யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!

Monday, June 11, 2007

கலவியலும் கல் !

களவும் கற்று மற என்று கூறப்படுவதுண்டு. அதாவது, தெரியாத விஷயங்கள் எதையும் தள்ளி வைத்துப் பாராதே. அனைத்தையும் தெரிந்து கொண்டால் தான், அதன் மூலம் நடக்கும் நல்லதையும், கெட்டதைய்ம், நம்மால் பூரணமாக உணர இயலும் என்ற் பரந்து விரிந்த எண்ணத்தை முன் வைத்துக் கூறப்பட்டது தான் அந்த பழமொழி. ஏறக்குறைய, எல்லா விதத்திலும், அம்மொழியை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நம் கலாச்சாரத்தைப் பொறுத்தவரையில், கலவு(sex) என்பது களவு(theft) என்ற பொருள்படும் அளவுக்கே பார்க்கப்படுகின்றது. அதற்கு, காரணம் என்ன என்று யோசித்துப் பார்தோமேயானால், சமுதாய ஒழுங்கு முறைகள், கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம், கலவு கற்றலினால் தீமை விளைந்திடுமோ என்ற அச்சம், சமுதாய சீர்கேடு விளைவித்திடுமோ என்று நாம், இட்ட கட்டுப்பாடுகள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். ஆனாலும், கலவு என்பது மிகவும் தேவைப்படும் ஒன்றாகவே கருத்ப்படுகின்றது. நமக்கு விருப்பப்படுகின்ற போது, அது மிகவும் தேவையான விஷயமாகவும், விருப்பம் தீர்ந்தவுடன், தீண்டத் தகாத விஷயமாகவும் தான் எல்லோராலுமே எடுத்துக் கொள்ளப்படுகிறது. இது ஏன்? காலம் காலமாகவே இந்நிலை தான். நம்மால் சரியான விடை கண்டுப்பிடிக்க முடியாத ஒரு புதிராகத் தான் இது இருந்திருக்கிறது. இதற்கு காரணம் என்ன?

HIV போன்ற கொடும் வியாதிகள் வந்த பின் தான் நமக்கு, கலவியல் பற்றியும்,அதன் மூலம் ஏற்படும் வியாதிகளை தடுக்க எவ்வாறான விழிப்புணர்வு தேவை என்ற உணர்வும் மேலோங்கி இருக்கிறது. அவ்வகையான வியாதிகள் ஏற்ப்பட்டிருக்காவிட்டால், கலவியல் என்பது ஒரு மறைமுகமான ஒரு விஷயமாகவே இருந்திருக்கும்.

மறைத்து வைக்கும் எதற்குமே ஈர்ப்பு உண்டு. ஈர்ப்பின் சக்தி அதிகமாகும் போது, பல தடைகளை தாண்டி, மறைத்து வைத்ததை அடையும் எண்ணம் தான் மேலோங்கும்.அது தான் இயற்கை. இயல்பாக, ஒரு பூ மலருதலைப் போல நிகழ வேண்டிய கலவு, கட்டுப்பாடுகளால், யாருக்கும் தெரியாமல், மறைமுகமாக, பல தீமை பயக்கும் விதங்களில், கட்டுத்தறி கெட்டு, அநாகரீகமாக நடக்கும் கோரத்தை என்னென்று சொல்வது.

நம் சமுதாயத்தை பொறுத்தவரையில் காதல் என்ற சொல்லே, ஏதோ சொல்ல கூடாத சொல்லாகவும்,காதல் மணம் என்பது,வெறுக்கத் தக்க விஷயமாகவும் கருத்ப்படும் வகையில்,நாம் இன்று விவாதிக்க எடுத்திருக்கும் கலவியல் "அசசச்சோ..இதையா இப்படி வெளிப்படையா பேசறாங்க" என்று சொல்ல வைத்தால், அதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை.

கலவியல் கல்வி என்பது கைக்கு எட்டாத கனியாகவே இப்போது இருக்கிறது.ஆனால், ஒழுங்கு படுத்தப்படாத கலவியலால் நிகழும், பாதகங்கள் ஏராளமாகிப் போய்விட்டது. இக்கால இந்தியாவில், மேல் நாட்டு நாகரீகம் என்பது வெகு இயல்பாகிப் போனதாக இருக்கும் பட்சத்தில், கலவியல் கல்வி, நம் இளைய தலைமுறையினரை நன்கு வழி நடத்திச் செல்லும் விதமாக இருக்க வழி வகுக்கும்.

