யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!

Saturday, August 11, 2007

மன அழுத்தம் எதனால்.....?

மன அழுத்தத்தின(Stress --> Depression)் எல்லை என்பதை எவ்வாறு கொள்வது.எப்படி அது ஒருவருக்கொருவர் வேற்படுகிறது? உங்கள் அபிப்ராயத்தை பகிர்ந்து கொள்ளுங்களேன்.

*********

மன அழுத்தத்தை சந்தித்தபொழுது, நான் வேறு எதுவாகவும் இல்லை.மன அழுத்தமாக மட்டுமே இருந்தேன். ஆம்! முதல் முறையாக மன அழுத்தம் எனக்குள் வந்து போனது.

வந்ததது..போனது..

எவ்வித சிகிச்சையினாலோ, அல்லது எந்த வித தெரபி முறைகளாலோ, மன அழுத்தம் விலகவில்லை. மன அழுத்தம் எவ்வாறு உண்டானதோ, அதே போல் தானாக அது விலகி விட்டது. அது தான் அதன் தன்மையும் கூட.ஆனால், இது ஒருவருக்கொருவர் எவ்வளவு சீக்கிரம் விடை கொடுக்கும் என்பது தான்் நிச்சயமாக வேறுபடுகிறது.சிலருக்கு சில நாட்கள், சிலருக்கு பல மாதங்கள்.மன அழுத்ததிலிருந்து விடை பெற வேண்டும் என்ற எண்ணமே, கால அளவை வேறுபடுத்துகிறது.

எண்ணங்களின் ஓட்டமே, மன அழுத்தத்தை உண்டாக்குகிறது.அதே எண்ண ஓட்டமே, மன அழுத்தத்தை சரி செய்து விடுகிறது. மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், தனக்கு அது வந்து விட்டதே என்று, அதை சரி செய்து கொள்ள பல் வேறு மருத்துவ முறைகளை பின்பற்றுதலும், தன்னால் இயலாத நிலை தனக்கு வந்து விட்டதாகவும், அதனை எப்படி சரி செய்து கொள்வேன் என்ற கவலைகளாலும் பாதிக்கப்படுகின்றனர். என்னைப் பொறுத்தவரையில் , நாமே நம் மன அழுத்தத்திற்கு காரணம், அதே போல் நாமே நம் மன அழுத்தத்தையும் சரி செய்து கொண்டு விடலாம்.

ஒரு விஷயத்தை இந்த மன அழுத்தம் காரணமாக நன்கு புரிந்து கொண்டேன். சந்தோஷம் என்பது ஒரு தனி அடுக்ககாகவே நம்மில் இருக்கிறது. அதனை மறைக்கும் விதத்தில் நாம் தான் அது தெரியாத வண்ணம், துக்கம் கொடுக்கும், கவலைகளையும், எண்ணங்களையும் அதன் மேல் பூச்சாக வைத்துக் கொண்டிருக்கிறோம். எப்போதும், கவலையும், துக்கமும் நம்மை ஆட்கொள்ள்வதில்லை. எப்பவும் நம்மிடையே இருப்பது, நம்மை திருப்தியுற செய்யும் சந்தோஷ எண்ணங்களே. அதன் மூலமே நம் வாழ்க்கை பயணம் சென்று கொண்டிருக்கிறது. ஆனால், இடை இடையே நம் கவலைகளும், ஆழ்ந்த துக்கத்தில் மனதை செலுத்தும் தன்மையுமே, அந்த சந்தோஷத்தை மறைத்து, இயல்புக்கு மாறான அழுத்தத்தை மனதிற்கு தருகிறது. அதன் விளைவே மன அழுத்தம்.

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மனதை நாம் நினைத்தால் வெளியே கொண்டு வர இயலும். ஆனால், நம்மில் பலரும், தன் மன அழுத்தத்திற்கு காரணம் தாம் தான் என்பதை உணராமல், மன அழுத்தம் நம் எண்ணங்களினால் தான் என்ற விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதால், அந்த மன அழுத்த உணர்வானது சிலருக்கு சில மாதங்கள் கூட அப்படியே இருந்து விடுகிறது.


