யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!

Tuesday, April 17, 2007

அழகு ஆயிரம் உலகம் முழுவதும்...!

வாழ்க்கை அழ்கு...வாலிபம் அழகு....இயற்கை அழ்கு..இல்லம் அழகு.. மூப்பு அழகு..முத்தமிழ் அழகு....குமரி அழகு...குழந்தை அழகு...

அறிவு அழகு....அன்பு அழகு....அணைதத்ல் அழகு ..ஆதிக்கமும் அழகு.. சிரிப்பு அழகு...சிந்தனையும் அழகு....

பசித்தவனுக்கு சோறிட்டு அவன் முகம் பார்தால் எத்துணை அழகு !
அன்பால் பகை வென்றோரின் அருளுள்ளம் எத்துணை அழகு !

எது அழகு இல்லை இங்கே ! எல்லாமே பேரழகு..! இதில் ஆறினை சொல்லுஙகள் என்றால் எதைச் சொல்லுவது..! இது அழகில்லை பாலர் உங்களுக்கு !

இச்சமயம் என் அறிவுக்கு எட்டியதை இயம்புகிறேன்.

மென்மைக்கு மயங்காதவர் யார்? தனதுடைமை ஆக்கிக் கொள்ள்த் துடிப்பதை விட, பார்த்துக்கொண்டே இருப்ப்தில் தான் எத்துணை ஆன்ந்தம். சொல்வதில் கூட அழுத்தம் இருக்கக் கூடாது என்று தானோ , பூ என்ற ஒர் எழுத்தை வைத்தான் மனிதன். மனதள்ளும் சந்தோஷம் வேண்டுமென்றால் பூக்களோடு வாழ்ந்து பார்க்க் வேண்டும்

ம்ஞ்சள் நிலா ! நிலா நிலா ஓடி வா பாடிய காலத்தில் இருந்தே அதன் மேல் எனக்கு தீராத காதல். அழகு அழகைக் காட்டி அழகுக்குச் சோறு ஊட்டுகிறது. தாய் குழந்தைக்குச் சோறு ஊட்டும் காட்சி , இப்படித் தான் எனக்குத் தோன்றி இருக்கிறது.

நடு இரவு....வானில் மின்னும் நட்சத்திரங்களுக்கு ஊடே...பாஸந்தி மஞ்சளில் ஒரு இசைத் தட்டு. வாகனத்தில் ப்ரயாணம் செய்து கொண்டே, நம்மோடு நகர்ந்து வரும் நிலவை, மரஙகளின் இடையே பார்ப்பது தான் எத்துணை அழகு!

கடல் அலைகளில் கால் நனைத்து, மண்ணோடு நம்மை உள் இழ்த்துச் செல்லும் உண்ர்வை பெறுவதில் தான் எத்துணை சந்தோஷம். யார் தான் குழந்தை ஆகி விட மாட்டார்கள் அப்போது.

எழுமின்! எழுமின்! விழுமின்! விழுமின்! - இதன் அர்த்தம் கடலலைகளை பார்த்த போது தான் எனக்கு புரிந்தது. "ஹோ" என ப்ரவாகம் எடுக்கும் அலைகளில் இருந்து, வாழ்கையில் விழுதலும் பின் எழுதலும் இயல்பே என்ற உண்மை புலனாகிறது அன்றோ! அழகோடு அறிவையும் கற்றுத்தருகிறது இயற்கை.

துளித் துளி பனித் துளி ! வெப்பக் கதிர்களின் அரவணைப்பில் நாள் முழுதும் கட்டுண்டு கிடக்கும் இயற்கையை இரவு முழுதும் தன் வசமாக்கி குளிர்ச்சி தரும் குளிர் சாதன வசதி.

மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே .. பனித்துளி பற்றி கூறாத கவியும் உண்டோ.

கம்பீரம் ! மலைகளின் தோற்றம் கற்றுத்தரும் பாடம். உயர்தலை மனிதன் மலைகளைப் பார்த்து தான் கற்றுக் கொண்டிருப்பான். உறுதியை அறுதியிட்டுக் கூறும் உன்னத மலைகள்,பனிப் போர்வைக்குள் ஒளிந்திருக்கும் காட்சி அழகோ அழகு!

