யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!

Sunday, April 22, 2007

சஹானா !!



இந்த வீணைக்கு தெரியாது இதை செய்தவன் யார் என்று
என் சொந்த பிள்ளையும் அறியாது இதை தந்தவன் யார் என்று எனக்குள் அழுது ரசிக்கின்றேன், இரண்டையும் மடியில் சுமக்கின்றேன்


மலையில் வழுக்கி விழுந்த நதிக்கு அடைக்கலம் தந்தது கடல் தானே! தரையில் வழுக்கி விழுந்த கொடிக்கு அடைக்கலம் தந்தது இலை தானே!எங்கோ அழுத கண்ணீர் துடைக்க எங்கோ ஒரு விரல் இருக்கிறது! தாகம் குருவிகள் தாகம் தீர்க்க கங்கை இன்றும் நடக்கிறது.

சொந்தம் பந்தம் என்பது எல்லாம் சொல்லி தெரிந்த முறை தானே! சொர்கம் நரகம் என்பது எல்லம் சுழ்னிலை கொடுத்த நிறம் தானே ! உள்ளம் என்பது சரியாக இருந்தால் உலகம் முழுதும் இனிக்கிறது.உதிர போகும் பூவும் கூட உயிர் வாழ்ந்திட தான் துடிக்கிறது !

(இந்த வீணைக்கு தெரியாது இதை செய்தவன் யார் என்று)

சஹானா ராகத்தில் அமைந்த பாடல் ! வி.எஸ். நரஸிம்மன் இசை அமைத்து, கே.பாலச்சந்தர் , இயக்கி , ரயில் ஸ்நேகம் தொடரில் வெளி வந்த பாடல். தொடரின் கதையை இந்த ஒரு பாடலிலேயே கவிஞர் (????????) விளக்கி இருப்பார். அது ஏனோ, பாடல் வரிகள் எழுதும் கவிஞர் பெயரை மட்டும் விட்டு விடுகிறார்கள்.

என்னே வரிகள் ! ஒரு கதையின் பிண்ணணியை இந்த ஒரு பாடலின் வரிகள் விளக்கி விட்டது. ஒரு சூழலையிம், மற்றொரு சூழலையும் அழகாக இணைத்து, உண்ர்வுகள் சிதையாமல் கொடுக்க ஒரு சில கவிஞர்களால் தான் முடிகிறது. பாடலில் விரசம் இல்லாமல், உணர்ச்சிகளை தேவைக்கு அதிகமாகவும் கொடுக்கமல், மிகவும் அமைதியாக வலி உண்ர்வை இந்த பாடல் வெளிப்படுதுகிறது.

இந்த பாடலின் இசையும், அதன் வரிகளும் காலத்தால் அழியாத காவியம் போல எனக்கு தோன்றி இருக்கிறது.. கிட்ட்த் தட்ட் பதினேழு ஆண்டுகள ஆகிய நிலையிலும், இந்த பாடலும், அதன் வரிகளும், நெஞ்சில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது.

இது கவிஞரின் வீச்சு, பாடல் இசையின் வீச்சு.கதாபாத்திரதின் வீச்சு ! மனம் கவரும் சூழலைக் கொடுக்க, நான்கு நிமிடம் மட்டுமே தேவைப் படுகிறது என்பது, இதன் மூலமாக தெரிகிறது. அந்த தொடரின் வெற்றிக்கு இந்த பாடல் காரணம் என்பதைக் குறிப்பிட்டுத் தான் ஆக வேண்டும்.

20 comments:

Priya said...

Thank you sowmya... Enjoyed this song after a long gap...

Sree's Views said...

I dont know about the song , Sowmya..aana adha neenga sonna vidham romba nalla irukku :)
naan usualla lyrics kku avalava importance kodukaradhu illa .
So from now on I shd watch for lyrics from now on.
So neenga music la yum super aalunnu sollunga :)
kalakareenga Sowmya :)

balar said...

அருமையான பாடல வரிகள்,இனிமையான இசை மற்றும் அற்புதமான சூழல்..இவை எல்லாம் KBயால் மட்டுமே கொடுக்க முடியும்..

