இன்றைய கால கட்டத்தில், நான் இப்போது சொல்லக் கூடிய விஷயங்கள்,பழமை வாய்ந்ததாகக் கூட இருக்கலாம்.எப்போதோ கேட்ட பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது."காதல் என்பது எது வரை, கல்யாண காலம் வரும் வரை...கல்யாணம் என்பது எது வரை..கழுத்தினில் தாலி விழும் வரை " :)
காதல் என்ற சொல்லை நாம் எப்படியெல்லாம் புனிதப் படுத்துகிறோம். "நான்கு உதடுகள் உச்ச்ரிக்கிற அதிசயம்...காதல் என்ற சொல்லை சப்தமாக சொல்லாதீர்கள், அது அவ்வளவு மென்மையானது....அன்று நடந்த கவிதைப் போட்டிக்கு எல்லோரும் கவிதையோடு வந்திருந்தார்கள் , நீ மட்டும் உன் கண்களோடு" :)
எப்படியெல்லாம் காதலை பிராதனப் படுத்தியிருக்கிறார்கள்.நம் இலக்கியங்களை நாம் இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.ஒன்று பெண்ணே பிரதானம்,காதலே முக்கியம் என்று பேசியவை. மற்றொன்று,பெண்ணே பாவம்,உலகே மாயம் என்று வாழ்வையே மறுதலித்தவை. இரண்டும் வாழ்கையின் வேறு முனைகள்.எதிர் எதிர் திக்குகள்.ந்ம் இலக்கியம், நம் கதை, நம் சினிமா, தொலைக்காட்சித் தொடர், இவை அனைத்துமே, காதலை பூதாகாரமாக ஊதி காதல் ஜெயிக்க ஓடிப் போவது தான் தீர்வு.காதல் தோற்றால் தற்கொலை முடிவு என்ற நினைப்பை மனித மனங்களுக்குள் திணித்துள்ளன என்பதை மறுக்க முடியாது.
கோபம், பயம் போல காதலும் ஒரு உணர்வு தான்.காதல் கண்டிகப் பட வேண்டிய விஷயமும் அல்ல.கொண்டாடப் பட வேண்டியா விஷயமும் அல்ல. அதை மட்டும் புனிதப் படுத்துவதற்கு அதில் ஏதும் அவசியம் இல்லை. எதை நாம் புனிதப்படுத்துகிறோமோ அது அசிங்கமாகிறது என்று பொருள்.எது போற்றப்படுகிறதோ அது புறக்கணிக்கப்படுகிறது என்பது பூடகம். தாய், தந்தை, சகோதரகளை தேர்ந்த்டுக்க முடியாது.துணையை தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்.அவ்வளவு தான் வித்தியாசம்.
"ஏழை அப்பா விதி - ஏழை மாமனார் , முட்டாள் தனம் "என்கிற வரையில் தான், இப்போதுள்ள காதலர்கள் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை முறை அமைந்திருக்கிறது.இதற்கு பல காரணங்களை நாம் சுட்டிக் காட்டலாம்.
காலத்திற்கேற்ப்ப மாறிக் கொள்ள வேணுங்க ! நினைத்த படியேல்லாம் வாழ்கை அமையும் அப்ப்டின்னு நினைச்சு தான் காதல் செய்கிறோம்.சில நேரம் அமையுது, சில நேரம், தெளிவா யோசிச்சு தான் நாங்க ரெண்டு பேரும் எடுத்த முடிவு தான் , இது மாதிரி நாங்க ரெண்டு பேரும் வேறு நபர்களை கல்யாணம் செஞ்சுக்கலாம் என்ற முடிவை எடுக்க வைத்தது. ப்ராக்டிகலா யோசிக்கணுங்க !
இங்கே உள்ளம் எதை தேடி இருக்கிறது. காதலையா?? கல்யாணம் செய்வத்ற்கு முன், ஒரு வித இனக் கவர்ச்சி தான் காதல் என்ற சாயம் பூசி இவர்களை ஆட்கொண்டிருகிறது. நூற்றுக்கு எண்பது சதவிகிதம் இத்தகைய கவர்ச்சியினால் மட்டுமே ஆட்க் கொள்ளப் படுகிறார்கள். அதற்கு காரணம், காதல் என்பதற்கு முழு அர்த்தத்தையும், காதல் என்ற உண்மையான உணர்வு உணராமலே, காதலில் வீழ்ந்து விட்டோம் என்ற நினைப்புமே தான்.
Infatuation என்பதையே சரியாக புரிந்து கொள்ளாத ஒருவர் அடுத்தவர்களை சரியாக புரிந்து கொண்டதாக நினைப்பதும், அவர்களது வாழ்க்கையை காட்டிலும் பிரம்மாண்டமான வடிவத்தை உண்டாக்குவதும் தான், விரைவில் infatuation நீர்த்துப் போகக் காரணம்.
