் திகைக்க வேண்டும். ஆனால், இருவருக்குமே விவாகரத்து தான் நிம்மதி வாழ்கையை தரும் என்றால், எமோஷனலாக இருப்பவருக்கு கவுன்சிலிங் செய்து, அவரின் துணையின் குணங்களை புரிய வைத்து தயார் படுத்த வேண்டும்.

எல்லோருக்குமே, இணைந்து வாழ்ந்தவர்கள், பிரிய வேண்டும் என்று சொன்னால், அதை செய்ய மனம் இருக்காது தான். அதனால் தான் அவர்களை சேர்த்து வைக்க ஆவன செய்கிறார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை, பிரிய வேண்டும் என்று துணைவரோ, துணைவியே நினைத்து, அது எமோஷனலாக எடுக்கப்பட்ட முடிவாக இல்லாமல், கால அவகாசம் எடுத்து, ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவாக இருக்கும் பட்சத்தில், விவாகரத்து செய்வது தான் நல்லது. ஆனால், அதையும் மீறி துன்பம் ஏற்பட்டாலும், எதிர் கொள்வேன் என்று ஒருவர் நினைக்கும் பட்சத்தில், அவர், தன் துணையின் போக்கில் சென்று வாழ்க்கையை வாழ வேண்டியது தான். அப்படி வாழ்பவர்கள் தான் அதிகம் பேர் இருக்கிறார்கள் நம் நாட்டில்.

விளக்கம் அளிக்க வாய்ப்பு நல்கியமைக்கு நன்றி ஷ்ரி :)

Sree's Views said...

Sowms...
விளக்கம் அளிக்க வாய்ப்பு நல்கியமைக்கு நன்றி ஷ்ரி :) //
enna idhu ivalo formalaa :)
apdee paartha naandhaan nadri sollanum :) for devoting ur precious time for clearing my confusions.

""If u have reasons for liking someone, then you are using your mind.But if you like someone for no reason, then you are using your heart." //
very apt...sila pera nambalukku takku pidichidum....aana we cant put our finger on what the reason for it is...but actually there are some reasons and it must be ones that give us happiness.

naan kalyanamdhaan happinessno illai kalyanam aagalaina totally unhappyno sollamaaten...but it is a very important part of one's life and ur life is set according to the kind of spouse u get. There is no doubt about that.
Its a very small part of one's life is just a myth, Sowms. Its a very important part...enakku oru pilot friend irukaar...avar solluvaar..."a guys's mood , performance at work and his atittude ,his interactions are all dependent on his personal life. I can tell who is and who is'nt happy in his relationship" nnu. I think he has a point. Naanum paathu irukken....oru exhuberent person relationship problem vandha udaney orey dullaa confusedaa aagiduvaanga.
So spouse amaivadhellam 'iraivan kodutha varam' dhaan :)
kalyanam sandhosham tharudho illaiyo , every person has a basic need to fulfil the yearning that there is someone who cares for them. so ppl want to have someone who wld miss them if they dont turn up at the expected time , a person who'd call and ask what went wrong if they had'd turned up. Idhu illaina vera engeyum they cant find happiness. Only if this void is filled , any other happiness wld appeal to them.

But ofcourse this is a different issue.

ஆனால், அதையும் மீறி துன்பம் ஏற்பட்டாலும், எதிர் கொள்வேன் என்று ஒருவர் நினைக்கும் பட்சத்தில், அவர், தன் துணையின் போக்கில் சென்று வாழ்க்கையை வாழ வேண்டியது தான். அப்படி வாழ்பவர்கள் தான் அதிகம் பேர் இருக்கிறார்கள் நம் நாட்டில். //
idhu romba correct , Sowms.
idhu mattum illama...he/she wld change nra nambikaiyilum sila per vaazharaanga.
Naan paartha vari , mannikkum gunam adhigama irukaravanga and en ego bhaadhichitudhey nnu romba yosikaadhavanga dhaan enna aanalum paravaillainnu vaazharaanga. Even to the point of putting up with physical abuse.
Naamaley 'koncham yosingalen..idhu thevaiyaa' nnu ketta kooda 'illai , idhu sariaagidum' nnu sollaravangalum irukaanga...u know the educated , self sufficient girls. So I guess these things differ from person to person.

Thanks , Sowms.

balar said...

மீண்டும் ஒரு அருமையான பதிவு sowmya.."கடமை ஒரு மடமை"னு தலைப்பு பார்த்த்தும் என்னடா நம்ம sowmya மேடமும் விசு படம் rangeikku போய்ட்டாங்களேன்னு நினைச்சேன்.:)

கே.சிவக்குமாரின் கடமை யள் அன்பும் தங்களின் கருத்தினை பிரதிபலிப்பதாகவே இருக்கிறது.

மடமை என்பதன் பொருளாக்கம் என்ன? கைவசம் கோனார் தமிழ் உரை இல்லை..:)

Sowmya said...

Sree,

Kelvi vantha than badhil solla mudiyum. formal aa thank pannala :)

Well written Nice :)

Sowmya said...

hi balar,

Vanga..! K.Sivakumar..yar nu theriala

madamai na..muttal thanam nu porul.

Madaya ..! nu thitrathillaya athu pola :P

balar said...

He is an excellent writer.

oho appo "madamai" la irundhu maruvi vandhadhu than "madaya" vaa? thanks for the explanation sowmya..:)

Kumar said...

/அன்பு இருக்கும் இடத்தில் கடமை வாசம் செய்வதில்லை. அதே போல் கடமை இருக்கும் இடத்தில் அன்பு மலர்வதிற்கில்லை./

நிஜம்! நிஜம்! நிஜம்!அன்பினால் மலரும் உறவு கடமை உணர்விருக்குமிடத்தில் சருகாகும். ஒவ்வொரு உறவுக்கும் அன்பினால் பாலமைத்தால் விரியும் நம் உலகம், கடமையால் கட்டுண்டு போகும் போது கடுகாய்ச் சுருங்குவதை உணர முடியும்.

//தாங்கள் எவ்விதம் //
பாலமே என் வழி, கடமை உணர்வுக்கு வீட்டில் இடமே கிடையாது.
தப்பித் தவறி கடமை(க்கு!) உணர்வோடு ஏதாவது செய்தால் உடனே கண்டு பிடித்து 'இப்படிச் செய்வதானால் செய்யவே வேண்டாம்'என்று பிரகடணம் செய்யப் பட்டுவிடும்.

நோ சான்ஸ் :)