யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!

Monday, September 3, 2007

மறுமை மரித்தால் பொறுமை..

வலைப்பதிவில் போடும் பதிவுகளைப் படிக்க ஆர்வம் காட்டுவதிலேயே பலரின் பொறுமை செவ்வனே விளங்குகின்றது. அதுவும், ஓரளவுக்கு நல்ல படிப்பாளிகளை சேர்த்துக் கொண்ட பதிவர்,போடும் மொக்கைப் பதிவுகள் கூட, படிப்பாளிகளின் பொறுமையைத் தான் சுட்டிக் காட்டுகிறது.ஒரளவு கணித்து வைத்திருக்கும், மனதிற்கு பிடித்த பதிவுகளை போடும் பதிவர், நடு நடுவில், "இவரா...இப்பதிவை எழுதினார்" என்று வியக்கும் வண்ணம் பதிவுகளைப் போட்டாலும், அதையும் பொறுமையாகப் படித்து, மறுமொழி எழுதும் எத்துணையோ படிப்பாளிகளை எண்ணி நான் வியந்திருக்கிறேன்.

ஆக..பொறுமை என்பது, நமக்கு பிடித்த விஷயங்க்ளில், நமக்கும் தெரியாமல், நம்மோடு இயைந்தே இருக்கிறது.ஆனால், நாம் பொறுமையாகத்தான் இருக்கிறோம் என்பதை அவ்வளவு சாதாரணமாக நம்மால் ஒத்துக் கொள்ள முடிவதில்லை. பெரும்பாலும், நமக்கு பொறுமை இல்லையோ என்று தான் நாம் நம்மைப் பற்றி நினைத்துக் கொள்கிறோம். ஆனால் நம்மிடம் அளவற்ற பொறுமை நிறைந்து கிடக்கிறது.ஆனால், எல்லா விஷயங்களிலும் , பொறுமை காட்டமுடியாததால், நமக்கு நாம் பொறுமையாக இல்லை என்ப்தையே ஒரு தீர்வாக நமக்குக் கொடுத்துக் கொள்கிறோம்.

சரி..பொறுமை என்பதை எதோடு சம்பந்தப் படுத்தி பார்க்கிறோம் நாம். நம்மைச் சுற்றி, நடக்கும் தீமைகளை சகித்துக் கொள்வதாகவே நாம் பொறுமையை அர்த்தப்படுத்திக் கொள்கிறோம். நமக்கு பிடிக்காத காரியங்களை மற்றவர் செய்யும்போது பொறுமை இழக்கிறோம். ஆனால், நமக்கு பிடிக்காத விஷயமாக இருந்தாலும், பிடித்த நபர் செய்யும் போது, எங்கே இருந்து திடீரென்று நமக்கு பொறுமை வருகிறது. அப்போது என்ன நடக்கிறது. நமக்கு பிடித்த நபர், நமக்கு பிடிக்காத காரியங்களைச் செய்தாலும், அவர்களை அவர்களாகவே நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதனால் தான், தத்தம் குழந்தைகள் எத்தகைய பொறுமை மீறும் காரியங்களைச் செய்தாலும், பெற்றோர்களால், சுலபமாக அதை ஏற்க முடிகிறது.

குழந்தைகள, மனதிற்க்கு பிடித்தவர்களிடம் பொறுத்துப் போகிறோம் சரி...ஆனால், வெளி வட்ட நபர்கள் செய்யும் காரியங்களோ, அல்லது அவர்து போக்கோ நமக்கு பிடிக்காத பட்சத்தில், பொறுமையை பூரணமாக இழந்து விடுகிறோமே.எப்படித் தவிர்ப்பது அதை. புரிந்து கொள்ளலால் தான் சாத்தியம் அது.

