யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!

Wednesday, September 26, 2007

வாழ்க்கை - அர்த்தம் ? (தொடர்ச்சி - II )இனிக்கச் சுவைக்க வேண்டிய வாழ்க்கையை, நாம் ஏன், வாழ்க்கை என்பதே ஒரு குறிக்கோளுக்காகத் தான் என்று உருவகப்படுத்தி, அக்குறிக்கோளை அடைந்து விட்டால், வெற்றி கண்டதாகவும், அக்குறிக்கோளை அடையா விட்டால், தோல்வியை தழுவியதாகவும் ஊர்ஜிதப்படுத்திக் கொள்கிறோம்.

இலக்கு என்பதை வெகு சுலபமாக, அமைத்து விடுகிறோம். அதனை அடையும் வழியைத் தான் வெகு கடினமாக வகுத்துக் கொள்கிறோம். அதற்க்காக போராடவும் செய்கிறோம்.இதே போக்கில் வாழ்வை நாம் அமைத்துக் கொண்டால், அந்த போராட்டம் எப்போதுமே தொடர்வதாகத் தான் வாழ்வு அமையும். ஏனெனில், நமது குறிக்கோள்கள், வாழ்வின் போக்கின் படி மாறிக் கொண்டே தான் இருக்கும். ஒன்றை சாதித்து முடித்த பின், அடுத்தது என்ன சாதிக்க போகிறோம் என்ற மன நிலையே மிஞ்சும். அதற்காக குறிக்கோள் இல்லாமல் இருந்து விடு என்று கூறவில்லை. வாழ்க்கைக்கு என்பதற்க்கு தனியான குறிக்கோள் இருக்கிறது என்று அர்த்தம் கற்பித்துக் கொள்ளாதே என்று தான் கூற விழைகிறேன்.

பின் எப்படித் தான் வாழ்வை எடுத்துக் கொள்வது ? என்ற கேள்வி எழுகிறது ! இல்லையா ! வெகு இயல்பாக, சுலபமாக, பதமாக, இதமாக, எதார்த்தமாக, வாழ்வை எடுத்துக் கொள்ள தெரிந்தாலே, வாழ்க்கை வெகு சுலபமாகிப் போய்விடும்.குழந்தைகளைப் போல.வாழ்வை தம் போக்கில் சுகமாக்கிக் கொள்ளும் ஜீவன்களைப் போல, இருக்க முயன்று விட்டாலே, வாழ்க்கையின் அற்புத சுவை தெரிய ஆரம்பிக்கும். இப்போது ,இன்னது தான் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளை வகுத்துக் கொள்ளாமல், மனம் சந்தோஷத்தில் திளைக்கும் வண்ணம், பிடித்த விஷயங்களை செய்து, பிரயத்தனமே இல்லாமல், தன் விருப்பப்படி வாழக் கற்றாலே, வாழ்க்கை பிரியமாகிப் போகும்.மனதில் எப்போதும் சந்தோஷக் கூத்தாட்டம் கிடைக்கும்.அந்தந்த நிமிடம், வாழும் கலை தெரியும்.

யாருக்காகவோ, எதற்காகவோ நம் விருப்பங்களையும், வேண்டுதல்களையும் நமக்குள்ளேயே அடக்கிக் கொண்டு, எல்லோரும் ஓடிக் கொண்டிருக்கிறார்களே, அதனால் நானும் ஓட வேண்டுமோ என்ற எண்ணத்திலேயே, ஓட ஆரம்பித்து விடுகிறோம். அந்த ஓட்டம், நம் வாழ்வின் இறுதி வரை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். அதற்கு ஓய்வே கிடையாது. இப்படியே தொடர்ந்து ஓடுவதால், கடைசியில் மிஞ்சப் போவது சோர்வே. அச்சோர்வை அடைந்த பின் தான் தெரியும் , நாம் ஏன், எதற்க்காக ஓடிக் கொண்டிருக்கிறோம், அதனால் ஏற்ப்பட்ட விளைவு என்ன என்பது..

