யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!
Monday, September 24, 2007
வாழ்க்கை - அர்த்தம்? ( தொடர்ச்சி - I)
நீண்ட கால அவகாசம் எடுத்தமைக்கு மன்னிப்பை கோருகிறேன்.எதிர்பாரத விதமாக அவகாசம் எடுக்க வேண்டியதாயிற்று.தங்கள் பொறுமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்:)
வாழ்க்கை - இதன் நோக்கம் என்னவாக இருக்க முடியும். வாழ்வது தான் வாழ்க்கை. அவ்வளவாக மட்டுமே அதன் நோக்கம் இருக்க முடியும். ஆனால், நமக்கோ வாழ்க்கை என்பது தீர்த்து வைக்கும் பிரச்சனையாகவும், பிறப்பெடுத்ததே அதற்க்காகத்தான் என்பது போன்ற நோக்கம் கற்பிக்கப் பட்டது போல ஒரு உணர்வு தோன்றுகிறது.அல்லல் படுவதும் வாழ்க்கை என்பதும் தனித்தனி சொற்கள் இல்லை என்பது போலத் தான் வாழ்க்கை போய் கொண்டிருக்கிறது.
எந்த நோக்கத்திற்க்காக நாம் பிறப்பெடுத்தோம் என்ற கேள்வி எல்லோர் மனதையும் தொடாமல் விட்டதில்லை. அர்த்தம் என்பது எல்லாவற்றிக்கும் இருந்தே ஆக வேண்டும் என்ற கட்டாய மனப்போக்கோடு நம் அணுகு முறை, எல்லா விஷயங்களிலும் இருப்பதினாலேயே, வாழ்க்கை என்பதும் ஒரு நோக்கத்திற்க்காக உண்டாக்கப் பட்டதாக நமக்கு எண்ணத் தோன்றுகிறது. சொல்லப் போனால், தத்துவார்த்தமாக வாழ்க்கையைப் நோக்கினால், அவரவர்க்கு ஏற்ற எண்ண வீச்சிற்க்கும், நம்பிக்கைக்கும் ஏற்ப வாழ்க்கைக்கு அர்த்தம் என்பது ஏற்படுகிறது. ஆனால் ஆன்மீக ரீதியில் வாழ்க்கையை உற்று நோக்கினால், வாழ்க்கைக்கு வாழ்வது என்பதைத் தவிர வேறு எந்த அர்த்தமும் இல்லை என்பது புலனாகும்.
வாழ்க்கையை அது போகும் போக்கில் சென்று வாழ்ந்து அனுபவி - இது மட்டுமே தாரக மந்திரமாக கொண்டு வாழ்பவனிடத்தில், வாழ்க்கை என்பதற்க்கு அர்த்தம், சுவையானதாக மட்டுமே இருக்க முடியும். ஆனால், அப்பொழுதும், அதற்கு இன்னது தான் அர்த்தம் என்பதை அவன் தெரிந்து, வாழ்க்கையை வாழ ஆரம்பித்தான் என்று சொல்ல முடியாது. எவ்வித அர்த்தமும், நோக்கமும் கற்பிக்கப் படாமல், வாழ்க்கை எப்படி செல்கிறதோ, அதன் வழியே சென்று அதை முழுதும் சுவைத்து அனுபவிக்க மட்டுமே அவன் கற்றுக் கொண்டு வாழ்கிறான் என்று தான் கூறமுடியும்.
நம்மில் பலருக்கும், வாழ்க்கை திருப்தி அளிக்கும்படியே இருக்கிறது. எப்படி? வாழ்வை பிரச்சனையாக நினைத்து, அப்பிரச்சனைகளை தீர்த்து வைக்க முயன்று , அதில் வெற்றி காணும் போது ஏற்படும் திருப்தி தான், வாழ்வு தரும் ச்ந்தோஷமாக நம்மால் உணரப்படுகிறது. இந்த நிலையில் தான் சந்தோஷம் என்பதை நாம் கண்டு கொண்டிருக்கிறோம். வாழ்க்கையை நாம் அணுகும் முறை பெரும்பாலும், இப்படித்தான் இருக்கிறது.வயது முதிர முதிர, நமக்கு,இப்படித்தான் வாழ்வை அணுக வேண்டும் என்ற முறை சமுதாயத்தால் கற்பிக்கப் படுகிறது.
பிறந்த குழந்தையாக இருக்கும் போது, நாமே வாழ்வாகத்தான் பிறக்கிறோம். அத்துணை சக்தியோடு தான் நாம் இருக்கிறோம். நம்மில் இருக்கும் அந்த சக்தியை எந்த வித தடைகளுமின்றி செயல்படுத்தி ஆனந்தம் கண்டோம். காரணமே இல்லாமல் துள்ளிக் குதித்து மகிழ்ந்ததும் அதனால் தான். காரணம் வெகுளித்தனம்.வயதாக ஆக, எப்போது, வாழ்வை வாழ வேண்டும் என்ற விழிப்பு நமக்குள் நேரிடுகிறதோ, அப்படி இருத்தல் தான் வளர்ச்சியின் அறிகுறியாக நாம் முறைப்படுத்தி கொண்ட பட்சத்தில் வெகுளித்தனம் மறைந்து புத்திசாலித்தனம் மேலிட ஆரம்பிக்கிறது.
ஒன்றை இங்கு புரிந்து கொள்ள வேண்டும், வெகுளித்தனம் மட்டுமே வாழ்வை அதன் போக்கிலேயே சென்று வாழ வழி வகை செய்ய முடியும். விஷய ஞானம் அளிக்கும் புத்திசாலித்தனம் தான், வாழ்க்கையை கடினப் படுத்தி, சுலபமாக வாழ வேண்டிய வாழ்க்கையை, கடினமான பாதையாக மாற்றிக் கொண்டிருக்கிறது. வேகுளித்தனம் மிகுந்தவர்களின் வாழ்வு, நிச்சயமாக புத்திசாலித்தனம் மிகுந்தவர் வாழ்வை விட சிறப்பாகத்தான் இருக்க முடியும்.
