யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!

Saturday, September 29, 2007

அதிர்ஷ்டம் உங்களை அழைக்கிறது !!



ஒரு வீட்டில் ஒரு சிறுவன் தன் அம்மாவிடம்..

"அம்மா ! ஏம்மா, நம்ம கிட்ட கார் இல்ல...மாமா கிட்ட இருக்கு...."

- "அதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்பா..நாமெல்லாம் ஏழை..நம்ம கிட்ட பணமில்ல.."

"நாம ஏம்மா..ஏழை.... அதிர்ஷ்டம்னா ப்ணமாம்மா..?"

- " இல்லடா..அதிர்ஷ்டம் இருந்தா பணம் இருக்கும்..பணம் இருக்கறதுக்கு அதிர்ஷடம் வேணும்டா.."

"அப்பாவுக்கு ஏம்மா அதிர்ஷ்டம் இல்ல.."

- "தெரியல.."

"உனக்கு அதிர்ஷ்டம் இருக்காம்மா"

-"உங்கப்பாவை கல்யாணம் பண்ணினா, எனக்கு எப்படிட இருக்கும் அதிர்ஷ்டம்"

"எனக்கு இருக்காம்மா அதிர்ஷ்டம்.."

-உனக்காது இருக்கட்டும்..

இதே பாணியில் இல்லாவிட்டாலும், இதே கருத்து பலரிடம் நிலவுகிறது. அதிர்ஷ்டம் என்றால் என்ன? அது பலருக்கு, எதிர்ப்பார்ப்பு, கனவு,ஆசை. நிஜ வெய்யிலிலிருந்து இளைப்பாற பொய் நிழல்

அதிர்ஷ்டம் என்பதை மச்சம் என்றும், ஜாதகம் என்றும், வரம் என்றும், முற்பிறப்பின் பலன் என்றும் காலங்காலமாய் கூறி வந்தாலும், விஞ்ஞான பூர்வமாய், இது சரியா என்று ஆராயப்படவில்லை.எனினும், மனவியல் ரீதியாக, இதற்கு பிண்ணணி இருப்பதாகவே கொள்ளலாம்.

பரீட்சைக்கு, அதிர்ஷ்டமான பேனாவை கொண்டு செல்வதிலிருந்து, திறமையானவர்கள் கூட, இந்த ஷ்ர்ட், ஷீஸ் அதிர்ஷ்டமானது என்று வைத்துக் கொள்வது, மனத்திறனோடு சம்பந்தப்பட்டதாகத் தான் தெரிகிறது. திறமை, சக்தி, ஆர்வம், வெற்றி பெறக்கூடிய அளவுக்கு தீர்மானம் இருப்பவர்கள் கூட, அதிர்ஷ்டம் தேவை என்று நினைக்கக் காரணம் என்ன? அச்சம் மட்டுமே.

இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும். தோற்றுவிடக் கூடாதே என்ற எண்ணத்தில் முன்னெச்சரிக்கையாக இருப்பது, அதிர்ஷ்டத்தை வேண்டுவதாகாது. நனறாக, தயார் செய்து கொண்ட பின்னும், ஒரு செயலைச் செய்ய தக்க திறமையைக் கொண்டிருந்தும், அதிர்ஷ்டம் இருந்தால் தான் எல்லாமும் நல்ல விதமாக நடக்கும் என்ற எண்ணத்தை ஒரு கவசம் போல கொள்வதினால், தன்னம்பிக்கை என்ற வேர் பழுது படாமல், பார்த்துக் கொள்ள ஏதுவாகிறது.

தன் மேல் எத்துணை நம்பிக்கை வைத்தாலும், தன் செய்லகளின் விளைவுக்கு தான் காரணம் அல்ல. என்ற ஏண்ணமே , இத்தகைய போக்கினை வளர்க்கிறது. முதல் காரணம் அச்சம், அடுத்தது, தன்னம்பிக்கை குறையாமல், அவ்வேலையை செவ்வனே செய்ய, தன் சக்தியை மீறி , வேறொரு சக்தி தேவைப்படுவதாக எண்ணும் எண்ணமே, அதிர்ஷ்டம் என்பதை எதிர் பார்த்துக் காத்திருக்கச் செய்வது.

