விவாகரத்து - என்ற சொல் இந்தியாவில், இப்போதெல்லாம் அதிகம் புழங்கி வரும் ஒரு சொல்லாக ஆகிவிட்டது.மேற்கத்திய நாடுகளுக்கு நாங்கள் என்ன சளைத்தவர்களா என்று சவால் விடும் அளவுக்கு, இந்தியாவில் விவாகரத்து செய்வோரின் எண்ணிக்கை அதிமாகிக் கொண்டே தான் இருக்கிறது. நம் கலாச்சாரம், நம் பண்பாடு என்றெல்லாம், மார் தட்டிப் பேசிக் கொண்டே, உண்மையில் அவற்றின் அர்த்தம் என்ன என்பதனை மறந்து, நமக்கு செளகரியமான சில விஷயங்களில், அக்கலாச்சாரத்தை நாம் மறந்து விடுகிறோம் என்பதை நாம் மறுத்துக் கொண்டே தான் இருக்கிறோம்.
மேற்கத்திய நாடுகளில் திருமண வாழ்கை முறையானது,இப்பவும் தம் கலாச்சாரப்படி தான் நடந்து கொண்டு தான் இருக்கிறது.அவர்களிடம் எந்த மாற்றமும், இல்லற வாழ்வைப் பொறுத்தமட்டில், அவர்கள் முன்பு எப்படி இருந்தார்களோ, அதனையே இப்போதும் கடைப்பிடித்து வருகிறார்கள். அவர்களிடத்தில் குழப்பங்கள் இல்லை. சீரான தெளிவு அவர்களிடத்தில் இருக்கிறது. வெகு இயல்பாக, அவர்களால், திருமணமும் செய்து கொள்ள முடியும்,குழந்தைகளை பெறவும் முடியும், அதை விட இயல்பாக விவாக ரத்து செய்யவும் முடியும், பின் சர்வ சாதரணமாக அடுத்த துணையை, தேடிக் கொள்ளவும் முடியும், பின் அந்த பந்தத்தையும் முறித்துக் கொள்ளவும் முடியும். பின், your children and my children are playing with our children என்று உறவும் பாராட்ட முடியும். நாம் அந்த மன நிலைக்கு தயாரகி விட்டோமா என்றால், அதற்கு பதில் ,இல்லை என்பது தான்.
பத்து வருடங்களுக்கு முன், விவாகரத்து செய்வோரின் விகிதங்கள் ஆரம்பமாகி இருக்க கூடும். எதையுமே நாம் பிறவற்றைப் பார்த்து தானே கற்றுக் கொள்கிறோம். ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களினால், ஒருவரிடமிருந்து விவாகரத்து என்ற அப்போதிருந்த நிலை மாறி, சின்ன மனஸ்தாபத்தினால் கூட விவாகரத்து வாங்கிக் கொண்டால் என்ன என்ற எண்ணம் இப்போது மேலோங்கி விட்டது. அதன் காரண்ங்கள் என்ன என்று சிந்தித்தால், பலவற்றை சுலபமாக நாம் பட்டியலிட்டு காண்பிக்கலாம்.
பெற்றோர்களால் பார்த்து நிச்சயிக்கும் விவாகங்களில்,விவாகரத்து செய்வோரின் எண்ணிக்கை, காதலித்து மணம் புரிந்து, விவாகரத்து கோருபவர்களை விட குறைவாகவே உள்ளது. சொல்லப் போனால், காதலித்து மணம் புரிந்தால், விவாகரத்து என்பதே இல்லாமல் இருக்க வேண்டும்.ஆனால், காதல் மணம் புரிந்தும், வாழ்க்கை கசந்து, விவாகரத்து செய்தாலே போதும் என்ற நிலைக்கு ஆணும், பெண்ணும் தள்ளப் பட்டுவிடுகிறார்கள். இப்போதுள்ள காலக்கட்டத்தில் தான் , இவை அதிகமாக நிகழ்கிறது.
