யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!

Thursday, June 7, 2007

புரிந்து கொள்கிறோமா?.....புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறோமா?..

இருபத்தி மூன்று வருடங்கள் ஒன்றாகவே இருந்து,வளர்ந்து,வாழ்ந்தும்,என்னை என் வீட்டில் யாரும் சரியாகவே புரிஞ்சுக்கல...

என் தோழி ஒருத்தியின் புலம்பல் தான் இது.அது ஏன்?,கூடவே இவ்வளவு வருடங்கள் இருந்தும் என்னைப் பற்றிய சரியான புரிந்து கொள்ளல் அவர்களால் இயலாததாயிற்று. இது தான் அவளது வினா.

புரிந்து கொள்ள,கூடவே வாழ வேண்டும் என்ற அவசியம் இல்லை.ஆனாலும் அவளது ஆற்றாமையில் நியாயம் இல்லாமல் இல்லை.இதற்கு காரணம் என்ன?

புரிந்து கொள்ளல் எப்பொழுது நிகழும்? எதன் மூலம் புரிந்து கொள்ளல் சாத்தியம் ?

மிக முக்கியமாகச் சொல்ல வேண்டுமென்றால், அன்பு ...அன்பு பாராட்டுதல் இருந்தே ஆகவேண்டும். இரண்டாவதாக பரஸ்பர கருத்து பரிமாற்றங்கள். இவை இரண்டும், புரிந்து கொள்ளல் நிகழ ஏதுவான உபகரணங்கள்.ஆனால் இவற்றை எல்லாம் விட,மிக முக்கியாமான் ஒரு சிறப்பை குடும்ப நபர்கள், ஆட்கொள்ளாதது தான், துயரக் கடலில் சிலரை ஆழ்த்த காரணமாக இருக்கிறது.

ஏற்றுக் கொள்ளல்(Acceptance)தான் அத்தகைய சிற்ப்பான பண்பு. நம்முடைய துன்பப்பாடுகளுக்கு எல்லாம் முழுமுதற்க் காரணமாக விளங்குவது "ஏற்றுக் கொள்ளாமை" தான்.

அன்பு , இந்த மூன்றெழுத்து வார்த்தை, நம்க்குள்: எப்படி சாத்தியமாகிறது?.

ஒரு குடும்பத்தில், மகனாகவோ,மகளாகவோ, சகோதரியாகவோ, சகோதரனாகவோ பிறந்து விட்டாலே, ரத்த சம்பந்ததினால், பாசம் என்ற பிணைப்புக்குள் தள்ளப்பட்டதனால், அந்த அன்பு சாத்தியமாகிறதா. இல்லை....என் குடும்பம், என் மகன், என் மகள், என் சகோதரன், என் சகோதரி என்ற எண்ண ஓட்டங்களினால் அந்த அன்பு சாத்தியப் படுகிறதா?

"கமிட்மெண்ட்"(commitment)என்று எண்ணும் எவ்விடத்திலும் அன்பு வாசம் செய்ய ஏதுவான சூழல் இல்லை.ஆனால், நம்மில் பலரும், கமிட்மெண்ட் என்று எண்ணிக் கொண்டு தான் உறவுகளோடு உறவாடிக் கொண்டிருக்கிறோம்.

"பாலும் தெளி தேனும்,பாகும் பருப்பும்,இவை யாவும் கலந்துனக்கு நான் தருவேன்,
கோலம் செய் !,துங்கக் கரிமுகத்து தூமணியே, நீ என்க்கு, சங்கத் தமிழ் மூன்றும் தா.."

எப்போதெல்லாம், இச்செய்யுள் நினைவுக்கு வருகிறதோ, அப்போதெல்லாம், ஒன்று கொடுத்தால் தான் மற்றதை பெற முடியுமோ,என்ற எண்ணம் எனக்குள் மேலோங்கி இருக்கும். இறையே, நான் இவையெல்லாம் தருகிறேன்,ஆதலால் நீ இவையெல்லாம் என்க்குத் தா, என்று ந்வில்வதில்,அன்பு எங்கே இருக்கிறது?.அன்பை சரியாக தெரியாதவன், அன்பை எப்படிக் கொள்ள முடியும்?.அன்பு இல்லாத இடத்தில், பரஸ்பர கருத்து பரிமாற்றம், அன்னியோன்யமாக எங்கு நிகழும்?.

