யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!

Saturday, April 28, 2007

மனம் திறக்க வாருங்கள் !!

அன்பார்ந்த வாசகர்களே !

நீங்கள் கருத்துக் கூறலில் வல்லவரா? அப்படியேன்றால், கீழ் கூறு,ம், போட்டியில் தாங்கள் ஈடுபாட்டோடு கலந்து கொள்ளலாம்.

போட்டி இது தான். கீழ் கூறிய தலைப்பில் உங்கள் அபிப்ப்ராயத்தை திறந்த மனதோடு நீங்கள் தெரிவிக்கலாம்.


வாடகைத் தாய் (Surrogate Mother) வரவேற்க்கத்தக்கவளா

வாடகைத்தாய் முறை இந்தியாவில் பெருமக்களால்
ஏற்றுக் கொள்ளப்படுமா



மேற்கூறிய கருத்தை ஆதரித்தோ, வேறு பட்டோ தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்

உங்கள் கருத்தை உடனடியாக பதிவு செய்யுங்கள் !. சிறந்த கருத்தாக இருக்கும் பட்சத்தில் அக்கருத்து , தங்களின் அனுமதியுடன் இவ்வலைப் பதிவில் பதிவு செய்யப்படும். சிறந்த கருத்தை நல்கும் வாசகர்களுக்கு சிறப்பு பரிசும் காத்திருக்கிறது.

பின் குறிப்பு : தங்கள் கருத்துக்கள் இரண்டு நாட்களுக்குள் இந்த முகவரிக்கு வந்து சேருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. sowmya.songs@gmail.com

You can even write in English. According to your convenience , you can choose your language

ந்ன்றி !

Thursday, April 26, 2007

பணிவு !அடக்கம் ! வீரம் !


எது பணிவு ! எது அடக்கம் ! எது வீரம் ! என்பது குறித்து, தெளிவு இல்லமால் போவதினாலேயே, தங்கள் திக்குகளை பலர் தொலைக்க் நேருகிறது. அடங்கியிருத்தல் (Submissiveness ), கீழ்படிதல் (Obedience), ஒப்படைத்தல் (Surrender) இம்மூன்றுக்கும் வித்தியாசம் தெரியாமலே, அவற்றின் நுணுக்கங்களை புரிந்து கொள்ளாமலேயே அவற்றை நாம் பின்பற்ற ஆரம்பிக்கிறோம்.

கண்மூடித்தனமான கீழ்படிதலும், நன்மையை விளைவிக்கக் கூடியதாய் இருக்க முடியாது. ஆனாலும், நமக்கு அத்தகைய கீழ்படிதல் வேண்டிய ஒன்றாக இருக்கிறது.

அர்த்தமில்லா சில நடத்தைகளில், அற்ப திருப்தியை நாம் கொள்வதாகிறோம்.
........... அந்த காலத்துல என் ஸ்கூல் வாத்தியாருக்கு நான் எப்படி பயப்படுவேன் தெரியுமா? இப்ப் .... எவன் பயப்படறான்.. நாங்க குடுத்த மரியதையை இப்போ எவன் யாருக்கு குடுகறான்.......

பயம் இருந்தால் தான் அது மரியாதை. என்னே ஒரு பரம திருப்தி அதில். நம் தன் முனைப்பைத் (*Ego) திருப்தி படுத்த இப்படி ஒரு வழியா? கண்மூடித்தனமான் இந்த செயல்களினால் நாம் எதிர் பார்ப்பது வெறும் முட்டாள் தனத்தை மட்டுமே.அடங்கி இருப்ப்பவர்களைத் தான் நாம் அதிகம் நேசிக்கிறோம்.

தீர்க்கமாக பார்தோமானால், அடங்கி இருப்பது என்பது வெற்ம் பாசங்கு மட்டுமே.சமயோஜித புத்தி மட்டுமே. வீட்டில் எலி , வெளியிலே புலி என்று கேள்விப் பட்டதிலலையா. சமயம் தகுந்தாற் போல நடித்து காரியம் சாதித்துக் கொள்ளும் தன்மை தான் அடங்கி இருப்பது.

கீழ்படிதல் சற்று உயர்ந்த நிலை. கீழ்படிபவன் காரியத்தை நிறைவேற்றுவதில் குறியாக இருப்பவன்.கீழ்படிதல் தனம், தன்னை தாழ்த்திக் கொள்ளாமல், முட்டாள் தனத்தையும் பின் பற்றாமல் நடந்து கொள்ளும் விதம்.