அதிர்ஷ்டம் என்ற ஒன்றை மனிதன் எப்போது நம்ப ஆரம்பிக்கின்றான். எப்போதுமே ஒருவர் வாழ்வில் வெற்றியோ, நல்ல நிகழ்ச்சிகளோ நடை பெறும்போது, அதிர்ஷ்டம் பற்றி அவன் சிந்திப்பதேயில்லை. சட்டென்று தோல்வியை சந்தித்துக்கும் போது, அடுத்து நடைபெறும் காரியத்தில் தனக்கு நிச்சயம் வெற்றிக் கிட்டுமா? எனக்கு அதிர்ஷ்டம் உள்ளதா? என்று ஆராய்தல் அவனுள் ஏற்படுகிறது.

இது இயல்பு தான். தடுக்கி விழப்போகும் நேரத்தில் தானே, தடி தேவைப்படும்.எப்படியாது, இந்த பிரச்சனை தீர வேண்டும் என்ற பதட்டம் நேரும் போது தான், பயம் ஏற்படும் போது, ஒரு துணை தேவைப்படுகிறது மனதிற்க்கு வலுவூட்ட. அத்துணையாகத்தான், அதிர்ஷ்டம் பற்றிய எண்ணமும், அதனை சார்ந்த செயல்களான, நல்ல நேரம், ஜாதகம் , எண் கணிதம், போன்றவை பார்த்தலும் ஏற்படுகின்றன.

அதிர்ஷ்டம் என்பது ஒரு வித நம்பிக்கையே. உலகம் முழுதும் இந்த விதமான நம்பிக்கைகள் இருக்கின்றன. வீட்டில் இயந்திரம் கட்டினால், செல்வம் கொட்டோ கொட்டென்று கொட்டுமாம். அப்படி கொட்டி விடுகிறதா. ஆனாலும், எதைத் தின்னால் பித்தம் தெளியும் என்ற நோக்கத்தில் , செய்து தான் பார்போமே, என்ன தான் ஆகிறது என்ற எண்ணத்தில் செய்யப் படுவன தான் ,இயந்திரம், வாஸ்து, குபேரன் சிலை வைப்பது, வீட்ட்ன் நுழை வாயிலில், கண்ணாடி வைப்பது போன்ற செயல்கள்.

ஆனால் அதற்காக, நாம் செய்ய வேண்டிய தொழிலையோ, காரியங்களையோ நாம் செய்யாமல், அதிர்ஷ்ட்ம் எனக்கு உண்டு, என் ஜாதகமே சொல்கிறது என்று பேசாமல் இருந்து விடுகிறோமா. மனதிற்க்கு ஒரு ஆறுதல், ஒரு விதமான பிடிப்பு, எல்லாமும் செய்து, அதிர்ஷ்டம் வரவழைக்கும் வழியையும் செய்து விட்டாகி விட்டது. இனி கவலை இல்லை,. நடப்பது நடக்கட்டும் என்ற மனத் திண்மையை அடைவதற்காகவே அதிர்ஷ்டத்தை நம்பவும், விரும்பவும் செய்கின்றனர் பலர்.

ஆக அதிர்ஷ்டம் என்பது என்ன? நல்ல முறையில் எல்லாம் நிகழும் போது, அதன் தொடர்பாய், நினைவாய், பொருளோ அல்லது நபரோ இருந்தால், அது நமக்கு தொடர்ந்து விளைவிக்கும் அமைதியே அதிர்ஷ்டம் என்று அழைக்கப்படுகிறது.

ஆக அதிர்ஷ்டம் என்பது பொருளில் இல்லை. அச்சத்தைக் குறைக்க, மனதில் இருக்கும் பதட்டம் போக துணை செய்ய என்னென்ன எண்ணங்கள் உதவுமோ, அவை எல்லாமே அதிர்ஷ்டம் கொடுக்கும் சாதனங்களே. இச்சாதனங்கள் அமைதி மட்டுமே தரும். வெற்றி பெற முயற்சி ஒன்றே வழி. இது அனைவருக்கும் தெரிந்ததே.