நாம் கலவு என்பதை எப்போது தவறு என்ற கோணத்தில் பார்க்காமல் இருக்கிறோமோ, அப்போது தான், நம்மால் அதை புரிந்து கொள்ள இயலும். அப்போது தான், இளைய சமுதாயத்திற்கும், அதனைப் பற்றி ஒரு விழிப்புணர்வையும், ஆரோக்கியமான உறவு முறைகளை வைத்துக் கொள்ளும் விதத்தையும் அவர்களுக்கு சொல்லித் தர இயலும். மறைத்து வைத்து, மிக பெரிய இழப்புக்களை சந்திப்பது சிறந்ததா? , வெளிப்ப்டையாக பேசி, இயற்கையின் இயல்பை கூறி, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குதல் சிறந்ததா? சிந்தியுங்கள்..!

13 comments:

KRTY said...

சுத்தமான அறியாமையில் கேட்கிறேன், என்ன விழிப்புணர்வு வேண்டியிருக்கு ?

கலவியல் கல்வியில் என்ன கற்றுத்தருவீர்கள்.. ?? முறையான உடலுறவு பற்றியா அல்லது ஒழுக்கமான உறவுமுறை குறித்தா ?

இளைய தலைமுறைக்கு இது தெரியாது என்றா நினைக்கிறீர்கள் ? ஒருவேளை அவர்களுக்கு நீங்கள் கூறியது போல் ஆரோக்கியமான உறவுமுறைகள் வகுத்துக் கொள்ளத் தெரியாமல் இருக்கலாம்.. அதை கலவியல் கல்வியில் எவ்வாறு கற்றுத்தருவீர்கள் ?

வவ்வால் said...

வணக்கம் பெபி!

சமீபகாலமாக இந்த சப்ஜெக்ட் பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் பலமாக அடிப்பட்டு வருகிறது.இந்த வார விகடனில் பத்திரிக்கையாளர் ஞானி, குமுதத்தில் குஷ்பு என இருவரும் பாலியல் கல்வி தேவை என முழங்கிருந்தார்கள்.கலவியல் என்றால் முழு பொருள் தருமா, பாலியல் என்றால் முழு பொருள் தருமா? ஏதோ ஒன்று ஆனால் இந்தியக்கலாச்சார சூழலில் இக்கல்வி அல்லது அதனைப்பற்றி பேசுவதே கூட ஒரு கலாச்சார அதிர்ச்சியை உண்டாக்கும்.

எனவே அத்தகைய அதிர்ச்சி மதிப்பிற்காவது பலர் இதனை பேசுகிறார்களோ எனத்தோன்றுகிறது. என்னைப்பொருத்தவரை சொல்லித்தெரிவதில்லை மன்மதக்கலை என்பது போல் தானே அறியப்படும் தேவைப்படும் பருவத்தில் என்றே எண்ணுகிறேன்.

கோவில் கோபுரம் மற்றும் சுற்றுப்பிரகாரங்களில் உள்ள பல சிலைகளும் வாத்யஸானரின் காமசூத்திரத்தின் அடைப்படையில் உள்ளவையே. நம் மூதாதையோர் அப்படி அமைக்க காரணமே அத்தகைய சிலைகளைப்பார்ப்பதன் மூலம் தானே பாலியல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும் என்ற தொலைனோக்கு பார்வையே!. அந்த காலத்திலேயே பாலியல் குறித்து புத்தகம் போட்ட நமக்கா இதெல்லாம் தெரியாது.

தவறு நடக்க காரணம் அறியாமை என்பதை விட அலட்சியமே காரணமாக இருக்கும் பெரும்பாலும்.

Sowmya said...

கீர்த்தி, மிகவும் சூடாகவே கேட்டு இருக்கிறீர்கள்..எதிர்பார்த்தது தான் :p

\\"சுத்தமான அறியாமையில் கேட்கிறேன், என்ன விழிப்புணர்வு வேண்டியிருக்கு ?"//

ஏன் ??..குழந்தைகளிடதில் child abuse, right touch, wrong touch என்று ஆரம்பத்திலேயே சொல்லக் கூடிய கட்டாயத்தில் நாம் இருக்கும் போது, ஏன் தொட்டால் என்ன ஆகும் என்ற கேள்விக்கு சரியான பதிலை கலவியல் சம்பந்தமாக பேசாமல் பதில் தர இயலுமா? எதில் தான் நமக்கு விழிப்புணர்வு இருந்திருக்கிறது ,இதை நாம் ஒத்துக் கொள்ள !

