யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!

Friday, August 3, 2007

இறப்பை வரவேற்க்கத் தயாராவோமா? (தொடர்ச்சி)

எப்போது என்ன ஆகும்? என்ற எண்ணத்தில் அல்லாது, எது நடந்தாலும் நடக்கட்டுமே என்ற எண்ணம் தான் நம்மை நம்பிக்கையோடு வாழ வைத்துக் கொண்டிருப்பது.ஆனால் அந்த நம்பிக்கையை தான் நாம் உறுதியோடு பிடித்துக் கொண்டு வாழ்கிறோம் என்பதை, நம்மால் விழிப்புணர்வோடு கவனிக்கத் தெரியவில்லை.

மாடிப்படிகளில்,மேலிருந்து கீழே இறங்கும் போது, இறங்கும் விழிப்புண்ர்வு இல்லாமல், அதி வேகமாக படிகளில், சட் என்று இறங்கும் போது, நாம் சுலபமாக படியை கடந்து விட முடிகிறது. ஆனால், இவ்வளவு படிகளை, ஜாக்கிரதையாக கடக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, பார்த்து பார்த்து காலடியை எடுத்து வைத்து கட்ந்தோமேயானால் தடுமாற்றம் வரத்தான் செய்யும். அதே போல தான் வாழ்வும். மிக அதிக விழிப்புணர்வு, நம் வாழ்வை தடுமாற்றத்தான் செய்கிறது.

உயிர் தான் பிரதானம். உடல் தான் பிரதானம். அதனால் தான் அதற்கு பங்கம் வருகிறது என்றால், யாராலும் சகித்துக் கொள்ளமுடிவதில்லை. சகித்துக் கொள்ள அவசியமும் இல்லை.என்னடா..இது. இறப்பை வரவேற்கலாமா..என்று கேள்வி கேட்டவ்ர், சகித்துக் கொள்ள அவசியமும் இல்லை என்று சொல்கிறார் என்று கேட்கிறீர்களா...மனதில் நிழலோடும் எந்த ஒரு உணர்வையும், சரி, தவறு என்று யாராலும் பாகுபடுத்தி பார்த்து விட முடியாது. பயமாக இருக்கிறது என்றால், பயம் ஏன் என்ற கேள்வி அங்கு அர்த்தமில்லாதது. ஆங்கிலத்தில் சொல்லவேண்டுமானால் "it happens" அதற்கு மேல் பயத்தை பற்றி விவாதிக்கவோ, அல்லது அது கூடாது என்று சொல்வதிலோ அர்த்தமேயில்லை.

ஆனாலும், இறப்பு என்பது நாம் வாழும் போதே நம்மை ஆட்டி வைக்கும் ஒரு நிகழ்வாக இருக்கும் பட்சத்தில், விதியை மதியால் வெல்லாலாம் என்ற நோக்கில் எழுப்பப்பட்ட கேள்வி தான் இறப்பை வரவேற்கலாமா? என்ற கேள்வி.பிறப்பை தடுக்க பல வழிகளை நாம் கண்டு பிடித்து விட்டோம்.ஆனால், இறப்பு? மனிதனுக்கு ஒரு பெரிய ச்வாலைத் தான் இயற்கை விடுத்துள்ளது. மழை வரும் போது, அதிலிருந்து நனையாமலிருக்க குடையை கண்டு பிடிக்கத்தான் முடிந்ததே தவிர, மழை வருதலை மனிதனால் தடுக்க முடிந்ததா? அதே போலத்தான், இறப்பை சவாலாக வைத்துள்ள இயற்கை முன், அவ்விறப்பையும், எதிர் கொள்ள தயாராகி விட்டேன் என்ற சவாலைத் தான் மனிதனால் வைக்க முடிந்திருக்கிறது. எவ்வாறு இதனை எதிர் நோக்குவது என்பதை ஒரு சிறு உண்மைச் சம்பவம் மூலமாக சொல்ல விருப்பப் ப்டுகிறேன்.

