யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!

Wednesday, May 16, 2007

Mood ப்ற்றி படிக்க "மூட்" இருக்கா?

"மூட் - mood " என்ற ஆங்கிலச் சொல்லுக்கு மன நிலை அல்லது மனப்போக்கு என்று தமிழில் அர்த்தம் கொள்ளலாமா?.

சரியான தமிழ் அர்த்தம் கூட புலப்படாமல் இருக்கும் அளவுக்கு, நாம் தமிழில் அவ்வார்த்தைக்கு அவ்வளவு மதிப்பு தரவில்லை அதற்கு என்று தோன்றுகிறது.

"மனசு சரி இல்லை " என்று பயன் படுத்திக் கேட்டு இருக்கிறோம். ஆனால், அது சிறிது அழுத்தமாக தோன்றுகிறது. யாராவது மனசு சரி இல்லை என்று சொல்லக் கேட்டாலே, உடனே என்னவாயிற்று என்று வினவும் பழக்கம் எல்லோரிடமும் உண்டு. நம்மை பொறுத்தவரை மனம் சரி இல்லை என்றால், அது கொஞ்சம் பெரிய விஷயமாகத் தான் இருக்க வாய்ப்பு அதிகம்.

இந்த "மூட்" அப்படி இல்லை. ஒரு செயல் செய்யும் போது, மனம் சரியாக அதில் இலயிக்கவில்லை என்றால், "மூட்" இல்லை என்று சொல்லத் தோன்றுகிறது. ஈடுபாடு இல்லை, அல்லது ஈடுபாடு குறைவாக இருப்பதாக நாம் உணர்ந்தாலே, நாம் அக்காரியத்தை அப்போது செய்வதில்லை. "மூட்" வரும் போது செய்யலாம் என்று விட்டு விடுகிறோம்.

அடிக்கடி எல்லோராலும் பயன் படுத்தப்படும் வார்த்தையாக இந்த "மூட்" சொல் அமைந்து விட்டது. அக்காலத்தில், இந்த சொல் கொடுக்கும் அர்த்தம் பொதிந்த வார்த்தை , தமிழில் கண்டுபிடிக்கப் படவில்லையோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.

சில வருடங்களுக்கு முன்பு வரை பொருளின் அளவுக்கு(Quantity) மதிப்பு அதிகமாக கொடுக்கப்பட்டு வந்தது.ஆனால் , இப்போது, பொருளின் அளவை விட , பொருளின் தன்மைக்கு(Quality) தான் மதிப்பு அதிகம் அளிக்கப்படுகிறது.

இதே வகையான மாற்றம் தான், இந்த "மூட்" என்ற சொல் அதிக புழ்க்கத்தில் இருப்பதற்க்கும் காரணமாகச் சொல்ல முடியும்.

முந்தைய காலகட்டத்தில், ஒரு செயலை செய்ய ஆரம்பிக்கும் போதே, அது எப்போது முடியும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்திருக்கிறது. மிகச் சரியான ஈடுபாட்டோடு செயல் புரியும் காலகட்டமெல்லாம் இப்போது தான்.

இதே குறிப்பை தரும் பல உதாரணங்களை சொல்ல முடியும். கடின உழைப்புக்கு(Hard work) நிச்சயம் பலன் உண்டு என்று கூறியது அந்தக் காலத்தில். புத்திசாலித்தனமான உழைப்பு(smart work) தான் சரியான பலனை குறித்த நேரத்தில் தரும் என்பது இக்காலத் தத்துவம். அதிலும் உண்மை இருக்கத் தானே செய்கிறது.

ஆகவே, எதிலும் ஈடுபாடு என்பது மிகவும் இன்றியமையாத்து. அதனால் மிகச் சரியான பயனை குறித்த நேரத்தில் நம்மால் அடைய முடியும். என்வே "மூட்" என்பது தேவையான ஒரு உணர்வு தான். இந்த உணர்வின் துணை கொண்டு தான், செய்யும் செயல்களை முழு ஈடுபாட்டோடு, குறிப்பிட்ட நேரத்தில் சரியாகச் செய்து, அதன் பலனையும், அச்செயல் செய்யும் போது உண்டாகும் மகிழ்ச்சியையும் செவ்வனே அடைய முடியும்.

பின் குறிப்பு : எழுதுவதறக்கு "மூட்" இல்லாத காரணத்தினால் தான் , இத்துணை நாட்கள் வலைப் பதிவில் எப் பதிவையும் இணைக்க இயலவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தவறாமல், இவ்வலைப் பதிவிற்கு வந்து, புதுப் பதிவை எதிர் பார்த்த உள்ளங்களுக்கு என் நன்றியையும், என் மன்னிப்பு கோருதலையும் முன் வைக்கிறேன் :)

10 comments:

Priya said...

Damn true. Its all in the mind with our moods to keep our energy alive to do soemthing.

balar said...

அருமையான பதிவு..
"மூட்" என்பதற்க்கு மனோபாவம் என்றும் பொருள்
கொள்ளலாம்..
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை தான் "மூட்" இல்லையென்றால் எவ்வித வேலையும் செய்ய தோன்றாது அப்படியே செய்தாலும் முழுமையடையாத ஒன்றாகத்தான் இருக்கும்..