ரயில் சினேகம் தொடர் பார்க்க வில்லை..அப்பொழுது எல்லாம் ஒளியும் ஒலியும் மட்டுமே பார்ப்பதில் விருப்பம்....:)

சரி நீங்களாவது சொல்லுங்கள் யார் அந்த பாடலாசிர்யர்...வரிகளை வைத்து பார்க்கும் பொழுது எனக்கு என்னமோ இளமை கவிஞர் வாலி மாதிரி தெரிகிறத!!...சும்மா ஒரு guess அவ்வளவுதான்..

ஒ!! சஹானா என்று ஒரு ராகம் வேறு உள்ளதா..நான் கூட "சஹானா சாரல் தூறுதோ"ன்னு தலைவர் பாடுனதை கேட்டு சரி சஹானா என்பது ஒரு மழை வராத பிரதேசம் தலைவரை பார்த்ததும் சாரல் வந்துருச்சோன்னு நினைச்சேன்!..:))

அருமையான பாடல் அதை ஒளியும் ஒலியுமாக விளக்கத்துடன் கொடுத்தற்கு நன்றி..

Thiru said...

Sree's... enna ipdi soliteenga
//So neenga music la yum super aalunnu sollunga//
havn't you checked Sowmya's musical blog swararaagasudha yet?

anyway good reminder of an old piece of nice music and lyrics woven in a good raaga.

none said...

Complete Nostalgia எனக்கு!

இந்த Serial வந்தபோது நான் ரொம்ப குட்டி பொண்ணு. " 'ரயில் சினேகம்'னா என்ன?"ன்னு சந்தேகம் எல்லாம் கேட்டிருக்கேன் அப்போ :).
Story எல்லாம் சரியா தெரியாது. ஆனா, இந்த பாட்டை மட்டும் கேட்டிருக்கேன். நிறைய தடவை கேட்டிருக்கேன். விரும்பி கேட்டிருக்கேன்.
இப்போ அடிக்கடி யோசிப்பேன், இந்த பாட்டை இனிமேல் எல்லாம் எங்க கேக்கபோறோம்னு. நீங்க post பண்ணி கலக்கிட்டீங்க.

ரொம்ப thanks.

Sowmya said...

hey priya,

Nice to see your comments.Thanks :)



hey sree,

Me too the same.i dont give much importance to lyrics. But these are the songs which made me , impressed by its lyrics combined with the tune.The songs with very good tune,also with very good lyrics has more possibility of reaching the audiance soon.

My passion is music shree :)

Sowmya said...

hey thiru..

Thank u so much :)

hi poornima ,

yeah ! me too felt the same, while i got this song from you tube. Thanks a lot :)

Sowmya said...

நன்றி பாலர் :) நீங்களும் பாலச்சந்தர் ரசிகரா ! பாடலாசிரியர் பற்றி சரிவர தெரியவில்லை. ஏதோ ஒரு இடத்தில் வைரமுத்து என்று பார்த்த நியாபகம்.ஆனால், இவர் தான் என்று அறுதியிட்டு கூற இயலவில்லை.

மிக அழாகன ராகம் சஹானா . பழைய பாடல் "பார்தேன் ரசித்தேன் பக்கம் வர துடித்தேன்" என்ற கண்ணதாசன் பாடல் கூட இதே ராகம் தான்.எனக்கு மிகவும் பிடித்த ராகம்.கே.பாலச்சந்தர், இந்த ராகத்தில் தன்னையே ஒப்படைத்துவிட்டர் என்று கூட சொல்லலாம். :)

SathyaPriyan said...

முதல் முறையாக தங்கள் பதிவிற்கு வருகிறேன். பழைய நினைவுகளை தூண்டி விட்டது. சமீபத்தில் சஹானா - சிந்து பைரவி பார்ட் 2 என்று ஒரு தொடர் இயக்கினார் கே.பி. ஆனால் இது பரவாயில்லை ரகம் தான். திரு.அனந்து இறந்த உடன் நாம் கே.பி. யையும் இழந்து விட்டோம் :-(

balar said...