" பார்வை இலக்கில் பதித்து விட்டால், பள்ளம் மேடு எதுவுமே பாதையில் கிடையாது"

" எண்ணித் துணிக கருமம், துணிந்த பின் எண்ணுவம் என்பதிழுக்கு "

- இந்தப் பார்வை நமக்கு வரும் வரை, அதிர்ஷ்டம் என்ற நம்பிக்கையை கைத்தடியாய் வைத்துக் கொள்வதில் தவறில்லை. கண் திறந்து விட்டால், காட்சி தெரிந்து விடும். பாதை தெரியும், பயணம் புரியும். புரிந்தால், நடக்க வலு வந்து விடும். வேகம் கூடும். அப்போது எந்த வித தடியும் தேவைப்படாது.

35 comments:

Anonymous said...

Kuppan says

NAALL ENNA SEIYYUM POZUDHU ENNA SEYYUM... - Thevaaram or Tiruvaasagam (i am not sure)

Adhu polathaan adirstam enbadhu oru nambiikai thaan, matrapadi uzaippu, eedupaadu thaan vetri tarum.

oru kaariyam seyya aarambikkum pothu irudhi mudivu enna aagumo endra kavalai eppodhum irukkum.

Appozuthu ulla mana azuthathai kuraikka adirstam pondra kaithadi udhavum.

Orukaal tholvi adaya nerndhaal, adirtstathai palikadaa akkuvom.

Enakku adirstam illai.

Adhe pola nam ediri jeyithaal, avanukku adirstam adhuthaan jeyithom endru solluvom.


Vaazthukkaludan

Kuppan_2007

Kumar said...

//அச்சத்தைக் குறைக்க, மனதில் இருக்கும் பதட்டம் போக துணை செய்ய என்னென்ன எண்ணங்கள் உதவுமோ, அவை எல்லாமே அதிர்ஷ்டம் கொடுக்கும் சாதனங்களே.//

That's a great statement!.

Even great sportsmen do have certain beliefs and do certain small acts on field to ensure luck...it is a case of conditioning the mind... but one should never spare anything in giving it 100% efforts...

At times when we give it everything and still the results don't match with the efforts we tend to lose faith...then we tend to put the blame on luck.

The trick is not to stop there...but get up and carry on with the efforts in the right direction.

The moment we blame luck, we tend to shift responsibility from our shoulders to some invinsible form called luck. One should drop off such baggages and carry on with a positive mind.

Here is wishing everyone the best of luck ;P

Kumar said...

The baby in pic is so cute!
And it says a lot about going ahead in putting efforts rather than waiting for some help in reaching the top. Good choice!

Sowmya said...

hi kuppan,

Thanks for the feedback :)

Sowmya said...

hey kumar,

##Here is wishing everyone the best of luck ;P ##

to..read this post aah :P haha..

hmm you got the meaning of the picture. yeah ! it says lot.How many you got it? tell me those :)

balar said...

hello sowmya, vacation mudinchu vandhuteengala...:))

//உங்கப்பாவை கல்யாணம் பண்ணினா, எனக்கு எப்படிட இருக்கும் அதிர்ஷ்டம்"//

aaha idhu than sandhadi saakila sindhu paduradhunnu neenga adikadi solluvengala adhu idhu thana...:))

vettri pera muyarchi onre vazhi enpadhu miga poruthamana unmiayana statement adharku neenga opta pota pics superb...

athirstam enpadhu nam munnorkalum, parents um nammkku ooti valartha mooda nambikaikalil idhuvum ondru..

mattravargalukku kidaikatha ondru namakku kidaikkum pozhuthu , adhu athirsatam endru naam nambukiromo illaiyo aanaal mattaravargal nammidam kooruvadhu "Unakku Athirstam" da athan unakku kidaichu irukku engalukku kidakalai enpadhu..

nalla sinthanai pathivu...

Kumar said...

best of luck was not for reading the post...The post is definitely a very good one.