அது சரி, போனாவாரம் என்ன மூட் அவுட் வாரமா?? :))

Sowmya said...

so finally you agree with this post priya :)

Sowmya said...

உஙகளை போன்றவர்களை காண்பது அரிது பாலர் :)

ஹம்ம்...மூட் அவுட் என்றால் தான் எழுதாமல் இருக்க வேண்டுமா? எழுதத் தோன்றவில்லை, அது தான் காரணம். அதற்கு ஏன், என்ன என்ற காரணம் யோசிக்கவே இல்லை. சில சமயம், ஈடுபாடு வேறு திசை நோக்கி செல்லக் கூடும். சீராக ஒரே வேலையை செய்யும் பாங்கை நான் கற்கவே இல்லை. அதை செய்தே ஆக வேண்டும் என்றாலோழிய, ஒரு வேலையை செய்ய முனையும் போது, ஒரு வித சுதந்திரத்தை முன் வைத்து தான், அவ்வேலையை செய்யவே ஆரம்பிப்பேன். சில சமயங்களில் இது என்னுடய மைனஸ் ஆக கூட இருந்திருக்கிற்து.ஆனால், என்னைப் பொருத்தவரையில், முழு ஈடுபாடு, கவனம், முனைப்புத் தன்மை இருந்தால் தான், என்னால் அவ்வேலையை செவ்வனே செய்து, மகிழ்ச்சி எய்த முடிகிறது.

மேலும், வலை பதிவில் எழுதாவிட்டால் யார் என்ன நினைக்கப் போகிறார்கள் என்ற அலட்சியப் போக்கும் கூட காரணமாக இருக்கலாம். இவை எல்லவற்றையும் மீறி, நான் ஒரு சோம்பேறி என்ற உண்மையை இங்கு கூறித் தான் ஆக வேண்டும். ஆனால், இத்துணை நாள், எழுதாமல் போயிருக்கக் கூடாது என்று நேற்று தான் புரிந்தது பாலர் :) நன்றி

balar said...

@sowmya

//உஙகளை போன்றவர்களை காண்பது அரிது பாலர் :)//
ஹிஹிஹி..எதை வைத்து இப்படி சொன்னீர்கள் என்று தெரியவில்லை ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது என்னை கிண்டல் செய்கிறீர்கள் என்று.:))

//வலை பதிவில் எழுதாவிட்டால் யார் என்ன நினைக்கப் போகிறார்கள் என்ற அலட்சியப் போக்கும் கூட காரணமாக இருக்கலாம்//

என்ன இப்படி சொல்லிட்டீங்க..உங்க தமிழ் புலமையை எழுத்து வடிவில் ரசிப்பதற்கும் நேசிப்பதற்கும் ஒரு பெரிய கூட்டமே இங்கு உண்டு. தொடர்ந்து எழுதுங்கள்..:)

Sowmya said...

பாலர், எதார்த்தம் என்பது உலகில் மிகவும் குறைவு. அதை சுட்டிக் காட்டும் பொருட்டில் தான், தங்களை போன்றவர்களை காண்பது அரிது என நல்கினேன்.

கிண்டல்..ஹம்ம்...ஒரு வேளை நீங்கள என்னை அவ்வாறு கூறிவிட்டேன் என்று கிண்டல் செய்கிறீகளோ என்னவோ :)

ஆம் ..! கிண்டல் தான் செய்கிறீர்கள்.. நால்வர் இருப்பதை கூட்டம் என்று கூறி விட்டீர்களே...கிண்டல் தானே அது.

நால்வராக இருந்தாலும், நானூறாக இருந்தாலும், செயல் கருத்து, கவனிக்கப் படும் போது, அது எத்துணைப் பெயரைச் சென்று அடைகிறது என்று தானே நாம் பார்கிறோம்..ஒருவர் இருந்தாலும், அதற்காகவும் எழுத வேண்டும் என்று தான் தோன்றுகிறது இப்போது. :)

balar said...

சில தினங்களுக்கு முன்பாக தான் நீங்கள் கூறிய அதே வரிகளை இன்னும் 2 ப்ளாக் நண்பர்கள் கூறியிருந்தார்கள் கிண்டலாக..அதனால் தான் நீங்களும் அதே வரிகளை கூறியதும் என்னை அறியாமல் சிரித்து கொண்டே தான் நீங்களும் என்னை கிண்டல் செய்கீறீர்களா என்று கேட்டிருந்தேன்..:)

தவறாக இருந்தால் மன்னிக்கவும்..

Sree's Views said...

Hey Soms...
I usually dont do anything if I am not interested in doing it..but my mom is not too happy abt it :(
But I think if we follow a routine then mood swings affect us less...rt?
Nalla post and super language :)

Sowmya said...

hey sree...

Enga aalaye kaanum :)

My opinion is..

If we stick to the routine then, mood never gets swing, becoz we find no difference in our mentality.and we never call it with the term "mood" at all. Routine stops the innovative, creative ideas, which is mostly possible, if we do it with the right mood on it.

Sree's Views said...

naan vandhu vandhu pathen paa..post kaanom..appuram naan koncham preoccupied aagitten.

neenga sollaradhu very rt..routine work la creativity irukaadhu..dhinamum pannara sambarla vithyasam irukaadhu but eppavadhu mood vandhu pannara cake kku ore alangaaram :)