மூன்று தாரக மந்திரத்தை அவ்வப்போது நமக்குள் சரி பார்த்துக் கொண்டாலே போதும், வாழ்வு சுலபப்பட்டு விடும். என் விருப்பப்படி, என் வாழ்க்கை போய் கொண்டிருக்கிறதா? வாழ்வின் எல்லா நிமிடங்களிலும், என் சந்தோஷம் கெடாமல் என் வாழ்வை அமைத்துக் கொண்டுள்ளேனா? ஒரு குழந்தையைப் போல் என்னை நான் உணர்கிறேனா? இக்கேள்விகளுக்கு, திருப்தியான பதில்களை உங்களால் கொடுத்துக் கொள்ள முடிந்தாலே, உங்கள் வாழ்க்கை அற்புதமாக, உங்களால் அமைக்கப்பட்டிருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம்.

வாழ்க்கை என்பது ஒரு சூன்யம். ஒன்றுமே இல்லாதது. வெங்காயம் போல. உள்ளே எதாவது இருக்கிறதா என்ற ஆவலோடு தான் அதனை உரிக்க ஆரம்பிக்கிறோம். உள்ளே செல்ல செல்லத் தான், ஒன்றுமே இல்லை அங்கே என்பதை கண்டு கொள்ள நேரிடுகிறது. ஆனால், கண்டு கொண்டு சுதாரிக்கும் போது, நம் வாழ்க்கை முடியும் தருவாயில் போய் விடுகிறது. எத்துணை சீக்கிரம், வாழ்க்கை இவ்வளவு தான் என்பதை நாம் கண்டு கொள்கிறோமோ, அத்துணை சீக்கிரம், வாழ்க்கை சுலபமாகவும், சுவாரஸியமாகவும் ஆகிப்போகிறது.

எனவே, நமக்குள் கற்றறிவு நிரம்ப இருந்தாலும், குழந்தை தனத்தை போக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை வளர்க்காமலும், குழந்தைகளிடத்தில் குழந்தைதனம் மாறாமல் இருக்கவும் நாம் பார்த்துக் கொண்டாலே, வாழ்க்கை எனும் வெங்காயத்தை கண்ணீர் சிந்தி உரித்து, அதில் ஒன்றும் இல்லை என்பது உரிக்காமலேயே தெரிந்து கொள்ள சாத்தியப்பட்டுவிடும். அதனால் நமக்கு மிஞ்சப் போவது , நேரமும், அதனால் ஏற்படக் கூடிய விரையமில்லா வாழ்வுமே.

வாழ முயல்வோமா !

30 comments:

priya said...

யாருக்காகவோ, எதற்காகவோ நம் விருப்பங்களையும், வேண்டுதல்களையும் நமக்குள்ளேயே அடக்கிக் கொண்டு, எல்லோரும் ஓடிக் கொண்டிருக்கிறார்களே, அதனால் நானும் ஓட வேண்டுமோ என்ற எண்ணத்திலேயே, ஓட ஆரம்பித்து விடுகிறோம்.

- Life is itself a movement. You and I are individuals, but how do you survive? Thaz why we form a society, family, relationship so on. Even a saint/ sanyasi doesn't live as an individual alone. He is either surrounded by a group or his followers.

We think by scarificing ourselves you do something great. No you only become a loser of losing your identity by not enjoying who you are. Many parents in India/ other wolrd do think his or her inhibitions can be under-checked to let their childrens grow up. How can that be? Its basically you are imposing certain things on them on how they have to be and not how they want to be.

If you choose lots of things in life, you canot accept life.

குழந்தைகளிடத்தில் குழந்தைதனம் மாறாமல் இருக்கவும் நாம் பார்த்துக் கொண்டாலே

Innocence among kids back home is over matured compared to wat I see. Even till the age of 13/15 many kids are very innocent. But back home, you can see the difference of over maturity and the way they talk like elders.