It's like..."there is no such thing as luck" and then wishing "best of luck" It is an acknowledgement of "if anything can go wrong, it will" and "do everything you can...if something still goes wrong, I am not at fault and you are not at fault and we always have something called luck to take responsibility for it..."

It's also like...if I succeed it is due to my talent & efforts...if I don't, then it's because of luck.

Anonymous said...

Great post sowmya

(one of these days I will actually comment in tamil :) )

I do agree that putting "the blame" on luck or giving credit to it (which is rarer but does happen) is indeed a way of shirking responsibility.

But on the flipside, you gave your very best. But you did not get it. You see someone else whom you know did'nt do as well (let us say this is not your jaded view) and he/she got it. Now our instinct would tell us that there is some amount of luck.

So somewhere in these there is a recognition that sometimes even in spite of your best, "things beyond your control" may prevent you from getting what you were striving for. Luck is a label attached to that.

There are 3 attitudes:
1. At the start itself you say "I need luck for that"
2. You say I will give my best and in spite of that, it is possible that things may turn awry. But it does not matter as long as I feel that I did my best.
3. There is no such thing as luck. If one give's 110% there is nothing one cannot achieve. If you didnt get anything, then it means you just didnt try your best eventhough you felt you did.

Now Which one is most grounded in reality :) ?

Now everyone would probably agree #1 is not a very positive / aggressive one and can seem defeatist. The question is how about between #2 vs. #3? I think in today's world we hear more of #3 as advice - dont we?

Sowmya said...

பாலர்,

வாங்க ! வாங்க ! திடீர்ன்னு காணாம போய்டறீங்க !

எங்க துரதிஷ்டம் தான் உங்க வலைப்பதிவு மூடிக்கிடப்பது. especially, your photo blog :)

Sowmya said...

hey kumar,

hmm...you took it very seriously !

I was kidding with that reply :)

Anyway, damn good explanation for "Best of luck"!

By the by, you dint express your views about the picture!

## hmm you got the meaning of the picture. yeah ! it says lot.How many you got it? tell me those :)##

I'm eager to know, how u feel abt it. :)

Sowmya said...

hey arun,

## (one of these days I will actually comment in tamil :) )##

let me do it :)

## So somewhere in these there is a recognition that sometimes even in spite of your best, "things beyond your control" may prevent you from getting what you were striving for. Luck is a label attached to that.##

Very much true :)

## 1. At the start itself you say "I need luck for that"##

:) Thanks for this Question . Actually i waited for someone to ask this :)

"அதிர்ஷ்டம் உங்களை அழைக்கிறது " - இது போன்ற தலைப்பு வைத்ததற்க்கு, இரு கோணங்களில் காரணம் இருக்கிறது.

பொதுவாகவே, ஒருவரின் நம்பிக்கை சார்ந்த விஷயங்களைப் பற்றி பேசும்போதும், எழுதும் போதும், யார் மனமும் நோகாத வண்ணமே கருத்துகள் தெரிவிக்கப்பட வேண்டும். இது தான் என் எண்ணமும். அதிர்ஷ்டம் என்பதே இல்லை. அது பொய்யானது என்று பொருள் படும் வண்ணம், தலைப்பை வைத்தால், அதிர்ஷ்டத்தில் மிகவும் நம்பிக்கை கொண்டவர், பதிவின் தலைப்பை பார்த்ததுமே, இது எனக்கு ஒவ்வாத விஷயமாயிற்றே என்று பதிவை படிக்காமலே போகலாம். அவ்வகையில் என் கருத்து அவரை எட்டாமலே போய்விடுகிறது.

மற்றொரு வழியில், இத்தலைப்பை சிறிது மாற்றிப் படிக்க வேண்டும் "அதிர்ஷ்டம் உங்களை அழைக்கிறது" என்று படிக்காமல் "அதிர்ஷ்டம் - உங்களை அழைக்கிறது" அதாவது, அதிர்ஷ்டம் பற்றிய இத்தலைப்பு உங்களை படிக்க அழைக்கிறது. என்று பொருள் படும்படியே இத்தலைப்பு வைக்கப்பட்டது.