அறிவு வளர வளர, அன்பின் தன்மை குறையும்..அது தான் இயல்பு.அறிவு நான் இங்கு குறிப்பிடுவது, knowledge (accumulation of information) இவ்விதமான அறிவுப் பசியோடு தான் உலகம் போய் கொண்டிருக்கிறது. அறிவு சேர சேர துணிவும், தன்னம்பிக்கையும் மேலோங்குகிறது. இவ்விரண்டும் மேலோங்கினால், தனித்துவம் மேலோங்குகிறது. தனித்துவம் மேலோங்கினால், மற்றவரிடம் இயைந்து போவது என்பது முடியாத காரியம் ஆகிறது. நான், என் வாழ்க்கை, என் நலம் இவற்றிற்கு முன்னுரிமை தந்து, பிறர் நலம், பிறர் வாழ்க்கை என்பதற்கு கொடுக்கும் முக்கியத்துவம் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. ஆண் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலை மாறி, இப்போது பெண்களும், சரி நிகர் சமானம் என்ற நிலையில், தனித்துவம் என்பது அவர்களையும் விட்டு வைக்கவில்லை.
முன்பு போல் நிலை இல்லை இப்போது. நான் சொல்ல்வது, ஒரு பத்து , பதினைந்து வருடங்களுக்கு முன்பு. அப்போதும், ஆண், பெண் இருபாலரும், வேலைக்குச் செல்பவர்கள் தான். ஆனால், பெண்கள் அப்போது எல்லாத் துறையிலும் கால் பதிக்கவில்லை.. மிகவும் எளிதான வேலையும் , தகுந்த வேலை நேரத்தையுமே அப்போதிருந்த பெண்கள் விரும்பினார்கள், ஏனென்றால், வீட்டிலும் தம் வேலையை தாமே செய்து ஆக வேண்டிய நிலை. ஆண்கள் வீட்டு வேலைகளில் பங்கெடுத்து கொண்டாக வேண்டும் என்று பிரகடனப்படுத்தாத காலம் அது.
ஆனால் தற்போதுள்ள காலக் கட்டங்கள் வேறு. பெண்கள் இல்லாத துறையே இல்லை. ஆணுக்கு சமமாக வேலை பார்ப்பதும், அவர்களுக்கு இணையாக வேலை பளுவைத் தாங்கவும், ஆண் போலவே, நேரம் , காலம் பாராமல், வேலை செய்வதும், பெண்களிடத்தில், தன்னம்பிக்கையும், துணிவையும், தனித்துவத்தையும் தந்திருக்கிறது. நான் முன்னே கூறியபடி, தனித்துவம் அதிகமாகும் போது, மற்றவரை சார்ந்திருக்கும் செயல்பாடு அறவே இல்லாமல் போகிறது. அதனால், நீ என்ன...நானும் உன் போல் தான் என்ற எண்ணமும், உனக்கு அடிமை இல்லை நான், உன் வாழ்க்கை உன்னோடு, என் வாழ்க்கை என்னோடு என்ற எண்ணமும் தான் மேலோங்கி வ்ருவதால், வாழ்க்கை துணையோடு இயைந்து போதல் என்பது இயலாத காரியம் ஆகிவிடுகிறது .
நான் இப்படிச் சொல்வதால், பெண்ணை குற்றம் சொல்கிறேன் என்று அர்த்தப் படுத்திக் கொள்ளாதீர்கள். முன்பு போல், ஆணுக்கு கீழே அடங்கி இருந்த காலத்தில், ஒரு கை ஓசை போல, பிரச்சனை என்று வரும் போது, ஆணின் கை மேலோங்கியும், பெண் என்பவள் அதற்கு, அடங்கிப் போவதும் நடக்க ஏதுவாயிற்று. அதனால், குடும்பத்தில், சண்டை, சச்சரவு என்று வந்தாலும், ஒருவர் மட்டுமே அதை பெரிது படுத்திக் கொண்டிருப்பார்.மற்றொருவர், தழைந்து போயிருப்பார்.அதனால், மனஸ்தாபம் இருந்தாலும் , எப்படியும், ஆணைச் சார்ந்து தான் பெண் இருக்க வேண்டும் , ஆதலால், விவாகரத்து என்பது மட்டுப்பட்டிருந்தது.இப்போது, இருவருமே கோல் எடுக்கிறார்கள். ஆட குரங்காக யாருமே இல்லை. ஆதால, வாழ்க்கையை சகிப்புத்தன்மையோடு ஓட்டத் தெரியவில்லை.