Childhood innocence is present within us and its up to us to hold it or leave it based on situations.

sk said...

Good one!
Kind of expresses the reason behind the "empty" successes that innumerable people feel. Again, a few golden words of sk: "What we go through is more important than where we end up" ;P

Priya

Well, i dont know a group is really essential for survival. It certainly helps and makes survival easy, but essential? I have my doubts.

//Even a saint/ sanyasi doesn't live as an individual alone. He is either surrounded by a group or his followers.//
In fact, if you ask me, we are really afraid to be "individuals", that is why we seek the comfort of groups - be it in your class gang or nature lovers club or ur religious group. But a saint, i mean a real saint, is not afraid to be alone. It is our fear to be alone that drives us to flock around him just to make ourselves comfortable. And very few of us try to learn how to kill that fear.

//No you only become a loser of losing your identity by not enjoying who you are. //
Quite True.

//If you choose lots of things in life, you canot accept life.//
You mean we should not choose? But again, isn't "not choosing" also a choice? Visu pada dialogue mathiri aagiduchu ;)

//Innocence among kids back home is over matured compared to wat I see. //
I think maturity is loss of innocence. Please correct me if wrong.

Kumar said...

//எல்லோரும் ஓடிக் கொண்டிருக்கிறார்களே, அதனால் நானும் ஓட வேண்டுமோ என்ற எண்ணத்திலேயே, ஓட ஆரம்பித்து விடுகிறோம்.//

I guess the following passage makes good contribution here:

Does it matter whether we succeed or fail in the world? It will matter to you so long as you haven't realized your inner purpose. After that , the outer purpose is just a game that you many continue to play simply because you enjoy it. It is also possible to fail completely in your outer purpose and at the same time totally succeed in your inner purpose. Or the other way around ,which is actually more common : outer riches and inner poverty , or to " gain the world and lose your soul ," as Jesus puts it. Ultimately , of course every outer purpose is doomed to "fail" sooner or later , simply because it is subject to the law of impermanence of all things. The sooner you realize that your outer purpose cannot give you lasting fulfillment, the better. When you have seen the limitations of your outer purpose, you give up your unrealistic expectation that it should make you happy, and you make it subservient to your inner purpose - Eckhart Tolle from the Power of Now .
(Thanks to http://dailyspiritualmessage.blogspot.com)

I feel that when our life is lived on terms of "inner purpose" then life is nolonger a struggle. It becomes serene and one should feel inner fulfilment. I can only guess because I am far far away from there!

Sowmya said...

hey kumar,

Nice comment :)

##I can only guess because I am far far away from there!##

With the Guess , it already lifted you up and you crossed three forth of the well :)

priya said...

Sk,
I think maturity is loss of innocence..

Thanks for correcting me here. Sometimes loss of words do create a problem when we write. Well mind is empty at times u know.

If you choose lots of things in life, you cannot accept life.
- I said when too many things come before us, we cannot accept it. As u said choices are what? Its basically you choose what you want isn't it. When we try to choose, we limit things. If its undefines such as unlimited choices, its not the ultimate result.

Did I get u ther to say something??

Sowmya said...

Hey priya,

Welcome :)

## I said when too many things come before us, we cannot accept it. As u said choices are what? Its basically you choose what you want isn't it. When we try to choose, we limit things. If its undefines such as unlimited choices, its not the ultimate result.##

Choice should be according to your taste and wish.Isnt it..Then how can you say, by choosing we limit things.

if one has the clarity of what he/she wants, then why the need for the confusion of too many things.

Anonymous said...

Kuppan_2007 says

Nice posting, well done, keep it up.

when all chatters open/create blogs with a objective to get popularity, it is nice to see a person who created blog for real& permanent happiness.

As you said we should see/live the life as it is.

But one view is if you do not have objectives/targets, laziness may come.

naama virumbura maadri velai or manaivi or kuzandhaigal or nanbargal amaiyaatha podhu enna panna, Irukkuradha vachu vaazndukrom (pudikkutho pudiklayo).