அம்மனிதருக்கு 46 வயது. இந்தியாவின், ஒரு புகழ் பெற்ற கம்பெனியின், மிக உயர்ந்த பதவியில் , சிற்ப்பாக அவர் பணியாற்றி வந்தார். தனது கடின உழைப்பால், சிறிய வயதிலேயே, முன்னுக்கு வந்தவர் அவர். பார்க்காத நபர்களில்லை, போகாத நாடுகளில்லை. மிகவும் பிரமிக்கத் தகுந்த வண்ணம் தான் அவர் வளர்ச்சி இருந்து வந்தது.தம் மனைவி, இரண்டு குழந்தைகளோடு ராஜபோகத்தோடு தான் வாழ்ந்து வந்தார். சமீத்தில், அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டார், ஒரு பிரபல மருத்துவமையில் அனுமதிக்கப் பட்டு, சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனாலும், இயற்கைக்கு முன், மனித முயற்சி எம்மாத்திரம், மருத்துவர்களால் கைவிடப்பட்ட நிலையில், ஒரு நாள் மருத்துவமனையில் தன்னை பார்க்க வந்த உறவினரிடம், அவர் கூறியது..

" வாழ்கையில எதை எதையோ சாதிக்கணும்னு நினைச்சேன்..சாதிச்சேன்.

நிறைய பணம் சம்பாதிக்கணும்னு நினைச்சேன் சம்பாதிச்சேன்...

ஆனால் அப்பணத்தைக் கொண்டு அப்பபோ வாழணும்னு எனக்குத் தெரியலை..அப்புறமா பார்த்துக்கலாமனு்..என்னோட சந்தோஷத்தை தள்ளிப் போட்டுடேன்...

இவ்வளவு, பணமும், புகழும் சம்பாதிச்சு பலன் என்ன, அதை எல்லாம் மனைவி, மக்களோடு சேர்ந்து அனுபவிக்க தவறிட்டேன்.இன்னொரு தடவை வாழ எனக்கு வாய்பிருக்காதான்னு தான் மனசு ஏங்குது.

நான் செஞ்ச தப்பை நீயும் பண்ணிடாதேப்பா....பணம் தான் முக்கியம்னு இருக்கிற வாழ்க்கையை கோட்டை விட்டவன்பா நான்.." - என்று அவர் கண்ணீர் விட்டு கதறிய காட்சி .......

இப்போது நான் கூறிய நபர் உயிரோடு இல்லை.ஆனால், வாழவேண்டும் என்ற ஆசையிலேயே தான் அவர் உயிர் பிரிந்தது.நம்மை வழி நடத்துவது நம் நம்பிக்கை மட்டுமல்ல, நம் எண்ணங்கள், மிக முக்கியமாக சொல்ல வேண்டுமானால், நம்மை மகிழ்விக்கும் எண்ணங்களே நம்மை வாழ்விக்கினறன. வாழும் ஆசையை அவைகளே தான், தோற்றுவிக்கின்றன, ஊக்குவிக்கின்றன. அவ்வெண்ணங்களைக் குலைக்காமல், அவைகளை நிறைவேற்றும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. எப்போது, நம்மால் இவற்றை நிறைவேற்ற இயலும்?

இறப்பு நமக்கு உண்டு என்பது எல்லோருக்கும் தெரிந்தும், வாழும் கலை தெரியாத பட்சத்தில், நிறைவேறாத ஆசைகளினாலும்,மகிழ்சியை எவ்வாறு தேடிக் கொள்வது என்று புரியாத காரணத்தினாலும் தான் , வாழ்தலில் திருப்தி காணாமல், மனித மனம், இன்னும் சிறிது காலமிருந்தால்,நன்றாக வாழ்வேனே.... என்று கடைசி தருவாயில் துடிக்க ஆரம்பிக்கிறது.அதனால் தான் இறப்பு நமக்கு வேண்டாத நிகழ்வாக தெரிகிறது. தவிர்க்க முடியாது என்றும் தெரிகிறது. ஆனால், மனம் அதற்கு தயாராவதற்கு மறுக்கிறது.

எப்போது, மனத்தை நாம் திருப்தியுற செய்கிறோமோ, அப்போதே, நம் இறப்பை நாம் வரவேறக்்க தயார்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்று பொருள்.திருப்தி அடைய வைக்க எனக்குத் தெரிந்த மூன்று தாரக மந்திரத்தை சொல்ல விழைகிறேன்.

1. இந்த நிமிடத்திற்காகத் தான் வாழ்ந்தேன்

2. இந்த நிமிடத்திற்காகத் தான் வாழ்கிறேன்.

3. இந்த நிமிடத்திற்காகத் தான் வாழுவேன்.


