யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!
Friday, August 24, 2007
க(ம்பன்)ண்ணதாசன் ஏமாந்தானா? ஏமாற்றினானா?
பாடல் : கண்ணதாசன்
படம் : நிழல் நிஜமாகிறது
கம்பன் ஏமாந்தான் -
இளம் கன்னியரை ஒரு
மலர் என்றானே
கற்பனை செய்தானே
கம்பன் ஏமாந்தான்
அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது
பாய்வதினால் தானோ
அருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான் அது
கொதிப்பதனால் தானோ...
தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால்
தீபத்தின் பெருமையன்றோ - அந்த
தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால்
தீபமும் பாவமன்றோ...
வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு
வரிசையை நான் கண்டேன் - அந்த
வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட
நானும் ஏமந்தேன்
ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம்
அடுப்படி வரைதானே - ஒரு
ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால்
அடங்குதல் முறைதானே
இப்பாடலில் கண்ணதாசன் குறிப்பிட்டுள்ள வரிகள் (நீல நிற வரிகள்) சரியானவை தானா? அவ்வாறு ஏன் குறிப்பிட வேண்டும். இதைப் பற்றி தங்கள் கருத்துகள் என்ன? பகிர்ந்து கொள்வோமா..
=================
"நான் மானுட இனத்தை ஆட்டி வைப்பேன்
அவர் மாண்டு விட்டால் அதை பாடி வைப்பேன்
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை
ரத்தத்திலகம் படத்தில் தானே நடித்து, கண்ணதாசன் பாடிய வரிகள் இவை. "நான் நிரந்தரமானவன் அழிவதில்லை..எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை " என்பதை வெறும் பாடல் வரிகளாக கொள்ள முடியவில்லை. கண்ணதாசன் ஒரு கவிஞனாக மட்டுமே பார்க்கப்படுபவன் இல்லை. திரை இசைப் பாடல்களுக்காக அவன் எழுதிய கவிதைகளை வைத்து, வெறும் திரைப்பட பாடல் கவிஞன் என்று என்னால் முத்திரைக் குத்த முடியவில்லை.
காலத்தை கடந்து நிற்கும் பாரதிக்கும் அவனது கவிதைகளுக்கும் சமமானவன் கண்ணதாசனும் அவனது படைப்புக்களும்.அவனது ஒவ்வொரு வரிகளும், அவனுடைய இயல்பையும், வாழ்க்கை குறித்து அவன் கொண்டிருக்கும் அபிப்ராயங்களையும் தெள்ளத் தெளிவாகத் தான் காட்டி வந்திருக்கின்றன. திரை ஊடகம் ,அவன் படைப்புகளை, அவனது எண்ணங்களை பாமரனிடத்தில் கொண்டு சேர்த்தன. அவனை கவியரசு கண்ணதாசனாக காண்பதை விட, வாழ்க்கையை முழுதும் வாழ்ந்து முத்தெடுத்த ஒரு தீர்க்கதரிசியாகத் தான் நான் காண்கிறேன்...
திரை இசைப் பாடல்கள் எழுதும் கவிஞர்கள், பொதுவாக, திரையில் அப்பாடலை பாடி நடிக்கும் பாத்திரப் படைப்பிற்கு தகுந்த வண்ணம் தான் பாடல்களை இயற்றுவார்கள். ஆனால் கண்ணதாசனைப் பொறுத்தவரையில், அவன் எழுதிய பாடல் வரிகள், பாத்திரப் படைபின் திறனை மீறி தான் கொடுக்கப ்பட்டிருக்கின்றன. இதை பல பாடல்கள் கொண்டு உணர்த்த முடியும். ஒரு குடிகாரன், சோம்பேறி, தன் சகோதரியின் சொற்ப சம்பளத்தில், தானும், தன் மனைவி , குழந்தையும் வாழும் நிலை குறித்து சிறிதும் சிந்திக்காத சுயநலவாதி பாடும் பாடலா இது...
"தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு....
வாழ்வின் பொருள் என்ன..நீ வந்த கதை என்ன..