ஒன்றைப் பற்றி சிந்திக்க வேண்டும். நாம் விரும்புகின்ற விஷயங்களே நம்மைச் சுற்றி நிகழ வேண்டும் என்று எதிர்ப்பார்பதற்கு நமக்கு என்ன உரிமை இருக்கிறது, என்று சிந்தித்தாலே, பொறுமை இழக்கும் காரியங்களை யார் செய்தாலும் அதற்கு எந்த விதமான முக்கியத்துவத்தையும் நாம் தராமல் பார்த்துக் கொள்ள முடியும். நாம் பொறுமை இழக்கும் சமயத்திலெல்லாம்,அவதிப் படுவோர் நாம் தான். நம் மன அமைதியை நாம் தான் கெடுத்துக் கொள்கிறோம். கோவம் கொள்கிறோம், வெறுப்படைகிறோம். இது நமக்கு இப்போது தேவை தானா என்று யோசித்தால், எவ்வளவு அற்பமான விஷயங்களுகெல்லாம், நம் உணர்வுகளை நாம் பலியாக்குகிறோம் என்பது விளங்கும். அதோடு மட்டுமில்லாமல், பொறுமை இழத்தலினால், மிகுந்த ஏமாற்றமும், அதோடு அது நீடிக்கும் மன நிலையையும் தான் நாம் பெறுகிறோம்.

உதாரணத்திற்கு சொல்வதானால், பேருந்து நிறுத்தத்தில், பேருந்திற்காக காத்துக் கொண்டிருக்கும் போது, பேருந்து வர கால தாமதமாகி விட்டால், பொறுமை இழந்து தவிக்கிறோம். அப்படி பொறுமை இழப்பதினால், நடக்க கூடியது என்ன. அதனால் ஏற்படும் லாபம் என்ன.பேருந்து வந்து விடப் போகிறதா.. செல்லக் கூடிய இடத்திற்கு கால தாமதம் ஆகத்தான் செய்யும். ஆனால், பொறுமையிழப்பதால், அந்த விளைவை நாம் மாற்றி விட முடியுமா..என்பதை கண நேரம் சிந்தித்தாலே, அங்கே காத்துக் கொண்டிருக்கும் நிலையை நாம் ஏற்றுக் கொண்டு விடுவோம். அதனால், மன அமைதியும் உண்டாகும்.

மற்றவரின் செயல் கண்டு பொறுமை இழக்கும் சூழல் ஏற்படுகிறதா..அவர்கள் செய்வது அவர்களது அறியாமையினால் தான்..என்று நமக்கு நாமே விளக்கம் கொடுத்துக் கொண்டாலே போதும். பொறுமை இழ்க்க வேண்டிய அவசியம் இருக்காது. நமக்கு வேண்டியவர்கள், நமக்கு ஒவ்வாத காரியங்களைச் செய்யும் போது, அன்பின் நிமித்தமாக பொறுமையை கையாள நாம் எப்படி பழகிக் கொள்கிறோமோ, அதே போல், நமக்கு அன்னியமானவர்களின் காரியங்களில் நமக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், அவர்களது அறியாமையினால் தான் அது நடந்தது என்று நாம் சிந்திக்கும் பட்சத்தில், நம்மால், பொறுமை இழக்காமல் எப்பவும், மன நிம்மதி பெறமுடியும்.

ப்யிற்சியின் மூலம் பொறுமை இழக்கின்ற பழக்கத்தை மெள்ள மெள்ள குறைத்துக் கொண்டுவிடலாம். ஒரு நாளில், சில நிமிடங்களாவது, எனக்கு ஒவ்வாத காரியங்கள் நிகழந்தாலும் பொறுமையாக இருப்பேன் என்று நமக்கு நாமே தீர்மானம் செய்து கொண்டால் தான், பொறுமையை பழக்கத்தில் கொண்டு வர இயலும். எது நடந்தாலும் பொறுமையாக இருக்க, சிறு சிறு விதமாக நாம் பழகக் கூடிய இப்பழக்கம் தான் துணையாக இருக்கும். காலப்போக்கில், பொறுமையாக இருப்பது பழக்கமாக ஒன்றாகி விடுவதோடு, உணர்ச்சி வயப்படாமல் எதையும் சரியான கோணத்தில் பார்கினற கலையையும் நாம் கற்றுக் கொண்டு விடலாம்.