இவற்றிற்கு முக்கிய காரணம், அறிவோடு(so called knowledge) சேர்த்து, வாழும் கலை அறிவை நாம் கற்றுக் கொள்ள மறந்தது தான்.வாழ்க்கையை ஓட்ட பணம் அவசியம் தேவை. பணம் சம்பாதிக்க கல்வி அறிவு அவசியம் தேவை. ஆனால் சம்பாதித்ததை கொண்டு, தகுந்த வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்து வாழ, வாழ்க்கை கலை அறிவு, மிக மிக அவசியம். எப்போது, வாழும் கலையை நாம் கற்றுக் கொள்கிறோமோ, அப்போது தான், நம்மால்,கல்விக் கற்று தேர்ந்த அறிவையும், வாழ்ககை கலை கற்றுத் த்ந்த அன்பையும், சம்மாக கொண்டு சென்று வாழ்வை வெல்லத் தெரியும்.
யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
Sowmya: Just a clarification coz tamil a asusual weak pa.
வாழும் கலை அறிவை- Apdina??
Will try to understand you term and will come back.
இந்த விவாகரத்து தேவையா என்னும் விவாதம் நீண்டகாலமாக நடந்து வருகிறது , இது போன்ற மாற்றங்கள் எல்லாம் யார் சொல்லியும் நின்று விடாது , அதன் போக்கில் நடந்துகொண்டே இருக்கும் , உலக நடப்புகளை அரட்டை அரங்கம் நடத்தியோ , எழுதியோ அலசுவோருக்கு ஒரு பேசு பொருள் கிடைத்தது தான் மிச்சம்.
இப்படி நடந்தால் அப்போது என்ன ஆகும், ஒரு ஆண் அல்லது ஒரு பெண் தனக்கு இருக்கும் ஒரு கடுமையான வியாதியை மறைத்து மணம் புரிந்து கொண்டால் , சரி என்று அப்படியே வாழ்வது சரியா, இல்லை மணவிலக்கு(விவாக ரத்து தமிழ் அல்ல) கோருவது சரியா? எப்பொழுது சேர்ந்து வாழ இயலாதோ அப்போது பிரிவதே சரி அல்லவா.
வெள்ளைக்காரன் கண்டுபிடித்த மின்னணு நுண்ணலை அடுப்பு, தொலைக்காட்சி,தொலைப்பேசி,அலைப்பேசி, குளிர்சாதனம் என எல்லாம் வேண்டும் மணவிலக்கு முறை மட்டும் வேண்டாமா?
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்ப திழுக்கு..
முதல்ல இந்த கம்ப்யூட்டர்ல அண்டூ பட்டனை தூக்கனும்.
அது சரி, "பெற்றோர்களால் பார்த்து நிச்சயிக்கும் விவாகங்களில்,விவாகரத்து செய்வோரின் எண்ணிக்கை, காதலித்து மணம் புரிந்து, விவாகரத்து கோருபவர்களை விட குறைவாகவே உள்ளது"... இது எந்த சாம்ப்ளிங் தியரத்தில் கிடைத்த டேட்டா ? இல்லே, சும்மா அகஸ்மாத்தா உடரீங்களா ? :P
அதிருக்கட்டும், "லிவிங் டுகெதர்" ஒழுக்கமான நெறிமுறையா ? Choose your words :)
ப்ரியா,
அறிதல் பல் வகைப் படும். பொது அறிவு, நுண்ணறிவு, தன்னறிவு என்று சொல்லி கொண்டேபோகலாம். ஆனாலும், அறிவு என்றாலே நம்மை சுற்றி நிகழும் பல்வேறு செயல் பாடுகளில் இருந்து கற்றுக்கொள்வதையே அறிதல் என்கிறோம். பொதுவாகவே, அறிவு என்பதை நாம் படிக்கும் ஏட்டுக் கல்வி சொல்லித் தருவதாகவும், அறிவு என்பதை ஒரு துறையைப் பற்றி அலசி ஆராய்ந்து தெரிந்து கொள்வதையுமே நாம் குறிப்பிட்டு வருகிறோம்.படிப்பறிவு என்று மட்டுமே அதைக் கொள்ள முடியும்.