@sowmya

நான் KB ரசிகர் எல்லாம் இல்லை ஆனால் KBயின் பழைய சிரிப்பு படங்கள் விரும்பு பார்ப்பேன்.

வலையில் தேடி பார்த்தேன்..ரயில் சினேகம் தொடரின் பாடலாசிரியர் வைரமுத்து அவர்கள் தான்.

//"பார்தேன் ரசித்தேன் பக்கம் வர துடித்தேன்"//
மிகவும் அருமையான பாடல்..

Sowmya said...

:)) உண்மை தான் சத்யப்ரியன். அனந்து கதைகளை வைத்து நிறைய திரைப்படங்களை பால சந்தர் இயக்கி இருந்தாலும், அவரிடம் உள்ள எதிர்ப்பார்ப்பு தனியானது. இயக்கதில் அவர் சிறந்தவராகத் தான் உள்ளார். ஆனால் கதை ?? பொய் படம் பார்தததிலிருந்தே, நீங்கள் கூறிய படி, நாம் இழந்து விட்டோமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

Sowmya said...

பாலர்..

வைரமுத்து என்றதும் நம்ப் முடியாமல் தான் போனது ! :) நான் அதை வாலி எழுதி இருக்கலாம் என்று தான் நினைத்தேன். வைரமுத்துவின் வரிகளில் நான் இதுவரை, இவ்வளவு சிலாகித்துப் போனதில்லை.இப்பவும், எனக்கு நம்பிக்கை ஏனோ இல்லை பாலர். தவறாக எண்ண வேண்டாம்.. என்க்கு கவிதை தொகுத்தளிப்பதில், கவிஞர்களிடையே மிகப் பெரிய வேறுபாடு இருப்பதாகத் தான் தோன்றி இருக்கிறது. வாலியின் வரிக்ளில், என்னை மறந்திருகிறேன்.ஏனேனில், ஒரு பாடலைக் கேட்கும் பொழுது, அந்த பாடலின், இசை தான் என்னை முதலில் சென்று அடையும். அப்படியிருக்க, வாலியின் பாடல்களில் , இசையை மீறி, பாடல் வரிகளில், என் கவனம் சென்றிருக்கிறது. ஏன், எப்படி. என்றெல்லாம் சொல்லத் தெரியவில்லை.

நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்" - வாழ்கைத் தோல்வியின் ஓரத்தில் இருக்கும் ஒவ்வொருவரையும், மீட்டுக் கொண்டு வரும் சக்தி அந்த பாடலுக்கு உண்டு. வாலி உன் வரிகளை நான் வார்த்தைகளாக பார்க்கவில்லை.மனதிற்குள் ஊடுறுவும், மருத்துவரின் ஆயுதமாகத் தான் பார்க்கிறேன்.

வாலி பற்றி என் கருத்தை சொல்ல வாய்ப்பு நல்கியமைக்கு நன்றி பாலர்

SathyaPriyan said...

//
வாலி உன் வரிகளை நான் வார்த்தைகளாக பார்க்கவில்லை.மனதிற்குள் ஊடுறுவும், மருத்துவரின் ஆயுதமாகத் தான் பார்க்கிறேன்.
//
உண்மை. வாலி பற்றிய எனது கருத்துகளுடன் தங்களது ஒத்துப் போகிறது. காலத்தை வென்றவன் என்று கூறுவார்கள். அது இவன் தான். "நான் ஆணை இட்டால்" எழுதிய கைகள் தான் "முஸ்தஃபா", "காதல் வெப்சைட் ஒன்று" போன்ற பாடல்களையும் இயற்றியது என்றால் பலரால் நம்ப முடியாது.

Sowmya said...

:) nandri sathyapriyan

Unknown said...