சுருக்கமாக சொல்லப் போனால், எதை சொன்னாலும் அதற்கு கட்டுப்படுவது அடங்கிப் போதல். சொல்பவற்றில் நியாயம் இருந்தால் மட்டுமே கட்டுப்படுவது கீழ்படிதல். அடங்கி இருப்பது தனக்கு மேலிருப்பவர்களுக்கு மட்டுமே. ஆனல் கீழ்படிதல் என்பது, தனக்கு கீழே வேலை செய்பவராக இருந்தாலும், நியாயம் என்றால் பணிந்து போவது.

ஒப்படைத்தல் என்பது மிக உன்னத நிலை.பரஸ்பரம் நிகழக்கூடியது. முழுவதுமாக புரிந்து கொண்ட நிலையில் தான் இது சாத்தியம். ஒப்படைக்கும் போது இருவரும் காணாமல் போகிறார்கள். ஒப்படைக்கும் விஷயங்கள் மட்டுமே பிராதனமாக இருக்கிறது.

அவ்வளவு சாதரணமாக ஒப்படைத்தல் நிகழ்ந்து விட இயலாது. தன் முனைப்பை பூரண்மாக விட்டால் ஒழிய, ஒப்படைத்தலின் சுவை தெரியாது.

ஒப்படைத்தலில், பூரண் புரிதல் தெரியும்.உண்மை மலரும். அன்பு ஆக்ரமிக்கும். பயம் காணாமல் போகும். தந்திரம் தொலையும். தர்க்கம் மறையும். சுயம் இழந்து சுயம் பெறும். அதாவது, we can transfer the Ego with super Ego.

ஒருவன் தன்னை தொலைத்தல் என்பது புது வித அனுபவம். தொலைத்தால், தெரியும் , தேடலின் பொருள். அட்ங்கிச் செல்பவர்கள், ஒப்ப்டைத்தலைக் கற்றால், பொறுமை, சகிப்புத்தன்மை என்கிற இயலாமைகளை களைந்து, உண்மையோடு உறவாடும் வித்தையைக் கற்றுக் கொள்ளலாம்.

Monday, April 23, 2007

நானுனு.......!

அம்மா! நீ மட்டும் நிறைய பாடி ரெக்கார்டு பண்றே ...நானுனு.......

இந்த கேள்வியை என் இரண்டாவது மகன் கேட்டபோது, எனக்கு , இது ஏன் தோன்றவில்லை என்று தோன்றியது. இசையில் ஆர்வம் மிகுந்த அவனுக்கு, தன் குரலை பதிவு செய்து தானே கேட்க ஆர்வம் இருக்கும் என்ப்து எனக்குத் தானாகப் புரியவில்லை. அம்மா என்றாலும் கூட, சில சமயங்களில் குழந்தைகளின் ஆசைகள் இப்படியெல்லம் இருக்க கூடும் என்பதை பெற்றோர்கள் உணர்வதில்லை என்பதற்கு இதுவே சான்று..

குழந்தைகள் உலகம் வேறு. அவர்கள் பொம்மைகளுக்கும், சாக்லேட்டுகளுக்கும் மட்டுமே ஆசைப் படுபவர்கள். அதனைத் தவிர வேறு எதையும் அவர்கள் கவனிப்பதில்லை என்று நாம் நினைக்கிறோம். ஒரு வாக்கியம் நினைவுக்கு வருகிறது. உஙகளை இரு கண்கள் கவனித்துக் கொண்டே இருக்கிறது. அதை நாம் தான் கவனிக்க தவறி விட்டோம் என்பதை இந்த நிகழ்வு எனக்கு நினைவுறுத்தியது.

இதோ அவனின் பாடல்..




Sunday, April 22, 2007

சஹானா !!



இந்த வீணைக்கு தெரியாது இதை செய்தவன் யார் என்று
என் சொந்த பிள்ளையும் அறியாது இதை தந்தவன் யார் என்று எனக்குள் அழுது ரசிக்கின்றேன், இரண்டையும் மடியில் சுமக்கின்றேன்


மலையில் வழுக்கி விழுந்த நதிக்கு அடைக்கலம் தந்தது கடல் தானே! தரையில் வழுக்கி விழுந்த கொடிக்கு அடைக்கலம் தந்தது இலை தானே!எங்கோ அழுத கண்ணீர் துடைக்க எங்கோ ஒரு விரல் இருக்கிறது! தாகம் குருவிகள் தாகம் தீர்க்க கங்கை இன்றும் நடக்கிறது.

சொந்தம் பந்தம் என்பது எல்லாம் சொல்லி தெரிந்த முறை தானே! சொர்கம் நரகம் என்பது எல்லம் சுழ்னிலை கொடுத்த நிறம் தானே ! உள்ளம் என்பது சரியாக இருந்தால் உலகம் முழுதும் இனிக்கிறது.உதிர போகும் பூவும் கூட உயிர் வாழ்ந்திட தான் துடிக்கிறது !