ஆனால் ஒருவருக்கு அறிவு நிரம்ப உள்ளது என்று சொன்னாலே அவர் என்ன படித்திருக்கிறார் என்ற கோணத்தில் தான் நம் கேள்வி எழுகிறது. நான் சொல்லும் வாழும் கலை அறிவு என்பது, உணர்ந்து , கற்று, தெளிந்து அதன் பின் எங்கு வேண்டுமோ அதனை பயன்படுத்துவது. வாழ்க்கை கல்வி என்பது, பல் வேறு கோணங்களைக் கொண்டது. நன்கு படித்தவர் என்று நாம் விளிக்கும் நபர் கூட வாழும் கலை தெரியாவிட்டால், வாழ்க்கையில் பூரண சந்தோஷத்தை அனுபவிக்கமுடியாது.
உதாரணத்திற்க்கு சொல்ல வேண்டுமானால்,ஏட்டுக் ல்வி என்பது "பணம்" சம்பாதிப்பது மாதிரி. வாழ்க்கை கல்வி என்பது, சம்பாதித்த பணத்தை , எத்தகைய வழிகளில் செலவு செய்து, மகிழ்சி காணமுடியும் என்பது தெரிந்து, செலவு செய்வது.
வவ்வால்,
நான் சொல்ல வந்த கருத்தை சரியாகச் சொல்லவில்லையா, அல்லது நீங்கள் சரியாக படிக்கவில்லையா.
தவிர்க்க முடியாத காரணங்களினால் நடக்கும் விவாகரத்து கூடாது என்று நான் சொல்லவே இல்லையே. தற்போதுள்ள காலகட்டத்தில், தன்முனைப்பு காரண்மாக ஏற்படும் விவாகரத்தைப் பற்றித் தான், என் கருத்தை சொல்லி இருக்கிறேன்.
தலைப்பை மட்டும் படித்தீர்களோ :)
keerthi..
\\"பெற்றோர்களால் பார்த்து நிச்சயிக்கும் விவாகங்களில், விவாகரத்து செய்வோரின் எண்ணிக்கை, காதலித்து மணம் புரிந்து, விவாகரத்து கோருபவர்களை விட குறைவாகவே உள்ளது"... இது எந்த சாம்ப்ளிங் தியரத்தில் கிடைத்த டேட்டா ? இல்லே, சும்மா அகஸ்மாத்தா உடரீங்களா ? :P"//
Ha..ha..உடான்ஸ் உட கூட ஒரு திறமை வேணும். அது என்கிட்ட இருக்கிறதா நான் நினைக்கல..
நடைமுறையில் இருக்கும் புள்ளி விவரங்களும், மனரீதியாக பாதிப்புகுள்ளான சிலரின் உணர்வுகளை பரிசோதித்தும், பின் பரிசீலனை செய்தும் தான் அந்த கருத்து வெளியிடப்பட்டது.
இதற்குண்டான விளக்கத்தை பதிவிலேயே சொல்லியிருக்க வேண்டும் நான். பின், பதிவு என்பது கட்டுரையாகி விடக் கூடாது என்ற காரணத்தால் தான்,சொல்லவில்லை. நல்ல கேள்வி .வாய்பளித்த்மைக்கு நன்றி.
பெற்றோரால் நிச்சயித்துசெய்யப்படும் திருமணங்களில் முக்கியமாக உறவு முறைக்குள் நிகழ்வது.ஏற்றுக் கொள்ளல் (acceptance).
தேர்ந்தெடுத்தாகி விட்டது, நிறை, குறைகளும் இருக்கலாம், போக, போக சரி செய்து கொள்ளலாம் என்ற மேலோங்கிய எண்ணம்,வாழ்க்கையை சீராக, பிரச்சனைகள் இருப்பினும், பொறுத்து போகும், மன நிலைக்கு தயார் படுத்திவிடுகிறது.இது தான் பெற்றோரால் பார்த்து நிச்சயிக்கப் படும் பெரும்பாலான திருமண உறவு முறைகளில் நிகழ்வது.