Hope you can connect my reply with the other two questions

Enjoyed your comment :)

Anonymous said...

kuppan-2007 says

Hi Sowmya ji

Tamiz aalumai nalla vandrukku ungalukku. good.

Adirstam Talaippu ungalai padika azaikkirathu, nalla sollaadal.

Vaazthukkal.

Kuppan_2007

balar said...

//துரதிஷ்டம்//
அடுத்த பதிவுக்கு தலைப்பு ரெடி..:))

அதிர்ஷ்டம் பத்தி ஒரு கேள்வி, முயற்சி, திறமை தான் வெற்றிக்கு படி உண்மையே..ஆனால் சில இடங்களில் அதிர்ஷ்டத்தை நம்பாமல் இருக்க முடியவில்லையே..
உதாரணத்திற்கு casino gambling..அங்கே coins slot விளையாடுபவர்கள் அனைவரும் ஒரு முயற்சியுடன் தான் ஒரு மாதிரி விளையாடுகிறார்கள் ஆனால் அனைவருக்கும் jackpot அடிப்பதில்லையே..குறிப்பாக
நான் எப்ப போய் casinoல coins slotல (25 cents than) விளையாண்டாலும் பெரும்ப்பாலும் jackpot தான் வருது இல்லாடி குறைந்த பட்சம் ஒரு $300 மேல வரும்..என்னுடன் கூட வரும் நண்பர்கள் அனைவரும் கூறுவது உனக்கு மட்டும் அதிர்ஷ்டம் எப்பவும் இருக்குடா என்பது..
இதில் அதிர்ஷ்டமா,முயற்சியா இல்லை திறமையா இல்லை machine சரியில்லையா..பதில் கூறவும்..:))

Sowmya said...

hi kuppan,

:)

----------

hi balar, vanga !

அடடா மிகவும் நல்ல கேள்வி :)

முயற்சியும், திறமையும் தான் வெற்றிக்கு வழி கோலுகிற்து.அதனை தாங்கள் மறுக்கவில்லை. என்றாலும், எதோ ஒரு மூலையில், உங்களுக்கு அதிர்ஷ்டம் இருப்பதாகவே எண்ணுகிறீர்கள் இல்லையா !

ஒன்று, நீங்களே தாங்கள் அதிர்ஷ்டம் ஆனவர் என்று நம்பிக்கைக் கொண்டிருக்கலாம். அல்லது, தாங்கள் கூறியது போல, தங்கள் நண்பர்கள் உங்களைப் பற்றி நேர்மறையாக கூறும், கருத்துக்களை மனம் உவந்து ஏற்றுக் கொண்டிருக்கலாம் :P

எப்போதுமே மனம், நேர்மறையாக கூறும் கருத்துக்களில் தப்பிதம் தேடவே முயலாது.எதிர்மறையான கருத்தகளாக இருந்தாலோ, அக்கருத்தில் பெரிய ஈடுபாட்டையும் காட்டாது. இது தான் மனித இயல்பு. உங்களுக்கு உஙகள் திறமையின் மீதும், முயற்சியின் மீதும், அதீத நம்பிக்கை இருப்பதினால், நீங்கள் உஙகளுக்கு அதிர்ஷ்டம் இருக்கிறது என்று உங்கள் நண்பர்கள் கூறியதும், அத் உங்கள் அதிர்ஷ்டம் என்றே நம்புகிறீர்கள்.

இதுவே நீங்கள், உங்களுக்கு திறமையில்லை என்று நம்பும் பட்சத்தில் , யார் என்ன கூறினாலும், அதிர்ஷ்டம் என்பது உங்களுக்கு இல்லை என்று தான் எண்ணுவீர்கள்.எல்லாமே, நம்மைப் பற்றி நாம் கொள்ளும் நம்பிக்கைகளும், அதனை சார்ந்த எண்ணங்களுமே காரணம்.

## இதில் அதிர்ஷ்டமா,முயற்சியா இல்லை திறமையா இல்லை machine சரியில்லையா..பதில் கூறவும்..:))##

காக்காய் உட்கார பனம் பழம் :P அவ்வளவு மட்டுமே !