(இந்த வீணைக்கு தெரியாது இதை செய்தவன் யார் என்று)

சஹானா ராகத்தில் அமைந்த பாடல் ! வி.எஸ். நரஸிம்மன் இசை அமைத்து, கே.பாலச்சந்தர் , இயக்கி , ரயில் ஸ்நேகம் தொடரில் வெளி வந்த பாடல். தொடரின் கதையை இந்த ஒரு பாடலிலேயே கவிஞர் (????????) விளக்கி இருப்பார். அது ஏனோ, பாடல் வரிகள் எழுதும் கவிஞர் பெயரை மட்டும் விட்டு விடுகிறார்கள்.

என்னே வரிகள் ! ஒரு கதையின் பிண்ணணியை இந்த ஒரு பாடலின் வரிகள் விளக்கி விட்டது. ஒரு சூழலையிம், மற்றொரு சூழலையும் அழகாக இணைத்து, உண்ர்வுகள் சிதையாமல் கொடுக்க ஒரு சில கவிஞர்களால் தான் முடிகிறது. பாடலில் விரசம் இல்லாமல், உணர்ச்சிகளை தேவைக்கு அதிகமாகவும் கொடுக்கமல், மிகவும் அமைதியாக வலி உண்ர்வை இந்த பாடல் வெளிப்படுதுகிறது.

இந்த பாடலின் இசையும், அதன் வரிகளும் காலத்தால் அழியாத காவியம் போல எனக்கு தோன்றி இருக்கிறது.. கிட்ட்த் தட்ட் பதினேழு ஆண்டுகள ஆகிய நிலையிலும், இந்த பாடலும், அதன் வரிகளும், நெஞ்சில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது.

இது கவிஞரின் வீச்சு, பாடல் இசையின் வீச்சு.கதாபாத்திரதின் வீச்சு ! மனம் கவரும் சூழலைக் கொடுக்க, நான்கு நிமிடம் மட்டுமே தேவைப் படுகிறது என்பது, இதன் மூலமாக தெரிகிறது. அந்த தொடரின் வெற்றிக்கு இந்த பாடல் காரணம் என்பதைக் குறிப்பிட்டுத் தான் ஆக வேண்டும்.

Thursday, April 19, 2007

வித்யாசப் படத் தான் செய்கிறது !


அன்பு செய்தல்.... அன்பு பாராட்டுதல்

இவ்விரண்டும் ஒன்றா?? ஒன்று போல தோன்றினாலும், இவ்விரண்டும் சில விகிதத்தில் வேறுபடுகிறது.

அன்பு செய்தல் :- அன்பு செய்வது, அன்பு செலுத்துவது - ஒருவரின் மேலோ, அல்லது ஒன்றின் மேலோ காட்டப்படும் அன்பு என்றாகப்படுவது., எவ்வித ஊக்குவிப்பும் இல்லாமல், தானாக ஒருவரின் பால் ஊற்றெடுக்கும் ஊற்று.

ஏன், எதற்கு என்ற காரண, காரியங்கள் ஆராயாமல், உள்ளத்தில் ஏற்ப்படும் இந்த அன்பு, பெரும்பாலும் , தாய், தந்தை, உற்றம் இந்த உறவுகளுக்கு பொருந்துவதில்லை.

அன்புக்கு தான் பல் வேறு பரிமாணங்கள் உள்ளனவே. பாசம், நேசம், பக்தி, காதல், கருணை, மனிதம் ஆகிய இவற்றை, அவற்றின் பரிமாணங்களாகக் கொள்ளலாம்.

இவற்றுள், அன்பு செய்தல் - நேசம், காதல், கருணை, மனித்ம் ஆகியவற்றிற்கு மட்டுமே பொருந்துகிறது.

இதை எப்படிச் சொல்ல முடியும்?

சூழ் நிலைகளால், ஆடுவிக்கப் படாமல், நாமாக தேர்ந்தெடுக்கும் உண்ர்வுகள் தான், இந்த நேசம், காதல், கருணை, மனிதம். ஆகையால், தன்னலம் மிக குறைவு இதில்.

அன்பு பாராட்டுவது :- பாராட்டல் என்றாலே அங்கீகரிப்பது. ஒருவரின் அன்பை அங்கீகாரம் செய்வது.