என்று ஒரு ஒரு நிமிடத்திலும் நம் மனமானது சந்தோஷப்படும் வகையில் வாழ்கையை நாம் வாழ ஆரம்பித்தாலே, பூரண திருப்தி வெகு சுலபமாக நமக்கு கிடைத்து விடும். ஆனால் அதுஅவ்வளவு சுலபமல்ல. அதற்கு வாழும் கலையை பிரயத்தனமாக கற்க வேண்டியதாகிறது. ஆனால், வாழ்கையின்
கடைசி நிமிடமாக , நாம் வாழும் ஒரு ஒரு நிமிடத்தையும் கொண்டாலே, நமக்கு அக்கலையை கற்கும் பிரயத்தனம் கூட சுலபமாகி விடும்.

நாம் விருப்பப் படும் , நம்மால் இயன்றதாக இருக்கும், நமக்கு சந்தோஷம் தரும், எதையும் உடனுக்குடனே செய்து ,முழு திருப்தி அடையும் கலை தெரிந்தால்..

"காலா..வாடா...உன்னை சிறு புல்லென மி(ம)திக்கிறேன்.." - என்று சீற்றம் கொண்டு பாடினானே பாரதி..அவன் பாடலுக்குண்டான முழு அர்த்தமும் விளங்கும்.

14 comments:

Anonymous said...

Very nice sowmya. Read both parts with great interest. I like the angle you used to drive home the point "Enjoy the present moment". I like it.

I am not sure but this angle seemed a bit different from what I usually come across (not that I have read much philosophy): Where they say we are always looking for lasting enjoyment but in things which wont provide it. So we end up seeking till the end and we don't want death as it puts a full-stop to that search we always believe will be fullfilled.

This blog of yours is very good just like your audio blog.

Kumar said...

//மழை வரும் போது, அதிலிருந்து நனையாமலிருக்க குடையை கண்டு பிடிக்கத்தான் முடிந்ததே தவிர, மழை வருதலை மனிதனால் தடுக்க முடிந்ததா? அதே போலத்தான், இறப்பை சவாலாக வைத்துள்ள இயற்கை முன், அவ்விறப்பையும், எதிர் கொள்ள தயாராகி விட்டேன் என்ற சவாலைத் தான் மனிதனால் வைக்க முடிந்திருக்கிறது. //

Excellent! This is very appropriate!

//1. இந்த நிமிடத்திற்காகத் தான் வாழ்ந்தேன்
2. இந்த நிமிடத்திற்காகத் தான் வாழ்கிறேன்.
3. இந்த நிமிடத்திற்காகத் தான் வாழுவேன்.//
While living in the present moment to the hilt is essential, don't you think that one should also use his one blessing he has- the ability to think, foresee & act on those factors that will affect the future? Just as looking through the windshield and adjusting the car while driving? While the anticipation of future causes a lot of pain to us, it is also our ability to alter courses? Great people have impacted lives of generations! I guess they didn't live for the present moment only?

balar said...

Sowmya, Happy friendship day..

Sowmya said...

Hi arun,

thanks for your comments :)

"\\Where they say we are always looking for lasting enjoyment but in things which wont provide it. So we end up seeking till the end and we don't want death as it puts a full-stop to that search we always believe will be fullfilled.//"

ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல் தான் பலதும் நம் வாழ்வில் பிணையப்பட்டிருக்கின்றன.இருள்-வெளிச்சம், மேடு-பள்ளம் போல, இன்பம்-துன்பமும், இரண்டுமே ஒன்றோடு ஒன்று பிணையப்பட்டவை தான். நமக்கு என்ன தேவை என்பதை நாம் தான் நிலைப் படுத்திக் கொள்ள வேண்டியதாகிறது.எப்போதும் வெளிச்சம் எவ்வாறு சாத்தியம் இல்லையோ, அதே போல், இன்பம் எப்போதும் சாத்தியமில்லை. ஆனால், எப்போதும் இன்பத்தையே தேடி அலையும் மனதிற்கு இந்த உண்மை தெரிவதில்லை. உண்மை தெரிந்தாலோ.. பரபரப்பாக நாம் வாழும் வாழ்வு எதற்கு என்ற கேள்வி நமக்குள் உண்டாகும். அந்த கேள்வி உண்டானாலே, உழைப்பு தடை பட ஆரம்பிக்கும்.உழைப்பு தடை பட்டாலோ, வளர்ச்சியும் தடை படும். ஆதலால், இன்பமோ, துன்பமோ எது வந்தாலும், பூரணமாக அதை ஏற்று கொள்ளப் பழகினாலே, நம்மால் ச்ம நிலையில் வாழ்வைக் கொண்டு செல்ல இயலும்.இது ஒரு வகை.