பதில் கூறிவிட்டேன். அது நீங்கள் எதிர்பார்(ரா)த பதிலா..இல்லையா.. என்பதை நீங்கள் தான் கூறவேண்டும். :)

Unknown said...

All is Luck. To be precise, Randomness is everything. Almost all our efforts to find the "so called" reasons for events happen post-facto, after the events have happened.

Out of this randomness, we seek patterns/sequences to satisfy our minds, which will not rest unless fooled by some "reason". If you cant get any "reason" based on your limited knowledge, invoke "luck". Luck is basically the random outcome which is favourable. So, the reasons - luck vs talent, God vs Devil etc., are all MERE NAMES, which are limited only by your imagination.

In fact, this is the essence of Gita. "Don't think too much of yourself. Things have happened before you, are happening when you are here and will happen after you. So, stop 'owning' whatever happens." ;)

Think this is too much for a comment, probably it requires a long post.

Sowmya said...

hi sk,

Nice comments :)

Yeah !,So much of life,is determined by pure randomness.

and you name it as luck ! and for me, things just happened on their own way.

balar said...

//பதில் கூறிவிட்டேன். அது நீங்கள் எதிர்பார்(ரா)த பதிலா..இல்லையா.. என்பதை நீங்கள் தான் கூறவேண்டும்//

நீங்கள் கூறிய பதிலை நாங்கள் எப்படி மறுக்க முடியும்..அப்படியே மறுத்தாலும் missiles attack அல்லவா வரும் நால புறங்களிலும் இருந்தும்...:)))

அனைத்து நல்ல விசயங்களுக்க்ம் நாம் அதிர்ஷடம் என்று கூறுவதில்லை...நாம் எதிர்பாரிக்காத் நல்ல விஷயம் திடீரென்று நேரிடம்ப் போதும், கிடைக்கவே கிடைக்காது என்று ஒரு பொருளை நாம் நினைத்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று அப்பொருள் கிடைக்கும் போதும் பெரும்பாலோர் அதை அதிர்ஷ்டம் என்று கூறுவர், என்னை போன்ற ஒரு சிலர் அதை கடவுளின் ஆசி இல்லை அருள் என்று கூறுவோம்...:)

balar said...

//காக்காய் உட்கார பனம் பழம் :P அவ்வளவு மட்டுமே !//

அந்த காக்காய் யாராக இருக்கும்..:))

Sowmya said...

haha...balar :)

காக்காய் யார்?

பனம் பழத்தின் மேல் தான் உட்கார்ந்ததால் தான், அப்பழம் விழுந்தது என்று நினைப்பவரே :P

அது வெறும் நினைப்பு மட்டுமே. தானாக விழுந்த பனம் பழத்தின் செய்லை, தன் அதிர்ஷ்டத்தினால் தான் விழுந்தது என்று எண்ணுவது, சந்தோஷத்தை வேண்டுமானால் அளிக்கலாம். ஆனால் மடமையே :P

இரு வேறு செயல்கள், எதேச்சையாக, ஒரே நேரத்தில் நடைபெறும் போது, தனக்குச் சாதகமாக, அச்செயலை திருப்பி, திருப்தி பட்டுக் கொள்பவரே காக்காய் :P

Kumar said...

//hmm you got the meaning of the picture. yeah ! it says lot.How many you got it? tell me those :)//


Actually, whatever came to my mind the moment I saw the pic, I had already put in.

What else? Let me think...

The pic doesn't show where the stairs lead to... but does it ever matter to a child? The curiosity enables it to explore all possibilities without fear of failure...normally a child enjoys the act of climbing a flight of stairs and it tends to keep going; it's only the grown ups who want to know first what is at the top and then decide whether to go for it or avoid it. The child just climbs the steps for the sheer fun of doing it

Next, the baby is focussing on only at the next step in front of its eyes... undaunted by how many more to go...or how tall each step is...

Then...it doesn't have fear of falling...it's the parents who teach the child about the fear and teach it to avoid risky explorations...if no one were to tell the kid that it would fall down, then probably, by its own efforts, it might complete the steps in one go!