Writer S.Ramakrishnan once said , oru manidhan than aasaiayai/ viruppathai adya mudiaythunnu tericnhu andha viruppathai konnuttu, irukkartahi vachu vaazvadhu miga kodumayaana visayam.

But one this is clear, we cant blame others or environment. it is we, I who determines my life. Life is based on my reactions to the situations.

innum oru sirandha posting ai edhir paarthu kaathu irukkum
Kuppan_2007

Sowmya said...

hi kuppan,

வணக்கம். தங்கள் எழுத்துக்களுக்கு என் நன்றி.

## But one view is if you do not have objectives/targets, laziness may come. ##

முற்றிலும் உண்மை

என் வாழ்க்கை இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு இருப்பவனின் சங்கடம் அது தான்.
வாழ்வு போகும் போக்கில்,போக முடியாது அவனால்.தனக்கென்று சில கொள்கைகளையும், சில கட்டுப்பாடுகளையும் வைத்துக் கொண்டு, தன் வாழ்க்கையை அதைச் சுற்றியே அமைத்துக் கொள்ள முயலும் போது, வாழ்க்கை என்ன என்ன அளிக்கிறதோ, அதை எல்லாம் ஏற்று,அவனால் வாழ முடியவதில்லை. ஆனால,் தான் அமைத்துக் கொண்ட வாழ்வில் ஒரு திருப்தியை அவனால் நிச்சயமாக காண முடியும்.

நான் பதிவில் கூறியிருந்தது போல " நம்மில் பலருக்கும், வாழ்க்கை திருப்தி அளிக்கும்படியே இருக்கிறது. எப்படி? வாழ்வை பிரச்சனையாக நினைத்து, அப்பிரச்சனைகளை தீர்த்து வைக்க முயன்று , அதில் வெற்றி காணும் போது ஏற்படும் திருப்தி தான், வாழ்வு தரும் ச்ந்தோஷமாக நம்மால் உணரப்படுகிறது. இந்த நிலையில் தான் சந்தோஷம் என்பதை நாம் கண்டு கொண்டிருக்கிறோம். வாழ்க்கையை நாம் அணுகும் முறை பெரும்பாலும், இப்படித்தான் இருக்கிறது.வயது முதிர முதிர, நமக்கு,இப்படித்தான் வாழ்வை அணுக வேண்டும் என்ற முறை சமுதாயத்தால் கற்பிக்கப் படுகிறது."

குறிக்கோள் என்பது வைத்துக் கொள்ளும் போது, அதற்கென்று சில விதி முறைகளையும், கடின உழைப்பையும், மேலும் நிரம்ப எதிர்ப்பார்பையும் வைத்துக் கொண்டு தான் மனிதன் வாழ்க்கையோடு போராடி தான் , அக்குறிக்கொளை நிறைவேற்றிக் கொள்கிறான். அப்ப்டிச் செய்வதை தான், சமுதாயம் அவனுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. நாளை என்பது என்ன என்பது தெரியாது, ஆனால், அவனது குறிக்கோளை அவன் நிறைவேற்றியாக வேண்டும் என்ற நிலை.துணிகிறான்.வாழ்வு போகும் போக்கு, அவனுக்கு சாதகமாகப் போனால்,அவன் நிலையில் அவன் வெற்றி காண்கிறான்.அவ்வெற்றி தன்னால் தான் என்ற மன மகிழ்வும், நிறைவும் கொள்கிறான். இப்படித் தான் பெரும்பாலோருடைய வாழ்க்கைப் போய்க் கொண்டிருக்கிறது. வெற்றி கண்டால், நிம்மதி.சந்தோஷம். தோல்வியானால்? விரக்தி, வெறுப்பு.என்னடா...இந்த வாழ்க்கை என்ற் அலுப்பு, உற்சாகம் குறைவு. ஏனெனில், அத்துணை பிரயத்தனப் பட்டு, கடின உழைப்பை, தன் குறிக்கோள் வெற்றி அடைய அவன் மூலதனமாக போட்டிருக்கிறான்.இது ஒரு வழி.