கள்ளிக்கென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி..
காட்டுக்கேது தோட்டக்காரன் இது தான் என் கட்சி..
தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்..
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்..
என்னைத் தோண்டி ஞானம் கண்டேன் இது தான் என் கட்சி..
உண்மை என்ன..பொய்மை என்ன..
இதில் தேன் என்ன..கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே
இப்படி ஒருவன் பாடினால், அவன் தெளிவான நோக்கு உள்ளவனாகத் தானே இருக்க வேண்டும். ஆனால் பாத்திரப் படைப்பு , முற்றிலும் வேறு விதமாக இருந்த, அப்படத்தில், கண்ணதாசன் ஏன் இப்படி பாடலை எழுதினான். பாத்திரப் படைப்பு என்பது ,அவனைப் பொறுத்தவரை வெறும் பெயருக்குத்தான். அவனினிலிருந்து வெளிப்படும் வரிகள், எல்லாமே அவன் சிந்தனை, அவன் கருத்து, அவனால் உணரப்பட்டவை. வெகு சாதாரணமாக அவன் பாத்திரத்திற்காக கவிதை எழுதினான் என்பதை சொல்லி விட முடியாது.
சரி..இப்போது, பிரச்சனைக்குரிய பாடல் வரிகளுக்கு வருவோம். கம்பன் ஏமாந்தான்..
நீங்கள் கூறுவது போல், பாத்திரப் படைப்பிற்காக அப்பாடல் எழுதப்பட்டாலும், அப்பாடலின் வரிகள், கதாப் பாத்திரத்தின் எண்ண வெளிப்பாடாக மட்டும் கொள்வதிற்கில்லை. பல் வேறு கோணங்களில் அவ்வரிகளை நாம் புரிந்து கொள்ளலாம். முதல் கோணம்.. ஆண்களை துச்சமென மதிக்கும் கதாநாயகியை , அவளை நேசிக்கும் கதாநாயகன், சீண்டுவது போல பாடலைப் படைத்தது. இரண்டாவது கோணம், இப்பாடலின் மூலம் கதாநாயகன், ரசிப்பு -(அம்பு விழி என்று...), ஏக்கம் -(தீபத்தின் ஜோதியில்.....) ,அறிவுரை ( ஆத்திரம் என்பது...) போன்ற தன் பாவங்களை (expression)வெளிப்படுத்துவதாக எழுதப் பட்டிருக்கலாம்.
மூன்றாவது கோணம், கவிஞன் குறிப்பேற்றுதலை அவ்வரிகள் மூலம் வெளிப்படுத்தியிருக்கலாம். என் கேள்வி இங்கு தான் ஆரம்பமாகிறது. " ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம் அடுப்படிவரை தானே"
பாடல் பிறந்த வருடம் 1978.. அப்போதைய நிலையில் பெண்களின் நிலை , கோபத்தை அடுப்படி பாத்திரங்களை "ணங் " என்று வைத்து காண்பிப்பதிலேயே இருந்து வந்திருக்கிறது. பெண்களின் இயலாமையும், அவர்களை அவர்களே உணரமால் போனதையும் இவ்வரிகள் சித்தரிப்பதாக எடுத்துக் கொண்டாலும், அதற்கு அடுத்த வரிகள் தான் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. " ஒரு ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறை தானே...." எவ்வகையான ஆண் என்றாலும், பெண்ணே நீ அவனுக்கு அடங்கி நட என்று சொல்லவில்லை அவ்வரிகள்
துணைவன் ஆதிக்க நாயகனாக - எல்லா விதத்திலும் தலை சிறந்தவனாக,விளங்குமிடத்து " அடங்குதல் முறை தானே - அவனுள் ஐக்கியமாவது முறையானது தானே என்று பொருள் கொள்ளும் விதமாகவும் இவ்வரிகள் அமைக்கப்பட்டிருக்கலாம். அப்படித்தான் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் . ஏனெனில், கதாநாயகன், கதாநாயகியின் அன்பு வேண்டி தான் அப்பாடலை பாடுகிறான். பாடலின் சுவையை கூட்டுவதற்காக, "கம்பன் ஏமாந்தான்.." என்று பாடலை ஆரம்பிப்பது போல் பாடல் அமைக்கப ்பட்டிருக்கிறது.