\\"கலவியல் கல்வியில் என்ன கற்றுத்தருவீர்கள்.. ?? முறையான உடலுறவு பற்றியா அல்லது ஒழுக்கமான உறவுமுறை குறித்தா ?"//

நல்ல கேள்வி தான்..! கலவியல் என்றாலே ஒரு காத தூரம் ஓடி, முகம் மூடிக் கொண்டே நமக்கு பேசி பழகி விட்டது. கலவியல் கல்வி என்றாலே, முதற் படியாக ஒழுக்கத்தை அது கற்றுத் தரும் கல்வியாகத் தானே ஆரம்பிக்கப்பட சாத்தியம். ஏன், எதற்கு, எப்படி, எவ்வாறு என்ற துணைக் கேள்விகளோ, அல்லது அதற்கு உண்டான விளக்கங்களோ தராமல், கலவியல் கல்வி சாத்தியம் இல்லை தான். ஆனால், அடிப்படையான , தீர்க்கமான, விளக்கங்கள் மட்டுமே போதுமானது, ஏனென்றால் கேட்பவர்களுக்கு அது புதிதான செய்தியாகத் தான் இருக்க முடியும்.

மீசை அரும்பும் வயதில், ஆசை கூடாது என்று அறுதியிட்டு யாராலாவது கூற இயலுமா..பார்த்து போ...என்று அக்கறையுடன் கூறுவதில்லையா..கலவியல் கல்வி, உடல் உறவு என்பதை இப்படியெல்லாம் வைத்துக் கொள்ளலாம் என்ற விளக்கங்களை தரும் கல்வியாக மட்டுமே கருத்தில் கொண்டால், கசப்பாகத்தான் இருக்கும் ஒத்துக் கொள்ள. கலவியல் கல்வி தேவை என்பதன் சாராம்சம் என்ன என்பதை உணர்ந்தாலே, அதை எவ்வாறு மேம்பட்ட கல்வியாக மாற்ற முடியும் என்பதை பற்றிய சிந்தனைக்கு உங்களை மாற்றிக் கொள்ள இயலும்.

\\" இளைய தலைமுறைக்கு இது தெரியாது என்றா நினைக்கிறீர்கள் ? ஒருவேளை அவர்களுக்கு நீங்கள் கூறியது போல் ஆரோக்கியமான உறவுமுறைகள் வகுத்துக் கொள்ளத் தெரியாமல் இருக்கலாம்.. அதை கலவியல் கல்வியில் எவ்வாறு கற்றுத்தருவீர்கள் "//

இன்றைய இளைய தலைமுறை என்று நீங்கள் எந்த வயதினரை குறிப்பிடுகிறீர்கள் என்பது புரியவில்லை.அப்படியே நீங்கள், இளைய தலைமுறை என்று இருபதுகளில் இருப்பவர்களையோ, அல்லது முப்பதுகளில் இருப்பவர்களையோ குறிப்பிட்டு இருந்தீர்களேயானால், இன்றைய நிலையில் HIV நோயினால் பாதிப்புகள் ஏன்?. அவர்களுக்கு தெரிந்த விஷயத்தினால், அவர்களுக்கே பாதிப்பு வரும் என்று சொல்கிறீர்களா?. இல்லை, தெரிந்தே தான், அந்நோயில் அவர்கள் வீழ்கிறார்கள் என்று கூறுகிறீர்களா?

வயது, வாலிபம், இயற்கை இவற்றிற்கு கட்டுப்பாடு என்பது சாத்தியம் இல்லை தான், என்றாலும், நீங்கள் குறிப்பிட்டுள்ள வயதினருக்கு, பாதுகாப்பான உடல் உறவு முறைகள் தெரிந்து இருக்கத் தான் வேண்டும். தானகத் தெரிந்து கொண்டு, நாம் பாலியல் நோயினால் பாதிப்புக்குண்டாயிருக்கும் லட்சணம் தான் தெரிகிறதே !

நான் இங்கு, அரைகுறையாக தெரிந்து வைத்துக் கொண்டு, கலவியல் என்பதை கேலிக் கூத்தாக்கும், இளைய தலைமுறையினரைப் பற்றி சொல்லவில்லை. இளமை வயதிற்க்குள் அடியெடுத்து வைக்கும், வைக்கப் போகும் இளைய தலைமுறையினருக்கு தேவையான அடிப்படைக் கலவியல் கல்வி பற்றி எழுதியிருக்கிறேன்.

பசித்தால் எதை வேண்டுமாலும் சாப்பிடு என்று நாம் விட்டுவிடுவதில்லையே. உடலுக்கு உகந்த சத்து அளிக்கும் உணவை தேர்ந்தெடுத்து உண் என்று கூறுவதைப் போல தான், கலவியலும். உடலுக்கு, உகந்ததை தேர்ந்தெடு, உகாததை விட்டு விடு என்று அறிவுறுத்த கலவியல் கல்வி அவசியும் தேவை.. உணவு என்று சொல்லும் போது நம்மால் அதை இரு கரம் கொண்டு வரவேற்கக முடிகிறது. கலவியல் என்று சொல்லும் போது, உணவு போல் அதை நம்மால் சுலபமாக எடுத்துக் கொள்ள இயலுவதில்லை. அதற்கு காரணம் நான் பதிவில் சொன்னபடி பல்வேறாக இருக்கலாம். ஆனால், பாதிப்புகள் நிகழ ஆரம்பித்துவிட்டன பல நோய் வடிவங்களில்.