"நீ இவ்வாறாக எல்லாம் இருந்தால் தான் உன்னை என்க்கு பிடிக்கும். உன்னைப் பிடித்தால் தான் உன் மீது எனக்கு அன்பு ஏற்ப்படும். அன்பு ஏற்ப்பட்டால் தான், பரஸ்பர பரிமாற்றங்கள் நடக்கும். அதனால், எனக்கு பிடித்த மாதிரி நீ இரு....."

இது தான், நம் அன்பை எதிர் நோக்கும் ஒருவருக்கு நம் மனதால், நம்மையும் அறியாமல், நாம் இடும் கட்டளைகள்..இவை எல்லாம் இருந்தால், அன்பைத் தருவேன், இல்லாவிட்டால் அன்பு no stock. அன்பு என்ற உணர்வு,சிரிப்பை போல், அழுகையைப் போல், எப்போது ஏற்படுகிறது என்பது தெரியாமல் ஏற்படும் ஒரு உணர்வு.

ஏற்றுக் கொள்ளல் என்ற சீரிய பண்பு தான் ,அதற்கு முதல் படி.ஏற்றுக் கொள்ளல் எங்கு சாத்தியம் இல்லையோ,அங்கு அன்பும் சாத்தியம் இல்லை,புரிந்து கொள்ளலும் சாத்தியம் இல்லை.

ஆகவே தான்,குடும்பம் என்ற சூழ்லில் புரிந்து கொள்ளப்படாதவ்ர்,வெளி உலக நண்பர்களால், மிக எளிதாக புரிந்துக் கொள்ளப்ப்டுகிறார்.புரிந்து கொள்ள கூடவே வாழ் நாள் முழுவதும் கூடவே, வாழ வேண்டிய அவசியம் இல்லை.யார் எப்படி இருந்தாலும் ,ஏற்றுக் கொள்ளலின் மூலம், நம் அகக்கண் விசாலமாகும், அகத்தை அன்பு ஆக்ரமிக்கும்,பரஸ்பர பரிமாற்றம் நிகழும், அப்போது தான் புரிந்து கொள்ளல் சாத்தியப்படும்.

10 comments:

Thiru said...

you are sure to make people uncomfortable with your writings... to see those realities... for which people want to keep themselves blindfolded.

a nice post and a nut cracker too!

keep them coming.

KRTY said...

கடைத்தெருவில் இருந்து வந்தார் சாமா. விசாலம் சொம்பில் ஜலம் எடுத்து வந்தாள்.. "எங்கேன்னா போயிருந்தேள்.. இத்தனை நாழி ! ஒரே கவலையா இருந்துது.."..

பதில் வரவில்லை. ஊஞ்சலுக்கு சென்றமர்ந்தார். இரண்டு வெற்றிலையை காம்பு கிள்ளி சுண்ணாம்பு தடவி வாயினோரம் மடித்து வைத்துக் கொண்டார்.

"அச்சச்சோ.. சீவல் தீர்ந்து போச்சே" என்று அப்போது தான் ஞாபகம் வந்தது விசாலத்திற்கு. ஸ்டோர் ரூம் ரேழியிலிருந்த மஞ்சப் பையில் இருந்து பன்னீர்ப் புகையிலையை பிரித்து ஊஞ்சல் வெற்றிலைப் பெட்டிக்குள் நிறப்பினாள்.. சாமா முறைத்தார். "முன்னாடியே ஞாபகம் வேண்டாம் ?" என்று சுள் என்று அதட்டினார். பதில் பேசாமல் மாமி முற்றத்திற்கு சென்று பத்து பாத்திரம் தேய்க்க ஆரம்பித்தாள்..

"இங்கே வாடி.. " என்றார் சாமா, பெள்ட்டை உருவியபடியே.... விசாலம் பயத்துடன் தூனுக்குப் பின் இருந்து பார்த்தாள்..