கம்பன் ஏமாந்து தான் போனான், கன்னியரை ஒரு மலர் என்று கம்பன் வாழ்ந்த காலத்தில் பார்த்ததை, கண்ணதாசன் அவன் காலத்தில், கம்பன் ஏமாந்தான் என்று பாடிச் சென்று விட்டான். இன்றைய காலகட்டத்தில், கண்ணதாசனும் ஏமாந்து தான் போனான் என்று கூறும் அளவுக்கு ஆதிக்க நாயகனுக்கு சமமான , ஆதிக்க நாயகிகள் அவதரித்து விட்டனரே...ஆம்! கண்ணதாசன் ஏமாந்து தான் போனான். ஐக்கியமாகத் தான் ஆள் இல்லை இங்கே..
Labels:
எம்.எஸ்.வி,
கண்ணதாசன்,
கமல்,
கம்பன்,
கம்பன் ஏமாந்தான்,
நிழல் நிஜமாகிறது
Subscribe to:
Post Comments (Atom)
30 comments:
sowmya, திரைப்படப் பாடல்களின் வரிகளை பொதுவாக சமுதாயத்துடன் ஒப்பட்டு பார்ப்பது சரியானதல்ல என்பது எனது தாழ்மையான கருத்து..திரைப்படப் பாடல்கள் திரைக்கதைக்கும் அதன் சூழலுக்கும் ஏற்பவே எழுதப்படுகிறது..அதை அத்திரைக்கதையில் ம்ட்டும் தான் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்..
உண்மையில் இப்பாடல் எந்த சூழ்நிலையில் கதாநாயகன் பாடுகிறான் என்று பார்த்தால் இந்த பாடல் வரிகளில் கண்ணதாசன் தப்பாக எதுவும் கூறவில்லை.
ஆண்கள் என்றால் அலட்சியமாக ஏளனமாக நினைக்கும் ஒரு பெண்னை பார்த்து அவள் மேல் அன்பு கொண்ட கதாநாயகன் அவளை அறிவுறுத்தவதற்காக பாடுவதாக மட்டுமே நாம் இங்கு பார்க்க வேண்டும்..
இதே போல் கவிஞர் வைரமுத்து தனது பாடல்
ஒன்றில்
"விடிகாலை விண்ணழுகு
விடியும் வரை பெண்ணழகு"
என்று எழுதி இருந்தார் அதற்கு சில் பெண் இயக்கங்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு வந்தது..
படுக்கை அறையில் கணவன் மனைவியை பார்த்து
நீ ரொம்ப அழகாக இருக்கிறாய் என்று கூற்வது இயல்பு அதற்காக இரவில் மட்டும் தான் அழகாய் இருக்கிறாய் பகலில் அல்ல என்று பொருள் பட்டால் அது கவிஞரின் தப்பு அல்ல.
பி.கு..ஒரு வேலை நிறைய பேர் வீட்டில் சண்டை தோசைக் கரண்டியிலும் பூரிக்கட்டையிலும் ஆரம்ப்பதால் கண்ணதாசன் அப்படி குறிப்பிட்டோரே என்னவோ..:))
I tend to agree with balar. We cant tell if those words were meant to reflect the hero's character and the situation (kamal - film brings back memories of my youth in Erode!) or kannadasan. Cannot blame kannadasan himself for this I think.
But still such sentiments are quite common in tamil film songs (and movies) and that means while above excuse, excuses the song writer, it still reflects badly on our society and culture.
Sowmya, I think balar & arunk have put it very clearly.
1.If you ask me if I subscribe to these lines, the answer is no.
ஆத்திரம் எல்லா இடங்களிலும் யாருக்கும் வரக்கூடும், யாராயிருந்தாலும்! Fundamental Rights :)
2. ஆதிக்க நாயகியோ, நாயகனோ, யாராயினும் சாதிக்க நினைத்தால் மற்றவர் வழி விடுதல் தான் இயற்கை.