மற்றொரு வகை. பரபரப்பை தவிர்த்து, இருப்பதைக் கொண்டு பரிபூரண திருப்தி அடையும் வாழ்க்கை.இதில், நம்மை சுற்றி நாம் எழுப்பிக் கொள்ளும் வட்டம், சிறிது, ஆதலால், நிரம்ப உழைப்பு தேவைப் படுவதில்லை. ஆதலால், மாய்ந்து மாய்ந்து, இன்பத்தை தேடிக் கொள்ள அவசியம் இருக்காது.அதனால், வளர்ச்சியும் இருக்காது. ஒரே நிலைத்தன்மை சீராக இருக்கும்.

மற்றொரு வகை.. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது..எது நடக்குமோ, அதுவும் நன்றாகவே நடக்கும் என்ற கீதையின் சாராம்சப்படி, இன்பம் , துன்பம் என்று வேறு படுத்திப் பாராமல், இரண்டையும் சமமாகவே நிலை நிறுத்திக் காணும் நிலை. இந் நிலையை தான், அக்கால ரிஷிகளும், முனிவர்களும் அடைய முயற்சி செய்த நிலை. பற்றற்று இருக்கும் போது தான் , இவ்வகை சாத்தியம் என்று, அவர்கள் கானகம் சென்று, தவம் என்ற ஒரே குறிக்கோளோடு, இறைமையை அடைய நினைத்தனர்.

இவ்வகையில் யாருக்கு எவ்வகை சுலபமாகவும், ஏற்றுக் கொள்ளும்படியும் இருக்கிறதோ, அதைப் பொறுத்து தான் அவர்கள் இன்பத்தையும், துன்பத்தையும் காணும் நிலை உறுதி செய்யப்படுகிறது.

Sowmya said...

hi kumar, Nice to see you here :)

"\\While living in the present moment to the hilt is essential, don't you think that one should also use his one blessing he has- the ability to think, foresee & act on those factors that will affect the future? //"

மனித மனமானது, எப்பவும் ஒரே சீரான செயல்பாட்டில் இயங்குவதே இல்லை.சொல்லப் போனால் நமக்கு இன்பம் தரும் விஷயம் எது என்பது கூட , நம்மால், இன்னது தான் என்று சொல்லிக் கொள்ள இயலாததாகிறது.அப்ப்டியிருக்கும் பட்சத்தில், நாம் செய்யக் கூடிய காரியம் நிச்சயம் நமக்கு இன்பத்தை ஈட்டித் தருமா என்பதை சிந்தித்து தான் செயல்பட முடியும். " இந் நிமிடம் நான் சந்தோஷமாக இருக்கிறேனா" என்று எண்ணும் போதே, அந் நிமிடத்தை நாம் கடக்க நேரிடுகிறதே. ஆகவே, நம்மால் இயன்றவரை நாம் சந்தோஷம் காணும் செயல்களையே செய்வது என்றும், பிறரின் சந்தோஷம் போலவே, என்னுடைய சந்தோஷமும் மிகவும் முக்கியம் என்று அதற்கும் முக்கியத்துவம் தரும் போது, நம்மால் எல்லா நிமிடங்களிலேயும் வாழ்ந்த திருப்தி கிடைக்கப் பெறமுடியும்.

"\\Just as looking through the windshield and adjusting the car while driving? While the anticipation of future causes a lot of pain to us, it is also our ability to alter courses? Great people have impacted lives of generations! I guess they didn't live for the present moment only?//"

இது தான் நாம் எப்பவுமே கடைப்பிடிப்பது. நிகழ் காலத்தில், இறந்த காலத்தை பற்றிய சிந்தனையையும்,அல்லது, எதிர்காலத்தைப் பற்றி சிந்தனையையும் எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பது. இச்சிந்தனையிலேயே, நிகழ்காலத்தை நாம் கடந்து விடுகிறோம். நம்மையும் அறியாமல், இவ்வாறு நடக்க நம் எண்ணங்களை நாம் தயார் செய்து விடுகிறோம். கொஞம் பிரயத்தனப் படுத்திக் கொண்டால் நம்மால், நிகழ் காலத்திலேயே வாழ்ந்து விட முடியும்.