தெரபிகளில், இதற்கு சிகிச்சை என்று கூறினால், நன்கு தூங்க வைக்கத்தான் மருந்துகள் தரப்படுகிறது. தூக்கம், இயல்பு நிலை மறக்கச் செய்யும். தொடர்ந்து பல நாட்கள், இயல்பு நிலை மறந்து போனால், தானாக மன அழுத்தத்திலிருந்து, பாதிக்கப்பட்டவர்கள் வெளி வந்து விடுவார்கள் என்ற எண்ணத்திலேயே தூக்கம் தரும் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

இந் நிலை எனக்கு வேண்டாம், என்ற எண்ணத்தோடு, மன அழுத்தத்திலிருந்து வெளியே வரவேண்டும் என்ற உந்துதலோடு இருந்தால், சுலபமாக மன அழுத்தத்திலிருந்து வெளியே வந்து விடலாம். நாம் தான் நம்மை வழி நடத்துவது. நாமே நம் எண்ணங்களை வடிவமைப்பது. நாம் நினைத்தால் மன அழுத்தத்தை நமக்குள் வர வைக்கலாம். நாம் நினைத்தால், அவ்வழுத்தத்திலுருந்து சுலபமாக வெளி வந்து விடலாம். நம் மனதை எவ்வாறு நாம் பழக்கப்படுத்தி வைத்திருக்கிறோமோ, அவ்வாறே, நாம் நம் மனதிற்கு ஏற்படும் நன்மை, தீமைகளை கணக்கிட்டு கொள்ள முடியும்.

மனதை சீரிய முறையில் பழக்கப்படுத்த,உள் நோக்கும் தன்மையே (perception) காரணம். நாம் பிறக்கும் போது, உள் நோக்கும் தன்மை என்பதே இல்லாமல் தான் பிறக்கிறோம். ஆனால், நாளாக நாளாக, நம்மைப் பற்றி நாம் சிந்திக்க ஆரம்பித்தாலே, உள் நோக்கும் தன்மையை நாம் பெற்று விடலாம். நாம் வாழும் உலகிலிருந்து, நம்மை நாம் வேறு படுத்திக் காண்பதே இல்லை. அப்படி வேறு படுத்தி கண்டால் தான், நம்மால் உள் நோக்கும் தன்மையை வளர்த்துக் கொள்ள முடியும்.

மன அழுத்தம் என்பது ஒரு மன நோய் அல்ல. அது சமுதாயத்தை சீரழிக்கும் நோயும் அல்ல. அது ஒரு வித மன நிலை. அவ்வளவே. அதற்கு எவ்வித சிகிச்சையும் தேவையில்லை. மன நிலையை மட்டும் நாமே சரி செய்து கொள்ளும் கலை தெரிந்தாலே, நம்மால் மன அழுத்த நிலையை மாற்றிக் கொள்ள முடியும். அறிவை(Mind) விருத்தி செய்து கொள்ளப் பழகும் நாம், நம் சுயத்தை (Self) விருத்தி செய்து கொள்ளப் பழகினாலே, இது போன்ற மனம் சம்பந்தப்பட்ட நிலைக்கு தீர்வினை சுலபமாக காண முடியும்.

மன அழுத்தம் கொண்டோர், தம் மன அழுத்தம் எதனால் என்பதை சரியாக புரிந்து கொண்டாலே, அதிலிருந்து எவ்வாறு வெளி வருவது என்பதையும் அவர்களாகவே சொல்லி விட முடியும். இதற்கு ஒரு சிறந்த வழி, நான் என்னவாக இருக்கிறேன்..நான் எப்படி இச்சூழலை எதிர் நோக்குகிறேன்.. நான் எப்படிப் பட்டவைகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற சுய சிந்தனை இருந்தாலே, மன அழுத்தம் அணுகாதவாறு நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். அப்படியே மன அழுத்தம் ஏற்ப்பட்டாலும், அதிலிருந்து நம்மை நாமே உடனடியாக விடுவித்துக் கொள்ளவும் முடியும்.

Disorder (சீரிய தன்மையற்ற) என்று சொல்லப்படும் தன்மை கூட, ஒருவரின் மன நிலையைப் பொறுத்து தான் வீரியம் மிகுந்ததாக இருக்கக் கூடும்.Disorder னால் பாதிக்கப்பட்டவரின் மன நிலை, அச்சீரிய தன்மையற்றதை விட உறுதியாக இருக்குமானால், அந்த disorder அவரை ஒன்றுமே செய்ய இயலாது.

"We don’t see things as they are, we see them as we are." எனவே இருப்பதை இருப்பதாகவே நாம் கொண்டாலே, இந்த மன அழுத்தம் போன்ற நிலைக்கு நமக்கு நாமே பதிலையும், முடிவையும் தேடிக்க் கொள்ள இயலும்.

