யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!

Monday, May 21, 2007

இ(சை)தயாஞ்சலி !!

மால்குடி டேஸ் - தொடர் ஞாபகம் இருக்கிறதா?. என்னால் மறக்க முடியாத தொடர்களில் அதுவும் ஒன்று.

ஆர்.கே.நாராயணணைப் பற்றியும், அவரது எழுதுக்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளும் ஆவல் அதிகரிக்க, மால்குடி டேஸ் தொடர் மிக முக்கியப் பஙகை வகித்திருக்கிறது..

குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், அத்தொடரின் இசை!.எப்படிப்பட்ட ஈர்ப்பு சக்தி அந்த இசைக்கு!!. தொடருக்குப் பொருத்தமாக இப்படி இசை அமைத்தவர் யார்? என்று அப்போது, அந்த வயதில் அறிந்து கொள்ளத் தெரியவில்லை. தொடரின முகப்பு இசையும், கூடவே "சாமீ......." என்ற குரலும் என்னை அத்தொடரை ஒரு பாகம் கூட விடாமல் பார்க்கச் சுண்டி இழுத்திருக்கிறது.

சிறிய வயதில் அம்புலி மாமா எத்தனை ஆர்வத்தோடு படித்தேனோ, அத்தனை ஆர்வத்தோடு பார்த்த தொடரின் இசை அமைப்பாளர் திரு. எல்.வைத்தியநாதன். மிகச் சிறந்த இசை அமைப்பாளர்களில் அவரும் ஒருவர்.

சென்ற வாரம் அவர் காலமாகி விட்டார் என்ற செய்தி என்னை மிகவும் வருத்ததிற்கு உள்ளாக்கி விட்டது.என்றாவது ஒரு நாள் அவரை சந்தித்து, அவரது இசை பற்றி சிலாகித்து அவருடன் பேச வேண்டும் என்று நினைத்ததுண்டு. அதற்கு இடமில்லாமல் போய் விட்டது இப்போது.

மிகவும் சிறப்பாக அவர் புகழ் பரவி இருக்கவில்லை.ஆனால் master piece என்று அழைக்கப்படும், மிக சிறந்த இசையை அவர் அமைத்திருக்கிறார்.மிகச் சிறந்த வயலின் வித்வானும் ஆவார்.அவருடய சிறந்த இசை பணிக்குச் சமர்பணமாக அவரைப் பற்றிய இந்நினைவு கூர்தலை, அவருக்கு காணிக்கையாக்குகிறேன்.

அத்தொடரின் ஒரு பாடல் உங்களுக்காக..



மால்குடி டேஸ் தொடரின் பல பாகங்களை காண ...இதோ...இங்கே க்ளிக்கவும்.

6 comments:

Priya said...

Nobody can forget malgudi days coz its set in our minds with the story and music.

Sorry to hear that and may his soul rest in peace.

Sree's Views said...

Naan idha pathi romba kelvi patten but never got an oppurtunity to see it...
Nalla ezhudhi irukeenga :)

Anonymous said...

hi priya,

yup..after a long time, i am happy to hear that music. :)


hoi sree..

ponga..! neenga miss panniteenga..vidatheenga antha link aa mudinga parpom :)

balar said...

வயிலின் மேதையின் மறைவு உண்மையிலே இசை துறைக்கு மாபெரும் இழப்பு தான்..

மால்குடி டேஸ் மிகவும் சிறுவயதில் பார்த்த ஞாபகம்.ஆனால் அதற்கு L.V தான் இசை என்பதை இப்பொழ்துதான் அறிந்தேன்..

L.V யின் இசையில் எழாவது மனிதன் மிகவும் மறக்குமுடியாதது..பாரதியின் கவிதைகளுக்கு L.V தான் மிகசிறந்த இசைராகம் கொடுத்திருப்பதாக நான் கருதிகிறேன்..அதுவும் "காக்கை சிறகினேலே" கவிதையை படிக்கும் பொழுது எல்லாம் L.V தந்த ராகத்தோடுதான் படிக்க தோன்ற்கிறது..அவ்வளவு இனிமையான ராகம்.

Sowmya said...

பாலர்..

மிகவும் சிறந்த இசை அமைப்பாளர், ஆனால், அவருக்கு நிறைந்த சந்தர்பங்கள் திரை உலகில் அமைந்தது மிகக் குறைவு.நான் ரசித்த பல படங்களின் , பிண்ணணி இசை வாசித்தவரும் அவரே. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் இளையராஜா இசை அமைத்த வீடு படத்தின்,வயலின் பிண்ணணி இசை வாசித்தவர் இவர் தான். மிக்க ஈடுபாட்டோடு கேட்கப்பட்ட இசை அது தான். இசை பிரியர்கள் எல்லோர் மனதிலும் அவ்ர் இடம் பெற்றிருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.:)

winmax said...

very vice music