Does a kid ever assess the extent of challenge in front? Doesn't seem so! It just launches itself into whatever it sees in front! No planning or goal setting or manipulation of any sorts till its own learning from experiences teach it the negative aspects of efforts...so it's fun filled efforts, all the way!

Also one can see it has no qualms whatsoever about stretching the limits...

Well, that's it! Now, can you please share what was on your mind about this pic?

PS: Is my return missile carrying enough ammunition for your patriots & scuds?

Sowmya said...

hey kumar,

Well done.and damn good explanation about the pic :)

I think, you totally put your focus on that child in the pic and you thoroughly analyzed the points.But how can you connect that picture with this topic "athirshtam".

if possible, give me some points from your side or shall i explain it?

Kumar said...

Oh!

the phrases exploring possibilities, undaunted by the task, launching oneself at the task, no qualms about stretching etc., do underline that focussed effort is what counts and luck is just a belief tagging along a particular state of mind, right!

( என்னது, கீழே விழுந்தேனா? இல்லையே, எங்கேயும் எதுவும் ஒட்டலயே!)

நீங்களே அந்த படத்தைப் பற்றிச் சொல்லி விடுங்களேன்.

Sowmya said...

:) இதில் வீழ்வது, மாள்வது, எழுவது எங்கே ! பகிர்தல் மட்டுமே

அதிர்ஷ்டம் பற்றிய இப்பதிவிற்க்கு , ஒரு படம் போட்டால் என்ன.. என்று தோன்றிய போது, எதை வைத்து இத்தகைய தலைப்பை பொருந்த வைப்பது என்று யோசித்தேன்.

அதிர்ஷ்டம் என்பது கோல் (தடி) மாதிரி. நம் ச்ந்தோஷத்தையோ, துக்கத்தையோ, அன்றாடம் நமக்கு நடக்கும் நிகழ்வுகளோடு தொடர்பு படுத்தி பார்க்கும் போது, இது என்னால் தான் ஆனது என்ற நம்பிக்கை கொள்ளாமல், நேரம், அதிர்ஷ்டம் என்பதோடு தொடர்பு கொண்டே, வாழ்க்கையை நோக்குதல் தான் பெரும்பாலும் பழக்கமான ஒன்று. தன்னை மட்டுமே நம்பாமல், தன்னை இயங்க வைக்க எது காரணமாய் அமைந்ததிருக்கிறது என்ற அளவில் தான், எல்லா விஷயங்களிலும் நம் நோக்குதல் இருக்கிறது. ஆக, நம்மை நாம் நிமிர வைக்க, ஒரு கோல்(தடி) தேவைப்படுகிறது தத்தித் தவழும் சிறு குழந்தைக்கு, ஒரு ஊன்று கோலாக , படியோ அல்லது, எதோ ஒரு பிடிப்போ தேவைப்படுதல் போல தான், "அதிர்ஷ்டம் இருக்கிறது" போன்ற நம்பிக்கையும்.

எத்துணைக் காலம், ஒரு குழந்தைக்கு, சரியாக நடக்க , ஒரு ஊன்று கோல் தேவைப்படுகிறதோ, அப்படித் தான் அதிர்ஷ்டம் இருக்கிறது,அது தேவை , என்று நம்பிக்கை கொள்ளுதலும் மனிதனுக்குத் தேவைப்படுகிறது.

தன்னம்பிக்கையின் அளவு சரியான விகிதத்தை அடையும் வரை, அதிர்ஷ்டம் என்ற ஊன்று கோலை வைத்துக் கொள்ளலாம் என்ற பொருள் படும் வகையில் தான் இக்குழந்தை படம் போடப்பட்டது. :)

Kumar said...

That is an amazing link for the story. Excellent!

There could also be a slightly moderate belief that no matter how big the self confidence is, still something can go wrong, due to certain forces beyond one's control, thus denting the confidence and then the same person may start getting into believing luck?

In a lighter vein, look at this :)

We must believe in luck. For how else can we explain the success of those we don't like?

...and a serious quote...

All of us have bad luck and good luck. The man who persists through the bad luck - who keeps right on going - is the man who is there when the good luck comes - and is ready to receive it.

...and a quote that defines luck...

Be ready when opportunity comes...Luck is the time when preparation and opportunity meet.