ஒரு குடும்பத்தில், அம்மா, அப்பா, உற்றார், உறவினர் என்ற் எல்லா உறவுகளுமே இந்த வகையைச் சேர்ந்தவை தான். நாமாக தேர்ந்தெடுக்காதவை இவை. ஆனாலும், கிடைக்கின்ற அன்புக்கு இணை செய்ய, அன்பு பாராட்டுதல் நடக்கிறது அங்கு. அன்பானது, அங்கீகரிக்க்ப்படுகிறது.


ஏன் ? ...சில சமயங்களில், காதலிக்கும் இருவருக்குள்ளுமே, இந்த அன்பு வித்யாசப்படுகிறதே ! காதலில் யார் முதலில் விழுந்தது என்று சில படங்களில் காதலன், காதலியை கேட்கும் காட்சிகள் இடம் பெறுகின்றனவே. அதற்கு அர்ததம் இல்லாமல் போகவில்லை.

அவ்விருவரில், ஒருவர் தான் அன்பு செய்வதில் அதிக பங்கு வகித்திருப்பார். மற்றொருவர், அன்பு பாராட்டுதலில் தான் தன் பங்கைச் செய்திருப்பார்.

இருவரின் அன்பிலும், நிசசயம் மாற்றம் இருக்கத்தான் செய்யும். நாமாக வயப்படுதல் வேறு. வயப்பட்டதை அங்கீகரிக்கும் விதமாக அன்பு பாராட்டுவது வேறு.

இருவரின் அன்பும் ஒன்று என்று சொல்லுவதில் பெருந்தன்மை தெரியலாம்.ஆனால், அன்பு செய்தவர், அன்பு பாரட்டுபவரினும், வேறு படத் தான் செய்கிறார்.

நீங்கள் அன்பு செய்பவரா? அன்பு பாராட்டுபவரா? :)

Tuesday, April 17, 2007

அழகு ஆயிரம் உலகம் முழுவதும்...!

வாழ்க்கை அழ்கு...வாலிபம் அழகு....இயற்கை அழ்கு..இல்லம் அழகு.. மூப்பு அழகு..முத்தமிழ் அழகு....குமரி அழகு...குழந்தை அழகு...

அறிவு அழகு....அன்பு அழகு....அணைதத்ல் அழகு ..ஆதிக்கமும் அழகு.. சிரிப்பு அழகு...சிந்தனையும் அழகு....

பசித்தவனுக்கு சோறிட்டு அவன் முகம் பார்தால் எத்துணை அழகு !
அன்பால் பகை வென்றோரின் அருளுள்ளம் எத்துணை அழகு !

எது அழகு இல்லை இங்கே ! எல்லாமே பேரழகு..! இதில் ஆறினை சொல்லுஙகள் என்றால் எதைச் சொல்லுவது..! இது அழகில்லை பாலர் உங்களுக்கு !

இச்சமயம் என் அறிவுக்கு எட்டியதை இயம்புகிறேன்.

மென்மைக்கு மயங்காதவர் யார்? தனதுடைமை ஆக்கிக் கொள்ள்த் துடிப்பதை விட, பார்த்துக்கொண்டே இருப்ப்தில் தான் எத்துணை ஆன்ந்தம். சொல்வதில் கூட அழுத்தம் இருக்கக் கூடாது என்று தானோ , பூ என்ற ஒர் எழுத்தை வைத்தான் மனிதன். மனதள்ளும் சந்தோஷம் வேண்டுமென்றால் பூக்களோடு வாழ்ந்து பார்க்க் வேண்டும்

ம்ஞ்சள் நிலா ! நிலா நிலா ஓடி வா பாடிய காலத்தில் இருந்தே அதன் மேல் எனக்கு தீராத காதல். அழகு அழகைக் காட்டி அழகுக்குச் சோறு ஊட்டுகிறது. தாய் குழந்தைக்குச் சோறு ஊட்டும் காட்சி , இப்படித் தான் எனக்குத் தோன்றி இருக்கிறது.

நடு இரவு....வானில் மின்னும் நட்சத்திரங்களுக்கு ஊடே...பாஸந்தி மஞ்சளில் ஒரு இசைத் தட்டு. வாகனத்தில் ப்ரயாணம் செய்து கொண்டே, நம்மோடு நகர்ந்து வரும் நிலவை, மரஙகளின் இடையே பார்ப்பது தான் எத்துணை அழகு!

கடல் அலைகளில் கால் நனைத்து, மண்ணோடு நம்மை உள் இழ்த்துச் செல்லும் உண்ர்வை பெறுவதில் தான் எத்துணை சந்தோஷம். யார் தான் குழந்தை ஆகி விட மாட்டார்கள் அப்போது.

