யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!

Sunday, May 27, 2007

படம் பார்க்க வாரீகளா...!

தமிழில் இம்மாதிரி படங்கள் வரக்கூடுமா என்று நினைக்கும் அளவுக்கு, மிகவும் அற்புதமாக எடுக்க்ப்பட்ட படம் Finding Nemo. பொதுவாகவே கார்டூன் படங்கள் எல்லாமே, குழந்தைகளின் ஆர்வதை அதிகப்படுத்தும் விதமாகவே எடுக்கப்படுகிறது. இதில் வெகு சில கார்டூன் , டாம் அன் ஜேரீ போன்றவை பெரியவர்களும் அதிகமாக விரும்பி பார்க்கப் படும் விதத்தில் அமைக்கப் படுகின்றன.ஒரு அரை மணி நேரத்தில் சிரிக்கவும், சிந்திக்கவும், ரசித்து மகிழவும் ஒரு கருவை தேர்ந்தெடுத்து, அதை சுவாரஸ்யமாக, நகைச் சுவை ததும்ப கொடுப்பதென்பதே ஒரு கலை. ஒரு சிறிய, நுணுக்கமான இடங்களில் கூட தன் முத்திரையை பதிப்பதற்கு நிரம்ப புத்திசாலித்தனமும், எதார்த்தம் கலந்த உணர்வும் தேவைப் படுகிறது.

அத்தகைய விதத்தில் எடுக்கப்பட்ட இந்த Finding Nemo என் மனதை மிகவும் கொள்ளை கொண்ட படமாக ஆனதில் எனக்கு சிறிதும் சந்தேகமேயில்லை. ஏன்??...நீஙகளும், அப்படத்தை ஒரு முறைப் பார்தாலே, மீண்டும் பார்த்து ரசிக்க தயாராகி விடுவீர்கள்.

இப்படத்தில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு சில விஷயங்களை நான் உங்களிடம் பகிர்ந்து கொண்டு தான் ஆகவேண்டும். நீதி போதனை கதைகள் மாதிரி, குழந்தைகளை கட்டுப்பாடோடு வளர்த்து வரும் பெற்றோருக்கு சொல்லப்படும் கருத்தினை மையமாக வைத்து சொல்லப் பட்ட கதை. அன்பு, பாசம், நட்பு, புரிதல், உதவி, உணர்வு, ஒற்றுமை என்று எல்லாவற்றிக்கும் சரிவிகிதமாக மதிப்பளித்து, மிகவும் ஒரு அற்புத்மான படைப்பை, இலகுவாகவும், ரசிக்கும் படியும் கொடுத்த விதம், நம்மை நேரம் போனது தெரியாமல் படத்தினை பார்க்கச் செய்கிறது.

குறிப்பாக, இப்படத்தில் வரும் டோரி என்ற மீனின் செயல்களும், வசனங்களும் என் மனதை மிகவும் கொள்ளை கொண்டு விட்டது.வெகு இயல்பாக அப்பாத்திரம் அமைக்கப் பட்டு இருக்கிறது என்பதே அதன் சிறப்பு. போதாததற்கு அம்மீனுக்கு short term memory loss வேறு ! :)


இதோ உங்களுக்காக அப்படத்திலிருந்து இரு சிறிய பகுதி..என்சாய் :)




முழு படத்தின் காட்சிச் சுருக்கம்




டோரி மீனின் சேட்டைகள் நிறைந்த பகுதி :)

6 comments:

none said...

Finding Nemo! - இது Super படமுங்க! இது மாதிரியே Monsters Inc, Shrek, Brother Bear போன்ற படங்களும் Cartoon படங்களில் என் விருப்ப படங்கள்!

Sree's Views said...

yes..shrek is my all time favorite:)
Finding Nemo la..enakku Nemo koncham chellam jaasti aana case maari irukkum...sonna pecha kekaama..poga venaamnu sollara edathukku poga adam pidikkum...and avanga appa padara thavippai paartha avvalo kashtama irukkum :(
Yes..Dory oru koothu :P
last scene la Nemovoda appa vandhu Dory yaiyum koopitittu pogum..that's a nice scene :)
Hey...Soms..Darla va marandhuteengaley :P andha dentistoda niece..adhu kooda nice character :)

KRTY said...

Monster's Inc - DO watch this. But this is not a movie for kids, may be this will give them a laugh.

But i guarantee you goosebumps on the last scene. Let me know if you have difficulties in getting this movie

Sowmya said...

hi poornima, shree and keerthi,

yeah I have watched that movie monsters Inc. Thats a great movie too. But this movie finding nemo became my favt, becoz the entire movie is full of emotions and sharing and I love that movie for the beautiful presentation with different characters like dori and few other characters. A good combination of characteristration and also with a very good theme of a story.

:) thanks for sharing your views

balar said...

இந்த படம் வெளி வந்தப்ப இங்க எங்க பார்த்தாலும் ஒரே நி(மோ)மேனியாவாக இருந்தது.அந்த அளவுக்கு இந்த கேரக்டர் சிறியவர்களையும் பெரியவர்களையும் கவர்ந்தது....

எனக்கும் கார்டூன்க்கும் ரொம்ப தூரம்னு நினைக்கிறேன்..
நண்பர் ஒருவரின் வற்புறுத்தலுக்காக polar express
பார்த்தேன்.அனிமேஷன் effects ரொம்ப நல்லா இருந்தது..

Sowmya said...

உண்மை தான். எல்லாவிதமான கார்டூன் படங்களை பொறுமையாக பார்க்கமுடியாது தான். என்க்கும் கார்டூன் படங்கள் என்பது வெகு தூரம் தான். அதையும் மீறி நண்பர் ஒருவர் சொன்னார் என்ற காரணத்தினால் தான் இப்படத்தை பார்த்தேன்.பார்த்த பின் தான் தோன்றியது, கார்டூன் படங்களில் சில எல்லோருடைய மனதையும் கவர்கிறது என்று. தங்கள் கருத்துக்கு நன்றி பாலர்.:)