23 comments:

Priya said...

Patience is something you basically learn with the facts and live with it.

If you can wait, ther is hope and that relates to patience and tolrance of any person.

Senthil said...

நான் பொறுமையாக எண்ணியதில், இந்த பதிவில் 'பொறுமை' 31 முறை வந்துள்ளது. It almost appeared in all alternate lines. என்னிடம் பொறுமையை வளர்த்ததற்கு மிக்க நன்றி ;). இப்பதிவை படித்தபின் மக்கள் கண்டிப்பாக சிந்திப்பார்கள்.

Kumar said...

/ஆனால், நமக்கு பிடிக்காத விஷயமாக இருந்தாலும், பிடித்த நபர் செய்யும் போது, எங்கே இருந்து திடீரென்று நமக்கு பொறுமை வருகிறது/

நல்ல கேள்வி! Theory of Relativity is second nature to Homo Sapiens:)

/காலப்போக்கில், பொறுமையாக இருப்பது பழக்கமாக ஒன்றாகி விடுவதோடு, உணர்ச்சி வயப்படாமல் எதையும் சரியான கோணத்தில் பார்கினற கலையையும் நாம் கற்றுக் கொண்டு விடலாம்./

a tough but worthy goal.

Ashok said...

True is that patience is a virtue and frankly it has helped in attaining lot of peace when I place myself detached and indifferent to things which might bother me sometimes.

This is one post of yours which I feel lost some of its intensity as the verses slowly migrated. My honest and humble opinion on your notes is that some where there is a contemplation with yourself on where to draw the line on being patient and talking something about the event which according to some one might be wrong. That seem to have reflected in this. I accept the concept of being patient but the writing did not substantiate some of those points with firm grip over the subject. I would say that not being aggressive and still put forthing the opinion in the nicest way possible is a controlled patience which I feel would assist in having peace and still having your opinion voiced over. Correct me if I am wrong.

Lakshminarasimhan.V said...

Hi Sowmya,

Thanks for stopping by! Maintaining 1 blog itself I drink water more....hmm 4 good keep up!

Sowmya said...

hi priya,

Nice to see you after a gap. :)

--

hi senthil,

Porumai pathivai porumaiyaaga padithu, miga porumaiyaga, pathil alithu, en porumaiyai perumai aakkiyamaikku en nadrigal pala :)

Sowmya said...

hi kumar,

Thanks for the feedback :)

Sowmya said...

hi ashok,

Nice to see ur comments :)

\\"This is one post of yours which I feel lost some of its intensity as the verses slowly migrated. My honest and humble opinion on your notes is that some where there is contemplation with yourself on where to draw the line on being patient and talking something about the event which according to some one might be wrong. That seem to have reflected in this."//

Can you pinpoint or explain where i missed? :)

\\"....but the writing did not substantiate some of those points with firm grip over the subject...

controlled patience which I feel would assist in having peace and still having your opinion voiced over. Correct me if I am wrong."//

Hey..can u plz elaborate your point.

I am eager to know :)

Sowmya said...

Hi lakshminarasimhan,

Welcome to my blog. :)

Appo daily thanni kudichu kudichu than unga post podareengala :P

Ashok said...

What can we say as patience? If some one is deliberately trying to push you off the limits, how far can you go to tolerate it? And say if you snap off, is it worth it? My thoughts are is to convey somethings nicely. May be some one does it without any real intent of hurt. This limit is the contemplation I was mentioning about. I guess you had this while you were writing. You surfaced it but did not go in depth into it. And that covers the controlled patience. Which is to be calm and composed explanation. Try to not fuss over our mind and the example of waiting for bus proves it. But it can be extended to people as such. I am not sure whether I explained properly. Let me know if I still confused you :-).

