யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!

Wednesday, June 13, 2007

உன்னிடம் ஒரு தனி மனிதன்..

"பொய் சொல்லக் கூடாது பாப்பா ! " - பாரதியாரின் வரிகளை சத்தம் போட்டு படித்துக் கொண்டிருந்தான் என் இளைய மகன். அதே நேரத்தில்,

"பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின் " - இது என் மூத்த மகனின் வீட்டுப் பாடம்.

இருவருக்கும் இடையே நான்....விளக்கம் சொல்லித்தர வேண்டும். போச்சு..! என் பாடு திண்டாட்டம் தான் என்று நினைத்துக் கொண்டே, இந்த இரண்டு கருத்தையும் சரிவிகிதமாக சொல்லித் தந்தாக வேண்டுமே..! ஒரு சில நிமிடங்கள் சிந்தனையிலேயே கழிந்தது...


வாழ்கையில் எல்லாவற்றையும் சரிவிகித்த்தில பேலன்ஸ் செய்து தான் ஆக வேண்டியிருக்கிறது. அந்த நெளிவு சுளிவும் தெரிந்திருக்க வேண்டும்.அதே சமயம், வேல்யூஸ் என்று நாம் பின்பற்றும் முறைகளையும் குலைக்காமல், லாவகமாக வாழ்வை நாம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

"பொய் சொல்லக் கூடாது" என்று கற்றுத்தரும் நாமே,சிலசமய்ங்களில்,"பொய் கூட சொல்லலாம் அது ஒரு சில நல்ல விஷயங்களைத் தருமேயானால்", என்று சொல்லித் தரும் போது, நாம் சொல்லிக் கொடுக்கும் விஷயம் எவ்வாறு இளைய தலைமுறையினரை சென்றடைகிறது என்பதை கவனித்தே ஆகவேண்டி இருக்கிறது. அம்மா...நீ சொல்வது போல் நாயகன் படத்தில் டயலாக் வருகிறது.மீடியாவின் வீச்சு அதிசயிக்கத் தான் வைக்கிறது.

பாடத்தில் வள்ளுவரின் வரிகளாக மட்டுமே பார்க்கப் படும் ஒரு செய்தி, மணிரத்னம் படத்தின் மூலம், ஒருவரின் மனதை சென்றடைகிறது என்றால், எத்தகைய பொறுப்பு நம்மிடத்தில இருக்கிறது. சிறிது பயம் கூட ஏற்படுகிறது. நாம் சரியான வழியை, சீராகத் தான் காட்டுகிறோமா....நமக்கே தெளிவு என்பது தேவைப் படும் போது, நாம் வழிகாட்டும் பாதை சரியான முறையில் எடுத்துக் கொள்ளப்படுமா என்றெல்லாம் சிந்தித்து தான் செயல் புரிய வேண்டியிருக்கிறது.

இடம், பொருள், ஏவல் என்று சொல்கிறோமே, அது போல,நாம் சீராக பின்பற்ற ஒரு சில நெறி முறைகளை சொல்லித் தருவதோடு, வாழ்வின் ஒரு சில நெளிவு சுளிவுகளையும் நாம் கற்றுத் தர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நமக்கெல்லாம் யார் சொல்லித் தந்தா...நாமெல்லாம் நல்லா இல்லாமயா போய்டோம்..எல்லாம், அவங்கவங்களா கத்துப்பாங்க....காலம் கற்றுத் தரும்.இப்படி பலரும், இதை ஒதுக்கி தள்ளலாம்.

நம் காலம் வேறு, இவ்வளவு exposure நம் காலத்தில் இல்லையே...! அறிவையும், புத்திசாலித்தனத்தையும் வளர்க்கும், இக்காலத்து மீடியாக்கள், சமயத்தில் அசாத்திய துணிவையும், அசட்டு தைரியத்தையும் கூட வளர்க்கத் தான் செய்கிறது. காலம் மாறினாலும், எத்துணை தான் வளர்ச்சி என்பதை நாம் எட்டினாலும், குழந்தை பருவம், குழந்தை பருவம் தானே.