வானத்து வீதிகளிள் ஹோலிக் கொண்டாட்டம். ஒளிக்க்ற்றையில் இயற்கை காட்டும் கெலடாஸ்கோப்பு. பூப்படைந்த வான் மங்கையின் செவன் இன் ஒன் பட்டுப்புடவை . வான மகளின் நெற்றிக்கு ஜிகினா பொட்டு. இப்படி வர்ணித்துக்கொண்டே போகலாம், நிற பிரிகையில் ஜாலம் காட்டும் வானவில்லை.

ஆறு மனமே ஆறு ! பாலரின் கட்டளை ஆறு !

கூட ஒரு கொசுறு ப்ளீஸ் ப்ளீஸ்!

குளு குளு பிரதேசம் ! பச்சை பசேல் என ஜொலிக்கும் புல்வெளிகள் படர்ந்த பள்ளத்தாக்கு ! சில் என்று மேனி தொடும் குளிர் காற்று ! பூமி மகளை குளிப்பாட்ட , ஷவர் திறந்து விடும் வானம். எப்போது கலக்க்ப்போகிறாம் என காத்திருக்கும் மண், கலந்த பின் அதனால் எழும் மணம், துடைத்து விடப்பட்ட நிலைக் கண்ணாடியாய் பாதை. மெலிதாக ஒலிக்கும் இளையராஜாவின் பாடல், தோள் சாய துணைவன்....

ஆஹா...! சொல்லவா வேண்டும்...

ஆயிரம் ஆயிரம் அழகு கொட்டிக் கிடக்கும் நம்மைச் சுற்றி. ஆனால், அதை அனுபவிக்க வெகு சிலருக்குத் தான் தெரிகிறது. உள்ளிருக்கும் அழகைக் கண்டு பிடித்தாலே , வெளிப் புற் அழகு தானக புலப்ப்டும். பசிததவன் சோற்றினைக் கண்டால் தான், ருசிப்பதைப் பற்றி யோசிப்பான். ஆதலால்

புசியுங்கள் பின் ருசியுங்கள் ! :)

14 comments:

balar said...

அழகை பற்றி மிக சிறந்த பதிவு..thanks for taking it.

அதுவும் முன்னுரையில பல அழகுகளை பத்தி அடுக்கு அடுக்காக சொல்லியது அழகோ அழகு...

பூக்கள் எப்பொழ்தும் அழகு தான்...
பெண்களுக்கு பூக்க்ள் அழகு ஆண்களுக்கோ பூ வைத்த பெணகள் அழகு..:)).

//அழகு அழகைக் காட்டி அழகுக்குச் சோறு ஊட்டுகிறது. தாய் குழந்தைக்குச் சோறு ஊட்டும் காட்சி // மிக மிக் அருமையான வரிகள்.நிலவின் அழகை ரசிக்காதவர் யாரும் உண்டோ..

நிலா அழகு தான்..அதனால் தான் நிலவுப்பெண்ணே என்று அழகுக்கு அழகை உவமையாக கூறுகின்றோம்..

கடல் அலைகள் என்றதும் பீச்சில் குளிப்பது தான்
ஞாபகம் வருகிறது..ஆனால் பாருங்கள் சுனாமி வந்ததிலிரிந்து அலைகள் என்றால் எனக்கு பயம் தான்.:))

பனித்துளிகள் அழகோ அழ்கு..

/*வெப்பக் கதிர்களின் அரவணைப்பில் நாள் முழுதும் கட்டுண்டு கிடக்கும் இயற்கையை இரவு முழுதும் தன் வசமாக்கி குளிர்ச்சி தரும் குளிர் சாதன வசதி.*/
மிக அருமையான வரிகள்.

பனிபடர்ந்த மலைகள் என்றால் பார்க்க அழகு...

வானவில்லை பற்றி அழகா ஒரு கைக்கூ கவிதையே சொல்லி இருக்கிறீர்கள்..

/**உள்ளிருக்கும் அழகைக் கண்டு பிடித்தாலே , வெளிப் புற் அழகு தானக புலப்ப்டும்.**/
யதார்த்தமான உண்மை..

ஆறு அழகுகள் பற்று ஒரு கட்டுரை எழுத சொன்னால் நீங்க மிக அழகாக ஒரு காவியமே படைத்திருக்கிற்ர்கள்..பாரட்டுக்கள்.

உன்மைய சொல்லுங்க நீஙக்ள் தமிழ் புல்வரா என்ன?? உஙகள் சில் சங்கதமிழ் வார்த்தைகளுக்கு நான் கோனார் தமிழ் உரையில விளக்கம் தேட வேண்டி இருக்கிறது..:))

Sowmya said...

