யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!

Wednesday, October 24, 2007

S for Solitude - O for Obvious


Obvious

புரிதல் - தெளிவாக புரிந்து கொள்ளுதல். இத்தன்மை என்னுள் இயல்பாக இருக்கிறதா, அல்லது நானாக என்னையும் அறியாமல், அதன் பால் ஈர்க்கப்பட்டு அத்தன்மைக்கு முக்கியத்துவம் தந்தேனா என்பது பற்றி அதிகம் யோசிக்கவில்லை. நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளுக்கும், அதனைச் சார்ந்த விளைவுகளுக்கும், இந்த புரிதல் தான் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது, என்னுடைய அபிப்ராயம். எங்கே நாம் புரிந்துக் கொள்ளப்படுகிறோமோ, எங்கே நம்மால் மற்றவர்களை நன்றாக புரிந்து கொள்ள முடிகிறதோ, அங்கு ஒரு செளகரியமும், திருப்தியும் உண்டாக்கப்படுகிறது. செளகரியமாக உணர்ந்தாலே, நமக்கு தேவையான சூழல் கிடைத்து விடுகிறது. நல்ல சூழல் அமைந்தாலே, நல்ல உறவும் மேம்படுகின்றது.

பிரச்சனைகள் என்பது அறவே உண்டாகாமல், தடுக்கும் வழியாகவே இப்புரிதலைக் கொள்ளலாம். எல்லோருக்குமே, புரிதல் என்பது முக்கியமானதாகவே கருதப்படுகிறது. என்னைப் புரிஞ்சுக்கவே மாட்டேங்கறாங்க .. என்பது தான் பெரும்பாலானோரின் அங்கலாய்ப்பு. பல பிரச்சனைகளை நம்முடைய நிலையில் இருந்து மட்டுமே பார்பாதாலும், பரிசீலிப்பதாலுமே, அப்பிரச்சனைக்கு சரியான தீர்வை சுலபமாகவும், நடு நிலையாகவும் எடுக்க முடியாமல் போகிறது. நம்முடைய சூழ்னிலைகள், உணர்ச்சிகள் ஆகியவற்றைக் கொண்டு மட்டுமே, பிரச்சனைகள் அணுகப்படுகின்றன. எனவே தான், நம் பக்கம் மட்டுமே நியாயம் இருப்பதாக நமக்குப் புரிகிறது. அதனாலே, நாம் பாதிக்கப்பட்டது நியாயம் இல்லை என்ற உணர்வும் எழுகிறது.

நமக்கென்று வரும் பிரச்சனைகளி நாம் பாதிக்கப்படும் போது, நாம் உணர்ச்சிகளின் ஆழத்திற்குத் தள்ளப்படுகிறோம். அதனாலேயே, மற்றவரின் , உணர்வுகளும், அவர் பக்கம் இருக்கும் நியாயங்களும் நமக்கு புரிவதில்லை. நம் காயம் தான் பெரிதாக உணரப்படுகிறது. அத்தகைய உணர்ச்சிக் கொந்தளிப்பில் அடுத்தவரின் செய்லும் அல்லது நடத்தையும் பூதாகாரமாகவே தோற்றமளிக்கிறது. இது தான் உண்மை நிலவரம் என்று நாம் ஊர்ஜிதப்படுத்திக் கொண்டாலோ நம்முடைய உணர்வுகள் மேலும் பாதிப்புக்குள்ளாகி, ஏற்ப்பட்ட காயம், ரணமாக ஆகி, வடுவாகவும் பதிந்துவிடுகிறது.

இத்தகைய நேர்வை நம்மால் நிச்சயமாக தடுக்க முடியும். நம்முடைய உணர்ச்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தராமல், அல்லது முக்கியத்துவத்தை சற்று குறைத்துக் கொண்டு, இரு பக்க நிலையையும் புரிந்து கொள்ள முயன்றாலே, நமக்கு ஏற்படும் வடுக்களையும், மற்றவருக்கு நம்மால் ஏற்படும் ஒரு வித அசெளகர்ய நிலையையும் தவிர்க்க இயலும்.

என்னுள் இத்தன்மை எப்பவும் அகலாமல் பார்த்துக் கொள்ளத்தான் நான் விழைகிறேன். :)

7 comments:

Anonymous said...

kuppan_2007

arumayana posting- Purithal & puriya cheyuthal.

netru en uyar adikariyidam nan sandai pottu sinam kondu vivaadham seidhen. Indru kaalai than nidhaanamaaga yosithu paarkum pozuthu, avar nilayil irundhu indha pirachinayin pokkai naam paarkka villaye endru varutha patten.

Edir nabarai pesa vida vendum, avar pesuvdhai porumayaga kekka vendum (kaadhu & manasai koduthu kettal vendum). Nammul palarukku andha porumai illai. Naamgave oru mudivukku vandhu vidugirom (predetermined thoughts)

Ningal sollum unarchiyin undhuthal nammul palarukku irukirathu. Miga silare unarichi melanmai yil (emotional intelligence)sirandhu vilangukindranar.

Unarchi Melanmai thiram bada seivadhu eppadi endru kooda ningal arivurai kooralam (how to develop/apply emotional intelligence).

nandriyudan
Kuppan_2007

Ippadi udane posting kkku comments adippathu kooda unarchi vegam, posting patri muzumayaga purindhu kollamal comment type seivadhu

sk said...

another great post!!
IMHO, "being in others shoes" is not always possible. But, just a mere reminder to ourselves that "I am thinking ONLY from MY perspective; he might have his own reasons" can change our perspectives quite considerably and make ourselves more receptive and our decisions more balanced.

Sowmya said...

hi kuppan,

Arivuraiyaaga en pathivugalai enna vendam.Arivurai yarukkume thevai illai.

Ennaku solla therintha vishayangalai inge pakirnthu kolkiren. Ennaku avai uthaviyathu pola matravarkum uthavalam enra ennam mattume ullathu :)

Sowmya said...

Sk,

Welcome here.So early you are :P

Anonymous said...

kuppan-2007 says

Hi Sowmya

Arivurai ena nan solla vandhathu, prachanikku theervaiyum naam sollalaame, pakirndhu kollalaame.

Eppadi aduthavrgalukku puriya vaippadhu endra pirachnaikku kooda nanbargal tangalukku terindha theervai (solutions) sollalaame.

Oor koodi ther izuppom.


Nandrikaludan

Kuppan-2007

Kumar said...

/நம்முடைய உணர்ச்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தராமல் இரு பக்க நிலையையும் புரிந்து கொள்ள முயன்றாலே, நமக்கு ஏற்படும் வடுக்களையும், மற்றவருக்கு நம்மால் ஏற்படும் ஒரு வித அசெளகர்ய நிலையையும் தவிர்க்க இயலும்./

அருமையாக எழுதியுள்ளீர்கள்! உணர்ச்சிகளின் பிடியில் சிக்காமல் தனக்கும் வடுவின்றி, அடுத்தவரையும் காயப்படுத்தாமல் பிரச்சினைகளை சுமுகமாக முடிப்பவர்களினால் தான் இன்னும் பல உறவுகள், உறவுகள் மீதான நம்பிக்கைகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

God bless the souls who have the ability to press the pause button and act on the obvious.

/என்னுள் இத்தன்மை எப்பவும் அகலாமல் பார்த்துக் கொள்ளத்தான் நான் விழைகிறேன். :)/

Oh, you are one of those blessed souls! :)

Sowmya said...

hi kumar,

:))