நிகழ்காலத்தில், இறந்த காலத்தில் நிகழ்ந்த இன்பமான சம்பவங்களின் தொகுப்பை நினைத்து மகிழும் தன்மை, நமக்கு இன்பத்தை தான் அளிக்கிறது. அதனால் எந்த இழப்பும் நமக்கில்லை. ஆனால், பெரும்பாலும், நாம், இறந்த காலத்தில் நமக்கு துன்பம், தந்த சம்பவங்களை, நிகழ்காலத்தில் சிந்திக்கும் போது தான், நம்மை எப்பவும் கவலை ஆட்கொண்டதாக நாம் ஆக்கிக் கொள்கிறோம்.

எதிர்கால்ம்..ம்ம்.. அப்படி ஒரு காலத்திற்காகத் தான் நாம் நிறைய திட்டமிடுகிறோம்.அதன் படி நடக்கவும் செய்ய வேண்டும் என்றும் உறுதி எடுத்துக் கொள்கிறோம்.ஆனால், இந்த நொடியை கூட , ஒரு காலத்தில், எதிர்காலமாக நினைத்து தான் திட்டமிட்டோம் என்பதை மறந்து விடுகிறோம்.

மேலே அருணுக்கு, அளித்த ம்று மொழியில் கூறியதைப் போல், நமக்கு எவ்வகை உகந்தததோ, அதை பின்பற்றிக் கொள்ளலாம், ஆனால், எவ்வகையைப் பொறுத்து உங்கள் விருப்பம் அமைகிறதோ, அதைக் கொண்டு தான் உங்களின் இன்பம், துன்பம், அதை அடையும் தன்மையின் விகிதம் வேறுபடும்.

Sowmya said...

hi balar,

Happy friendship day :)) thanks for ur wish.

Enge ungala kaanavee kaanum !

balar said...

konjam busy agiten adhan sowmya..:)

Sree's Views said...

Hey sowmya...naan ennamo idhu death pathi irukkumnu ninaichen.
but its more like 'art of living' post :)
I absolutely agree with u :)
one shd live in the present.
I vividly remember telling u in the comment section of a previous post how we shd make a concious effort to be happy.
There is no point in worrying about what is going to happen...
"lets cross the bridge when we come to it" is the right attitude.
asusual...sooper post , Sowms :)

Sowmya said...

Sree,

"\\naan ennamo idhu death pathi irukkumnu ninaichen.
but its more like 'art of living' post //"

We cant state a definition against nature.May be , we can imagine some.:)

Unknown said...

//ஆனால், இவ்வளவு படிகளை, ஜாக்கிரதையாக கடக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, பார்த்து பார்த்து காலடியை எடுத்து வைத்து கட்ந்தோமேயானால் தடுமாற்றம் வரத்தான் செய்யும். அதே போல தான் வாழ்வும். மிக அதிக விழிப்புணர்வு, நம் வாழ்வை தடுமாற்றத்தான் செய்கிறது.//

Awareness makes you stumble? really? I don't think i would agree with this analogy. However, extending your analogy, we all take our first steps with utmost awareness possible and once it becomes a habit- a "natural" process to our system, we don't and need not employ our consciousness to do the same. But that in no way takes away the need for awareness.

Btw, when the body falters, don't you think the fault lies with the inability of the rusty body to quickly respond to the signals of awareness? And not with awareness?

Here's something along the lines of your post:
http://sk-ism.blogspot.com/2007/06/jarugandi-jarugandi.html
http://sk-ism.blogspot.com/2007/07/uravugal-sirukathai.html

Sowmya said...

hey sk

Welcome :)

"\\we all take our first steps with utmost awareness possible and once it becomes a habit- a "natural" process to our system, we don't and need not employ our consciousness to do the same. But that in no way takes away the need for awareness."//

Very much true ! I am happy to receive a comment like this :)

Awareness can be possible only with people who process the system into a habbit of using it.For others, the awarensss may cause some kind of distraction from things what they do.Becoz, they are not used to do things by handling two things at a time (ie What they do & how they watch it)

Ashok said...

Good view towards accepting the eventuality and live it while it lasts. Hey, do you mind putting your blog link in my blog roll?

Sowmya said...

hi ashok

:) sure

Anonymous said...

i think *cautiousness* is different from *awareness*. One can lead to mistakes, and other wont. I think, by ஜாக்கிரதை, sowmya you perhaps meant caution and not awareness?