...and a quote that hits hard in our face....

Depend on the rabbit's foot if you will,(for luck), but remember it didn't work for the rabbit.

...and a very practical one...

Luck to me is something else. Hard work - and realizing what is opportunity and what isn't.

Sowmya said...

hi kumar,

Nice comment with good quotes :)

Kumar said...

அடடா, இப்படி இரண்டே வரிகளில் முடித்து விட்டீர்களே?

அவ்வளவு quotes கொடுத்ததன் காரணமே உங்களிடமிருந்து வரும் பதிலுக்காகத் தான்!

ஒவ்வொரு முறையும் ஒரு புதிய கோணத்தை (missile!) உங்களிடமிருந்து ஆவலுடன் எதிர்பார்க்கும் எங்களை ஏமாற்றி விடாதீர்கள்!

Sowmya said...

haha...

ethethu en kitta irukira stock theerara varai vidaratha illaya neenga !

lol..paadu santha paadu nu solra dialogue maathiri irukku..

nalaikku yethavathu thonichunna comment panren :)

Sowmya said...

hi kumar,

## There could also be a slightly moderate belief that no matter how big the self confidence is, still something can go wrong, due to certain forces beyond one's control, thus denting the confidence and then the same person may start getting into believing luck? ##

There lays the problem of acceptability.Acceptance of what has happened is the first step to overcoming the consequences of any misfortune.

## We must believe in luck. For how else can we explain the success of those we don't like?##
## All of us have bad luck and good luck. The man who persists through the bad luck - who keeps right on going - is the man who is there when the good luck comes - and is ready to receive it.##

Success is just a feeling you get while you achieve something what you aimed. It is not a Occurance by its name.

## Be ready when opportunity comes...Luck is the time when preparation and opportunity meet. ##
## Luck to me is something else. Hard work - and realizing what is opportunity and what isn't.##

May be you can name anything as luck. its just your belief. :)

## Depend on the rabbit's foot if you will,(for luck), but remember it didn't work for the rabbit.##

Haha.. :P

mela sonnathellam missile nu sollatheenga. :P

Kumar said...

Nice rejoinders!

Of the quotes, my favourite is the one about rabit's foot! Captures the irony in its full force, right?

Some time back (ok, ok, actually it is a long time back) during my first year of schooling in hostel, our seniors staged an english play called 'The Monkey's Paw'.

This was about a monkey's paw some one gifts to the family and then the family members start dying one by one.

The story and the team's acting were so powerful that I used to have nightmares for many days. That was my first exposure to something that was opposite of luck.

The impact lingered on for more than an year and I used to get scared to even cross the paths of those seniors who acted in that play!


சற்றும் எதிர்பாராத ஒரு புதிய கோணத்தில், அடடா, இப்படியும் எடுத்துக் கொள்ளலாமே என நினைக்க வைக்கும் எண்ணச் சிதறல்களை :) missiles எனக் கூறலாம், சரியா?

Sowmya said...

Everyone experienced some kind of fear in different situations like what you said.May be, it got conditioned for so long years. and our mind started believing the same until the end.

Thanks for the patience and interest you have on this topic to discuss this much. :)

தமிழ் said...

/அதிர்ஷ்டம் என்பது பொருளில் இல்லை. அச்சத்தைக் குறைக்க, மனதில் இருக்கும் பதட்டம் போக துணை செய்ய என்னென்ன எண்ணங்கள் உதவுமோ, அவை எல்லாமே அதிர்ஷ்டம் கொடுக்கும் சாதனங்களே./

உண்மை தான்

Sowmya said...

Hi thigazh milir,

Welcome to my blog :) thanks for the feedback !

Sowmya said...

I can do my next post after a week. Now, I'm on tour. See u all soon :)

k.veeramuni said...

தங்களது யதார்த்தமான கட்டுரை இன்னும் பலரைச் சென்றடையட்டும்.
இப்படிக்கு
www.aanmigakkadal.blogspot.com
www.online-astrovision.blogspot.com
www.india-current-news.blogspot.com

Sowmya said...

Nandrigal pala veeramuni :)