யாம் பெற்ற இன்பம் பெறுக ! இவ்வையகம் !!

Friday, May 18, 2007

மற்றவர்களுடைய அபிப்பிராயம் பற்றி உங்கள் அபிப்பிராயம் ..??

"பொய்கள் இருட்டிலே உருவானாலும் வெளிச்சத்தில் உலா வருகின்றன. வெளிச்சம் கண்டுபிடிக்கின்ற உண்மைகள், இருட்டிப்பு செய்யப் படுகின்றன. நமக்கு இருட்டிலே பார்கின்ற கண்கள் தேவை."

நம்மை பற்றி மற்றவர்கள் எவ்வளவோ அபிப்பிராயம் சொல்கிறார்கள். யாருடைய அபிப்பிராயமோ என்பதற்காக எந்த அபிப்பிராயத்தையும் நாம் அலட்சியம் செய்து விட முடியாது.ஒருவருடைய அபிப்பிராயம் ஏற்கக் கூடியதாக இல்லாமல் இருக்கலாம்.ஏற்க வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால் சொல்லப்படுகிற அபிப்பிராயத்துக்குள்ளும், ஏதோ சிறிய உண்மையாவது மறைந்திருக்கும் என்பதை நாம் மறந்து விடலாகாது.

ஆகவே எந்த ஒரு அபிப்பிராயத்தையும் ஒட்டு மொத்தமாக ஒதுக்கி விடாமல், அந்த அபிப்பிராய்த்துக்குள் புதைந்து கிடக்கிற உண்மையினை கண்டறிவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.ஆதாரம் இல்லாமல் எந்த வித அபிப்பிராயமும் உருவாவதில்லை..ஒரு சிறிய உண்மை, தேவை அற்ற பெரிய விஷயங்களினால் ஜோடிக்கப் படலாம்.ஒரு விஷயம் ஒருவருக்கு பிடித்திருந்தாலோ அல்லது உடன்பாடாக இருந்தாலோ அதை அவர் மிகைபடுத்தக் கூடும். தன் கற்பனைகளை அதில் சேர்க்கக் கூடும்.. இருப்பினும் , எதோ ஒர் உண்மை தான் அவருடைய அபிப்பிராயத்திற்கு ஆதாரம் என்பதை நாம் மறுக்க முடியுமா?

ஆகவே, யார் எந்த அபிப்பிராயத்தை சொன்னாலும், அதை நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், அவருடைய அபிப்பிராயத்தில் மறைந்து இருக்கக் கூடிய உண்மை என்னவென்று தேடிக் கண்டுபிடியுங்கள்.. அதை மூலம் நாம் பயன் அடைவதோடு, அந்த அபிப்பிராயம் அவரிடம் ஏன் உருவானது என்ற காரணத்தையும் கண்டறிய முடியும்.இவ்வாறு பழகிக் கொண்டால், மற்றவர்களது அபிப்பிராயதை அலட்சியப் படுத்துகின்ற மனோபாவம் நம்மிடம் மறையும்.

யார் என்ன சொன்னாலும் அதிலுள்ள உண்மையினை ஆராய்ந்து அறிவது நன்று. சொல்லப்படுகிற விஷயம் எப்படிப்பட்டதாக இருந்தாலும், அதனை கேட்டு, அதில் உள்ள உண்மை என்ன என்று தேடும் பழக்கத்தை நாம் பழக்கப்படுத்திக் கொண்டால், எல்லோருடைய அபிப்பிராயதிற்கும் மதிப்பு அளிக்கிற நல்ல பண்பினை நாம் வளர்த்துக் கொள்ள அது வழி வகுக்கும்.

7 comments:

Anonymous said...

Take the good things and leave the rest coz nobody is perfect.

Jeevan said...

Well said! Listining is not at all wrong, we could get much ideas from others thoughts.

balar said...

நல்ல பதிவு sowmya..)

நம்மேல் அக்கறை உள்ளவர்கள்தான் நம்மிடம் எந்த ஒரு விசயத்தையும் அபிப்பிராயமாக கூறுவர்கள் நாமும் அவர்களிடம் தான் கேட்போம் அது உறவனரிகளாகட்டும் நண்பர்களாகட்டும்...

நீங்கள் கூறுவது போல் அதில் இருக்கும் உண்மையை ஆராய்ந்து அதை ஏற்றுக் கொள்வது தான் நமக்கும் நன்மை..)

நாமாக மற்றவர்களிடம் சென்று ஒரு விஷயத்தை பற்றி அபிப்ராயம் கேட்பதற்கும், மற்றவர்கள் தாமக வந்து நம்மிடம் அபிப்ராயம் சொல்வதற்கும்
நிறைய வித்தியாசம் இருக்கிறது..
இதில் இரண்டாவது தான் நீங்கல் சொல்வது என்று நினைக்கின்றேன்!..)

Sowmya said...

pria,

Again the controversy comes there..:)

Your good things may not be good for others and vice versa. Whatever it may be,we can extend our listening to all.so that, we can know better about other's views.and ofcourse, finally you have the authority to decide.

Sowmya said...

hi jeevan,

Nice to see you here.You delivered a true statement :)

Sowmya said...

பாலர்..

பகைவர்கள் என்று நாம் நினைப்பவர்களிடமும் கூட நம்மைப் பற்றி அபிப்பிராயங்கள் இருக்கும். அது தான் மிக முக்கியமானது பாலர். அவர்களுடைய அபிப்பிராயத்தில் அவர்களின் கருத்துக்கள் இருந்தாலும், நாம் எவவாறு பார்க்கப் படுகிறோம் பகைவர்களால் என்பதையும் நாம் தெரிந்து கொள்ளலாம் அல்லவா. அவர்களுடைய அபிப்பிராயம் தெரிந்து கொண்டால் போதும், அந்த அபிப்பிராயத்தின் படி நடத்தலை தீர்மாணிப்பவர் நீங்கள் தானே.

பின் குறிப்பு : நான் மிக முக்கியமாக கேட்பது அவர்களுடைய அபிப்பிராயத்தை தான்.அப்போது தான் என்னுடைய பல்வீனங்களை நான் அறிய முடியும். உற்றார் , உறவினர், நண்பர்களுக்கு நம் பலம் தான் அதிகமாகத் தென்படும் :)

(சென்ற முறை நீங்கள் எழுதியது பற்றி என் கருத்தினை கூற நினைக்கிறேன். "மன்னிப்பு" என்பது மிகப்பெரிய வார்த்தை. எனக்கு எவ்வளவு எழுத்து சுதந்திரம் உண்டோ..அதே அளவுக்கு உங்களுக்கும் உங்கள் கருத்தினை சொல்ல உரிமை உண்டு ..அல்லவா..இங்கே விளக்கக்கள் மட்டுமே ..மன்னிப்பு கோருதல் வேண்டாமே..:) )

Sree's Views said...

Hello Soms...
Naan indha vishayatha romba seriousaa eduthukaradhu illai.
If we feel what we are doing is rt...seidhuttu poga vendum...
But neenga sollaradhum saridhaan..oru vaati mathavanga sollaradhula edhavadhu unmai irukaanu paakaradhula , we dont lose anything .
Aamam....naan ellam 'mookai' posts pottukittu irukkum podhu neenga mattum ippadee arthamulla posts podareenga :)