யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!
Saturday, September 8, 2007
வாழ்க்கை - அர்த்தம்?
"வாழ்வே மாயம்..இந்த வாழ்வே மாயம்..
என்னடா பொல்லாத வாழ்க்கை..
வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம்..
மேற்கூறிய பாடல்கள் எல்லாமே வாழ்க்கை என்பது இப்படித் தானோ என்பதை சுட்டிக்காட்டும் வண்ணம் சித்தரிக்கப் பட்டிருக்கின்றன. பாடல்கள் மட்டுமல்லாது, வாழ்க்கை என்பதே ஒரு நோக்கத்திற்க்காகத் தான் பிறப்பிக்கப் பட்டிருக்கிறது என்று தான் ஆதி முதல் அந்தம் வரையிலான, நமது புராணங்களும், இதிகாசங்களும் சொல்லி வந்திருக்கின்றன.
வாழ்க்கை என்பதன் குறிக்கோள் என்ன? வாழ்க்கையில் எதை நாம் தேடுகிறோம்? நம் பிறப்பின் பலன் என்ன?எதை சாதிக்க நாம் பிறந்தோம்? - இத்தகைய கேள்விகள் தொட்டுச் செல்லாத துடிப்புள்ள மனங்கள் குறைவு. அவரவர் சூழலுக்கேற்ப்வும், ஏற்றுக் கொண்ட நம்பிக்கைக்கு ஏற்பவும், நாம் இத்தகைய வினாக்களுக்கு தத்துவ ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் விளக்கங்களை தேடி,அவ்விளக்கங்களில்,சிலவற்றிக்கு உடன்பட்டும், சிலவற்றிற்கு உடன்படாமலும்,மேலும் சிலவற்றிக்கு, குழம்பி தத்தளித்துக் கொண்டிருக்கிறோம்.
சரி..இது போன்ற கேள்விகள் எப்போது எழுகின்றன. அறிவின் தாக்கத்தை அறியும் வயதில் தான் இது போன்ற கேள்விகளும், தேடல்களும் அரும்ப ஆரம்பிக்கின்றன. கூர்ந்து கவனித்தோமேயானால், இவ்வகையான தேடல்களுக்கு முன் , நாம் எப்படி இருந்திருக்கிறோம்?. அதாவது, நம் குழந்தை பருவத்தில் நாம் எப்படி வாழ்வை எதிர் நோக்கியிருக்கிறோம் என்று சிந்தித்தால், எல்லோருக்குமே அதற்குண்டான விடை தெரியும். சின்ன வயசுல, நான் எவ்வளவு அற்புதமாக வாழ்கையை வாழ்ந்திருக்கிறேன் தெரியுமா..? என்று தான் பெரும்பாலும், சிறு பிராய வாழ்க்கையை ரசித்து கூறுபவர்கள் இருக்கக் கூடும். இது ஏன்? அத்தகைய வயதில் நமக்கு நிகழ்ந்தவை என்ன?
சிலர் கூறுவர் - " அந்த வயசுல..பெருசா பொறுப்புன்னு எதுவும் இல்ல.." ;
"எதெல்லாம் ரசிக்க முடியுதோ..சந்தோஷம் தருதோ..அதை எவ்வித தயக்கமும்மின்றி அந்த வயசுல பண்ண முடிஞ்சது.." - இது மற்றொருவரின் விளக்கம்.
இவ்வாறு நிறைய காரணங்களை நாம் சொல்லிக் கொண்டே போகலாம். சிறிய வயதில், அறிவை பெரிய அளவில் வளர்க்காத வயதில், நாம் கண்ட இன்பத்தை, சிறுவயதைக் கடந்து, அறிவை பெறுக்கி, வாழ்க்கை என்பதற்கு அர்த்தம் என்ன என்பதை அறிய விழையும் வயதில்,நம்மால் காண முடிகிறதா..? காண முடிகிறது என்றால் ஏன்?..காண முடிவதில்லை என்றால், ஏன் காண முடிவதில்லை?
சரி..! கருத்துப் பரிமாற்றத்திற்காக இப்பதிவை இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். தங்கள் , கருத்துப் பகிர்தலோடு மேலும் தொடரலாம் என்று நினைக்கிறேன். :)
Labels:
நம்பிக்கை,
வாழ வா,
வாழ்க்கை,
வாழ்க்கை அர்த்தம்,
வாழ்க்கைப்பயணம்,
வாழ்வது
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
sowmya, மேலும் இந்த பதிவை தொடர போவதாக சொல்லி இருக்கிறீர்கள்..மீதியும் தொடர்ந்த பிறகு எனது கருத்தை பகிர்தல் கொள்கிறேன்..