அதனால் தான் வெகுளித்தனம் மிக்க குழந்தைகளால், வாழ்வை அத்துணை மகிழ்ச்சியோடும், ஆனந்தத்தோடும் சிறக்க வாழ் முடிகிறது. எப்போது, வெகுளித்தனத்தை , முற்றிலும் போக்கி, புத்திசாலித்தனத்தை மனம், அடைய முயல்கிறதோ, அப்போதே வாழ்வின் உண்மையான சுவை, வேறு விதமாக மாற்றப்பட்டு, இது தான் வாழ்க்கையின் சுவை என்று நமக்கு நாமே வகுத்துக் கொண்டு, நாம் வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறோம். இது முற்றிலும் இயற்கைக்கு முரணானது. எது ஒன்று இயற்கைக்கு முரண்பட்டு நிற்கிறதோ, அது நிச்சயமாக பலவீனமானதாகவும், நிரந்தரமில்லாததாகவுமே இருக்க முடியும். மாயை என்பதும் இது தான். இருப்பது போல இருக்கிறது. ஆனால், இல்லாததாகத் தெரிகிறது. வாழ்க்கை என்பது பல நேரங்களில் கசந்து போவதற்கு காரணம்,சில சூழ் நிலைகளில், அந்த எதார்த்தத்தை மனம் உணர்ந்து திரும்புதல் தான்.
( பதிவு நீண்டு விட்ட காரணத்தால் , அடுத்த பதிவில் தொடரலாம் என்று நினைக்கிறேன் )
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
kuppan_2007 says:
It looks like upanishad concepts where it is said that life is to be enjoyed as it is and it should not be objective oriented.
Even Osho said same thing that Niravana of brain is required.
But in today's materalistic life, we value humans who earned wealth or who studied well.
So to run the daily life we fix objectives, ragets and run behind those targets.
Kuppan_2007
Agreed. We are conditioned not to be "free with ourselves" while children have that freedom.
That said, that apparent "freedom" of the child is a lot fragile, easily corruptible. It is only a matter of time before it is killed by the society. But the "child like" quality that one gets after "the arrival", out of consciousness is totally different and long-lasting.
Related thoughts at
http://sk-ism.blogspot.com/2007/09/dump-ur-memories.html
hello kuppan_2007,
Welcome to this blog :)
\\**But in today's materalistic life, we value humans who earned wealth or who studied well.
So to run the daily life we fix objectives, ragets and run behind those targets.
**//
Is it a general statement?
or
you just said about the practical difficulty, people have, to view the life as i said in my post
hey sk,
Finally you agree with my point :P
(Wow ! wheres my collar !!!)
{** But the "child like" quality that one gets after "the arrival", out of consciousness is totally different and long-lasting.**}
Very much true :)
I'm happy to receive such comment :)
//(Wow ! wheres my collar !!!)//
I tried to FedEx it. but the pity s that FedEx itself doesn't have any service to your little town? it seems ;P
So you gotta wait for some time till i find some way to reach there ;)
HaHa..Sk..
moorthy sirusanalum keerthi perusu nu solreengalo :P
Danksu ! :P
"வெகுளித்தனம் vs புத்திசாலித்தனம்"
நல்ல அலசல்! சேனல் காரர்கள் யாராவது உங்கள் ப்ளாகைப் படித்தால் வரும் தீபாவளிக்கு இதைப் பட்டி மன்றத் தலைப்பாக்கி விடுவார்கள். சீக்கிரம் காப்பிரைட்டெல்லாம் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.
"சுலபமாக வாழ வேண்டிய வாழ்க்கையை, கடினமான பாதையாக மாற்றிக் கொண்டிருக்கிறது"
நன்றாகச் சொன்னீர்கள்!
Something like I was born intelligent till education spoiled me :)
Very good.
hi kumar,
{*தீபாவளிக்கு இதைப் பட்டி மன்றத் தலைப்பாக்கி விடுவார்கள்.சீக்கிரம் காப்பிரைட்டெல்லாம் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.*}
hmm..athulayum veguliya illama , puthisalithanama pozhachukonga nu solreengala :P
{*Something like I was born intelligent till education spoiled me :)*}
Apt statement :)
//hmm..athulayum veguliya illama , puthisalithanama pozhachukonga nu solreengala :P//
சௌம்யா, கண்டிப்பா நீங்க புத்திசாலிதான் :P
kumar,
pochu ponga ! appdiya theriaren. iayyao ! ennaku vename athu :)
சரி, சரி, சௌம்யா, கொடுத்த பட்டத்தை திருப்பி வாங்கிக்கறேன்.
நீங்க வெகுளியாகவே இருங்க!
யார் எப்படி கமெண்ட் எழுதினாலும் கிண்டலே செய்யற மாதிரி இருந்தாலும் மிகவும் நேர்க்கோட்டில் அமைதியாக பதில் கமெண்ட் எழுதுகிறீர்களே, அதிலிருந்தே நீங்க வெகுளி தான் எனப் புரிகிறது!
அது சரி,புத்திசாலித்தனத்தைப் பார்த்து இவ்வளவு பயம் எதற்கு? களவையும் கற்று மறப்பது தானே நம் பண்பாடு?
haha..kumar...unmai unmai...
Katren..maranthu vitten :P
athu than thirumba vendam endra pathattam :)
Post a Comment