எழுமின்! எழுமின்! விழுமின்! விழுமின்! - இதன் அர்த்தம் கடலலைகளை பார்த்த போது தான் எனக்கு புரிந்தது. "ஹோ" என ப்ரவாகம் எடுக்கும் அலைகளில் இருந்து, வாழ்கையில் விழுதலும் பின் எழுதலும் இயல்பே என்ற உண்மை புலனாகிறது அன்றோ! அழகோடு அறிவையும் கற்றுத்தருகிறது இயற்கை.

துளித் துளி பனித் துளி ! வெப்பக் கதிர்களின் அரவணைப்பில் நாள் முழுதும் கட்டுண்டு கிடக்கும் இயற்கையை இரவு முழுதும் தன் வசமாக்கி குளிர்ச்சி தரும் குளிர் சாதன வசதி.

மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே .. பனித்துளி பற்றி கூறாத கவியும் உண்டோ.

கம்பீரம் ! மலைகளின் தோற்றம் கற்றுத்தரும் பாடம். உயர்தலை மனிதன் மலைகளைப் பார்த்து தான் கற்றுக் கொண்டிருப்பான். உறுதியை அறுதியிட்டுக் கூறும் உன்னத மலைகள்,பனிப் போர்வைக்குள் ஒளிந்திருக்கும் காட்சி அழகோ அழகு!

வானத்து வீதிகளிள் ஹோலிக் கொண்டாட்டம். ஒளிக்க்ற்றையில் இயற்கை காட்டும் கெலடாஸ்கோப்பு. பூப்படைந்த வான் மங்கையின் செவன் இன் ஒன் பட்டுப்புடவை . வான மகளின் நெற்றிக்கு ஜிகினா பொட்டு. இப்படி வர்ணித்துக்கொண்டே போகலாம், நிற பிரிகையில் ஜாலம் காட்டும் வானவில்லை.

ஆறு மனமே ஆறு ! பாலரின் கட்டளை ஆறு !

கூட ஒரு கொசுறு ப்ளீஸ் ப்ளீஸ்!

குளு குளு பிரதேசம் ! பச்சை பசேல் என ஜொலிக்கும் புல்வெளிகள் படர்ந்த பள்ளத்தாக்கு ! சில் என்று மேனி தொடும் குளிர் காற்று ! பூமி மகளை குளிப்பாட்ட , ஷவர் திறந்து விடும் வானம். எப்போது கலக்க்ப்போகிறாம் என காத்திருக்கும் மண், கலந்த பின் அதனால் எழும் மணம், துடைத்து விடப்பட்ட நிலைக் கண்ணாடியாய் பாதை. மெலிதாக ஒலிக்கும் இளையராஜாவின் பாடல், தோள் சாய துணைவன்....

ஆஹா...! சொல்லவா வேண்டும்...

ஆயிரம் ஆயிரம் அழகு கொட்டிக் கிடக்கும் நம்மைச் சுற்றி. ஆனால், அதை அனுபவிக்க வெகு சிலருக்குத் தான் தெரிகிறது. உள்ளிருக்கும் அழகைக் கண்டு பிடித்தாலே , வெளிப் புற் அழகு தானக புலப்ப்டும். பசிததவன் சோற்றினைக் கண்டால் தான், ருசிப்பதைப் பற்றி யோசிப்பான். ஆதலால்

புசியுங்கள் பின் ருசியுங்கள் ! :)

Monday, April 16, 2007

IAS ???(!)

This is a forwarded mail, which my friend shrikanth sent me this morning. I just want you to read this! Where are we??

A essay written by a Bihari candidate. You'll forget your English by the time you finish reading this. This is a true essay written by a Bihari candidate at the UPSC(IAS) Examinations. The candidate has written an essay on the Indian cow:

Indian Cow

HE IS THE COW. "The cow is a successful animal. Also he is 4 footed, And because he is female, he give milks,[but will do so when he is got child.] He is sacred to Hindus and useful to man.But he has got four legs together. Two are forward and two are afterwards. His whole body can be utilised for use. More so the milk. Milk comes from 4 taps attached to his basement.[horsesdont have any such attachment] What can it do? Various ghee, butter, cream, curd, why and the condensed milk and so forth.Also he is useful to cobbler, watermans and mankind generally. His motion is slow only because he is of lazyspecies. Also his other motion.. gober] is much useful to trees, plants as well as for making flat cakes[like Pizza ] , in hand , and drying in the sun. Cow is the only animal that extricates his feeding after eating. Then afterwards she chew with his teeth whom are situated in the inside of the mouth. He is incessantly in the meadows in the grass.His only attacking and defending organ is the horns, specially so when he is got child. This is done by knowing his head whereby he becauses the weapons to be paralleled to the ground of the earth and instantly proceed with great velocity forwards.He has got tails also, situated in thebackyard, but not like similar animals. It has hairs on the other end of the other side. This is done to frighten away the flies.