எல்லாம் missiles பயம்தான் ஒரு காரணம்..:))
A few points:
1. I think past is in general sweet for most of us. Also there is that இக்கறைக்கு அக்கறைப் பச்சை - many young (e.g. teens) wish they were adults because they are attracted to the (seeming) "freedom" while they feel they are shackled.
2. When we were young our "worries" were taken care off. We had protectors left and right to take care of our needs - small and big (actually I think perhaps this is one source of the selfishness that haunts us for the rest of our lives :) ? )
3. However, we did not relax because we knew that. I think there was an innate sense of "worry-free", "care-free" attitude. We took pleasure in the simplest of things when we were very young. As we grow older, our needs also grow and we cannot anymore take pleasure in "simple things".
4. Perhaps the best attitude we had when we were young is "forgetting our troubles" immediately. Baby cries because it doesnt have X. You show it Y and suddenly it is very happy not remembering again that it couldnt get X. The same thing applies to happiness - the smallest babies have no "possessiveness". We as adults usually cannot do this. The ability to "forget ups/downs", is perhaps the important ingredient in the happiness, care-free attitude we see in babies.
Don't know if that made sense or if that is what you were looking for
hey balar,
\\sowmya, மேலும் இந்த பதிவை தொடர போவதாக சொல்லி இருக்கிறீர்கள்..மீதியும் தொடர்ந்த பிறகு எனது கருத்தை பகிர்தல் கொள்கிறேன்..//
I am curious to know :)
\\ எல்லாம் missiles பயம்தான் ஒரு காரணம்..:))//
As i said in my earlier post, I find, it is a nice way of sharing the views. According to me, there is no apt answer for a question like "life". We tend to dig it and feel it depends upon our belief what we had and conditioned for long years.
One more possibility is also there. You people may feel, that I am trying to give a better answer, after i know all your views. I like to give you these kind of questions, to know how you feel about it for all these years or I am just trying to excavate as much as possible replies. So that, we can have a different views and ideas for a single knot. Nothing more than that.
Infact, neenga ennoda views aa sollita nan than mela ezhutha mudiama thinaranum :P
so neenga unga missile aa kaila edunga balar :)
hey arun :)
"\\Don't know if that made sense or if that is what you were looking for //"
Ithu thane venam...Why you people are so humble :)
(adutha post ku matter ready :P)
"\\ I think there was an innate sense of "worry-free", "care-free" attitude. We took pleasure in the simplest of things when we were very young. //"
"\\We as adults usually cannot do this. The ability to "forget ups/downs", is perhaps the important ingredient in the happiness, care-free attitude we see in babies.//"
Wonderful points :)
When we were kids we had the freedom to do anything. But when you grow up, ur every action is scrutinized and u keep giving reasons for it.
eg. If u r old & if u like to play in a swing, u r mocked at. So u have to control ur wishes and do what others expect u to do.
If we can follow what our siddhars have said (don't care about opinions of others - which is again difficult) u can lead a happy life.
We have to understand that we cannot satisfy everyone.
குழந்தை ஞானி இந்த இருவரை தவிர இங்கே சுகமாய் இருப்பவர் யார் காட்டு ?
இ-கலப்பை என்ற இந்த தமிழ் ஒருங்குறி தட்டச்சு மென்பொருளை(unicode tamil typing software) கீழ்கண்ட இணையப்பக்கத்தில் தரவிறக்கி(download) கொண்டு உங்கள் கணினியில் நிறுவிக்கொண்டால், இணையம் இல்லாத நேரங்களிலும் , எம்.எஸ்.ஆபிஸ், நோட் பேட், வலைப்பதிவு என எதிலும் தமிழில் தட்டச்சு செய்யலாம்.
http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3
நிறுவிய பிறகு , புரோகிராம் பட்டியலில் கீ மேன் என்ற ஐகான் வரும் அதனை இயக்கினால், டாஸ்க்பாரில் k என்ற ஐகான் தெரியும், தமிழ் தட்டச்சு செய்ய alt+2 அமுக்கினால் ,அது உடனே "அ" என மாறிவிடும்.தமிழில் இயங்கும். மீண்டும் ஆங்கிலம் மாற alt+1 அமுக்கினால் போதும்.