வணக்கம். இந்த பாடலைக் கேட்டதும் இரயில் ஸ்நேகம் சீரியல் டி வி யில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த அந்த காலகட்டத்தில் நானும் என் நண்பர் இளங்கோவும் இந்த பாடலைக் குறித்து பேசிக்கொண்டிருந்த அந்த நாட்கள் தான் என் நினைவுக்கு வந்தது. வெறும் வார்த்தை ஜாலத்திற்குத் தான் வைரமுத்து என்ற எங்கள் கனிப்பை இந்த பாடல் உடைத்தெரிந்தது. முதல் மரியாதை, கருத்தம்மா பாடல்கள் எப்பொழுது கேட்டாலும் மனதை நெகிழச் செய்யக்கூடியன.
கருத்தம்மாவில் வரும்

ஆராரோ ஆரிரரோ ......
ஆராரோ நீ இருக்க ஆயிசுனக்கில்லையடி...
விதை நெல்லை நானறைக்க விதி வந்து சேர்ந்ததடி...
தாய்ப்பாலு நீ குடிக்க தலை எழுத்தில்லையடி...
கள்ளிப்பாலை நீ குடிச்சு கண்ணுறங்கு நல்லபடி...

அடுத்து ஒரு சென்ம வந்து ஆணாக நீ பிறந்தா...
பூமியில இடமிருக்கும் போய் வாடி அன்னக்கிளி....

சிசு வதை குறித்த சோகத்தை இதை விட எப்படி சொல்ல முடியும்.
அதுவும் தாலாட்டாய்.....

இதே கருத்தம்மாவில் .....போராலே பொன்னுத்தாயி ..பொல பொல வென்றே கண்ணீர் விட்டு....பாடல் வரிகளையும் கேட்டுப்பாருங்கள்.

சரி....பாடல் வரிகளைப்பற்றி குறிப்பிடும் போது..வாலி, வைரமுத்து இவர்களைத் தவிர இன்னொரு கவிஞர் எழுதி பாடல் தான் என் நினைவிற்கு வருகிறது. கல்கி படத்தில் ...

முத்து முத்து மகளே...
முகம் காணாத மகளே...
மாதங்கள் பத்து மனதினில் சுமந்து..
கற்பனையில் பெற்ற கண்மணியே
நான் உனக்கு கவிதையில் எழுதும் கடிதம்..
எழுதுகிறேன் ஒரு கடிதம் ...
எழுதுகிறேன் ஒரு கடிதம்..

வானத்து மலரே வையத்து நிலவே
வாழ்க்கையின் பொருளே வா...

மலடியின் மகளே...மகள் எனும் கனவே
மடியினிலே நீ வா....

பாறையில் மலர்ந்த தாமறையே..
இரவினில் எழுந்த சூரியனே..
எழாமலே எழும் நிலா நீயே..
எழுதுகிறேன் ஒரு கடிதம்...

முந்நூறு நாள் கர்பத்திலே வாராத பெண் நீயடி
எந்நாளுமே நான் பொம்மை தான்...என்றாலும்
தாய் தானடி...
உலாவும் வானம்பாடியாய் பன் பாடி வாழ்க கண்ணே
புறாவைப் போல சாந்தமாய் பண்பாடு போற்று பெண்ணே
நாளொரு மேண்மை நீ பெறுவாய்
நான் பெற்ற இன்பம் யார் பெறுவார்
பெறாமலே பெறும் சுகம் நீயே..
எழுதுகிறேன் ஒரு கடிதம்....

சிந்தாமணி என் கண்மணி சிற்றாடை நீ கட்டடி
என் மாளிகை முற்றத்திலே பொன்னூஞ்சல் நீ ஆடடி
குலாவும் அன்பு கோகிலம் எங்கேயும் கானம் பாடு
கனாவில் கூட சோம்பலே இல்லாமல் ஞானம் தேடு
நல்லவளாக நடை போடு
வல்லவளாகிட தடையேது
விழாமலே விழும் மழை நீயே..
எழுதுகிறேன் ஒரு கடிதம்.....

கல்கி: எழுதுகிறேன் ஒரு கடிதம்....
பொல்லாதது உன் பூமி தான்
போராட்டம் தான் வாழ்வடி
கொல்லாமலே கொல்வாரடி
குற்றங்கள் சொல்வாரடி
வராத துன்பம் வாழ்விலே வந்தாலும் நீ மோது
பெறாத வெற்றி இல்லையே என்றே நீ வேதம் ஓது
ஊமைக்கும் நாக்குகள் வேண்டுமடி
குறி வைத்து போரிட தேவையடி
தொடாமலே சுடும் கனல் நீயே

வானத்து மகளோ.....