Saturday, April 14, 2007

எதை நோக்கி...!

முடுக்கப்பட்ட விசை தறிகளாய் ஓட்டம்..
சாவிக்கு ஆடும் பொம்மைகளாய் நினைவோட்டம்..
எதை நோக்கி....எதை நோக்கி...

அர்த்தமுள்ள வாழ்வை..அற்ப பொருட்கள் ஆட்டுவிக்கிறது.
அமைதி உள்ளெ இருக்க..
அலை அலையாய் ஆர்ப்பரித்து..
அதை வெளி தேடும் விந்தை...

மனித மனம்..
உள்ளே விரியும் அனிச்ச மலரை முகந்தறிய மறந்து,
வெளியே காகித பூக்களில்... வாசனை தேடும் விந்தை..

நான்.....நான் என்ற சொல்லை அகந்தையாய் பார்பது இயல்பு..
நான்.....நான் மட்டுமே எனக்கு என தெரிவது...
அகம் காட்டும் விந்தை..
அதுவே..சாஸ்வதமும்..

என்னுள்ளெ என்னை தேடி தேன் துளிகளை சுவைக்க மறந்த மனம்..
என்னை வெளியே தேடி சமுத்திரமாய்..
ப்ரவாகம் எடுக்கும் முயற்சி விந்தை தான்...
ஆனால் வீணே...

Friday, April 13, 2007

வெளிச்சத்தை உணருவோம் !


அனைவருக்கும் எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

நம்மை பற்றி நாமே பல சந்தர்ப்பஙகளில் குறைத்து மதிப்பிட்டுக் கொண்டுவிடுகிறோம். மற்றொருவருடன் ஒப்பிட்டு பார்த்து , நம்மை நாமே குறைத்து மதிப்பிட்டு கொள்:ள அவசியம் இல்லை.

ஒவ்வொரு மனிதருள்ளும், தனித்தன்மை உள்ளது.அதனை உணர்ந்து கொண்டால் போதும்.மற்றவருடன் ஒப்பிடும் போது தான் கூடுதல், குறைவு என்கிற எண்ணம் வளர்கிறது.

அவரவர்களின் திறமை, குணங்கள், தனித்தன்மை இவற்றிற்கு ஏற்ப தான் வாழ்கையை அமைத்துக்கொள்கிறோம். நமக்குள் குறைகள் தென்பட்டால், நம்முடைய இயல்புக்கு ஏற்ற படி , நம்மை மாற்றிக்கொண்டு சிறப்பு அடையவும் முடியும்.

அத்றகு நம்முடைய தனித்தன்மைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நம்மை நாம் நம்ப வேண்டும். நான் ஒரு முழு மனிதன் தான் என்பதை உணர வேண்டும்.

என் வாழ்க்கை எப்படி அமைந்தாலும் அதற்கு நானே பொறுப்பு. இந்த மன நிலை தான நம்மை நாமே புரிந்து கொள்ள் உதவும். ந்ம்மை நாம் புரிந்து கொண்டால் தான் , நம் வாழ்கை வளையத்திற்குள் நாம் என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு கிடைக்கும்.

அப்போது தான் எந்த சூழ் நிலையிலும் நாம் நாமாக இருக்க் முடியும். இன்னொருவரை போல நம்மால் வேஷம் போட இயலாது.

ந்ம் முழுமை நமக்குத் தெரிந்தாலே, நம் திறமை முழுமையாக வெளிப்பட்டு விடும். திறமை வெளிப்பட்டாலே, தன்னம்பிக்கை வளர ஆரம்பிக்கும். வாழ்க்கைப் பாதையின் வெளிச்ச்ம் தெரியும்.

Wednesday, April 11, 2007

இந்த ஒரு நிமிடம் !


மன அமைதியின் அடித்தளமே இந்த நிமிஷத்தில் எப்ப்டி நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை பொருததது தான.

போன வருடம், நேற்று என்ன நடந்தத்து என்பதை விட, எப்போதும் நிகழ்ந்து கொண்டிருகிற நிமிடம் தான் முக்கியமானது. கடந்த கால பிரச்சனைகள், வருங்கால கவலைகள் இவற்றால், நிகழ் காலத்தை ஆதிக்கம் செய்ய் அனும்திக்கிறோம். விளைவாக, கவலை, துக்கம், ஏமாற்றம் ஆகியவற்றை, எந்நேரமும், நம்மை ஆட்டிப் படைக்க் அனுமதித்து விட்டோம்.

ந்ம் மனத்தில் ஒரு எண்ணம்..