மற்றொரு வழி. குறிக்கோள் என்று பெரிதான கனவை வளர்க்காது, வாழ்வு தருவதை ஏற்று சீராக போய்க் கொண்டிருக்கும் நிலை.இதில் சங்கடம் என்று எதுவும் இல்லை. முக்கியமாக, பதட்டம் என்பது இல்லை.கடின உழைப்பு இல்லை. கடின உழைப்பு இல்லாததால், அதன் பலனை எதிர்பார்க்கும் நிலை இல்லை.எது எப்படி நடந்தாலும், எனக்கு சரி தான் என்ற மன நிலை. கண்டிப்பாக சோம்பேறித்தனம் தாண்டவமாடத்தான் செய்யும். நிதானம் சம்பவிக்கும். ஆவேசம் இருக்காது.வெறும் அமைதியே ஆர்ப்பரிக்கும். ஒரு வகையில் வாழ்வை வெல்லும் ரகசியம் கூட இது தான் என்று சொல்ல முடிகிறது. ஆனால், இதே மன நிலையில் எல்லோரும் இருக்க இயன்றால், இத்தகைய நிலையில் உள்ளோரை புரிந்து கொள்ள முடிகிறது. மற்றவர் முழு வீச்சில் ஓடிக் கொண்டிருக்க, இவன் நடக்கவே அடி, அடியாய் எடுத்து வைத்துக் கொண்டிருப்பது,மிகவும் முரண்பாடாய் தான் தெரியும்.

யாருக்கு என்ன வேண்டும் வாழ்க்கையில், என்பதைப் பொறுத்து தான், இவ்விரண்டு வழிகளில் , சிறந்த வழியை ஒருவன் தேர்ந்தெடுக்க இயலும். நீங்கள் கூறியது போல, அவரவர் வாழ்க்கை, அதை எப்படி சீர்பட அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை அவரவர் தானே முடிவு செய்ய முடியும். எவ்வழியிலும், ஆனந்தமாக அவன் வாழ்க்கை இருக்கிறதா? இது ஒன்று தான் கேள்வியே. தன்னை சங்கடபடுத்திக் கொண்டு சந்தோஷம் காண்பதும், சங்கடமே இல்லாமால், சந்தோஷம் காண்பதும் அவரவர் கையில் தானே !

தத்துவம் சார்ந்த பதிவிற்க்கு தங்கள் ஆதரவு கண்டு உவகை அடைகிறேன். நன்றி :)

Sowmya said...

hey sk,

Have i replied for ur comment ?? !*#
(sutham ! i think , i have some prob with my memory chip :P)

##
Again, a few golden words of sk: "What we go through is more important than where we end up" ;P ##

Gurubyo Namaha !! :P hehe..

sk said...

//Its basically you choose what you want isn't it. When we try to choose, we limit things.//

Well, even if we don't choose we limit things. Probably u didn't understand my statement: "not choosing" is also a choice. Both 'choice' and 'no choice' are 'your' decisions. The only difference is that when 'you' choose, the choice is 'yours'. Obvious, right? And 'Your choice' needs you to accept the responsibility for whatever you choose. That is exactly why people avoid making choices and then blame fate. To me, fate is nothing but not choosing.

//If its undefines such as unlimited choices, its not the ultimate result.//

Can you please make it a bit clearer?

sk said...

Sowmya

seekiram system upgrade pannunga!!

//Gurubyo Namaha !! :P hehe..//
inimel en shishyakedinga gumbal perusayidum pola irukke.. ;P

Kumar said...

//தன்னை சங்கடபடுத்திக் கொண்டு சந்தோஷம் காண்பதும், சங்கடமே இல்லாமால், சந்தோஷம் காண்பதும் அவரவர் கையில் தானே ! //

Absolute gem!