இந்த பாடலை எழுதி அந்த கவிஞர் யார்?

தொடர்வோம்..

அன்புடன்
மூர்த்தி

Sowmya said...

Moorthy ..

velaikalai mudithu vittu vanthu virivaaga pesukiren .Thangal varukaiku en nandri :)

Sowmya said...

மூர்த்தி , தங்கள் வருகைக்கு என் முதல் நன்றி. உஙகள் கருத்துப் பரிமாற்றங்கள் வரவேற்க்கத்தக்கது.

கவிதை என்பது வெறும் வார்த்தை ஜாலங்களோ அல்லது அழ்கு ஓவியமோ மட்டும் அன்று. கவிதைகளில் பெரும் காப்பியத்தையே வடிக்கலாம் என்பது மறுக்க முடியாத உண்மை. ஒரு கவிஞ்னின் கவிதை என்பது உணரப்ப்படும் ஒரு உண்ர்வாகி விடுகிறது அல்லவா !

நாவின் சுவை கூட்டும் பல் வேறு உணவு வகைகள், பல தரப்பட்ட மக்களிடையே பல் வேறு விதமான கருத்து வேறு பாட்டை உண்டு செய்யலாம். இந்த வகை உணவு தான் சிறந்தது என்று ஒரு உணவு வகையினை அவரவர் சுவைக்கேற்ப நாம் கூறத் தானே செய்கிறோம். அதன் காரணம் என்ன? பழக்கம்,

ஒருவருக்கு மிகவும் ருசியாக இருக்கும் உணவு , மற்றொருவருக்கு ருசியாகத் தெரிவதில்லையே ! அதனை நாம் ஏற்றுக் கொள்கிறோம் தானே. மற்றொருவரின் விருப்பம் நமக்கு எளிதாக விளங்குகிறது.

வாழ்கையில் ஒவ்வொருவருக்கும் முக்கியத்துவம் வேறு வேறாகத் தானே உ\ள்ளது. அதே போலத் தான், கவிதை நயம் என்பது என்னைப் போன்றவர்களுக்கு இரண்டாம் பட்சமாகி, கருத்து நயம், அதன் ஊடுறுவல் என்பது முக்கியத்துவமாகி விடுகிறது.

பாடல் பாடுபவர்களில் எல்லோருமே நன்கு பாடக் கூடியவர்கள் தான். ஆனாலும் எனக்கு இன்னாரது குரல் தான் பிடித்திருக்கிறது என்று கூறுவது இல்லையா. எல்லா கவிஞர்களுமே சிறப்பு மிக்கவர்கள் தான். மனதுக்கு அருகாமையில் உணரக்கூடிய சிலர் இருப்பார்கள் தானே! அவ்வாறு என் மனதிற்குள் ஊடுறுவியது வாலியின் வரிகள். ஆகையால் , மிக சிறந்த பாடல்களைக் கேட்கும் போதெலலாம் , எனக்கு அது வாலியின் வரிகளாய் தோன்றுகிறது. மற்றபடி வைரமுத்துவின் வரிகளை குறைத்து மதிப்பீடு செய்தமையாகக் கருத வேன்டாம். :)

உளம் திறந்தமைக்கும், உளம் திறக்க வைத்தமைக்கும் என் நன்றிகள் பல :)

Sowmya said...

மூர்த்தி,

நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல் " எழுதுகிறேன் ஒரு கடிதம்" பாடலை இயற்றியவர் வெண்ணிலா காந்தி என்ப்வர் என்ற தகவலை இணைய தளம் ஒன்றின் வாயிலாக அறிந்து கொண்டேன். :) மிக அருமையான பாடல் :) கவிஞர் வாழ்க !

Unknown said...

Sowmya,

Intha paadalai ezhuthiyathu Kavinger Ilanthirayan

Sowmya said...

moorthi,

Vanakkam. inayathalaththil kooda tharaana thagavalgalai tharukirarkal enbathu athirchikundanathaaga irukirathu.

Thaangal kavingar peyarai kuripittamaikku en nandrigal pala :)