22 comments:

Anonymous said...

R u talking about stubborness or stress. Just a clarification.

Sowmya said...

Hi anon,

The talk is about stress , which leads to depression.

Priya said...

Sowmya,

I think anxiety leads stress and depression.

When you overcome with too many things which you cannot manage or hold on to your brain, it leads to stress. Based on your personality, I mean how strong/ sensitive you are, you can either bring your stress level down or it only shoots up.

Any situation in our lives, when we are unable to handle due to pressure or guilt, we become or feel negativty. The thoughts which keep us runing from many things leads to depression which includes, fear, anxiety and insecurity.

As humans, we least expect gratitude and appreciation as it comes in many forms. But even a small thank you note can make wonders to someone who is so stressed.

Stress vary to many:
1. Job
2. Childbirth and pregnancy
3. Emotional distress
4. Failures and loneliness
5. Anger and lack of appreciation
6. Alcholism and drugs.

Priya said...

Sowmya,

Did u add the rest of the post later??

Sree's Views said...

தம் மன அழுத்தம் எதனால் என்பதை சரியாக புரிந்து கொண்டாலே, அதிலிருந்து எவ்வாறு வெளி வருவது என்பதையும் அவர்களாகவே சொல்லி விட முடியும். இதற்கு ஒரு சிறந்த வழி, நான் என்னவாக இருக்கிறேன்..நான் எப்படி இச்சூழலை எதிர் நோக்குகிறேன்.. நான் எப்படிப் பட்டவைகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற சுய சிந்தனை இருந்தாலே, மன அழுத்தம் அணுகாதவாறு நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். //
inkkum koncham elaborate panna mudiyuma , Sowms ? Naan indha posta oru 7 ,8 vaati padichi iruppen. very nice , oru book padicha maari irukku :)

Ashok said...

Your write ups gives a proper description which I go through in my thoughts. Every now and then during some discussions with my friend, we used to say "Time nnu onnu irukke...." basically to imply that things happen and the thoughts gets deviated or may be even diminished considerably to forget the stress or strain. As you said, habituating that property of springing right away from it is something to be worked upon. When something stressful or to be more generic to say as "unhappy" moments happen, while instinct gives a knee jerk reaction, taking some time to properly analyze it and relieve from it is what you are implying. As usual, nice thoughts and more than that it has been put well.

balar said...

மிக அருமையான பதிவு sowmya..மன அழுத்தத்திற்கான காரணத்தையும் அதற்கு தீர்வாக தங்களின் விளக்கமும் அற்புதம்..

job stressல் வரும் மன அழுத்தம் இருக்கே அப்பா தாங்க முடியாத ஒன்னு..அதை தவிரிப்பதற்கே beachக்கும் shopping mallக்கும் போக சொல்லுது..:))

Sowmya said...

hi priya,

Good points abt stress !

yeah ! i added the elaborate post later.

Sowmya said...

hi sree,

"\\inkkum koncham elaborate panna mudiyuma , Sowms ? Naan indha posta oru 7 ,8 vaati padichi iruppen. very nice , oru book padicha maari irukku :) //"

Ha..Ha.. appdi puriyatha mathiri ezhuthiruken nu solreengala sree. aama sila books ethanai thadava padichalum puriyarathey illa :P

மன அழுத்தம் மட்டுமல்ல, மனதில் உதிக்கும் எண்ணங்களும், அவரவர் நம்பிக்கைக் கோட்பாடுகள் எல்லாமே ஒருவருக்கொருவர் முற்றிலும் வேறுபடுகின்றது. எனவே அவரவர் தான் அவரவர் தத்தம் மனதை புரிந்து வைத்துக் கொள்ளல் சாத்தியம். சிலருக்கு முக்கியமாக இருப்பது, பலருக்கு முக்கியமாக இருப்பதில்லை. அதே போல் பலருக்கு மிக முக்கியம் என்று கருத்தப்படுபவை, சிலருக்கு வெகு சாதரணமாக போய் விடுகிறது. எனவே நம் எண்ணங்கள் எத்தகையது, நம் விருப்பங்கள் எவை, எது நம்மை ஈர்கிறது, எவற்றில் நமக்கு சந்தோஷம் கிடைக்கிறது. வாழ்கையில் எது முக்கியமாக கருதப்படுகிறது என்பதை ஒவ்வொருவரும், அவரவரை மூன்றாவது இடத்தில் நிறுத்தி சுய சோதனை செய்து கொண்டாலே, நாம் மற்றவரோடு பழகும் போது, யார் யார் நமக்கு பழகுதலில் சரிப்படுவார்கள், யாரிடம் என்ன எதிர்பார்புகள்: நமக்கு இருக்கினறன. என்பவை எல்லாமே நமக்கு தெளிவாக தெரிய ஆரம்பிக்கும்.