ஒவ்வொரு போஸ்ட்டுக்கும் கமெண்டிற்கும் இவ்வளவு விரிவாக யோசித்து எழுதுகிறீர்களே! ஸ்வரராகசுதாவிலும் கலக்கறீங்க!

எப்படி manage செய்கிறீர்கள்?

Sowmya said...

Haha..sk...avlo kashta padareenganna, pavama irukku..pona poguthu.pozhachu ponga ! :P

Sowmya said...

hi kumar,

Post potte aaganum nu yosikarathu illa.Thonichunna than ezhuthave varum. nadu raathiri kooda thonum , udane type panna vendiathu than. :)

Padarathum appdi than :)

Anonymous said...

Kuppan-2007 says:

Hi Sowmya

Post potte aaganum nu yosikarathu illa.Thonichunna than ezhuthave varum. nadu raathiri kooda thonum , udane type panna vendiathu than

Idhuthan ore sirandha vazmurai.

Balakumaran, Sujatha, Ilayaraja kooda ippadithaan. Thoniya udan andha paniyai seidhu viduvaargal.

Oru vagaiyil paarthal posting poduvathu kooda oru miga sirandha samooga sevai. 4 manidarkalukku nalla sindanai valara uram iduthal.

Enakku ulla varutham Bharathi, Balakumaran ellam 40 varudam talli pirandhu irukkalam.

Bharathi ippodhu vaazndhu kondu irundhaal indha internet yugathil 1 puratchi erpaduthi iruppan.

Nenjarntha vaazthukkaludan

Kuppan_2007

Sowmya said...

kuppan,

:)

pria said...

Sk,

When I comeback after a little back, I even forget for what I wrote. If I remember will get back to u ok.

Ooopsy.

sk said...

priya

Np at all! Btw, neenga solratha paatha ungala paathu thaan Ghajini eduthaangannu solveenga pola!! ;)

anywy, if at all u come to remember, i would be more than eager to continue further.

priya said...

Sk, U r unbelievable!!! If u r ot choosing, then why talk about choices huh.

When u r unable to define what you want it gets unlimited and it leads too many choices.


Sowmya,

I said choosing sometimes leads to certain limits coz, in life not every is able to get what they want and its limited with self sacrifice or just for the time being.

Sowmya said...

hi priya,

Will you tell me" what is sacrifice>?" :)

pria said...

Sowmya,


Its more like you wanna drink water, but you don't fill it up and leave empty.

Hope you got it what I meant.

Sowmya said...

hey priya :)

## Its more like you wanna drink water, but you don't fill it up and leave empty. ##

So,that means, if a person who is doing anything in the name of sacrifice, where he dont feel the contentment.

Isnt it ?

sk said...

Priya
//If u r not choosing, then why talk about choices huh. When u r unable to define what you want it gets unlimited and it leads too many choices.//
I think a major clarification is in order. I never said i dont choose. In fact, i indicated just the exact opposite - the impossibility of a 'no choice'.

To put it in very simple terms, just consider our exchange for example. At this moment, I can choose to answer your question. Or not. But not answering is also a choice. Right? There is nothing called 'no choice'. When we say we are " not choosing", all that we mean is "others will choose". Essentially WE "choose" to let the others choose. Not choosing happens only when we die. Now your choice - to comment or not to ;)

pria said...

SK,

A very simple answer:

I go wit ya. Thanks for the clarification.

pria said...

Yes indeed Sowmya.

Sowmya said...

hi priya,

Thanks for the comment. I will write a post on it. :)

sk said...

Priya
Most welcome. I really enjoyed the exchange; helped me think deeply. Hope you too enjoyed it too.

priya said...

Sowmya,

When is ur next post coming girl? Haven't replied for luck yet? I think many have conributed and I have nothing to say now. May be when I feel my mind works, I can go with it.

priya said...

No problem at all SK. We network only to know or learn more isn't. Thanks for sharing from your side too.

Sowmya said...

hi priya,
I can do my next post after a week. Now, I'm on tour. See u soon :)