ஆனால் காதலித்து மணம் புரிபவர்களின் மனநிலை இதிலிருந்து, பெரும்பாலும் வேறு பட்டு தான் இருக்கிறது.தானே சுயமாக, தேர்ந்தெடுத்த தன் வாழ்க்கை துணை என்ற எண்ணத்தால்,தான் சரியாகத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறோம், என்ற பூரண திருப்தியினால் உண்டாகும், திருமண உறவு பந்தத்தில், ஒரு சிறு விஷயத்தில் கூட தொய்வு ஏற்படும் போது, அதை ஏற்றுக் கொள்வதோ, இல்லை, பொறுத்துப் போவதோ, சிறிது கடினமான காரியமாகி விடுகிறது.
மேலும் காதலிக்கும் போது, ஒருவரை ஒருவர் ஈர்ப்பதற்காக, நல்ல குணங்களை மட்டுமே, காட்டிக் கொள்ளவும், நல்ல குண்ங்கள் மட்டுமே கண்காணிக்கவும் படுகிறது. எனக்காக எது வேண்டுமானாலும் செய்வான்/வாள் என்ற எதிர்பார்ப்பு எப்போதும், நிறைவேறாத போது, ஒரு வித இயலாமை ஏற்ப்பட்டு, மனக்குமுறலாய் அது வெளிவர ஆரம்பிக்கிறது.
ஆனால் காதலிக்கும் எல்லோரும் இப்படித் தான் என்று நான் சொல்ல வரவில்லை. முழுமையாக ஒருவரை ஒருவர் அறிந்து , புரிந்து, ஏற்று, அதன் பின் மணம் புரிந்து கொள்பவர்களிடையே, விவாகரத்தும் சாத்தியம் அல்ல, அந்த பேச்சுக்கே அங்கு இடமும் இல்லை.அன்பு மட்டுமே அங்கு பரிபாலனம் செய்யும்.
\\" "லிவிங் டுகெதர்" ஒழுக்கமான நெறிமுறையா ? Choose your words :) "//
இதனைப் பற்றி தனிப் பதிவே போடும் எண்ணம் உள்ளது ஆகவே அடுத்த பதிவுக்கான தூண்டுதலை அளித்தமைக்கு நன்றி.பதிவில் தகுந்த வார்த்தையை பதிவு செய்கிறேனே..:)
Hi pebi,
//ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களினால், ஒருவரிடமிருந்து விவாகரத்து என்ற அப்போதிருந்த நிலை மாறி, சின்ன மனஸ்தாபத்தினால் கூட விவாகரத்து வாங்கிக் கொண்டால் என்ன என்ற எண்ணம் இப்போது மேலோங்கி விட்டது//
தவிர்க்க இயலாத காரணம் இல்லாமலே மணவிலக்கு கோறுவதான தொனியில் ஒலிக்கிறது உங்கள் கருத்து என்பதால் தான் அப்படி சொன்னேன். படிக்காமல் அல்ல!
அப்படியே தலைப்பை மட்டும் படித்து நான் சொல்லியிருந்தாலும் தலைப்பே விவாகரத்து தேவையா? என அதன் மீது கேள்வி எழுப்பியுள்ளது அதன் பொருள் மணவிலக்கு சட்டம் நீக்க வேண்டும் என்று வருகிறது. கட்டுரையும் அத்தகைய தொனியில் வந்துள்ளது.
நாங்க எல்லாம் தலை கீழா தொங்கினாலும் நேராகப் பார்ப்போம்!
Sowmya: I think I have nothing to include coz ur have written it so well.
Relationship- either arranged or love doesn't last longer. In India, we always have the fear of society and blaming them coz we will be branded.
Divorce- I don't wanna go with abuse/ financial or even sexual disorder.
If people anot get along, its not good to stay together. It becomes artifical relationship for the sake of children and family. Why live that way??
Lets not talk about wat our ancestors did/ It may or can be wrong too. Generations keep changing the way we live and so do life. Some can be submissice, possessive and aggressive. But not many can tolerate every thing for the sake of marriage isn't it.
Marriage is just a legal bond between two people for the society to show they are married. Why not accept people who stay together?? Ther is no commitment but the relationship lasts !!!
Seperation from marriage is a shame in our society. Will men/ women ready to accept these people again??