ஹஹ்ஹா....தமிழ் அவ்வளவு அரிதாகி விட்டது இப்போது ! :) எனக்கு இந்த வாய்ப்பை நல்கியதற்க்கு நன்றி :)

நடைமுறைத் தமிழ் மட்டுமே தமிழாக கருதப்பட்டு விடுகிறது. ஆங்கில சொற்களில் நாம் சிறப்படைய வேண்டும் என்ற் ஆவல் அதிக்மாகி போய் விட்டது.காரணம், அதன் வீச்சு. எந்த மொழி தொடர்பாக (communication )இருந்தாலும் , புரிதல் அவசியம். ஆங்கிலம் போல தமிழ் அவ்வளவு புரியப் படுதல் சாத்தியம் இல்லை தான். வெளிப்பாடுகள்(exposure) குறைவு தானே.

எனக்கு ஈடுபாடு தமிழ் மேல் அதிகம்.காரணம், தமிழை நான் அருகாமையில் உணர்கிறேன். அதனால் அதன் பால் ஈர்க்கப்படுகிறேன். ஈர்கப்பட்டாலே, சரளம் சர்வ சகஜமாகிவிடும். அவ்வளவே ! :)

Sree's Views said...

Hello Sowmya...
Bala tag panna blogs paakalaamnu vandhen...woooooooooooowwww !!!

Enakku oru kosuru kodunga..azhagu pathi solla..
"unga tamizh" !!
Nijamaavey sollarenga...enna azhaga irukku tamizh...

romba vekkamavum vedhanaiyavum kooda irukku..school la 14 yrs tamil padichittu...enakku kathi munaila miratti kavidhai ezhudhunna kooda suthama
varaadhu :(
atleast rasikka mudiyudheynnu sandhosham...and that is just what I did with ur post.
Chumma supernga :)
Keep it coming :)


@Bala.. unga comment kooda kavidhai kalandhu azhaga irukku :)

balar said...

/**தமிழை நான் அருகாமையில் உணர்கிறேன். அதனால் அதன் பால் ஈர்க்கப்படுகிறேன்**/
அப்போ நீங்க தமிழ் ஆசிரியையா!???? ..

நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை தான்.. ஆனால்
தங்கள் தமிழ் பல இடங்களில் பேச்சு தமிழையும் சில இடங்களில் இலக்கியத் தமிழையும் கலந்து அல்லவா இருக்கிறது.அதைதான் சொன்னேன் சில் வார்த்தைகளுக்கு தமிழ் உரை பார்க்க வேண்டி இருக்கிறது..நான் படிக்கும் காலத்தில் தமிழ் அய்யாவையும் புத்தகத்தையும் நம்பியதை விட கோனார் தமிழ் உரையையே நம்பி பாஸ் செய்து வந்தேன்..:)

மிகவும் பாராட்டப்பட் வேண்டியது தங்களுக்கு உள்ள தமிழ் பற்று..

Sowmya said...

ஷ்ரீ ..த்ங்கள் அன்புக்கு நன்றி. தங்களது பாராட்டுகளை எப்படி எதிர் கொள்வது என்று எனக்கு தெரியவில்லை. :)

பள்ளி படிப்பு தமிழ் முறைக் கல்வி.ஆதலால் , தமிழ் மட்டுமே என்க்கு பரிச்சயம் அப்போது. பள்ளிப்பருவத்தில் , கதை, கட்டுரைகள் எழுதுவதுண்டு. இலக்க்கண, இலக்கிய் ஆர்வமும் அதிகம இருந்த காலம் அது.. கிட்ட தட்ட, 20 வருடங்கள் முன்பு, விட்டு பொன தமிழை , இப்போது தான், இங்கு எழுதுவதின் மூலமாக தொடர்கிறேன்.

மனம் உவந்து பாரட்டுவது , சில மனங்களுக்கு மட்டுமே சாத்தியம். இந்த நட்புணர்வை ஏற்ப்படுதிக் கொடுத்த பாலருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். :) நன்றி பாலர்

Sowmya said...

பாலர்..

தமிழ் ஆசிரியர் கூட இப்பொழுது, "டமில் டீச்சர்" என்று தான் கூறுகிறார். :)

நான் தமிழ் ஆசிரியர் அல்லேன். பிடிதத, தெரிந்த, அறிந்த மொழி தமிழ் .அவ்வளவு மட்டுமே. :))

Thiru said...

I admire your admiration! your post is like a iniya thendral... thodarnthu veesatum intha thamizh thendral...

Sowmya said...

Thanks thiru :)

balar said...

