யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!

Thursday, April 19, 2007

வித்யாசப் படத் தான் செய்கிறது !


அன்பு செய்தல்.... அன்பு பாராட்டுதல்

இவ்விரண்டும் ஒன்றா?? ஒன்று போல தோன்றினாலும், இவ்விரண்டும் சில விகிதத்தில் வேறுபடுகிறது.

அன்பு செய்தல் :- அன்பு செய்வது, அன்பு செலுத்துவது - ஒருவரின் மேலோ, அல்லது ஒன்றின் மேலோ காட்டப்படும் அன்பு என்றாகப்படுவது., எவ்வித ஊக்குவிப்பும் இல்லாமல், தானாக ஒருவரின் பால் ஊற்றெடுக்கும் ஊற்று.

ஏன், எதற்கு என்ற காரண, காரியங்கள் ஆராயாமல், உள்ளத்தில் ஏற்ப்படும் இந்த அன்பு, பெரும்பாலும் , தாய், தந்தை, உற்றம் இந்த உறவுகளுக்கு பொருந்துவதில்லை.

அன்புக்கு தான் பல் வேறு பரிமாணங்கள் உள்ளனவே. பாசம், நேசம், பக்தி, காதல், கருணை, மனிதம் ஆகிய இவற்றை, அவற்றின் பரிமாணங்களாகக் கொள்ளலாம்.

இவற்றுள், அன்பு செய்தல் - நேசம், காதல், கருணை, மனித்ம் ஆகியவற்றிற்கு மட்டுமே பொருந்துகிறது.

இதை எப்படிச் சொல்ல முடியும்?

சூழ் நிலைகளால், ஆடுவிக்கப் படாமல், நாமாக தேர்ந்தெடுக்கும் உண்ர்வுகள் தான், இந்த நேசம், காதல், கருணை, மனிதம். ஆகையால், தன்னலம் மிக குறைவு இதில்.

அன்பு பாராட்டுவது :- பாராட்டல் என்றாலே அங்கீகரிப்பது. ஒருவரின் அன்பை அங்கீகாரம் செய்வது.

ஒரு குடும்பத்தில், அம்மா, அப்பா, உற்றார், உறவினர் என்ற் எல்லா உறவுகளுமே இந்த வகையைச் சேர்ந்தவை தான். நாமாக தேர்ந்தெடுக்காதவை இவை. ஆனாலும், கிடைக்கின்ற அன்புக்கு இணை செய்ய, அன்பு பாராட்டுதல் நடக்கிறது அங்கு. அன்பானது, அங்கீகரிக்க்ப்படுகிறது.


ஏன் ? ...சில சமயங்களில், காதலிக்கும் இருவருக்குள்ளுமே, இந்த அன்பு வித்யாசப்படுகிறதே ! காதலில் யார் முதலில் விழுந்தது என்று சில படங்களில் காதலன், காதலியை கேட்கும் காட்சிகள் இடம் பெறுகின்றனவே. அதற்கு அர்ததம் இல்லாமல் போகவில்லை.

அவ்விருவரில், ஒருவர் தான் அன்பு செய்வதில் அதிக பங்கு வகித்திருப்பார். மற்றொருவர், அன்பு பாராட்டுதலில் தான் தன் பங்கைச் செய்திருப்பார்.

இருவரின் அன்பிலும், நிசசயம் மாற்றம் இருக்கத்தான் செய்யும். நாமாக வயப்படுதல் வேறு. வயப்பட்டதை அங்கீகரிக்கும் விதமாக அன்பு பாராட்டுவது வேறு.

இருவரின் அன்பும் ஒன்று என்று சொல்லுவதில் பெருந்தன்மை தெரியலாம்.ஆனால், அன்பு செய்தவர், அன்பு பாரட்டுபவரினும், வேறு படத் தான் செய்கிறார்.

நீங்கள் அன்பு செய்பவரா? அன்பு பாராட்டுபவரா? :)

8 comments:

Poornima said...

ஒரு நேரத்தில் அன்பு செய்பவள், ஒரு நேரத்தில் அன்பு பாராட்டுபவள்!
ஆக மொத்தத்தில் அன்புடன் நிறந்தர தொடர்புடையவள்!


எது எப்படியோ, அனைவரும் அன்புடன் வாழ்வோமாக!

Sree's Views said...

Dear Sowmya..
hmmm naan epdee...yosikaren..naan ellarkittayum aasaiyaa irukanumnudhaan ninaikiren..irukaren..wishing them well..and when it is reciprocated..I really enjoy it.
But , inam puriyaadha anbu ellam epdee varumnudhaan theriyalai. Nambalukkey theriyaama nambala edho oru vishayam attract pannum podhudhaan friendship , kaadhal , karunai ellam varum :)
Sila peroda pesinavudaney pidichidum..sila peroda dhinamum we spend a few hours..aana oru limit mela poga mudiyaadhu .
So I think nambalukku avanga kitta pidicha vishayam irukkum :)
well...naan anbu seibaval and anbum edhir paarpaval :)

balar said...

அன்பு செய்பவர் மற்றும் அன்பு பாராட்டுபவர் இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளை அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்!!!.


//நீங்கள் அன்பு செய்பவரா? அன்பு பாராட்டுபவரா? :)//
திடீர்னு இப்படி கேட்டுடீங்களே!!..
தெரியவில்லை ஆனால் வம்பு செய்யமாட்டேன் அது உண்மை!..:)

sowmya said...

இரண்டுமாக இருக்கிறேன் " - புன்முறுவல் பூக்கச் செய்து விட்டீர்க்ள் பூர்ணிமா ! :)

sowmya said...

அன்பு ஷ்ரி,

ஆசை வேறு ! அன்பு வேறு !. அன்பு ஆமோதிக்கும்.ஆசை கட்டுப்படுத்தும்..

மேலும், அன்பு செய்வது என்பதே, இனம் புரியாத ஒரு செய்கை தான். இனம் புரிந்து செயும் போது அது அன்பு பாராட்டுதல் ஆகி விடுகிறது.

ந்மக்கு பிடித்து , அன்பு செய்வது தான் இய்லபு. ஆனால், பிடித்த எல்லவற்றிடமும், அன்பு செய்ய முடிகிறதா?

அன்பு செய்வது சரியாக புரிந்து போனாலே, தானாக அன்பு திரும்ப கிடைத்து விடும். நன்று ஷ்ரி :)

sowmya said...

பாலர்,

வம்பு செய்ய மாட்டேன் என்று கூறி விட்டீர்களே !. இப்படிச் சொன்னால் எப்படி !.சில சமயம், ஸ்வாரஸ்யம் கூட்ட, வம்பும் தேவை அல்லவா ! :))

priya said...

I just enjoyed reading your post and how smart you came with the word of love and affection.

sowmya said...

hi priya ..

Thank you very much of ryour comments