வவ்வால்,
தீராது..வேறு வழி இல்லை என்ற நிலையில் விவாகரத்து கூடாது என்று யாராலும் சொல்ல முடியாது. ஏன் விவாகரத்துகுண்டான சட்டமே அதனால் தானே இயற்றப்பட்டது. அதனால் அதைப்பற்றி விரிவாக எழுதவேண்டும் என்று தோன்றவில்லை.
தலை கீழாய் தொங்கிக் கொண்டே நேராய் பார்ப்பது எப்படி..சொல்லித் தந்தால், நாங்களும் முயல்வோமே..:P
hi priya,
I would like to give a post on "living together" as my next post.That time, we will discuss about it.
"\\ Seperation from marriage is a shame in our society. Will men/ women ready to accept these people again??"//
SHAME???- do they live life for themselves or for others.
Do you think, people got divorce never get a partner through out his/ her life?
if it is a shame then how can you recommend " living together " policy.Do you think, society will welcome that.
Do you think, people got divorce never get a partner through out his/ her life?
I donno the present situation Sowmya. My comments were based on how I perceived before I left.
It is accepted as a shame only for the parents or other family members and not the 2 people who are involved.
if it is a shame then how can you recommend " living together " policy.Do you think, society will welcome that.
Living together is not a shame. If u accept 2 good friends, why not two understandable soul to live together.
Who is the society?? Its you, me and others who talk within and outside four walls.
Why bother society who cares only about culture and not the well being of the individual.
priya,
You have given the answer for your question.:)
"\\It is accepted as a shame only for the parents or other family members and not the 2 people who are involved.//"
"\\Who is the society?? Its you, me and others who talk within and outside four walls.
Why bother society who cares only about culture and not the well being of the individual.//"
The same can be applicable with living together na :)
I answered to urs sowmya:))
தலைப்பைப் பார்த்தவுடன் ஆச்சரியப்பட்டேன், உங்களிடமிருந்து இப்படி ஒரு கேள்வியா? என்று. பிறகு முழு கருத்தையும் படித்த பின் தான் புரிந்தது, கோபத்தில்(ஆதங்கத்தில்) வந்த கேள்வி என்பது.
உண்மை தான். முன்பு இருந்ததைக்காட்டிலும் இப்பொழுது விவாகரத்து பெருத்துவிட்டது. இதற்கு என்ன காரணம்?
பெண் சுயம் (தன்முனைப்பு) அற்றவளாய், அடிமையாய், தன் நிலை குறித்து கேள்வி கேட்கும் சிந்தனை அற்றவளாய் இருந்த போது விவாகரத்து இல்லை. தவிர்க்க முடியாத காரணம் வந்த போது, வேறு வழி இல்லை என்ற நிலை வந்த போது, விவாகரத்து கோருமளவுக்கு துணிவற்று தன் உயிரை மாய்த்துக்கொண்ட பெண்கள் ஏராளம். அல்லது ‘எல்லாம் தலை விதி. பெண்ணாய் பிறந்துவிட்டால் பட்டு தான் ஆக வேண்டும்’ என்று தன் ‘தலைவிதியை’ நொந்து கொண்டு வாழ்க்கையை ஓட்டினர். பின்பு கல்வி அறிவு பெற்று கொஞ்சம் துணிவு பெற்று தவிர்க்க இயலாத நிலை வந்த போது விவாகரத்து கோர முற்பட்டனர் சிலர்.
இன்று பெண்கள் அணைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு, பொருளாதார விடுதலை பெற்று, சுயம் உள்ளவர்களாக பரிணமிக்கும் போது ஆணின் ஆதிக்கத்திற்கு கட்டுப்பட்டு வாழ்வது இயலாமல் போகிறது. பெண்ணின் வளர்ச்சியை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் நிறைய ஆண்களுக்கு இல்லை. இதனால் இயைந்து வாழ்தல் ஒவ்வாமல் போய் விவாகரத்து கோருதல் பெருகிவிட்டது. இது மாற்றத்தினால் வந்த குழப்பமே. மேலும் வரவிருக்கும் படிப்படியான மாற்றத்தினால் இந்த குழப்பமும் விலகும் என்றே தோன்றுகிறது. குழப்பம் தெளிவுக்கான அறிகுறியே.
மூர்த்தி
wow! wonderful comments murthy.
thank u :)
Post a Comment