3.The situation and the relative forces between the characters in that situation motivated the poet to write these words. Even at the time when the movie was released, this kind of belief in general would have been looked down upon. The statement's relevance today? A non-issue.
4.We get to hear the heroine asking the hero (while dancing to @#!@! movements) 'shall we have a child before marriage or should we get married before having a child" etc...progressive thoughts! May not reflect the poet's belief. It must reflect the producer's belief in the box office, I guess.
The lyrics are supposedly stimulated by the story & the characters and may not be representing what the poet himself believes in...
'உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக' என்பதும் கதைக்காக எழுதப் பட்டது தான்,
'சட்டி சுட்டதடா, கை விட்டதடா' என்பதும் கதைக்காக எழுதப் பட்டது தான்.
எங்கேயும் மாட்டிக்காமல் பதில் சொல்லி விட்டேனா?
நானும் எதாவாது சொல்லலாமா?
"மெட்ராஸ்ல ஓடுது கூவம் ,
இந்த பதிவ படிக்கிறவங்க பாவம்,
இத சொன்னா வரும் கோவம்!"
இதுக்கு மேல நான் எதுவும் சொல்ல மாட்டேன்!
Sowms...naan indha padhiva padichen....enakku onnum naan paavama theriyalai..anyways..
sowms..I love this song as the tune is catchy and the light laugh inbetween the lyrics has its own appeal.
Inga ellarum sonna maadhiri idhu kadhaikaaga ezhudhi irundhaalum...andha lyricsa paadumpodhu singer voicela oru kindal and seduction irukkum paatheengala ?
idha oru vambukku izhukaradho illa chumma seendi paakaradhu maariyo kooda interpret pannalam.Like an invitation to the girl to challenge him.
But adhellam illama verum oru statementaa paartha , I think its chauvinistic.
Sowms, if anybody is chauvnistic , its a waste of time arguing with them...ignore seidhuttu..we shd carry on with our lives. Even they know it's outdated ideas and futile efforts.
My grandma always says "guniyaravanga guninjadhaan kuttravanga kuttuvaanga"
nice post ,Sowms.
பாலர்,அருண், குமார், ஷ்ரீ..
தங்கள் கருத்துக்கள் அருமை. பகிர்தலுக்கு என் நன்றிகள் பல :)
------
வவ்வால்,
கூவம்..கூவம்..கூவம்..
அதை மட்டும் சுவாசிக்கிற
நீங்க பாவம்..
பூனை கண்ணை மூடினா இருட்டிடுசாம் பூலோகம்..
கண்டத மட்டுமே நினைச்சா எப்படித் தெரியும் கற்பூரம்..
கூவம்..கூவம்..கூவம்..
அதை மட்டும் சுவாசிக்கிற
நீங்க பாவம்..
பூனை கண்ணை மூடினா இருட்டிடுசாம் பூலோகம்..
கண்டத மட்டுமே நினைச்சா எப்படித் தெரியும் கற்பூரம்.. //
ahaaaa
neenga neraiya kavidhai ezhudhanum sowms :)
Sowms...I found the vereses quite romantic not offensive..but I cld'nt put my finger on it.
You have analysed it very well...enjoyed reading it.
Also I like the way u have put it in parts..modhla engala kettutu appuram oru reply maari rest of the post..good :)
C'mon Sowms...aadhikka naayagigal if circumstances are suitable would only love to surrender...but where are the 'Aadhikka Nayakans' ?
Ippo ellam girls enna velai seiyaraanga , how much do they contribute to the family income nnu oru kosten varudhilla ? angeye aadhikkam ellam kaanama poidudhu.
Nalla irundhudhu , Sowms :)
Oh...That is a unique way of looking at the lines! Excellent approach.
Innum vera ennenna missiles vachirukkeenga?
Sowmya
hmm... interesting and wonderful perspective.