கவர்ச்சி என்பது இவ்வாறாக இருக்க, காமம் என்பது உடற் பசியாக மட்டுமே சித்தரிக்கப் படுகிறது. உடற் பசி மட்டுமே காமம் இல்லை.நியாமற்ற உறவுகள் மட்டுமே காமம் இல்லை. காமம் என்பது அன்பு இல்லாமல் நிகழ்கிற பாலுண்ர்வு.இருபாலருக்கும், அன்பு வழியும் போது ஏற்படும் உணர்வு காமம் இல்லை. கட்டாயத்தினால், அன்பு இல்லாமல் வேறொரு காரணத்தினால் நிகழ்வது காமம். காமத்திறகான மிகச் சிறந்த விளக்கத்தை திருவள்ளுவர் தான் தருகிறார். பொதுமகளிரிடம் வைத்துக் கொள்ளும் உறவு, இருட்டறையில் பிணத்தினை தழுவுவது போல என்று குறிப்பிடுகிறார். ஏனென்றால் அது அன்பினால் நிகழ்வது அல்ல.உடல் மட்டுமே சம்பந்தப்பட்டது.இதயமோ தொடர்பற்று இருக்கும்.
காமம்,கவர்ச்சி ஆகிய இரண்டும் ஏற்படக் காரணம் என்ன? அளவுக்கதிகமான கட்டுப்பாடுகளை விதித்து பெண்ணைப் புதிராக்க நடக்கும் முயர்ச்சிகள் தான் இதற்கு காரணம்.எல்லா ஊடகங்களிலும் நேசிப்பு மட்டுமே மூலக் கருவியாக இருந்து, அது மட்டுமே வாழ்க்கை என்கிற பிம்பங்களை ஏற்படுத்திக் கொண்டே இருப்பது தான். விலக்கி வைக்கும் போது தான் விருப்பம் அதிகரிக்கிறது. சிறு வயதிலிருந்தே இயல்பாக பழகும் நெறி முறைகளை ஏற்படுத்தினால் 24 மணி நேரமும், அடுத்த பாலினைப் பற்றி சிந்திக்கிற மனப்பான்மை குறையும்.
infatuation மற்றும் lust, ஆகிய இரு முனைகளுக்கும் இடையில் தான் காதல் இடம் பெறுகிறது. தன் மன ஓட்டங்களைப் புரிந்து கொண்டு, தன் இலக்குகளை தீர்மானித்துக் கொண்டு தன்னுடைய இலட்சியங்களுக்கு ஏற்ற ஒருவரை சந்திக்க நேர்ந்தால், பனியில் பாரிஜாதம் மலர்வதைப் போல மலர்வதே காதல்.
நாளாக நாளாக அப்படிப்பட்ட ஈர்ப்பு அதிகரிக்கும்.இன்னொருவரிடம் இருக்கின்ற மற்ற பரிமாணங்களையும் உணர உணர மகிச்சியும்,அன்பும் மேலோங்கிக் கொண்டேயிருக்கும். நாளடைவில், உடல் மறைந்து போகும்.உருவம் காணாமல் போகும் உள்ளம் மட்டுமே எஞ்சி நிற்கும்.அப்போது ஆழ் மனத்தின் தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியும்.மன முதிர்சியினாலும், சரியான புரிந்து கொள்ளலினாலும் ஏற்படும் காதலே, இவை எல்லாவறையும் உணர சாத்தியம்.
நமக்கு வாழ்க்கை சலித்துப் போவதற்கு காரணம், அதை குறிப்பிட்ட வரைமுறையில் (programmed and predictable) நாம் எதிர் பார்ப்பது தான்.அடுத்தவ்ர்கள் நாம் எதிர்ப்பார்த்ததில் இருந்து மாறுபடும் போது தான் சலிப்பு வருகிறது. அன்பின் எண்ணற்ற பரிமாணங்களில் ஒன்று தான் காதல்.அதை மலர்களை ஸ்பரிசித்தும், குழந்தைகளை கொஞ்சியும், மானுடத்தை நேசித்தும், மற்றவர்களை அனுசரித்தும் வெளிப்படுத்தலாம்.
அப்படிப்பட்டவர்கள் காத்திருக்கிறார்கள். அவசரப்படுவதில்லை.அப்படிப்பட்டவர்கள் முயற்சி செய்வதில்லை.முந்தியடிப்பதில்லை.தானாகவே அவர்கள் மடியில் அவர்களுக்கு பொருந்துகிற துணை வந்து விழுகிறது.
யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
Will comeback and coment. Long post and need time to read. Have a good weekend.
ஆஹா..க.கா.கா. மூன்றையும் பறறி அருமையான விளக்கம் கொடுத்து இருக்கிறீர்கள்..
காதல் உணர்ச்சியா இல்லை உணர்ச்சியின்
எழுச்சியா.?
சமீபத்தில் ஒரு வார பத்திரிக்கையில் கேள்வி பதிலில் வந்த ஒரு கேள்வியும் அதற்கான பதிலும்..
கேள்வி : காதலுக்கும் காமத்துக்கும் உள்ள ஒற்றுமை.?