@sowmya

/நான் தமிழ் ஆசிரியர் அல்லேன்*/
மெய்யாலுமா!....பேச்சுத்தமிழுடன் சங்கதமிழ்,இலக்கி யதமிழ்,இலக்கணத்தமிழ் கலந்து எழ்தும் பேசும் ஆசிரியர் இல்லாத ஒரு நண்பரை இப்பொழ்துதான் பார்க்கிறேன்..

உங்களது தமிழ் படிக்கும்பொழுது எனக்கு எனது பள்ளி தமிழ் ஆசிரியர்தான் ஞாபகம் வருகிறது..அவர் சாதரணமாக பேசும்பொழுதே தூய தமிழில் தான் பேசிவார்.எனக்கு ஒன்றுமே புரியாது.) ஒரு நாள் என்னிடம் நாளை வந்தடன் பாலா நீர் இயம்பு வேண்டும் என்றார்..எனக்கு நீர் இயம்புதல் என்றால் என்ன என்று புரியவில்லை சரி ஏதோ கேட்கிறார் என்று நினைத்தேன்.மறுநாள் என்னிடம் பாலா நீர் இயம்பு என்றார்.நானும் இந்தாங்கய்யா நீர்(தண்ணீர்) உள்ள செம்பு என்று வீட்டில் இருந்து எடுத்த வந்த செம்பை கொடுத்தேன்..அவ்வளவு தான் கம்பு பிய்ந்துவிட்டது..:)).அதிலிருந்து அந்த அய்யா வகுப்பு என்றால் கட் தான்..:) இதை எதற்கு சொல்கின்றேன் என்றால், பேச்சுதமிழிலும் கொச்சைதமிழிலுமே பேசிய என்னை போன்றவர்களுக்கு அந்த வய்தில் யாரவது தூய தமிழில் பேசும்பொழுது புரிவது கொஞ்சம் கஷ்டம்தான்..

:)

Sowmya said...

நீங்களும் புரியாத தமிழில் பேசினால், இஙேயும் என் விசிட் கட் என்று மறைமுகமாக சொல்கிறீர்களோ ! ஹ்ஹா..

பேச்சுத் தமிழ், சஙததமிழ் கலந்து பேசுவதில் ஒரு சுய நலம் கலந்திருக்கிறது. என்னால் இயன்ற அளவு, அரிதாக உள்ள தமிழ் வார்த்தைகளை பயன் படுத்தினால், அவ்வார்த்தைகளை திரும்ப நினைவு கூறும் , சந்தர்ப்பம் அமையப் பெறுகிறது. ஓ ! எனக்கு இத்துணை வார்த்தைகள் நினைவில் உள்ளதா... என்ற பூரிப்பும் ஏற்ப்படுகிறது.

ஆனால், புரியவில்லை என்று சொல்லும் போது, தவிர்ப்பது நன்று எனத் தோன்றுகிறது. என்னால் முடிந்த மட்டும், தவிர்க்கப் பார்கின்றேன். :))

balar said...

/*நீங்களும் புரியாத தமிழில் பேசினால், இஙேயும் என் விசிட் கட் என்று மறைமுகமாக சொல்கிறீர்களோ ! ஹ்ஹா..
*/
நான் இப்படி அர்த்தம் கொண்டு கூறவில்லை.பள்ளி செல்லும் சிறுவயதில் புரிவது கஷ்டம் என்று கூறினேன்..:))

அப்புறம் தாங்கள் ஏன் தமிழ்மணம்
வலையில் உறுப்பினராக பதிவு செய்ய கூடாது..தங்களை போன்ற தமிழ் பால் அன்பு கொன்றவர்களுக்கும் உங்களுடைய் அழகான் தமிழ் பதிவுகளுக்கும் அங்கே பெரும் வரவேற்பு அளிக்கப்படும்..முயற்சி செய்து பாருங்களேன்..:)

Sowmya said...

hey balar...

I said it for fun :) dont take it into heart.

So far , i dont have any idea about thamizh manam. Let me know about that site. Thank u so much for the information and this frdly gesture :)

Sree's Views said...

yabbaaa...sowmya and Bala..enakku ennamo oru tamizh manrathula irundhu vandha maari oru feeling :)
hmm paarunga paarunga..naanum innimey tamizhla epdee ezhudha porennu :P
(hee hee chumma udhaar :P )

Sowmya said...

hey shree...

You are most welcome. This shows your interest towards thamizh. You can try to put a thamizh blog, so that we people quench our thirst :)