யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!

Friday, April 13, 2007

வெளிச்சத்தை உணருவோம் !


அனைவருக்கும் எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

நம்மை பற்றி நாமே பல சந்தர்ப்பஙகளில் குறைத்து மதிப்பிட்டுக் கொண்டுவிடுகிறோம். மற்றொருவருடன் ஒப்பிட்டு பார்த்து , நம்மை நாமே குறைத்து மதிப்பிட்டு கொள்:ள அவசியம் இல்லை.

ஒவ்வொரு மனிதருள்ளும், தனித்தன்மை உள்ளது.அதனை உணர்ந்து கொண்டால் போதும்.மற்றவருடன் ஒப்பிடும் போது தான் கூடுதல், குறைவு என்கிற எண்ணம் வளர்கிறது.

அவரவர்களின் திறமை, குணங்கள், தனித்தன்மை இவற்றிற்கு ஏற்ப தான் வாழ்கையை அமைத்துக்கொள்கிறோம். நமக்குள் குறைகள் தென்பட்டால், நம்முடைய இயல்புக்கு ஏற்ற படி , நம்மை மாற்றிக்கொண்டு சிறப்பு அடையவும் முடியும்.

அத்றகு நம்முடைய தனித்தன்மைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நம்மை நாம் நம்ப வேண்டும். நான் ஒரு முழு மனிதன் தான் என்பதை உணர வேண்டும்.

என் வாழ்க்கை எப்படி அமைந்தாலும் அதற்கு நானே பொறுப்பு. இந்த மன நிலை தான நம்மை நாமே புரிந்து கொள்ள் உதவும். ந்ம்மை நாம் புரிந்து கொண்டால் தான் , நம் வாழ்கை வளையத்திற்குள் நாம் என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு கிடைக்கும்.

அப்போது தான் எந்த சூழ் நிலையிலும் நாம் நாமாக இருக்க் முடியும். இன்னொருவரை போல நம்மால் வேஷம் போட இயலாது.

ந்ம் முழுமை நமக்குத் தெரிந்தாலே, நம் திறமை முழுமையாக வெளிப்பட்டு விடும். திறமை வெளிப்பட்டாலே, தன்னம்பிக்கை வளர ஆரம்பிக்கும். வாழ்க்கைப் பாதையின் வெளிச்ச்ம் தெரியும்.

2 comments:

balar said...

நல்ல பதிவு..நீங்கள் கூறியது எவ்வளவு உண்மையான விஷயங்கள்..
அதுவும் புத்தாண்டான இன்று உங்களுடைய இந்த யதார்த்த்மான் அட்வைஸ் ஒரு புத்துணர்ச்சிய தருகிறது....

தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
:)

Sowmya said...

ந்ன்றி . இது அட்வைஸ் இல்லை. எண்ணங்களின் பரிமாற்றம் மட்டுமே. புத்தாண்டு வாழ்த்துக்கள் :)