பதில்: இத இல்லாமல் அது இல்லை..
இதில் இது எது, அது எது என்று எப்படி நாம் பொருத்துகிறோமோ அதை பொருத்து தான் எது உண்மையான காதல் எது என்று பொருள் கொள்ள முடியும்.
//அன்பின் எண்ணற்ற பரிமாணங்களில் ஒன்று தான் காதல்.அதை மலர்களை ஸ்பரிசித்தும், குழந்தைகளை கொஞ்சியும், மானுடத்தை நேசித்தும், மற்றவர்களை அனுசரித்தும் வெளிப்படுத்தலாம்.//
ரொம்ப உண்மை sowmya..எதை நாம் அதிகமாக நேசிக்கிறோமோ அது தான் உண்மையான காதலாக இருக்க முடியும்...அது இவ்வுலகில் எதுவாக இருக்கலாம்..:)
நல்ல பதிவு Sowmya.தொடருட்டும் இது மாதிரி பதிவுகள்..:)
Love= lust= Desire.
Wat can I say?
Its more of how you control your vibes or feelings in that situation. Some take it for granted and for others its like a flower.
hey priya, you are welcome. Awaiting to see yr comments !
----------------
Hey balar,
Romba enjoy panni padichirukeenga pola :) kada kada nu vanthirukku unga comments :P
oops...we both commented at the same time :) I dint noticed ur comment
Nicely said priya :)
//Romba enjoy panni padichirukeenga pola//
தங்களுடைய தமிழ் பதிவுகள அனைத்தையுமே ரசித்து தான் படிப்பேன்,அற்புதமான உரைநடைக்காக..:)
பாலர் ,
தமிழ் வலைப்பதிவு ஆரம்பிக்கும் போது எனக்கு பேச்சுத் தமிழில் எழுதுவதா, அல்லது செம்மொழித் தமிழில் எழுதுவதா.எப்படி எழுதினால் படிக்க ஏதுவாக இருக்கும் என்று நினைத்ததுண்டு.சில சமயங்களில் பொருத்தமான வார்த்தைகள் செந்தமிழில தான் அதிகமாக என்க்கு புலப்பட்டது.அதனால் தான் எப்படி எழுத வார்த்தைகள் வருகிறதோ அதன் படியே எழுதவோம், படிப்பவர்கள் வேண்டாம் என்று கருதினால் விட்டு விடலாம் என்று எண்ணினேன். உங்களைப் போன்றோரின உற்சாகப் படுத்தலினால் என்னால் இயன்ற அள்வுக்கு செம்மொழியை பயன்படுத்துவது என்று தீர்மானம் கொண்டேன்.இப்போது அத்தீர்மானம் உறுதியாகி விட்டது. நன்றிகள் கோடி பாலர் :)
நமக்கு வாழ்க்கை சலித்துப் போவதற்கு காரணம்..
I think people shud stay together and never get committed in todays world. When you look at the divorce rate, its better to stay in a relationship as living together than getting married. A comitment from ones life to another person is a heavy duty stamped.
I know u will disagree;)
Ha..ha.. priya..How come you declare that I disagree with your opinion..
Muthalla athai sollunga parpom .. :P
Hey Soms...
nidhaanama 2 murai padichen..yosichittu irukiren..saapittu vandhu comment podaren :)
:) Namakullu erukira timing dhan.
Adhunala sirichidunga.
hey sree....
ivlo nerama saapida..:P
--
priya..
hmm ..I dont have structured frame of thoughts. its open always :)
:) :)
Nalla post Sowmya!!!
//அடுத்தவ்ர்கள் நாம் எதிர்ப்பார்த்ததில் இருந்து மாறுபடும் போது தான் சலிப்பு வருகிறது. அன்பின் எண்ணற்ற பரிமாணங்களில் ஒன்று தான் காதல்.//
//கோபம், பயம் போல காதலும் ஒரு உணர்வு தான்.//
Miga Arumaiyana balanced thought writing. It has the impact and force that I have seen in some famous writers. Good work keep it up!
hi vinaiyuukki..
Welcome to my blog :)
---
hello prabhu,
Thanks for your kind words :)
I am kidding girl:) Whatz happening at ur side?
Priya,
"\\நமக்கு வாழ்க்கை சலித்துப் போவதற்கு காரணம்..
I think people shud stay together and never get committed in todays world. When you look at the divorce rate, its better to stay in a relationship as living together than getting married. A comitment from ones life to another person is a heavy duty stamped."//
:))
We can find out many ways to say a big NO to all these relationships, commitment. Thats not at all a problem. Any body, who are willing to lead the life , as they like, can achieve that.
Being in the society, we conditioned in such a way to go along with the people , culture, norms, rules etc etc. so we must find a solution to balance both the sides. We have to be with the commitment , at the same time, we like to enjoy the essence of living. We, the people are searching for a right tool to balance these two.
I feel, its possible. But its all depends upon the interest and understanding about life and about the relations hip around us.
You said it awesome girl.
Post a Comment