இன்னமும், பழமையில் தான் நான் ஊறிக் கிடப்பேன் என்பது, வருங்கால சந்ததியினரின் வாழ்வைத் தான் சூறையாடும் என்பதை நினைவில் கொண்டால் சரி.

Sowmya said...

வவ்வால், தங்கள் வருகைக்கு நன்றி :)

மேற்க்கூறிய என் கருத்துக்களை என் பதிலாக எடுத்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

Sree's Views said...

very thought provoking post, Sowmya !
Actually , Keerthi has raised a valid kosten.
Is it sex education or Moral instruction ?
I guess the need of the hour is sex education and the strata that needs it most shd be targetted at.

Sowmya said...

hi sree..

Without teaching the morality, its not possible to educate the sex, especially at India.

Hope I have given sufficient reply in my previous comment.

How are you doing :)

Sowmya said...

I would like to give the following links, if you are interested go through those

http://thatstamil.oneindia.in/news/2006/10/12/cbse.html

http://thatstamil.oneindia.in/news/2005/02/04/sex.html

---------

Athellam kooda ok..ithai eppdi eduthuka poreenga any comment??

visit

http://www.keetru.com/dheemtharikida/apr06/makkal_mandram.html

Sree's Views said...

Enga Sowmya....they have given their views...pretty good ones.
CBSE la I think 'health education' was there before. I guess it is introduced again.
Tamil Nadu school..way to go !

Anonymous said...

நல்ல கருத்து. நன்றாக எழுதியுள்ளீர்கள். தேசிபண்டிட்டில் இணைத்துள்ளேன் நன்றி.

http://www.desipundit.com/2007/06/17/kalaviyal/

Sowmya said...

hey dubu...

welcome to my blog and I am so happy to get people like you here. :)
Thank u

ஆனந்த் நிருப் said...

hi

I am glad to see this posting and the comments for the same also,

at first, i would like to appriciate for the subject you take i would like to express my view on the above.

according to me , this posting talks about one side of the coin , i e ( outcome of improper sex , such as HIV etc ) but i don't really think, by knowing the outcomes, one will learn from sex ..

the other part that is missing is "inner awarness " ( awaeness is one but for the purpose of better understanding I term it as inner awarness )

I am also surpised to see from you the answer ( since you read jk, osho )" to learn from sex morality should be thought..

do you know according to osho( I don't know much about jk ) all our so called morality made the sex to this level , without morality sex would have been more natural , more rejoysing,

do you know any religion that is not having moral for sex ? what is the outcome ? we have cripled the human to feel always guilty

morality is an other form of condomning

by condomning sex we have condomned our life.

you can refer keerthi to read " from sex to superconsiousness " by osho , he may know what is awarness

any way good subjects , keep doing

Sowmya said...

Hi anand,

Welcome to my blog and I am really happy to see your comments on this issue.

I totally agree with your points , what you have said about osho and his thoughts. He said things for the different world. and each and every aspect of what we live now is completely different from his views. He called that as reality. But for us, the reality is what we undergo for all these years. We got conditioned for so long years. We believe what we are now and we never think, that there should be some change in the life style.

Osho’s thoughts and his teachings can reach people who really like to see the world in a different angle from what we have now. Like what you said, we need to have that
awareness. We cant force any one . Its all our belief which leads us to destiny. The realization should bloom in one casually.

We live in this world, (even you), which has its own norms, rules, regulations, morality etc etc. We just bother about what we think and we cant force any one should follow the other. Only self realization will fetch us the right path.

P.S : I am not the follower of osho. I used to read him often and I am also interested equally in other's philosophy. :)

ஆனந்த் நிருப் said...

nice answer, nice approch towards life , happy to see people with this approch , good understanding towords osho's thoughts , keep doing well.
I just wanted to bring your attention to the other dimension of awarness,if you can add that dimension too it will be very nice ( may be the persons who understand may be few)

just for sharing my view....//we live in this world, (even you), which has its own norms, rules, regulations, morality etc etc. We just bother about what we think and we cant force any one should follow the other. Only self realization will fetch us the right path//

osho had never spoken for different world , ( he spoke for different mind ) , the so called world is nothing but mind ( what you wanted to see ). that is why Hindu's called the world as maya , so each person living in a different world .. we are not normally communicating with each other we are trying to communicate with different world ( different mind set up ) really myself is living in the osho's world, i am enjoying

thank you for your response