இன்றைய பொழுதை விட நாளை வரவிருக்கும் பொழுது, இனிமையாகத் தான் இருக்கும் என்று , நம்மை நாமே தேற்றிக்கொள்வதில் நேரத்தை வீணடிக்கிறோம். ஒரு ஒரு நாளும், இதே மனோ பாவத்தில்., நாம் எதிர் பர்ர்க்கிற அந்த இனிமையான நாளும் வராமலே போய் விடுகிறது.

வாழ்க்கை என்பது எப்படி அமைய வேண்டும் என்று ஒத்திகை பார்பதிலேயே நேரத்தை வீணாக்கி விட கூடாது. நாளை நடப்பவைக்கு உத்திரவாதம் இல்லை.இந்த ஷ்ணம் மட்டுமே, நம் கையில்.

இந்த நிமிஷத்தில் மட்டுமே நாம கவனம செலுத்தினால், வேறு பயஙக்ள் வர வாய்ப்பு இல்லை. பயத்தை முழுமையாக களைய வேண்டுமென்றால், நிகழ்காலத்தில் வாழும் வித்தையை கற்பது ஒன்று தான் சிறந்த வழி.

Monday, April 9, 2007

இன்றைய இளைஞர்கள் !

இக்கால இளைஞர்களிடம் அமைதியின்மை (restlessness) அதிகமாக்க காணப்ப்டுகிறதே, அதன் காரணம் என்னவாக இருக்கக் கூடும்.?

வாய்புகள் ஏராளம் ! போட்டிகள் அதிகம்.

ஒரு காலத்தில் நாங்கள் எப்படியெல்லாம் பொறுமையாக இருந்தோம். இப்போது இவர்களுக்கு பொறுமை ஏது? - இது மாதிரியான குற்றச்சாட்டுகளுக்கு இக்கால இளைஞர்கள் ஆளாகத்தான் வேண்டியுள்ளது.

நாம் சகிப்புத் தன்மையை தான் பொறுமை என்று கூறி வந்திருக்கிறோம்.அப்போது உள்ள காலகட்டத்தில், நமக்கு இலக்குகள் குறைவு. அதனால் வாய்ப்புகளும் உருவாக்கப்படவில்லை. ஆதலால் போராடி வாழ்கையை அமைத்துக் கொள்ள நிர்பந்தம் அமையவில்லை.

வாய்ப்புகள் அதிகமாக அதிகமாக, வளர்ச்சியை எட்டிப் பிடிக்கும் இடத்தில் அமைதியின்மை அதிகரிப்பது இயல்பான ஒன்று தான்.

மோட்டார் சைக்க்ளின் பின்னால் உட்கார்ந்து பயணிப்பவ்ரின் மன நிலை வேறு. வண்டியை ஓட்டுபவரின் மன நிலை வேறு.

இலக்கை சென்று அடைந்தாலே போதும், என்கிற் மன நிலையில் தான் , பின்னால் உட்கார்ந்திருப்ப்வர் இருக்கிறார்.ஓட்டுபவரோ, வேகத்தை நேசிப்பவராக , எவ்வளவு வேகம் செலுத்தினால் இலக்கை இலகுவாக சென்று அடைய முடியும் என்று திட்டமிடுகிறார்.

எவ்வளவு வித்தியாசம்.

நாம் வாழ்ந்த வாழ்கை வேறு.அவர்கள் இப்போது எதிர் நோக்கும் வாழ்கை வேறு. சொல்லபோனால், நாம் அவர்களை விட ஆனந்தமான வாழவை அனுப்வித்து விட்டோம்,.

அந்தக் காலத்தில்.......என்று கூறி, ஒப்பிட்ட்டுப் பார்த்து, இன்றைய இளைஞ்ர்களைப் பற்றிய ஒரு குறுகலான மதிப்பீடுகளுக்கு வருவது சரியா???

Friday, April 6, 2007

உடுக்கை இழந்தவன் கை போல ..


ந்ட்பு என்பது, பகிர்ந்து கொள்வது , அன்பு செலுத்துவது, தோள் கொடுப்பது, துயர் துடைப்பது, உற்சாகம் தருவது, உயர்வில் மகிழ்வது, தன் சுதந்திரத்தை இழக்காமல் ஒற்றடமாய் இருப்பது.

இவற்றை எல்லாம் உண்ர்ந்து தான் நட்பு பாராட்ட்ப்படுகிற்தா?

இவற்றின் அடிப்ப்டையில் தான் நட்பு நிர்ணயிக்கப்படுகிற்தா?

எதை தேடுவது நட்பு? எதை கொடுப்பது நட்பு?