இத்தகைய தெளிவு இருக்கும் பட்சத்தில், மன அழுத்தம் என்பது நேரிட்டாலும், காலம் நம்மை சிந்திக்க செய்து நாம் கொண்ட தெளிவின் மூலம், வெகு சுலபமாக மன அழுத்தத்திலிருந்து உடனடியாக வெளி வரச் செய்யும் வாய்ப்புகள் அதிகம். மேலும் நம்மைப் பற்றிய தெளிவினால், பிறருக்கும் நம்மை நாம் நன்றாக புரிய வைத்தல் சுலபப்படும்.

Thiru said...

Sowmya

A nice post... a heavy topic!

I guess you meant 'introspection' by 'உள் நோக்கும் தன்மை'?!

If I have to comment, it might take several pages, I would prefer to discuss it rather than commenting, as it involves too many factors. As Sree said you have written a kind of abstract of a book.

@Sree

//Naan indha posta oru 7 ,8 vaati padichi iruppen.//
is that enough? read it like...

kaaka kaaka kanagvel kaaka
padika padika mana azhutham podi pada
oru naal mupathaarumurai padithu
lappieyai madithu
thalaiku mael suttri
suthiyaal adithu odhiya jabithaal
enniyadhelam kittum
vedhaalathin bayam agandridum

(I guess, I have invited enough trouble for now!)

Sowmya said...

hi ashok,

Happy to know that you have the same thoughts even. TIME is the wisest counsellor of all :)

Sowmya said...

hey balar,

Nice to see u here after a gap. Enge unga blog?!

Office na commitment aachey..niraya stress irukka than seiyum. athu pada than venum.vera vazhi illa :)

Sowmya said...

hi Thiru,

Nice to see you here after a long time.

I meant "Insight" as 'உள் நோக்கும் தன்மை'

Good to know that you have lot of factors to discuss in this topic.

Unknown said...

Thiru

(I guess, I have invited enough trouble for now!) //
sashti kavasama sollareenga !
enniyadhelam kittum
vedhaalathin bayam agandridum //
bhayam irukattum.
idha jabithaal enniyadhellam kittumaa ?
108 vaati solli ungalukku office la bhayangara stress tharanumnu ennikiren :P appo comment poda epdee varuveengannu paakalam.

Unknown said...

Hey Sowms..
Neenga sonnadhu puriyalannu sollala ,enakku dhaan avalo seekiram mandaila erala :(

Neenga sonnadhu ellam sari..enakku puriyum maadhiri nidhanama solli irukeenga.

U r suggesting that we have to understand ourselves and face situations accordingly . But I have known a few ppl who were in situations beyond their control and landed up with depression. The worst part is depression goes undetected in many cases.
But otherwise in other situations I guess what u says wld work perfectly.
Enjoyed ur comment , Sowms :)

Unknown said...

Well, well, well. What to say? A lot of things in sync.

In fact, my comment for prev post also has a lot of relevance here. It is all about expectations. To put the ultimate solution for depression in simplistic terms:

Be aware of your expectations. Anxiety is out of unmet expectations. Try to reason out the difference between the actual and expected.

This exercise in itself would do a lot good to reduce anxiety i guess. I had said in one of my posts that "love is a thought" just like every other thing "we feel". Of course, as expected, my theory had not many takers. ;)

Sowmya said...

Hi sk,

"\\Be aware of your expectations. Anxiety is out of unmet expectations. Try to reason out the difference between the actual and expected.//"

Good flow of thoughts :)

but it is very difficult to put it into practice.Once if we taste the happiness out of it.Then, it will be easy to follow the same in all situations. Nice comment:)

Unknown said...

//but it is very difficult to put it into practice.Once if we taste the happiness out of it.Then, it will be easy to follow the same in all situations. Nice comment:)//

thanks! yeh, it is very difficult to put it into practice, if you cant even start. ;)

Unknown said...

Hi Swamiya,

Its really useful for me thanks .

Uday

Unknown said...

Hi Swamiya,
It's really useful thanks.if u post anything new like this please share me .

Thanks&Regards,
D.Uday

Anonymous said...

very useful message. thank you

Unknown said...

superb statement about "Depression"