Sree
BTW you seem to be asking for kavidhai.... wait for few days I am coming back soon! lol
hey sree,
"\\modhla engala kettutu appuram oru reply maari rest of the post..good :)//"
Mostly, people are not expressing their actual views , for a blogger's post. At one point, they simply go with the blogger's view, or the other hand they deny.I just want to know their views before I present my opinion.So that, we can accumulate so many views for a single knot at a time.
"\\aadhikka naayagigal if circumstances are suitable would only love to surrender...but where are the 'Aadhikka Nayakans' ?//"
Haha...(safe aa sirichu mattum vekkaren pa :P)
Nice to see u with elaborate comments sree :)
hi kumar,
"\\
Innum vera ennenna missiles vachirukkeenga?//"
haha...yenga..ithellam missiles aa..innum kaara saarama ezhuthina enna solluveenga :P
hi thiru,
"\\hmm... interesting and wonderful perspective.//"
unga "hmm.." ennavo solluthey..
Ethuva irunthalum ingeye pesi theethukalam..appurama dharma adi lam vanga nan thayara illai enbathai miga panivanbudan kettu kolkiren :P
"\\Sree -
BTW you seem to be asking for kavidhai.... wait for few days I am coming back soon! lol//"
Ha..ha...Thiru..
neengale oru kavithai nu ennikathu sonnagala sree.. :P
Hi Sowms...
// So that, we can accumulate so many views for a single knot at a time. //
yes..most of the time I refrain from reading the previous comments as that tends to color our judgement. But I get curious and read them , esp if the comment is from a familiar friend.
So this is a good idea.
take care , Sowms :)
Sowms...idha marandhutten
...but where are the 'Aadhikka Nayakans' ?//"
Haha...(safe aa sirichu mattum vekkaren pa :P) //
enpaa ?
naan irukken...dhairiyama eduthu vidunga...nalla saathusaathunnu saathi oru post podunga ;)
THIRU
Alloooo Thiru..
BTW you seem to be asking for kavidhai.... wait for few days I am coming back soon! lol //
enaadhu idhu...'vidaadhu karuppu' maari :(
aiyaiyoo....sari , indha murai enna fry venum sollunga...we can strike the deal before u start ur kavidhais .
:))
Sowms..
neengale oru kavithai nu ennikathu sonnagala sree.. :P //
aamampaa....avar kavidhai solladha varai avarey oru kavidhai !
:))
touche' sowmya :)!
Wonderful interpretation. kalakkitteenga!
//haha...yenga..ithellam missiles aa..innum kaara saarama ezhuthina enna solluveenga //
'Missile'na creative missiles, Sowmya. Innum niraiya missiles anuppunga :) kaara saarama ezhuthina innum rasikkalaam!
Sree sonna mathiri muthalil oru kelvi kettutu appuram unga views vanthathu oru 'athiradi' missile thaane?
SREE
"\\naan irukken...dhairiyama eduthu vidunga...nalla saathusaathunnu saathi oru post podunga ;)"//
hmm..dharma adi kudutha paathi vangipeengala neenga :P
hi arun,
:))
Kumar,
"\\muthalil oru kelvi kettutu appuram unga views vanthathu oru 'athiradi' missile thaane?//"
appram,unga side opinion eppdi vangarathu..
Particularly with this post, you people have different views na..
I just want to know abt it. :)
Sowms...
dharma adi kodutha naan, neenga , inga karuthu sonna ellarum sama pangu..thirukku koncham extra :))
haha..sree...
post podarathey avangala pathi than..dharma adi kooda avanga kittenthu than..athula avangalukku panga..Besh..
BTB, ithuku badhil sollunga.. lawyer aa evlo varusha experience ungalukku?? :P
//துணைவன் ஆதிக்க நாயகனாக - எல்லா விதத்திலும் தலை சிறந்தவனாக,விளங்குமிடத்து " அடங்குதல் முறை தானே - அவனுள் ஐக்கியமாவது முறையானது தானே என்று பொருள் கொள்ளும் விதமாகவும் இவ்வரிகள் அமைக்கப்பட்டிருக்கலாம்.//
ஆஹா இப்படி கூட (அருமையான)விளக்கம் கொடுக்க உங்களால மட்டும் தான் முடியும்..:)
அப்படியே கண்ணதாசன் இருந்து இதே வரிகளை இந்த் கால கட்டத்துக்கு எழுதியிருந்த்தால் எப்படி எழுதி இருப்பார் என்று உங்கள் டச்சிங்(!) பாணியில் கூறியிருக்கலாமே??