//வாழ்க்கை என்பதற்கு அர்த்தம் என்ன என்பதை அறிய விழையும் வயதில்,நம்மால் காண முடிகிறதா..? //
அங்கே தாங்க பிரச்சினையே ஆரம்பம்.
எப்பொழுது ஒவ்வொன்றுக்கும் அர்த்தம் தேட ஆரம்பித்தோமே, அப்பொழுதே மாயம், ஓடம், பொய் என்று பெயர் சூட்டி வாழ்க்கைக்கு ஓர் உருவம் தேட முயல்கிறோம்.
இதில் பிரச்சினை என்னவென்றால் நமது மன நிலைக்கேற்ப வாழ்க்கையும் தனது உருவத்தை (அப்படியொன்றிருந்தால்!) மாற்றித் தோற்றமளிப்பதாய்த் தெரிகிறது.
Harry Potter ன் நாவல்களின் ஒரு கட்டத்தில் ஒரு பெட்டியைத் திறப்பார்கள். உள்ளிருந்து வெளிப் படும் அந்த மாய சக்தி கொண்ட பொருள் திறப்பவரின் மனநிலைக்கேற்ப சிலருக்கு பாம்பாகவும் சிலருக்கு ராட்சத சிலந்தியாக எனத் தன் உருவத்தை மாற்றித் தோன்றுவதாக கதை அமைக்கப் பட்டிருக்கும்.
அதே சமயத்தில் பயங்கரமான உருவம் கொண்ட அந்த பொருள், திறப்பவர் ஒரு மகிழ்ச்சியான நிகழ்ச்சியை நினைவில் நிறுத்தினால் ஒரு கேலிக்குறியான பொருளாக மாற்றப் பட்டு விடும்!
பெட்டியைத் திறப்பவர்கள் எதைப் பற்றி பயப் படுகிறார்களோ அந்த உருவத்தையே எடுக்கும் திறனையும் திறப்பவர்கள் மனக் கட்டுப் பாட்டுடன் இருந்தால் அவர்களுக்குக் கட்டுப் பட்டு, அவர்களின் சிரிப்பிற்கும் மகிழ்ச்சிக்குமான ஒரு பொருளாக மாறும் திறனையும் கொண்ட அந்தப் பொருள் தான் வாழ்க்கையோ?
எந்தப் பெட்டியை எந்த மன நிலையுடன் திறந்தால் எந்த உருவத்தை எதிர் கொள்ள நேரிடும் எனத் தெரிந்தவற்கு வாழ்க்கை ஒரு புதிரா?
Kumar
Absolutely wonderful comment!!
sowmya,
as i said before in my post, all this search for "meaning of life" is again because of the inability of human mind to deal with uncertainty. It just cooks up some kind of reason to satisfy itself and to live. All these meanings are crutches. After all, meaning of life what we GIVE to it.
The point is mind cannot accept that life is meaningless. Hope seems to be as essential as air for man to survive. So mind creates all those intricate layers of meanings, i prefer to use lies ;)
and the widespread opinion about the "sweetness and freedom" of childhood is grossly wrong i think. That said, that apparent freedom was probably due to the fact that the loads of our minds' lies were lower and more bearable/breakable then. awaiting ur smilies :)
sowmya, what happened no updates?
I think the missiles are being assembled :)
Launch awaited eagerly, Sowmya.
hi senthil,
Nice comments :)
hi voval,
Thank you so much for the effort you put to make me understand all about the thamizh font online details :)
hey kumar,
Amazing points :)
Vaazhkai puthira irukka kandu thaan, athu swarasiyamave irukkirathu :P
hey sk
" \\After all, meaning of life what we GIVE to it.//"
:)
Hi Balar, Kumar
Sorry for the delay. I'm out of station.will be continue with the post within two days :)
//அறிவின் தாக்கத்தை அறியும் வயதில் தான் இது போன்ற கேள்விகளும், தேடல்களும் அரும்ப ஆரம்பிக்கின்றன//
//சின்ன வயசுல, நான் எவ்வளவு அற்புதமாக வாழ்கையை வாழ்ந்திருக்கிறேன் தெரியுமா..? என்று தான் பெரும்பாலும், சிறு பிராய வாழ்க்கையை ரசித்து கூறுபவர்கள் இருக்கக் கூடும்//
உண்மை...
நல்ல பதிவு.இதனைத் தொடர்ந்து எழுதுங்கள்
Hi Bharath,
Varugaikku nandrigal pala :)
Good brief and this post helped me alot in my college assignement. Thanks you for your information.
Post a Comment