Sowmya said...

hi ashok,

** Try to not fuss over our mind and the example of waiting for bus proves it. But it can be extended to people as such **

I agree with your point.

** If some one is deliberately
trying to push you off the limits, how far can you go to tolerate it?**

So..is it you, to handle or have a control over you or the other one.

Tell me,If you know,some one is deliberately trying to push you off the limits, What is the best way to handle it other than tolerate or react to it.

Expecting a reply for this :)

balar said...

பொறுமையை பற்றி அழகாக ஒரு பதிவை பொறுமையாக போட்டு உள்ளீர்கள்.

என் அன்னை அடிக்கடி என்னை பற்றி கூறும் ஒரு வார்த்தை உன்க்கு பொறுமையே கிடையாதுடா என்பது தான்..நானும் பலமுறை பொறுமையாக இருக்க முயற்சித்து பார்க்கிறேன்.ம்ம்ஹும் பொறுமைக்கே பொறுமை இல்லை எனது பக்கம்..

நீங்கள் கூறுவதுக்கிற்கு நான் எதிர்பதம்..ரொம்ப நெருங்கி பழகியவர்களிடம் பல முறை பொறுமைய இழந்து சிறு விஷயத்திற்க்கு கூட கோபப்பட்டிருக்கிறேன்..ஆனால் புதியவரிகளிடம் பெரிய விஷயத்திற்க்கு கூட பொறுமையை கடை பிடித்திருக்கிறேன்..சில சம்யம் அமைதியாக இருப்பது பொறுமையை வளர்த்து கோபத்தை குறைப்பதறுகு உதவியுள்ளது..

வவ்வால் said...

ஹும் ...

சொல்லுதல் யார்க்கும் எளிதாம் சொல்லிய வண்ணம் செயல்!

என்னாத்த சொல்வேணுங்க... ஊருக்கு மட்டும் உபதேசமுங்கோ ...

Sree's Views said...

Sowms...
U cld'nt have stressed the importance of patience in a better way.
Losing patience is losing control.
But there are times when our emotions take over and then we regret doing something.
The main reason for losing patience is expecting things to go our way. If we are realistic and have a contingent plan ready then , things are under control.

I liked the book "dont sweat the small stuff and its all small stuff"
good post , as usual sowms :)

Sowmya said...

hey balar,

Vanga vanga...enga unga blog:P athai porumaya padika nan ready.seeikiram aarambinga :P

Sowmya said...

hello voval,

yethu.....!

Irappu patri post potta, neenga sethu poyee thane podanum athai nu solra mathiri irukku.neenga solrathu.!

By the by, blog la en porumai pathi eppdi measure pannineenga!

Sowmya said...

Sree,

kada kada nu post padichitu poiteengaloo :P

Ashok said...

Now I do not understand what you are saying :-). Sorry, on the whole my view was it could have been more in depth analysis with people in situation per se. And as the situation I posed on some one deliberately trying to tick you off, it was just an example. Of course I will try to move away from the scenario or may be if at all there strikes a moment of understanding will explain the details of his actions. Over all my view and opinion (which very well might be wrong :-)) is that these kind of analysis is what was missing. Also as I said earlier, did you have this contemplation of the "limit" setting that have been in back of your mind which sub consciously have avoided touching that topic (Oops, I am assuming stuffs which I have no clue off :-D)?

Sowmya said...

hey ashok :)

Come on ! There is no such things as wrong or right. We are just here to share our thoughts what we have as of to our belief. :)

\\ did you have this contemplation of the "limit" setting that have been in back of your mind which sub consciously have avoided touching that topic (Oops, I am assuming stuffs which I have no clue off :-D)? //

hmm may be..(Have I?)

No clue for me too Ha..ha

ok ! Let me think about it and write a post again on this issue :P

Thanks :)

வவ்வால் said...