என்னோட டிரை இங்கே..
ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம்
ஆபிஸு் வரைதானே - ஒரு
ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால்
அடித்தல் முறைதானே.
(படிச்சிட்டு சிரிக்காட்டியும் பரவாயில்லை அடிக்க மட்டும் வந்த்துடாதீங்க..:)
அது சரி கம்பனில் ஆரம்பித்து கண்ணதாசன் பக்கம் சென்று கடைசியில் தர்ம அடி வரை வந்து நிற்கிறீர்கள்?? :))))
haha balar
"\\ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம்
ஆபிஸு் வரைதானே - ஒரு
ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால்
அடித்தல் முறைதானே.//"
hmm..adithal murai thane va...appdiya
Ethukkum sree kitta oru vaarthai kettukaren balar :P
Hi Sowms :)
post podarathey avangala pathi than..dharma adi kooda avanga kittenthu than..athula avangalukku panga..Besh.. //
oruthangala oruthanga pottupaanga....namba pesaama Lays chips saaptukittu paakalaam ;)
BTB, ithuku badhil sollunga.. lawyer aa evlo varusha experience ungalukku?? :P //
enga..ipdee ellam kekareenga :(
innum 6 months aagum enroll aaga.
But I have been attending a busy office for some time now , so I am blessed with a good exposure and have access to senior lawyers.
Ethukkum sree kitta oru vaarthai kettukaren balar :P //
Sowms...Aadhikkam ellam seidha ippo poori kattai ellam thookaradhu illai ...nera edu pudi domestic violence complaintdhaanpaa.
Balar is correct as usual !
Hi Sowmya,
Kannadasan is known for expressing his thoughts through the songs (eg. Ore oru oorile ore oru raja...) and also he was not very successful in his personal life. The only guess I can make is that he could have had some altercations with his wife before starting for the day's work and that would have reflected in the song.
SREE
Uuuiii.... vanthutaen... aattam jasthiya irukum pola?!
//aiyaiyoo....sari , indha murai enna fry venum sollunga...we can strike the deal before u start ur kavidhais//
Nee ethu nalla samaipa? I remember what you wrote on your cooking, but still I am having some hope left!
//aamampaa....avar kavidhai solladha varai avarey oru kavidhai !//
idhu... oru kavidhai thannilai izhanthu
oru vedhalathuku kavidhai punaiyum muyarchi... :(
//thirukku koncham extra :))//
Uuuii... koothu adikrathu neenga
vandhu kai thatti pona ennaku
extra share adi ya! :(
hi senthil,
\\The only guess I can make is that he could have had some altercations with his wife before starting for the day's work and that would have reflected in the song.//
kavithaiyil vaazhkaiyai kandavan kannadasan.vaazhkaiye kavithaiyaga kondavanum avane.saamanyan illai avan :)
Thiru :)
Uuuiii.... vanthutaen... aattam jasthiya irukum pola?! //
vaanga vaanga....ayoo..idhukkey ipdee sollareengaleynga..innum nijamaavey.......
Nee ethu nalla samaipa? //
Kelloggs cornflakes+cold milk..
ungalukku pidikuma ? sollunga...
I remember what you wrote on your cooking, but still I am having some hope left! //
:( cant let u down...bread nalla toast pannuven.
idhu... oru kavidhai thannilai izhanthu
oru vedhalathuku kavidhai punaiyum muyarchi... :( //
ponga thiru...enna poyee kavidhainu ellam solli.....
Uuuii... koothu adikrathu neenga
vandhu kai thatti pona ennaku
extra share adi ya! :( //
hmmm..vandhu chumma kai thattittu pona paravaillai...neenga oru lethal mirattal illa vidareenga!
edho share nnu sonnennu sandhosha padunga....ellam ungalukkunnu sollaliye ;)
Post a Comment