"கார்த்தால வாசக்கதவுல கால் இடுச்சிண்டியாமே.. நல்லா தடவி விடு.. சூடு பறக்க தடவனும். தெரிஞ்சுதா..." என்று அதட்டியபடியே பெல்ட் பர்ஸ்ஸினுள் வாங்கி வந்திருந்த ஐயோடெக்ஸ் டப்பியை கையில் திணித்தார்.

விசாலம் மாமிக்கு தன் கணவரைப்பற்றி தம்பட்டம் அடிக்க இன்றைக்கும் ஒரு விஷயம் கிடைத்துவிட்டது.

Anonymous said...

If an individual has accepted himself/herself as who they are, they will be able to know about themselves. Once you know, then it is easy to handle others and what others need. Expectations are a passing phase. If we live with expectations all the time, it can also lead to failure or depression.

Not everone can easily interact or exchange about others.
Acceptance: We make some norms for others or others name the other way to accept people in the society. How strange??

Who am I? This is wat every individual loOks at the mirror and talk about themselves. SOme are easy to identify and others are said by friends and family.

balar said...

நல்ல பதிவு sowmya..நான் கூட உங்க நண்பர் மாதிரியே சில சமயம் கூறுவேன்...உங்கள் பதிவு நல்ல பல கருத்துகளை கூறியுள்ளது..:)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//புரிந்து கொள்கிறோமா?.....புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறோமா?.." //

புரிந்து கொண்டேன்...

Sowmya said...

Hi thiru,

Thank u so much for the encouraging words. :)


hi keerthi,

Awesome story :) True love never fails.


hi priya , ..:)


hey balar,

Thank you :)


Nilavu nanban,

Warm welcome :)

Sree's Views said...

Hello Sowmya..
I understand one has to accept a person as he/she is. With some relations like parents and siblings we grow up with them and get used to some aspects in them that we dont like. The underlying factor is also that we have lots of affection for them which pre-exists.
But when it comes to new relationships like friends...the very first aspect we look for is whether we can get along with them. Unless we can get along..that is..like the person..we dont develop any affections. So compatability becomes important in any relationship.
But it is very right that ppl shd learn to accept others when thrown together and learn to let go small issues.

Good post Soms :)

Sowmya said...

hey sree,

Late aa vanthalum latest aa sollirukeenga :)

வவ்வால் said...

வணக்கம் பெபி!

மீண்டும் வலைப்பக்கம் வந்துவிட்டேன். இடைப்பட்ட காலத்தில் எத்துனை மாற்றங்கள்! நீங்க ரொம்ப வேகமா இருக்கிங்க! நிறைய பதிவுகள் போட்டு மக்களின் மூளைக்கு வேலை வைக்கிறீர்கள் , என்னைப்போல மூளை இல்லா ஜடங்களுக்கும் ஏற்றார்ப்போல கொஞ்சம் எழுதுங்கள் நீங்க நல்லா இருப்பிங்க!

இந்தப் பதிவு என்னை மனசில் வைத்து எழுத வில்லையே! ஹெ ஹெ ஹெ .... நாட்டில் எல்லாம் இப்படி தான் இருக்காங்க! அறிந்தும் அறியாமலும் ..புரிந்தும் புரியாமலும்.

தவணை முறையில் மற்ற பதிவுகளையும் விரைவில் படித்து விட வேண்டும் என்று தனி நபர் தீர்மானம் போட்டு இருக்கிறேன் வெற்றி அடையுமா? பார்ப்போம்.

உஙள் பாடல் பதிவுகள் எல்லாம் கேட்டேன் பாராட்ட வார்த்தைகள் இல்லை! தமிழ் எனக்கு பிடித்த மொழி ஆனால் பாருங்கள் சமயத்தில் எப்படி சொல்றதுனு வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாற வேண்டியுள்ளது!.

தொடரட்டும் உங்கள் எழுத்துலக சேவை! அது நாட்டிற்கு மிக தேவை!

இப்படிக்கு என்றும் அன்புடன்!

வவ்வால்.

Sowmya said...

hey voval,

thangal varavu nal varavu aaguga..
eppavum thanadakkam thevai thaan.atharkkaaga ippadiya :)

paraatugalukku en nandrigal pala :)