//Irappu patri post potta, neenga sethu poyee thane podanum athai nu solra mathiri irukku.neenga solrathu.!//

பாடம் நடத்துறாப்போல பதிவு போட்டா அது எப்படினு கேட்கத்தான் செய்வாங்க!

ஒரு பள்ளிகூடத்துல, அரைமணி நேரம் தாமதமா ஒரு ஆசிரியர் வந்தாராம், அவருக்கு பின்னாடி வந்த ஒரு மாணவனைப்பார்த்து நேரம் தவறாமைனா என்னானு தெரியுமானு கேட்டாராம்! :-))

//By the by, blog la en porumai pathi eppdi measure pannineenga!//

கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையானு ஒரு பழமொழி சொல்வாங்க, நான் பலதை சொல்ல முடியும் , ஒரே ஒரு சின்ன உதாரணம்,

தமிழில் தட்டச்சு செய்து பதிவு போடும் உங்களால் தமிழில் பின்னூட்டம்(கமெண்ட்) போட முடிவதில்லை, அதாவது தமிழில் தட்டச்சு செய்யும் அளவுக்கு கூட பொறுமை இல்லை! :-))

இதைப்படித்ததும் பத்திக்கிட்டு வருமே! நான் முகத்துதி செய்வது இல்லை... நினைத்தை சொல்லிடுவேன்! எனவே ...coooool..(படிச்சாலே சும்மா அதிருதுல்ல...)

Sowmya said...

Haha...vovalu..

unga marumozhiya padichu parthu viyanthen..ulla ega patta sarakku irukku nu nenachitu irunthen :P neengala atha yen **** nu adikadi prove panreenga.

Sir, thamizh la than comment appdilam ennaku entha rule um nan vechukarathey illa. ithu thamizh blog, ithula thamizh la comment podappadum nu nan declare pannavum illa

For me, language is a tool to understand one's thought. avlo thaan.

Thamizh engal moochu, thamizh engal pechu, vaazhnthal thamizhkkaga, madinthal thamizh kaga - ithukkaga nan thamizh la ezhuthalaingoo

nan nenaikaren.. ungalukku oru point um kidaikala porumai pathi ezhutha..aana paavam ! etho comment podanum nu asaya irukku. athan etho "porumai" nu word vara mathiri comment pottuteenga..

puriuthu..puriuthu :P

muyarchi thiruvinai aakum !..adutha murai muyalga :P

வவ்வால் said...

ஹெ... ஹெ... பொறுமைனா வீசம் என்ன விலைனு கேட்கிறவங்ககிட்டே இதை எல்லாம் பேசமுடியுமா,பொறுமைனா என்னவென்றே தெரியாது என்பதற்கு உங்கள் பதில் ஒன்றே சான்று! உங்கள் கருத்துப்படி , தமிழ்ல பேசுறது கூட தப்பா இருக்கலாம் :-))

சிலர் இருக்காங்க தமிழ்ல பேசிட்டு இருப்பாங்க , நாம போய் தமிழில் பேசினோம்னா ஆங்கிலத்தில் பதில் சொல்வாங்க, அதான் தமிழ் தெரியுது, புரியுது, அப்பறம் என்னாத்துக்கு ஆங்கிலம் , சும்மா பந்தாவுக்கு :-))


மீண்டும் டென்ஷன் ஆகாமா... cool... இருங்க!

Unknown said...

Just a few parallel thoughts ;)
nothing much to read into them; btw i didn't read the post fully. So the comments might not be too relevant. ;)

ovvovoru manushanukkum oru breaking point irukku!!

Porumai na enna theriyuma? Kovam illaatha maathiri nadikkarathu!

Btw,i think silence and shouting (unavoidable TR influence!!) aren't the only choices we have as our response to irritating situations/ppl. That said, it requires intelligence/creativity to generate other responses. And that explains why we dont come across any diff responses other than the first two. i m reminded of the situation in Anbe Sivam where kamal asks Maddy to count from 10 to 1 closing his eyes and then leisurely punches his nose. ;) more to come