பெற்றோர்க்கு தம் குழந்தைகளை வளர்க்கும், பொறுப்பும் , அக்கறையும் இப்போதெல்லாம் அதிகமாகவே உள்ளது.ஆனால், எத்தகையவற்றை நாம் கற்றுத் தருகிறோம் என்பதை பொறுத்து, குழந்தைகளைன் வளர்ச்சியானது ஆரோக்கியமானதாக உள்ள்தா..இல்லையா என்பதை நாம் உறுதி செய்து கொள்ளலாம்.

ஒரு சிலவற்றை இப்போது பார்போம்..குழந்தைகள்..

யாரையும் சாராமல் இருக்கக் கற்றுத் தருவது

கமிட்மெண்ட்டையும், பொறுப்பையும் கற்றுத் தருவது

உலகை எதிர் நோக்கும் துணிவை வளர்க்க கற்றுத் தருவது

சமய சந்தர்ப்பங்களுக்கேற்ப்ப, சிந்தித்து முடிவெடுக்கும் திறனை கற்றுத் தருவது

என் வாழ்கை, அதை நேசிக்கும் விதத்தை கற்றுத் தருவது


இவை எல்லாவற்றையும் விட, வாழ்கையை எவ்வாறு பேலன்ஸ் செய்து, முன்னேறுவது என்பதை பெற்றோர் அவசியம் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும். இவ்வாறு கற்றுத் தரும் முறைகள், நம் பாடத் திட்டத்தில் இருந்தால் சால சிறந்தது தான்..ஆனால், அத்தகைய மறுமலர்ச்சி நடக்க பல ஆண்டுகள் பிடிக்கும்.

நல்ல உண்வும், உடுக்க உடையும், நல்ல கல்வி நிலையத்தில் பண்பட்ட கல்வியும், கேட்ட்பவை அனைத்தும் வாங்கி குழந்தைகளை மகிழ்விக்கும் எண்ணமும், பாசமும், நேசமும், அக்கறையும் மட்டுமே தந்து விட்டால், தன் குழந்தைக்கு செய்ய வேண்டிய கடமைகள முடிந்து விட்டதாகத் தான் பெற்றோர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்:. தாம் இல்லாவிட்டாலும், வாழ்கையை தன் குழந்தை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்று எண்ணிப் பார்க்க மறந்து விடுகிறார்கள். ஒரு தனி மனிதனாக , அக்குழந்தையை நோக்காதது தான் அதற்குக் காரணம். என்னுடைய சொத்து என்று நினைக்காமல்,, ஒரு தனி மனிதனை வளர்க்கும் பொறுப்பை நான் ஏற்றிருக்கிறேன் என்று, ஒரு ஒரு பெற்றோரும் நினைதார்க்ளேயானால், மேற்கூறிய அனைத்திற்க்கும் எத்துணை முக்கியத்துவம் தர வேண்டுமென்பது விளங்கும்.

பெற்றோரால் பாராட்டப்படும் அன்பு என்பது, தம் மக்களை , அவர்களாகவே வளரச் செய்து, அவ்வளர்ச்சியை பார்து பூரித்துப் போவதில் அடங்கியிருக்கிறது. நம் பார்வை அவர்களது, ஒரு ஒரு அடியையும் உற்று நோக்குவாதாக இருந்தாலும், ஒரு பூ மலருதல், இயல்பாக நடந்தால் எத்தகைய மணம் வீசுமோ, அதே போல், இயல்பாக குழந்தைகளின் வளர்ச்சி இருக்கும் பட்சத்தில், அவர்களது, முழு திறன் வெளிப்பட்டு, உள்ளிருக்கும் அதீத ஆற்றலை அது வெளிக் கொணரும். அப்போது, நாம் நினைத்துப் பார்க்காத அளவுக்கு, அவர்களுக்குள் திறமை இருப்பதை நாம் கண்டறியலாம்.