பகிர்ந்து கொள்ளல் உள்ளதே ! புரிந்து கொள்ளலுக்கு முக்கிய பங்கு இல்லையோ

குதர்க்கமாக யோசிக்கிறேனோ !

உள்ளதை உள்ளவாறே ஏற்றுக் கொள்ளல் தானே நட்பு. எனக்கு தகுந்தபடி நீ இரு, அப்போது தான் நட்பு பாராட்ட முடியும் என்ற் விதிகளை போடுவதா நட்பு.

என்க்குள் இருப்பது நட்பு தானா என்பது தெரிவதற்க்கு முன்பே , நான், என் நண்பன், என் தோழமை என்று ஒரு பெயரைக் கொடுத்து விடுகிறோம்
உண்மயில் நட்பு உணரப்படுவதற்க்கு முன்பே, நட்பின் ஆழ்த்தை ருசிக்க துடிக்கிறோம்.

வள்ளுவனின் குறளில் கூறும் நட்பு -- யாருக்கும் தெரியாமல் ஆடை சரி செய்யும் உடுக்கை இழந்தவன் போல , யாருக்கும் தன் நண்பன் படும் துன்பம் தெரியாமல் காப்பாற்றும் ஆதங்கம் கொள்பவனின் நட்பு தான் சிறந்த நட்பாக கருதப்படும்.

அத்தகைய நட்பை தேடியாகினும் பெற்றுக் கொள்ள்க என்கிறார் வள்ளுவர்.
இதுவும் ஒரு வகை சுய நலமே ! இங்கு நல் வழி படுததல் மட்டுமே குறிக்கோளாய் கொண்டு நட்பு விமர்சிக்கப்படுகிறது.

காமம் கலவா காதல் = நட்பு

நட்பு கலவா காதல் = காமம்

இப்படி கூட விளக்கம் தரலாமே !
காதலில் கூட எதிர் பார்ப்பு என்பது தவிர்க்க் முடியாதது.

ஆசை + அன்பு = காதல்

அன்பு + அன்பு = நட்பு

ஆதலால், அன்பு செய்வீர் உலகத்தீரே !

உதடுகளால் பேசி நட்பு பாராட்டுவதை விட உள்ளம் உடையட்டும், அதில் ஊற்று பெருகட்டும் ! அப்போது தான் நட்ப்பின் உண்மை சுவை தெரியும்.

Sunday, April 1, 2007

எது வளர்ச்சி !


வளர்ச்சி என்பது, ஒரு ஊரைக் குறிக்கின்ற வகையிலே அடுக்கு மாடிக்கட்டிடங்க்களையும், அந்த ஊரின் தொழில் வளர்ச்சியின் அறிகுறிகளையும் வைத்து மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது..

இதுவா ! உண்மையான வளர்ச்சி ?

வளர்ச்சி என்பது இவ்வாறாகவே பார்க்கப்பட்டு விட்டது. வல்லரசு நாடுகளின் மத்தியில் அந்த நாடுக்ளுக்கு இணையாக நம் நாடும் உருவாக வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கி இருக்கிறது.

வளர்ச்சி என்பதை பணம் புழங்கும் பல இடங்களையும், சிவப்பு கம்பளம் விரிக்கும் அங்காடிகளையும் வைத்து எடை போடுவதில் தவறில்லை என்றாலும், அவற்றின் விஸ்தீரணத்தை மட்டுமே வைத்து முழம் போட வேண்டியதில்லை என்பதே உண்மை.

கட்டிட வளர்ச்சிகளை காட்டிலும், முக்கியமாக கருதப்பட வேண்டிய நம் மன நிலை, நம் ஊக்கம், நம் சால்பு, வாழ்க்கை குறித்த நம் பார்வை , இவற்றை நம் வளர்ச்சி என எடுத்துக் கொண்டால், நம் நாட்டின் வளர்ச்சி செயற்கையாக இல்லாமல் , இயற்கையாக பரிமளிக்க் கூடும்.

ஒரு நாட்டின் முன்னேற்றமும் வளர்ச்சியும், அதில் வாழ்பவருடய் மன நிலையின் அடிபடையிலேயே நிர்ண்ணயிக்கப்படுகிறது. ம்ற்ற நாட்டவரின் சுய் நலமில்லா தன்மை ம்ற்றும் என் நாடு, என் மக்கள் என்ற எண்ணம் நம் நாட்டு மக்களிடமும் பிரதிபலித்தால் நம் நாடு உண்மையான வளர்ச்சியை தொடும் நாள் வெகு தூரத்தில் இல்லை !

(முதன் முறையாக தமிழ் தட்டச்சு, அச்சுப் பிழை இருப்பின் மன்னிக்கவும் !)