Your children are not your children.
They are the sons and daughters of Life's longing for itself.
They come through you but not from you,
And though they are with you, yet they belong not to you.
You may give them your love but not your thoughts.
For they have their own thoughts.
You may house their bodies but not their souls,
For their souls dwell in the house of tomorrow, which you cannot visit, not even in your dreams.
You may strive to be like them, but seek not to make them like you.
For life goes not backward nor tarries with yesterday.
You are the bows from which your children as living arrows are sent forth.


- Kahlil Gibran

5 comments:

வவ்வால் said...

//"பொய் சொல்லக் கூடாது பாப்பா ! " - பாரதியாரின் வரிகளை சத்தம் போட்டு படித்துக் கொண்டிருந்தான் என் இளைய மகன். அதே நேரத்தில்,

"பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின் " - இது என் மூத்த மகனின் வீட்டுப் பாடம்.//

இதைத்தான் நகைமுரண் என்பார்கள் போலும். வளர்ந்த பெரியவர்களுக்கே குழப்பம் எனில் சிறுவர்கள் என்ன செய்வார்கள். ஆனாலும் நம்ம பெரியவர்கள் இப்படி ஏடாகூடாமா தத்துவங்களை சொல்லி வச்சுட்டுப் போய்டுராங்க அகப்பட்டுக்கொள்வது நாம தான்!

நல்ல அசலசல்! ( சர்ப் எக்ஸ்செல் போட்டிங்களோ)

priya said...

Lies- Its not be taught, but picked based on situations. Its not a sin to lie coz thaz how the world lives today. If you wanna come up, you gotto be a big mouth and do talk as if you know even if u don't. Its more like lieing but a little showoff.

Is it worth teaching a kid?? No from parents side, but can happen from friends circle.

Let them learn from their lesson in practical life.

வவ்வால் said...

என்னாச்சு பெபி ,
நிரம்ப வேலையோ, சத்தமே காணோம், உங்களைக் கேட்காமல் ஒரு வலைபதிவில் உங்கள் பதிவிற்கான இணைப்பை தந்துள்ளேன். வலைதிரட்டிகளுக்கு(blog aggregator) அப்பால் உள்ள நல்ல வலைபதிவுகள் என அவருக்கு தெரிந்த சிலவற்றை ஒருவர் பட்டியல் போட்டார், அவருக்கு தெரிந்ததை சொன்னால் மட்டும் போதுமா எனவே எனக்கு தெரிந்த ஒரு நல்லப்பதிவான எண்ணசிதறல்களையும் எடுத்து சொன்னேன்., உங்கள் பதிவும் ஒரு நல்லபதிவு என்பதால் அங்கு எனது கருத்தாக சொல்லியுள்ளேன்.

Sowmya said...

hi voval,

welcome.Thanks for the support :)

Sowmya said...

hi priya,

I dont think sin or good things exist. Its all our mentality becoz of the way we got conditioned .

Yes..Lies are not to be taught. Not only lies, no things in this world can be taught by some one.

Everything is just a observation. We learn things from others by using the intellectual sense through grasping. I just want the parents to give a opportunity for their kids to know , whats happening around them. So that,the kids can grasp and they can even think about it, before they face it through some out sources.

Nowadays kids are very smarter than us. They know where to lie and when to lie. They have a big mouth to lie even to the parents too.

we have our responsibility to show them the so called values. And we must elaborately discuss the results and the reactions for their actions. We are just preparing them to face the world.

Before going to the kids, we must think, what we are and how we are. There are possibilities for the parents to lie, in front of their kids should get it back from them. It’s a boomerang action.

People who are ready to see their kids to lie even to them, can be encouraged to follow what you have said :)